இங்கிலாந்தில் ஈகோஸ்போர்ட் கார்களை 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய போர்ட் திட்டமிட்டுள்ளது

published on நவ 23, 2015 11:37 am by sumit for இக்கோஸ்போர்ட் 2015-2021

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்பூர் :

Ford EcoSport

நமக்கு கிடைத்துள்ள சில தகவல்களின் படி, போர்ட் நிறுவனம் 1.0 லிட்டர் ஈகோபூஸ்ட் என்ஜின் பொருத்தப்பட்ட ஈகோஸ்போர்ட் கார்களை 2016 ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது. போர்ட் நிறுவனம் தனது சென்னை தொழிற்சாலையில் இந்த ஈகோஸ்போர்ட் கார்களை இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்ற சில மிதமான மாற்றங்களுடன் தயாரித்து ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளது

இந்த பிரிட்டன் நாட்டிற்கு ஏற்றுமதியாக உள்ள ஈகோஸ்போர்ட் கார்களில் அதிக கண்ட்ரோல் இருக்குமாறு ஸ்டீரிங் அமைப்பு மாற்றி அமைக்கப்படும் என்றும் உட்புற கட்டமைப்பும் மிக நேர்த்தியாக மாற்றப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர சவுண்ட் இன்சுலேஷன் அமைப்பும் சேர்க்கப்பட்டுள்ளதாக போர்ட் தெரிவித்துள்ளது. சஸ்பென்ஷன் அமைப்பும் நேர்த்தியாக்கப்பட்டு டேம்பர்கள் இணைக்கப்பட்டுள்ளன. சஸ்பென்ஷனில் உள்ள ஸ்ப்ரிங் ரேட் மாற்றப்பட்டு 10 மி.மீ குறைக்கப்பட்டுள்ளது.

ப்ளுடூத் வசதி கொண்ட மேம்படுத்தப்பட்ட சோனி ஸ்டீரியோ அமைப்பு மற்றும் பின்புறம் பார்க்க உதவும் ரியர் வியு கேமரா போன்ற அம்சங்களையும் இந்த வாகனத்தை வாங்க விரும்புவோர் நிச்சயம் எதிர்பாக்கலாம். இந்த ஆங்கில வெர்ஷன் ஈகோஸ்போர்ட் கார்களில் ஸ்பேர் வீல் ( உபரி சக்கரம் ) பொருத்தப்படாது என்றே தெரிகிறது. அதே சமயம் இந்த கார்களில் 'ப்ளேக் பேக்' ஒன்று நிச்சயம் பார்ப்பவர் கவனத்தை சுண்டி இழுக்கும் வகையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த ப்ளேக் பேக்கில் கருப்பு அல்லாய் சக்கரங்கள் , கதவு கண்ணாடிகள் , கூரை பகுதி கண்ணாடிகள் போன்றவைகள் அடங்கும். மேலும் காருக்கு நல்ல ஸ்போர்ட்டியான தோற்றம் தரும் வகையில் கூரை பகுதியில் உள்ள ரூப் ரெயில்ஸ் நீக்கப்பட்டுள்ளது . இஞ்சினைப் பொறுத்தவரை இந்திய மற்றும் பிரிட்டிஷ் வெர்ஷன்களில் ஒரே மாதிரியான 1.0 லிட்டர் ஈகோபூஸ்ட் என்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளது என்றாலும், பிரிட்டிஷ் வெர்ஷன் ஈகோஸ்போர்ட் கார்களில் இந்த என்ஜின் கூடுதலாக 15 பிஎச்பி சக்தியை (அதிகபட்சமாக 138 பிஎச்பி வரை) வெளியிடும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மணிக்கு 0 – 100 வேகத்தை அடையும் நேரம் 1 நொடி குறைக்கப்பட்டுள்ளது. 5- வேக கியர் பாக்ஸ் அமைப்புடன் வெளியாக உள்ள இந்த பிரிட்டிஷ் வெர்ஷன் லிட்டருக்கு 17. 8 கி.மீ மைலேஜ் தரும் என்றும் தெரிய வருகிறது.

Ford EcoSport

இந்த யுகே வெர்ஷன் ஈகோஸ்போர்ட் கார்களின் விலை £ 17 , 500 ( இந்திய ரூ. 17 .68 லட்சங்கள் ) வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரின் விநியோகம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இருக்கும் என்றும் யூகங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள் :

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது இக்கோஸ்போர்ட் 2015-2021

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience