மஹிந்த்ராவின் Sசான் யோங்க் டிவோலி அடுத்து நடக்கவுள்ள ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்
published on டிசம்பர் 21, 2015 05:38 pm by konark for மஹிந்திரா ssangyong டிவோலி
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
அடுத்து அறிமுகமாகவுள்ள மஹிந்த்ராவின் காம்பாக்ட் SUV மாடலான KUV 100 (S101) காரைப் பற்றிய விவரங்கள் காட்டுத் தீ போல பரவி, மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டிருக்கும் அதே வேளையில், 2016 இந்திய ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் Sசான் யோங்க் டிவோலி என்ற மற்றொரு காரையும் மஹிந்த்ரா நிறுவனம் காட்சிப்படுத்தும் என்ற புதிய விவரம், ஏற்கனவே உள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது. 2015 ஜனவரி மாதம் கொரிய வாகன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த காம்பாக்ட் SUV, நான்கு வருட கால விரிவான ஆராய்ச்சிக்குப் பின் தயாரிக்கப்பட்ட ஒரு உன்னத தயாரிப்பாகும். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, அதிகபட்சமாக 126 PS சக்தியையும், 157 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யவல்ல பெட்ரோல் e- XGi 160 இஞ்ஜினை, சர்வதேச டிவோலி மாடலில், மஹிந்த்ரா நிறுவனம் பொறுத்தியுள்ளது. ஆட்டோமேடிக் மற்றும் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் என்ற இரு ஆப்ஷங்களும் இந்த காருக்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் வெளிவரவுள்ள டிவோலி மாடலில், ஏற்கனவே TUV 300 காரில் உள்ள 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் சற்றே மேம்படுத்தப்பட்டு, அதிக சக்தியையும், டார்க்கையும் உற்பத்தி செய்யும் விதத்தில் மாற்றியமைக்கப்பட்டு பொருத்தப்படலாம் என்று யூகிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல, டிவோலி மாடலில் ஸ்மார்ட் ஸ்டியரிங் செயல்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் ஸ்டியரிங் தொழில்நுட்பத்தின் மூலம், நார்மல், கம்ஃபர்ட் மற்றும் ஸ்போர்ட் என்ற மூன்று விதமான ஸ்டியரிங் மோட்கள் பொருத்தப்பட்டுள்ளதால், உங்களுக்கு தேவையானதை மாற்றிக் கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், பின்புறத்தில், பிரமாண்டமான 423 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட் பகுதியும் இந்த காரில் உண்டு.
பாதுகாப்பு அம்சங்களின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, இந்த சிறந்த நகர்ப்புற SUV மாடலின் 4 சக்கரங்களிலும், பெரிய டிஸ்க் ப்ரேக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ESP (எலெக்ட்ரோனிக் ஸ்டபிலிட்டி ப்ரோக்ராம்) மற்றும் TPMS (டயர் பிரஷர் மானிட்டர் செய்யும் அமைப்பு) ஆகியவற்றுடன் டிஸ்க் ப்ரேக் இணைக்கப்பட்டுள்ளதால், உடனடியாகவும் விரைவாகவும், திறமையாகவும் ப்ரேக் போட வசதியாக இருக்கிறது. இது தவிர, 7 ஏர் பேக்குகளும், காற்றோட்டமான டிரைவர் சீட், வெதுவெதுப்பான தட்பவெட்பத்தில் ஸ்டியரிங் வீல் மற்றும் இரண்டாவது வரிசை இருக்கைகள், 6 சென்சார்கள் கொண்ட தடைகளை கண்டறியும் அமைப்பு (அப்ஸ்ற்றக்ஷன் டிடெக்ஷன்), ஆட்டோமேடிக் வாஷர் மாற்றும் ஆட்டோமேடிக் ஹசார்ட் லைட்கள் போன்றவை இந்த கொரிய டிவோலி காரில் இணைக்கப்பட்டுள்ளன. இந்திய மாடலில், மேற்கூறிய அனைத்து அம்சங்களும் இடம் பெறுவதற்கு வாய்ப்பில்லை. எனினும், முன்புற ஏர் பேக்குகள் மற்றும் ABS அமைப்பு ஆகியவை அனைத்து வேரியண்ட்களிலும் இடம்பெரும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 2000 cc மற்றும் அதற்கும் அதிகமான திறன் கொண்ட டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ள வாகனங்களை டில்லியில் தடை செய்துள்ள இந்த நேரத்தில், மஹிந்த்ராவின் முன்னணி நிலையைத் தக்க வைத்துக் கொள்ள அடுத்து வெளிவர இருக்கும் Sசான் யோங்க் டிவோலி, KUV 100 மாற்றும் TUV 300 ஆகிய கார்கள் இணைந்து முக்கிய பங்காற்றும் என்று தெரிகிறது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful