BYD Yangwang U8 எஸ்யூவி பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
யாங்வாங் U8 BYD -ன் பிளக்-இன்-ஹைப்ரிட் எஸ்யூவி ஆகும். இது ஒரு குவாட் மோட்டார் செட்டப்பை கொண்டுள்ளது. மோட்டார் 1,100 PS-க்கும் அதிகமான அவுட்புட்டை கொடுக்கிறது.
-
U8 ஆனது BYD -ன் யாங்வாங் சப் பிராண்டின் கீழ் உலகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
-
இது பிக்சலேட்டட் பேட்டர்ன் கிரில் மற்றும் லைட்டிங்குடன் வழக்கமான எஸ்யூவி தோற்றத்தை கொண்டுள்ளது.
-
U8 ஆனது 5 இருக்கைகள் கொண்ட கட்டமைப்பில் வழங்கப்படுகிறது.
-
1200 PS பவர் அவுட்புட் உடன் 100 கி.மீ வேகத்தை வெறும் 3.6 வினாடிகளில் இந்த காரால் எட்ட முடியும்.
-
இது 30 நிமிடங்கள் வரை தண்ணீரில் மிதக்கக்கூடிய திறன் கொண்டது.
உலகளவில் BYD அதன் யாங்வாங் பிராண்டிங்கின் கீழ் U8 ஃபிளாக்ஷிப் எஸ்யூவியை விற்பனை செய்கிறது. இது BYD இன் பிரீமியம் பிரிவாகும். இப்போது இந்தியாவில் BYD நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி -யான யாங்வாங் U8 ஆனது பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 மூலமாக இந்தியாவில் அறிமுகமம் செய்யப்பட்டுள்ளது. U8 ஆனது ஒரு குவாட்-மோட்டார் ரேஞ்ச்-எக்ஸ்டெண்டர் பவர்டிரெய்னை கொண்டுள்ளது.
இந்த எஸ்யூவியை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
BYD யாங்வாங் U8 வடிவமைப்பு
வழக்கமான பாக்ஸி எஸ்யூவி தோற்றம் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் ஒரு பிக்சலேட்டட் பேட்டர்ன் கிரில் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஹெட்லைட்கள் மற்றும் டிஆர்எல் ஹவுசிங்ஸ் உள்ளேயும் கொடுக்கப்பட்டுள்ளது. சதுர வடிவிலான வீல் ஆர்ச்கள் மற்றும் பிளாக் அவுட் சக்கரங்களை கொண்டுள்ளது. அதே நேரத்தில் அது ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்களை பெறுகிறது. பின்புறத்தில் டெயில்கேட் பொருத்தப்பட்ட ஸ்பேர் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் எல்இடி டெயில் லைட்கள் அதே பிக்சலேட்டட் வடிவ வடிவமைப்பை கொண்டுள்ளன.
வசதிகள் நிறைந்த உட்புறம்
உள்ளே U8 எஸ்யூவி பிரவுன் கேபின் தீம் மற்றும் 5-சீட்டர் அமைப்பில் வருகிறது. இது முன்பக்க பயணிகளுக்கான 3 ஸ்கிரீன் செட்டப்பை மட்டும் கொண்டுள்ளது. பின்பக்க பயணிகளுக்கு ஹெட்ரெஸ்ட்களில் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மல்டி-சோன் ஏசி, பனோரமிக் சன்ரூஃப், 22-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் பவர்டு மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகியவை கொடுக்கப்படலாம்.
பவர்டிரெய்ன் விவரங்கள்
BYD ஆனது யாங்வாங் U8 காரை பிளக்-இன் ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் வழங்குகிறது. இதில் பெரிய பேட்டரி பேக் மற்றும் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு குவாட் மோட்டார் அமைப்பையும் கொண்டுள்ளது மற்றும் 1200 PS வரை அவுட்புட்டை கொடுக்கிறது. U8 1000 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது. U8 ஆனது வெறும் 3.6 வினாடிகளில் 0 முதல் 100 கி.மீ வேகத்தை எட்டும். மேலும் இது 30 நிமிடங்கள் வரை தண்ணீரில் மிதக்கும் திறன் கொண்டது என BYD தெரிவித்துள்ளது.
இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுமா ?
யாங்வாங் U8 எஸ்யூவி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா என்பதை BYD இன்னும் உறுதிப்படுத்தவில்லை. அப்படி அறிமுகப்படுத்தப்பட்டால் இது லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர், BMW X7 மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் GLS போன்ற பிரீமியம் எஸ்யூவி -களுக்கு இது மாற்றாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.