மெர்சிடிஸ் பென்ஸ் GLS என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்ட GL கிளாஸ் அறிமுகம்: இந்தியாவிலும் எதிர்பார்க்கப்படுகிறது

published on நவ 04, 2015 07:42 pm by raunak for மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் 2016-2020

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

http://images.cardekho.com/images/carNewsimages/carnews/Mercedes%20Benz/Mercedes_Benz_GLC_0411_2015_02.jpg

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய SUV பிளாக்ஷிப் கார் புதிய பெயரைத் தாங்கி, GLA, GLC மற்றும் GLE  கார்கள் வரிசையில் அறிமுகமாகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், மேம்படுத்தப்பட்ட GL கிளாஸ் காருக்கு, GLS என்ற புதிய பெயர் சூட்டி வெளியிட இருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த காரைப் பற்றிய விவரங்கள் அதிகாரபூர்வமின்றி வெளியாகின. தற்போது, மெர்சிடிஸ் இந்த சிறந்த ஃப்ளாக்ஷிப் SUV –யைப் பற்றிய முக்கியமான விவரங்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில், இந்த காரின் முன்பதிவு அடுத்த மாதம் தொடங்கிவிடும். பின்னர், 2016 வருடத்தின் மார்ச் மாதத்தில் விநியோகங்கள் ஆரம்பித்துவிடும். இந்தியாவில் இந்த கார் வெளிவருமா என்ற பேராவல் அனைத்து கார் பிரியர்களுக்கும் இருக்கிறது. இதை அறிந்த இந்த கார் தயாரிப்பாளர்கள், புதிய மேம்படுத்தப்பட்ட SUV –யை அடுத்த வருட இறுதி பாதியில், இந்தியாவில் வெளியிட உத்தேசித்துள்ளனர். எனினும், அதற்கு முன்பே, 2016 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் நடக்கவுள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், பொதுமக்களின் பார்வைக்கு இந்த புதிய கார் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


புதிய மேம்படுத்தப்பட்ட பென்ஸ் காரைத் தவிர, புத்தம் புதிய GLS63 AMG காரும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும், ஏனெனில் இந்த ஜெர்மன் கார் நிறுவனம் ஏற்கனவே GL 63 AMG காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்திவிட்டது. மெர்சிடிஸ் நிறுவனம், இந்த காரை ‘SUV  கார்களின் மத்தியில் S கிளாஸ்’ என்று குறிப்பிடுகிறது, அதாவது, இரண்டு விதமான பிரபலமான மாடல்களின் கலவையாக இந்த புதிய கார் வடிவம் இருப்பதை ‘மிரட்டலான SUV  கார்களின் மத்தியில் கூலான S கிளாஸ்’ என்று குறும்பாகக் குறிப்பிடுகிறது. புதிய GLE மாடலைப் போலவே GLS மாடலும், GL கிளாஸ் பிரிவு காரை சற்றே மேம்படுத்தியது போல உள்ளது. வெளிப்புறத்தில், பகல் நேரத்திலும் பளீரென்று எரியும் LED  பொருத்தப்பட்டு பளிச்சென்ற தோற்றத்தில் உள்ளது. முன்புறத்தில் உள்ள கிரில்லும் சிறிது மேம்படுத்தப்பட்டு, சற்றே பெரிய நட்சத்திர லோகோவைப் பெற்றுள்ளது. பின் விளக்குகளில் புதிய LED கிராஃபிக்ஸ் இணைக்கப்பட்டிருப்பது, கண்கவர் விதத்தில் உள்ளது. இது தவிர, முன் மற்றும் பின்புறமுள்ள பம்பர்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. புது விதமான அலாய் சக்கரங்களில் கம்பீரமாக இந்த கார் நிற்கிறது. உட்புற அமைப்பிலும் அதே விதமான கதை ஓடுகிறது, அதாவது, பழைய மாடலின் உட்புற தோற்றத்தில் சிறிய மேம்பாடுகளைச் செய்து, புதிய காரை பென்ஸ் நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர். எனினும், இதன் மைய இணைமையம் (சென்ட்ரல் கன்சோல்) பெரும்பான்மையான மாற்றங்களைப் பெற்றுள்ளது. உட்புற மாற்றங்களில் மிகவும் சிறந்தது எது என்று கேட்டால், புதிய டச் பேட் இணைக்கப்பட்ட, மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிரத்தியேக அதி நவீன 8 அங்குல COMAND ஆன்லைன் இன்ஃபோட்டைன்மெண்ட் அமைப்பைக் கட்டாயம் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

பாதுகாப்பு அம்சங்களைப் பற்றி விவரிக்கும் போது, வழக்கமான மோதலைத் தடுக்கும் கோலிஷன் பிரிவேன்ஷன் அஸ்சிஸ்ட் பிளஸ்; முன்னெச்சரிக்கை உணர்வுடன் இருக்க ப்ரீ-சேஃப் அமைப்பு இணைக்கப்பட க்ராஸ்விண்ட் அஸ்சிஸ்ட் மற்றும் அட்டென்ஷன் அஸ்சிஸ்ட்; திடீரென ப்ரேக் பிடித்தாலும் வழுக்காமல் உடனே நிற்க ப்ரேக் அஸ்சிஸ்ட் BAS அமைப்பு; அனைத்து சக்கரங்களையும் மின்னணு மூலம் கட்டுப்படுத்தும் ஆல் வீல் ட்ரைவ் டிராக்ஷன் சிஸ்டம், 4ETS, ESP ® மற்றும் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும் க்ருயிஸ் கண்ட்ரோல் ஆகியவை புதிய GLS  மாடலில் பொருத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்பு காற்றுப் பைகள் இன்றைய வாகனங்களின் சிறப்பம்சங்களில் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. சந்தையின் போக்கில் எப்போதுமே சென்று வசீகரப்படுத்தும் மெர்சிடிஸ் நிறுவனம், இந்த காருக்கு மாற்றியமைக்கக் கூடிய இரண்டு கட்ட பாதுகாப்பு காற்றுப் பைகளை ஓட்டுனருக்கும், முன்புறத்தில் உள்ள பயணியருக்கும் வழங்குகிறது. கால் முட்டிகளைப் பாதுகாக்க, ஓட்டுனர் மற்றும் முன்புறத்தில் அமர்ந்திருக்கும் பயணிகளின் மூட்டுகளுக்கும் அருகில் ஏர் பேக் (ஒருங்கிணைந்த மார்பு மற்றும் இடுப்பு ஏர் பேக்குகள்) மற்றும் மூன்று இருக்கை வரிசைகளின் ஜன்னல்களில் பொருத்தப்பட்டுள்ள விண்டோ ஏர் பேக்குகளும், ஸ்டாண்டர்ட்டாக வருகின்றன.

மெக்கானிக்கல் ரீதியாகப் பார்க்கும் போது, மேம்படுத்தப்பட்ட GL கிளாஸ் காரில் உலகளவில் இஞ்ஜின் வரிசைகளில் முன்னேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் வெளியிடும் போது GL350 3.0 லிட்டர் V6 டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரும். இந்த இஞ்ஜினில் எந்தவிதமான மேம்பாடுகளையும் மெர்சிடிஸ் நிறுவனம் செய்யவில்லை. இந்தியா முழுவதும், இந்த இஞ்ஜின் ஆப்ஷனையே மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் வழங்கும் என்று தெரிகிறது. 2987 cc கொண்ட இந்த V6 மோட்டார், 255 bhp சக்தியை @ 3600 rpm –லும் மற்றும் அதிகபட்ச டார்க்காக 616 Nm வரை உற்பத்தி செய்யும் வல்லமை படைத்தது. இது, மெர்சிடிஸ் நிறுவனத்தின் பிரத்தியேக 9G TRONIC தானியங்கி ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனினும், ஃப்ளாக்ஷிப் AMGயின் புதிய வெர்ஷன் GLS 63 AMG மாடலில், இஞ்ஜின் சக்தியை மெர்சிடிஸ் நிறுவனம் பலமடங்கு உயர்த்தியுள்ளது. அதாவது, கிட்டத்தட்ட 27 குதிரைத் திறன் அதிகமாக உள்ளது. தற்போது, இந்த மோட்டார் 577 bhp சக்தி மற்றும் அதிகபட்சமாக 760 Nm  டார்க்கை உற்பத்தி செய்கிறது. GLS63 AMG  இஞ்ஜின், AMG ஸ்பீட்ஷிப்ட் பிளஸ் 7G – TRONIC தானியங்கி ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க:

மெர்சிடிஸ் பென்ஸ் GLE SUV காரை ரூ. 58.9 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது

AMG GT மாடலை 2015 நவம்பர் 24 –ஆம் தேதி மெர்சிடிஸ் வெளியிடுகிறது

மேலும் வாசித்துத் தெரிந்து கொள்ள: GL – கிளாஸ் 2015

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மெர்சிடீஸ் ஜிஎல்எஸ் 2016-2020

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience