சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது : ஹோண்டா நிறுவனம் மீண்டும் தனது BR – V வாகனத்தை இந்தோனேசியாவில் காட்சிக்கு வைத்தது.

modified on அக்டோபர் 08, 2015 05:53 pm by raunak for ஹோண்டா பிஆர்-வி

ஜெய்பூர் :

ஹோண்டா நிறுவனம் அதிகாரபூர்வமாக தனது BR – V கார்களை எதிர்வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. . ஹயுண்டாய் க்ரேடா மற்றும் ரெனால்ட் டஸ்டர் வாகனங்கள் இந்த BR – V வாகனங்களுக்கு முக்கிய போட்டியாக இருக்கும்.

இந்தோனேசியாவில் நடந்த மகஸர் ஆட்டோமோடிவ் கண்காட்சியில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்ப்பில் இருக்கும் BR-V வாகனத்தை மீண்டும் ஒரு முறை ஹோண்டா நிறுவனம் காட்சிக்கு வைத்தது. முன்னதாக இந்த புதிய BR-V வாகனம் ஆகஸ்ட் 2015 ல் நடந்த கைகிண்டோ இந்தோனேசியா இண்டர்நேஷனல் ஆட்டோ ஷோவில் (GIIAS ) உலக முழுமைக்கும் காட்சிக்கு வைக்கப்பட்டது. இந்தோனேசியாவில் இந்த வாகனத்தின் புக்கிங் ஏற்கனவே தொடங்கி விட்டது . 230 - 265 மில்லியன் இந்தோனேசியன் ருபியா (IDR) ஏறக்குறைய இந்திய ரூபாய் மதிப்பில் 10.80 - 12.40 லட்சங்கள் என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இந்த BR-V வாகனத்தை வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது. மேலும் இப்போது இந்தோனேசியாவில் புக்கிங் ஆகிக் கொண்டிருக்கும் வாகனங்களும் அடுத்த ஆண்டு இந்திய அறிமுகத்திற்கு முன்னதாக புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்

என்ஜின் ஆப்ஷன்களைப் பொறுத்தவரை , ஆட்டோகார் ப்ரோபஷ்னல் செய்தியின் படி , இந்தியாவில் அறிமுகமாக உள்ள BR – V வாகனத்தில் அதிக சக்தி வாய்ந்த 1.6 லிட்டர் i- DTEC மோட்டார் பொறுத்த ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ளது. தற்போது பிரயோ மற்று CR – V வாகனங்களை தவிர மற்ற வாகனங்களில் 200 nm அளவு டார்க் மற்றும் 100 PS அளவு சக்தியை வெளியிடக்கூடிய 1.5 லிட்டர் i- DTEC மோட்டாரைத் தான் ஹோண்டா நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. தற்போது ஐரோப்பிய சந்தையில் புழக்கத்தில் உள்ள ஹோண்டா வாகனங்களில் 300 nm அளவு டார்க் மற்றும் 120 PS அளவு சக்தியை வெளியிடக்கூடிய 1.6 லிட்டர் i- DTEC மோட்டார் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. டீசல் ஆப்ஷனை தவிர சிட்டி கார்களில் பயன்படுத்தப்பட்டு வரும் 1.5 லிட்டர் i- VTEC மோட்டாருடன் கூடிய ஆப்ஷனும் வெளியிடப்படும் என்று ஹோண்டா நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த பெட்ரோல் மோட்டார் 6,600 rpm சுழற்சியில் 120 PS அளவு சக்தி மற்றும் அதிகபட்சமாக 145nm அளவு டார்கை 4,600rpm சுழற்சியிலும் வெளியிட வல்லது. 6 - வேக மேனுவல் ( கைகளால் இயக்கக்கூடிய ) கியர் அமைப்பு அனைத்து BR.

V பெட்ரோல் மாடல் வாகனத்திலும் பொருத்தப்பட்டு வரும் என்று ஏற்கனவே ஹோண்டா நிறுவனம் கூறியுள்ள நிலையில், பெட்ரோல் மாடல்களில் மேலும் ஒரு ஆப்ஷனாக ஹோண்டாவின் CVT ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் அமைப்பு பொருத்தப்பட்டும் வெளிவரும் என்று தெரிகிறது.

இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது: ஹோண்டா BR – V வாகனத்தின் ப்ரோடோடைப் வெளியிடப்பட்டது. இந்தோனேசியாவில் இருந்து நேரிடையாக

r
வெளியிட்டவர்

raunak

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ஹோண்டா பிஆர்-வி

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை