புதிய வாகனங்களில், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றை ஃபோர்டு சேர்க்கிறது
published on ஜனவரி 07, 2016 04:22 pm by sumit
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஃபோர்டு கார் மற்றும் அதில் பயணிப்போர் இடையிலான தொடர்பை மேலும் அதிகரிப்பதில், ஃபோர்டு நிறுவனம் இன்னொரு படி முன்னேறியுள்ளது. தனது SYNC கனெக்டிவ்விட்டி சிஸ்டத்தை ஒத்த ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவற்றை இந்த அமெரிக்க கார் தயாரிப்பாளர் அறிமுகம் செய்துள்ளார்.
இது குறித்து ஃபோர்டு வாகன இணைப்பு மற்றும் சர்வீஸ்கள் பிரிவின் நிர்வாக இயக்குநர் டான் பட்லர் கூறுகையில், “வாடிக்கையாளர்களுக்கு ஒரு வாகனத்தின் உள்ளே எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல், ஸ்மார்ட்போனின் தொழிற்நுட்பத்தை இதமான முறையில் பெறுவதற்கு SYNC உதவுகிறது. SYNC-ன் மூலம், வாடிக்கையாளர்களின் இயக்கத்தை அவர்களுக்கு எளிதாக்கி, ஒரு இணைப்பு கொண்ட வாழ்க்கை முறையை பராமரிக்கவும், ஸ்மார்ட்போன், ஆப்ஸ் அல்லது சேவைகள் என்று எந்த தேர்வாக இருந்தாலும், அவர்களின் வாகனத்தின் உள்ளேயும், வெளியேயும் அளிக்கிறோம்” என்றார்.
இப்போதைக்கு ஃபோர்டின் 15 மில்லியன் வாகனங்களில் SYNC-யை கொண்டுள்ளது. மேலும் வரும் 2020-க்குள் இந்த எண்ணிக்கை 43 மில்லியன் வரை எட்டி சேரலாம் என்று அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. இந்நிலையில் இந்த ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவை, வட அமெரிக்காவில் 2017 மாடல்களில் அளிக்கப்பட உள்ளது. புதிய ஃபோர்டு எஸ்கேப்பில் இருந்து இதன் துவக்கம் இருக்கும். SYNC 3 உள்ள 2016 ஆண்டு வாகனங்களின் உரிமையாளர்கள், இந்தாண்டின் இறுதியில் இதை மேம்படுத்தி கொள்ளலாம். இந்த SYNC இணைப்பை இயக்கும் 4G LTE, இதன் மற்றொரு முக்கிய சேர்ப்பு ஆகும். இதை பயன்படுத்தி, காரின் அம்சங்களை ரிமோட் மூலம் உரிமையாளரால் இயக்க முடியும். இதில் உள்ள அம்சங்களை குறித்து பார்க்கும் போது, ஒரு ரிமோட் ஸ்டார்ட், அன்லாக் டோர்கள், எரிபொருள் அளவை அறியலாம் அல்லது ஒரு நிறுத்தப்பட்ட வாகனத்தை கண்டறிவது என்று ஒருவரால் எளிதாக அட்டவணைப்படுத்த முடியும். இவை அனைத்தையும் ஒரு ஸ்மார்ட்போன் மூலம் செய்ய முடியும்.
இந்திய மாடல்களில் இதை சேர்ப்பது குறித்து இதுவரை, இந்த கார் தயாரிப்பாளர் தரப்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்திய சந்தையில் முஸ்டாங் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful