டாட்சன் நிறுவனம் தனது புதிய கான்செப்ட் வாகனங்களின் படங்களை வெளியிட்டது.
published on அக்டோபர் 19, 2015 02:53 pm by raunak
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்:
இந்த மாத இறுதியில் டோக்கியோ மோட்டார் ஷோவில் அதிகாரபூர்வ படங்கள் வெளியிடப்பட உள்ளன.இந்தியாவிலும் வெளியாகலாம்.
டாட்சன் நிறுவனம் விரைவில் தனது புதிய கான்சப்ட் மாடல் ஒன்றை இம்மாதம் 28 ஆம் தேதி நடக்க உள்ள டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகப்படுத்த உள்ளது. அந்த வாகனத்தின் அதிக விவரங்கள் அறிய முடியாத சூசகமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களை தவிர வேறெந்த தகவலையும் டாட்சன் நிறுவனம் வெளியிடவில்லை. டாட்சன் நிறுவனத்தின் கார்பரேட் துணை தலைவரான வின்சென்ட் கோபி , எங்களிடம் பேசுகையில் , விரைவில் ஒரு க்ராஸ் ஓவர் வகை வாகனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தப் போவதாக கூறினார். ஆகவே டோக்கியோ ஷோவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள கான்செப்ட் மாடல் இந்த க்ராஸ் ஓவர் வாகனத்தினுடயதாகவோ அல்லது உற்பத்தி தொடங்குவதற்கு தயாராக உள்ள ரெடி - கோ வெர்ஷன் காரினுடைய கான்செப்டாகவோ இருக்கலாமென்று யூகிக்கப்படுகிறது .
பரிந்துரைக்கப்படுகிறது : பிரத்தியேகமாக : டாட்சன் இந்திய வாகன சந்தையில் கிராஸ் ஓவர் வாகன பிரிவில் நுழைய தீவிர யோசனை
நமக்கு கிடைத்துள்ள படங்களில் ஸ்கோடா நிறுவனத்தின் முந்தைய எடி கார்களில் இருந்தது போன்ற பகலிலும் ஒளிரும் LED இரட்டை முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதை காண முடிகிறது. மேலும் இந்த கான்செப்ட் மாடல் ஒரு க்ராஸ் ஓவர் காரினுடயது தான் என்று நம்ப வைப்பதற்கு ஏற்ப பெண்டர் க்லேடிங் அமைப்பு நம்மை எண்ண வைக்கிறது. மேலும் டாட்சன் நிறுவனத்தின் பிரத்தியேக தலைகீழாக திரும்பி இருக்கும் சரிவகத்தின் வடிவிலான க்ரில் அமைப்பையும் பார்க்க முடிகிறது.
அடுத்ததாக வெளிவர இருக்கும் டாட்சன் ரெடி - கோ கார்கள் ரெனால்ட் மற்றும் நிஸ்ஸான் நிறுவன கூட்டு தயாரிப்பில் உருவான CMF – A ( காமன் மாடுலார் பேமிலி) பிளேட்பார்மை அடிப்படையாகக் கொண்டு (க்விட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே தொழில் நுட்பம் ) உருவாக்கப்பட உள்ளன. ஆனால் இப்போதைக்கு டோக்கியோ மோட்டார் ஷோவில் வெளியிடப்பட இருக்கும் கான்செப்ட் மாடல் அடுத்து வெளிவர உள்ள இந்த ரெடி- கோ காரினுடயதா அல்லது முற்றிலும் புதிய தயாரிப்பா என்பது நமக்கு தெளிவாக தெரியவில்லை. மற்ற ரெனால்ட் மற்றும் நிஸ்ஸான் கார்களில் பயன்படுத்தப்பட்டு வரும் CMF பிளேட்பார்ம் இந்த டாட்சன் கார்களிலும் இருக்கலாமே தவிர மற்ற அனைத்து அம்சங்களும் ஒரு புத்தம் புதிய தயாரிப்பாகவே இருக்குமா என்ற கேள்விக்கு எதிர் வரும் டோக்கியோ மோட்டார் ஷோ பதில் அளிக்கும் என்று நம்பலாம்.
இதையும் படியுங்கள் ரெனால்ட் க்விட் டீலர்ஷிப் மையங்களை அடைந்தது. விநியோகம் தொடங்கியது.
0 out of 0 found this helpful