ஃபோர்ட் இந்தியா 2016 எக்கோ ஸ்போர்ட்டின் விவரங்களை வெளியிட்டது
published on அக்டோபர் 07, 2015 12:05 pm by manish for போர்டு இக்கோஸ்போர்ட் 2015-2021
- 17 Views
- 1 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
புதிதாக வரவுள்ள அட்டகாசமான 2016 ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட்டின் விவரங்களை ஃபோர்ட் இந்தியா நிறுவனம், ஃபேஸ் புக்கில் வெளியிட்டது. இதற்கு முன், TeamBHP உறுப்பினர் ஒருவர் உளவு பார்த்து, விரைவில் இந்த கார் சந்தைக்கு வந்துவிடும் என்ற செய்தியை வெளியிட்டார். சமீபத்தில், ஃபோர்ட் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனருமான நைஜெல் ஹாரிஸ், ‘மேம்படுத்தப்பட்ட எக்கோ ஸ்போர்ட் கார், கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்’ என்று கூறினார்.
உளவு பார்க்கப்பட்ட இந்த கார், புதிய வண்ணத்தில் உள்ளது. கண்கவரும் இந்த ஆடம்பர வண்ணத்தை ‘கோல்டன் பிரான்ஸ்’ என்று ஃபோர்ட் நிறுவனம் குறிப்பிடுகிறது. வெளிப்புற வடிவமைப்பில் மேற்கொண்ட ஒரு சில மேம்பாடுகள் தவிர, அருமையான இஞ்ஜின் மேம்பாடுகளையும் இந்த காரில் நாம் எதிர்பார்க்கலாம். இதற்கு முன்பு அறிமுகமான ஆஸ்பயர் மற்றும் சமீபத்தில் வெளியான பிகோ போன்ற கார்களில் உள்ள இஞ்ஜின் அம்ஸங்களே இந்த புதிய காரிலும் பொருத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேம்படுத்தப்பட்ட எக்கோ ஸ்போர்ட்டின் இஞ்ஜின், 100 PS மற்றும் 215 Nm டார்க் செயல்திறனைத் தருகிறது. இந்த புதிய காரில் கூடுதலான மேம்பட்ட அம்சங்கள் பலவற்றை நாம் எதிர்பார்க்கலாம். இதன் டைடனியம் மாடலில் தானியங்கி முன்புற விளக்குகள் மற்றும் வைப்பர்கள் பொருத்தப்பட்டு உலா வரும். மேலும், காரை ரிவர்சில் எடுக்க உதவியாக இருக்கும் காமிராவில் பதிவாகும் காட்சியை, நாம் 4 அங்குல வண்ண காட்சி திரையில் காணலாம். இந்த திரையை, SYNC இன்ஃபோடைன்மெண்ட் அமைப்போடு இணைத்துள்ளனர்.
ஃபோர்ட் ஆஸ்பயர் மற்றும் பிகோ போன்ற கார்களை உற்பத்தி செய்யும் போது, ஃபோர்ட் நிறுவனம் பாதுகாப்பு அம்ஸங்களில் தனி கவனம் செலுத்தியத்தைப் போலவே, புதிய எக்கோ ஸ்போர்ட்டின் அடிப்படை மாடலில் ஓட்டுனருக்கான பாதுகாப்பு காற்றுப் பை பொருத்தப்படும். இது தவிர, முன்புறத்தில் மேலும் இரண்டு காற்றுப்பைகள் பொருத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முந்தைய மாடலில் உள்ளது போலவே, 1.0 லிட்டர் எக்கோ பூஸ்ட் பெட்ரோல் இஞ்ஜின் 2016 ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட்டிலும் பொருத்தப்படும். இது தவிர, 1.5 லிட்டர் Ti-VCT பெட்ரோல் இஞ்ஜினும் பொருத்தப்படலாம் என்று யூகிக்கப்படுகிறது.