சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஆடி S5 ஸ்போர்ட்பேக் ரூ. 62.95 லட்சத்திற்கு அறிமுகம்

published on அக்டோபர் 20, 2015 06:43 pm by saad for ஆடி எஸ்5

ஜெர்மன் கார் தயாரிப்பாளர்கள் புதிய கார்களை விழாக் காலத்தில் சரமாரியாக அறிமுகம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்த ஆடி நிறுவனமும், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளவேண்டும் என்று முடிவு செய்து, இந்திய சந்தையில் புதிய செயல்திறன் மிகுந்த சேடன் வகை காரை களமிறக்கி, தனது போட்டியாளர்களைச் சந்திக்க தயாராகிவிட்டது. முழுவதும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, டெல்லி/மும்பை எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ. 62.95 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டு, ஆடி S5 ஸ்போர்ட்ஸ் பேக் என்ற பெயர் கொண்ட இந்த கார், இந்தியாவிற்கு வருகை தருகிறது.

7 ஸ்பீட் S ட்ரோனிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்ட 3.0 லிட்டர் V6 TFSI சூப்பர் சார்ஜ்ட் குவாட்ரோ இஞ்ஜின், அபாரமான 333 HP செயல்திறனை உற்பத்தி செய்கிறது. இந்த அருமையான இஞ்ஜின் தொழில்நுட்பங்கள் இணைந்து, கார் புறப்பட்ட 5.1 வினாடிகளில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும்படி செய்கிறது. எனினும், இதன் வேகம் மணிக்கு 250 கிலோ மீட்டரை எட்டி பிடித்தவுடன், தானியங்கி மின்னணு அமைப்பு மூலம் கட்டுப்படுத்தப்படும். இஞ்ஜினுடன் இணைக்கப்பட்ட மிகச் சிறந்த S ட்ரோனிக் பல்லிணைப்பு பெட்டி (கியர் பாக்ஸ்), தங்குதடை இல்லாத சக்தியை இந்த காருக்கு வழங்குகிறது. மேலும், 8.1 லிட்டர் எரிபொருளில் 100 கிலோ மீட்டர் வரை ஓடக்கூடிய, சிறந்த எரிபொருள் சிக்கனத்தை S ட்ரோனிக் பல்லிணைப்பு பெட்டி வழங்குகிறது. இது தவிர, தானியங்கி ஸ்டார்ட்/ஸ்டாப் இஞ்ஜின் அமைப்பு, இதன் எரிபொருள் சிக்கனத்தை மேலும் அதிகரிக்கிறது.

மேலும் வாசிக்க: 2017 ஆடி S4 மாடலில் சூப்பர் சார்ஜர், மேனுவல் கியர் அமைப்பு நீக்கப்பட்டு, டர்போ சார்ஜ்ட் வசதி இணைக்கப்பட்டுள்ளது.

புதிய S5 ஸ்போர்ட்ஸ் பேக்கில், ஆடி ட்ரைவ் செலக்ட் அமைப்பு மூலம் சிறந்த செயல்திறன் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பு, இஞ்ஜின், ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன், பவர் ஸ்டியரிங் மற்றும் தானியங்கி குளிர் சாதன அமைப்பு ஆகியவைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தி செயல்திறனை அதிகரிக்கும். புதிய ஆடி S5 ஸ்போர்ட் பேக், தனது ஸ்டைலான கூபே டிசைன் வழியாக, இந்தியாவில் ஒரு தனிச் சிறப்பான நிஷ் செக்மெண்ட் பிரிவில் செயல்படும். இந்த 2015 வருடம் மட்டும், ஆடி நிறுவனம் RS6 அவான்தே மற்றும் RS 7 போன்ற செயல்திறன் மிகுந்த கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கூடுதலாக ஒரு புதிய S5 ஸ்போர்ட்ஸ் பேக் காரை அறிமுகப்படுத்துவது, இந்நிறுவனத்தின் ஃபிராண்ட் இமேஜை மேலும் பலப்படுத்துகிறது.

புதிய S5 ஸ்போர்ட்ஸ் பேக் காரை அறிமுகப்படுத்தும் போது, இந்திய ஆடி நிறுவனத்தின் தலைவரான திரு. ஜோ கிங், “பந்தய கார்களின் சிறப்பையும், செயல்திறன் மிகுந்த கார்களின் அம்சங்களையும் இணைத்து எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை, புதிய ஆடி S5 ஸ்போர்ட் பேக் கார் வெகுவாக கவர்ந்திழுக்கும். ஆடி நிறுவனம், தனது அதி நவீன கார் தயாரிப்பு தொழில்நுட்பத்தை செயல்திறன் மற்றும் வடிவமைப்பில் செலுத்தி, இதை ஸ்போர்டியாகவும் கம்பீரமாகவும் இருக்கும் வகையில் தயாரித்துள்ளது. இது போன்ற அனைத்து சிறப்பம்சங்கள் இருந்தும், களிப்பூட்டும் டிரைவிங் அனுபவத்திலோ, எரிபொருள் சிக்கனத்திலோ எந்த வித சமரசமும் செய்யாமல், அவற்றிலும் சிறந்து விளங்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. பல வகையான சிறப்பம்சங்களையும், தொழில்நுட்பங்களையும் இந்தியாவில் முதல் முதலில் அறிமுகப்படுத்திய பெருமை ஆடி நிறுவனத்திற்கு உண்டு. ஏனெனில், இந்தியாவின் முதல் கச்சிதமான ஆடம்பர ஓபன் டாப் கன்வர்டபிள் ஆடி A3 கப்ரியோலேட்; இந்தியாவில் முதல் முதலில் தயாரிக்கப்பட்ட லேசர் ஹை பீம் லைட்டிங் கொண்ட ஆடி R8 LMX லிமிடெட் எடிஷன்; இந்தியாவின் முதல் ஆவாந்த் பாடி அமைப்பு கொண்ட சூப்பர் ஸ்போர்ட்ஸ் காரான ஆடி RS 6 ஆவாந்த போன்ற முதல் தரமான கார்களை அறிமுகப்படுத்திய எங்கள் நிறுவனம், முதல் முறையாக செயல்திறன் மிகுந்த கார்களின் வரிசையில் இந்தியாவில் ஆடி S5 ஸ்போர்ட் பேக் காரை அறிமுகப்படுத்தி, இந்தியாவில் உள்ள எங்கள் செயல்திறன் மிக்க கார்களின் பட்டியலை மேலும் பலப்படுத்துகிறது,” என்று குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க:

ஆடி A6 35 TFSI ரூ. 45.90 லட்சத்திற்கு அறிமுகம்

மேலும் தெரிந்து கொள்ள:

ஆடி A3 சேடனின் புதிய பேஸ் வேரியான்ட்டை ரூ. 25.50 லட்சத்திற்கு அறிமுகம் செய்கிறது

s
வெளியிட்டவர்

saad

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ஆடி எஸ்5

Read Full News

trendingசேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்
Rs.2.03 - 2.50 சிஆர்*
எலக்ட்ரிக்
Rs.41 - 53 லட்சம்*
Rs.11.53 - 19.13 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை