இந்தியாவில் ஃபோர்டு விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, சென்னை ஆலையில்
published on செப் 11, 2015 02:13 pm by nabeel
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
முதலீடு செய்கிறது சென்னை தயாரிப்பு ஆலையை விரிவாக்கம் செய்யும் வகையில் முதலீடு செய்ய உள்ளதை ஃபோர்டு நிறுவனம் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த விரிவாக்கத்தை தவிர, ஒரு புதிய உலகளாவிய என்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி சென்டரையும், ஃபோர்டு மோட்டார் கம்பெனி அமைக்க உள்ளது. ஆனால் முதலீடு தொகை மற்றும் அதிகரிக்கப்பட்டுள்ள தயாரிப்பு அளவு போன்றவை குறித்து எதுவும் வெளியிடவில்லை.
உலகளாவிய முதலீட்டு கூட்டத்தில், இது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் ஃபோர்டு நிறுவனமும், தமிழக அரசும் கையெழுத்திட்டன. தமிழக அரசு 2 நாள் நிகழ்வில், இதுவரை ரூ.2.40 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள முதலீடுகளில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த புதிய ஃபோர்டு வளாகத்திற்குள், தயாரிப்பு என்ஜினியரிங், ஐடி, டேட்டா அனலிட்டிக்ஸ், தயாரிப்பு, நிதி மற்றும் கணக்குகள் போன்ற அந்நிறுவனத்தின் உலகளாவிய வணிக சேவைகள் காணப்படும். தற்போதைய ஆலை சுமார் 2 லட்சம் வாகனங்களும், 3.4 லட்சம் என்ஜின்களும் தயாரிக்கும் திறனுடன் இயங்கி வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் ஃபோர்டு தயாரிப்புகள் 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இது குறித்து மாநில தொழில் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஃபோர்டு நிறுவனத்தின் விரிவாக்க திட்டம் தற்போது நடந்து வருகிறது. அதை நாங்கள் இன்னும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது” என்றார். இது குறித்து ஃபோர்டு ஆசியா பசிபிக் தலைவரான டேவ் ஸ்கூச் கூறுகையில், “ஃபோர்டு நிறுவனத்திற்கான கண்டுபிடிப்புகளின் மையமாக இந்தியா உள்ளதால், இங்கு ஒரு புதிய உலகளாவிய என்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி சென்டரை அமைத்து, எங்களின் நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களின் இந்திய பயணத்தில் இது அடுத்த அத்தியாயம் ஆகும். இந்த சமீபகால முதலீடுகளின் மூலம் வாகன ஓட்டுதல் குறித்த கண்டுபிடிப்புகளை பற்றிய எங்களின் இலக்குகளின் வளர்ச்சியை விரைவுப்படுத்தி, அதை இந்தியாவில் இருந்து உலகிற்கு எடுத்து செல்ல உள்ளோம்” என்றார்.
அமெரிக்க நிறுவனமான ஃபோர்டின் பணிகளை இந்தியாவில் தொடர்ந்து வரும் நிலையில், ஏற்கனவே நம் நாட்டில் 2 பில்லியம் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது. அதில் 1 பில்லியம் அமெரிக்க டாலர்களை, குஜராத் மாநிலத்தின் சானான்டு பகுதியில் உள்ள புதிய ஆலையில் முதலீடு செய்துள்ளது. இந்த குஜராத் ஆலையில், ஆஸ்பியர் சேடன் மற்றும் அடுத்து வர உள்ள ஃபிகோ ஹாட்ச்பேக் ஆகியவை தயாரிப்பில் உள்ளது.
0 out of 0 found this helpful