ஃபோர்ட் முஸ்டங்க் vs. லம்போற்கினி முர்சியெலகோ: இந்த நூற்றாண்டின் சிறந்த டிரிப்ட் போர் (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)
published on டிசம்பர் 21, 2015 02:42 pm by manish for போர்டு மாஸ்டங் 2016-2020
- 16 Views
- ஒரு கருத்தை எழுதுக
வளைவு மிகுந்த மலைப் பாதைகளில், அதிவேகமாக சீற்றத்துடன் காரை செலுத்தி விளையாடும் விளையாட்டிற்கு பெயர் ட்ரிஃப்டிங் என்பதாகும். தற்போது இந்த விளையாட்டு உலகம் முழுவதும் பிரசத்தி பெற்றிருந்தாலும், முதல் முதலில் அமைதியாக நின்று கொண்டிருக்கும் ஜப்பானிய மலைகளின் நெளிவு சுளிவு நிறைந்த பாதையில் இந்த விளையாட்டு உருவானது. சாகச விளையாட்டு பிரியர்கள், தங்களது செயல்திறன் மிக்க; மேம்படுத்தப்பட்ட சக்தியை உற்பத்தி செய்யும்; அதிக திறன் வாய்ந்த கார்களை மலைத்தொடர்களில் வேகமாக, புதுமையான விதத்தில் மட்டுமல்லாமல், சிலிர்பூட்டும் விதத்தில், சற்றே ஆபத்தான மயிர் கூச்சரியும் விதத்தில் ட்ரிஃப்டிங் சாகசம் நிகழ்த்துவர். எதிரும் புதிருமாக உள்ள நாடுகள் இதை பயன்படுத்தி மீண்டும் சண்டையிட்டுக் கொள்ளும் அளவிற்கு, உலகம் முழுவதும் இந்த ட்ரிஃப்டிங் விளையாட்டு மிகவும் பிரபலமாக உள்ளது. தொழில்முறை ட்ரிஃப்டிங் வீரரான வான் கிட்டின் Jr. மற்றும் ஜப்பானிய டைகோ சைட்டோ என்ற இருவரும் தங்களது தந்திரம் மிகுந்த சூப்பர் கார்களில் போட்டி போட்ட நிகழ்ச்சி ஜப்பானில் நடந்தது.
வான்னின் வாகன தேர்வு, 550 bhp சக்தியை உற்பத்தி செய்யும் 5.0 லிட்டர் V8 இஞ்ஜின் பொருத்தப்பட்ட ஃபோர்ட் முஸ்டங்க் RTR காராக இருந்தது. சக்தி வாய்ந்த இந்த கார், நிச்சயமாக ஒரு சிறந்த போட்டியாளராக தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும் அளவிற்கு தகுதியானதாகும். அதே நேரத்தில், டியகோ சைட்டோவின் மதிப்பு மிக்க தேர்வு, எட்டு கால் பாய்ச்சலில் பாய்ந்து செல்லும் குதிரையின் வேகத்தைக் கொண்ட, 650 bhp சக்தியை உற்பத்தி செய்யும், RWD திறன் கொண்ட, V12 இஞ்ஜின் பொருத்தப்பட்ட, லம்போற்கினி முர்சியெலகோ என்ற போற்றத்தக்க காரா இருந்தது. ட்ரிஃப்டிங் விளையாட்டில் ஈடுபட்ட லம்போ காரை, பாட் ஃபைவ் ரேசிங் & லீபெர்டி வாக் என்ற நிறுவனம் ட்ரிஃப்டிங்கிற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து, ஜப்பானில் உள்ள ஆளரவம் அற்ற நீகாட்டா ரஷ்யன் வில்லேஜுக்கு அனுப்பி வைத்தது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்ப்பதற்கு நிச்சய்மாக ஒரு நல்ல ஹெட்ஃபோன் அவசியம், ஏனெனில், அப்போதுதான் பேராபத்து மிகுந்த பின்னனி காட்சிகளில், அசுர வேகத்தில் விரட்டிச் செல்லும் இரண்டு பச்சை நிற அசகாய கார்களின் தீரத்தை சோதிக்கும், இந்த நூற்றாண்டில் நடந்த நூதன போரின் தன்மையை முழுமையாக அறிய முடியும்.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful