மெர்சிடிஸின் அதிக விற்பனையான கார் CLA: விற்பனை விபரங்கள் மூலம் தெரியவந்தது

published on அக்டோபர் 08, 2015 05:10 pm by manish for மெர்சிடீஸ் ஜிஎல்இ 2015-2020

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

நாங்கள் முன்னமே கூறியது போல, இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்திற்கு தற்போது பொற்காலமாக உள்ளது. ஜெர்மன் நாட்டு வாகன தயாரிப்பாளரான இந்நிறுவனம், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 43% வளர்ச்சியை பெற்றதாக அறிவித்துள்ளது. இதன்மூலம் 2015 ஆம் ஆண்டில் 15 மெர்சிடிஸ் மாடல்களை அறிமுகம் செய்யும் திட்டத்திற்கான பலனை அந்நிறுவனம் அடைந்ததாக தெரிகிறது. இந்த ஆடம்பர கார் தயாரிப்பாளர், தொடர்ந்து வளர்ச்சியை பெற்று வருவதை, கடந்த 9 மாதங்களில் இதன் செயல்பாடுகளை தொகுத்த புள்ளிவிபரங்களின் மூலம் அறிய முடிகிறது.

Also Read: Mercedes-Benz to launch GLE-Class on October 14

கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான கால அளவில், மெர்சிடிஸ்-பென்ஸ் இந்தியா 34% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. அதாவது, கடந்த ஒன்பது மாதங்களில் மட்டும் 10,079 கார்கள் விற்பனையாகி உள்ளது. மெர்சிடிஸ் நிறுவனத்திற்கு இந்த விற்பனை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த சாதனை ஆகும். ஏனெனில் கடந்த 2014 ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த விற்பனையை, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலேயே அந்நிறுவனம் எட்டியுள்ளது.

Also Read: Mercedes Announces Commencement of Production for the CLA

வெவ்வேறு விதமான கார்களின் குழுவை அதிகளவில் அறிமுகப்படுத்தியதன் விளைவாக, மெர்சிடிஸ் நிறுவனத்திற்கு இந்த வளர்ச்சி கிடைத்துள்ளது. SUV, சேடன், AMG செயல்பாடு கொண்ட கார் என்று பல்வேறு வகையான கார்களையும், புதிய தலைமுறையை சேர்ந்த கார் பிரிவுகளையும், மெர்சிடிஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது. மெர்சிடிஸின் இந்த செயல்பாட்டிற்கான காரணங்களில் ஒன்று, இளம் வயதினர் மீது கவனம் வைத்து செயல்பட்டது ஆகும். மேலும் அதற்கான பலன், அந்நிறுவனத்திற்கு கிடைத்துவிட்டதாக தெரிகிறது. மெர்சிடிஸ் கார்களில் அதிக பிரபலமடைந்த பட்டியலில் CLA, C-கிளாஸ் மற்றும் E-கிளாஸ் சேடன்கள் ஆகியவை உட்படுகின்றன. அதே நேரத்தில் அந்த பட்டியலுக்கு மெர்சிடிஸின் SUV பட்டியலும் ஆதரவாக செயல்பட்டது. ஆனால், SUV-களின் செயல்பாடு உடன் ஒப்பிட்டால் சேடன்கள் அதிக அளவில் பிரபலம் அடைந்துள்ளன. அதாவது கடந்த 9 மாதங்களில் அவை 39% கூடுதல் விற்பனையை பெற்றுள்ளது.

Also Read: 2015 Mercedes S 63 AMG Sedan Launched at Rs 2.53 Crore

மெர்சிடிஸின் ஒட்டுமொத்த SUV பட்டியலின் வளர்ச்சி 70% என இருக்கும் நிலையில், அதில் அதிகமாக பிரபலமடைந்த SUV-யாக GLA காணப்படுகிறது. இதன் விற்பனை, GL-கிளாஸ் மற்றும் M-கிளாஸ் ஆகியவற்றின் விற்பனையோடு ஏறக்குறைய ஒத்து போகிறது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மெர்சிடீஸ் ஜிஎல்இ 2015-2020

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience