சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2015 மிட்சுபிஷி இறுதி பதிப்பை குறித்த விவரங்களை தெரிந்துக் கொள்ளுங்கள்

manish ஆல் அக்டோபர் 07, 2015 11:59 am அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

ஜெய்ப்பூர்: மிட்சுபிஷி நிறுவனம், தனது மிகவும் பிரபலமான தயாரிப்பான லேன்சர் இவோ காரின் மீதான அவசர காரணிகளை மூலதனமாக வைத்து, 2015 மிட்சுபிஷி லேன்சர் இவோல்யூஷன் காரின் இறுதிப் பதிப்பை அறிமுகம் செய்ய தயாராக உள்ளது. தற்போதைய GSR மாடலை அடிப்படையாக கொண்ட இந்த கார், ‘இறுதி பதிப்பு' என்ற பேட்ஜின் கீழ் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மேம்பட்ட அம்சங்களை உட்கொண்டுள்ளது.

இந்த இறுதி பதிப்பில், கருப்பு நிறத்திலான அலுமினியம் ரூஃப் இருப்பதற்கு ஏற்ப, பளபளப்பான கருப்பு நிறத்திலான பம்பர் அசென்ட் காணப்பட்டு, ரெலி ரெட், ஆக்டேயின் ப்ளூ, பியேல் வைட் மற்றும் மெர்க்குரி க்ரே ஆகிய நிறத் திட்டங்களில் அமைந்து விற்பனைக்கு வருகிறது. லேன்சர் இவோ லிமிடேட் பதிப்பில், ஒரு அடர்ந்த கிரோம் கிரில் மற்றும் வெளிப்புற திறப்பிகள் ஆகியவற்றை பெற்று, அதற்கு பளபளப்பான கருப்பு நிறம் பூசப்பட்டிருக்கிறது. 2015 மிட்சுபிஷி லேன்சர் இவோல்யூஷன் இறுதி பதிப்பு, அடர்ந்த கிரோம் என்கை அலாய் வீல்கள் மற்றும் பளபளப்பான கருப்பு நிறத்தில் சென்டர் பம்பரை பெற்றுள்ளது.

உள்புற அமைப்பை பொறுத்த வரை, இறுதிப் பதிப்பில் ஒரு கருப்பு ஹெட்லைனர், பில்லர்கள் மற்றும் சன் விஸர் ஆகியவை காணப்படுகிறது. இந்த காரை ஒரு லிமிடேட் பதிப்பு என உணர்த்தும் வகையில், கேபினின் சென்ட்ரல் கன்சோலில் எண்ணிக்கையிலான பிளாக் காணப்படுகிறது. கருப்பு ஸ்போர்ட்ஸ் சீட்களில் அமைந்த கருப்பு ஹெட்லைனர் சிறப்பாக காட்சி அளிக்கிறது. மேலும் கருப்பு நிற கியர் நாப், ஸ்டீயரிங் வீல், தரை விரிப்புகள் மற்றும் கன்சோல் லிட்கள் ஆகியவற்றில் சிவப்பு நிறத்திலான வரிகளை காண முடிகிறது.

இந்த கடைசி பதிப்பு இவோ கார், தற்போதைய 2.0 லிட்டர் டர்போ 4 GSR என்ஜினையே கொண்டிருக்கும். இதன்மூலம் 6,500rpm-ல் 303bhp ஆற்றலையும், 4,000rpm-ல் 414Nm முடுக்குவிசையையும் பெறலாம். ஒரு தரமான GSR-ன் மூலம் 291bhp ஆற்றலையும், 407Nm முடுக்குவிசையையும் மட்டுமே அளிக்க முடியும் என்ற நிலையில், இது ஒரு கணிசமான மேம்பாடாகும்.


மேற்கூறிய ஆற்றல்கூடம், 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் மிட்சுபிஷியின் AWD சிஸ்டம், சூப்பர் ஆல்-வீல் கன்ட்ரோல் ஆகியவற்றை பெற்று, அவை நான்கு முனைகளிலும் பில்ஸ்டாயின் அதிர்வு தாங்கிகள் மற்றும் ஐபாச் ஸ்பிரிங்குகள் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. இறுதி பதிப்பின் முன்புறத்தில், 2 பிஸ் பிரிம்போ பிரேக் ரோட்டர்களை கொண்டு, காரின் கையாளும் செயல்பாடுகளை மேம்படுத்துகிறது.

அமெரிக்காவில் இறுதி பதிப்பின் கீழ் 1,600 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்கான விலை 37,995 டாலர் (ரூ.24,80,406) எனத் துவங்குகிறது.

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.7 - 9.81 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.13.99 - 24.89 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15.50 - 27.25 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.15 - 26.50 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை