ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ், ஷாருக்கானின் சமீபத்திய காரைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் 2018-2024 க்காக மார்ச் 29, 2023 04:59 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 30 Views
- ஒரு கருத்தை எழுதுக
பாலிவுட் நடிகரான இவர் உலகின் மிக ஆடம்பரமான SUV -களில் ஒன்றுக்காக நிறைய பணத்தை செலவழித்துள்ளார்.
ரூ.10 கோடிக்கு மேல் மதிப்புள்ள உலகின் மிக ஆடம்பரமான SUV -களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் வெள்ளை நிறக் காரை பாலிவுட்டின் கிங் கான் ஆன, ஷாரூக் கான் சமீபத்தில் வாங்கியுள்ளார். இந்த SUV ஷாருக் கானின் சிக்னேச்சர் 555 நம்பர் பிளேட்டுடன் அவரது பங்களாவான 'மன்னத் அருகே வந்தபோது, அவரது கேரேஜில் இது ஒரு சமீபத்திய சேர்க்கை இது என்பதை, ரசிகர்கள் தெரிந்து கொண்டனர்.
ஷாருக்கானின் புதிய கார் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஐந்து விஷயங்கள் இங்கே:
கவர்ச்சிகர வடிவமைப்பு
கல்லினனின் வடிவமைப்பு எப்போதும் ஆச்சர்யப்படுத்தக்கூடியது மற்றும் வலிமையானது, மேலும் பிளாக் பேட்ஜுக்கு வரும்போது, இது ரோல்ஸ் ராய்ஸின் தயாரிப்புத் துறைப் பொறியியலின் உச்சத்தை பிரதிபலிக்கிறது. செழுமையான SUV யின் இந்தப் பதிப்பு, பாந்தியன் கிரில் மற்றும் க்ரோம் பிளாக் ஸ்பிரிட் ஆஃப் எக்ஸ்டஸிக்கான பிளாக்-அவுட் பூச்சு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது ஃபோர்ஜ்டு 22-அங்குல அலாய் வீல்களையும் கொண்டுள்ளது, இவையெல்லாம் கல்லினனின் பிளாக் பேட்ஜ் எடிஷனுக்கென பிரத்தியேகமானவை.
டெக்னிக்கல் கார்பன் ஃபைபர் டாஷ்போர்டு
உள்ளே, கல்லினன் பிளாக் பேட்ஜ் டாஷ்போர்டில் முப்பரிமாண கார்பன் டெக் ஃபைபர் பூச்சு உள்ளது, அதாவது, இது 3-D எஃபெக்டை வழங்கும் மிகவும் துல்லியமான மீண்டும் மீண்டும் வரக்கூடிய வடிவியல் வடிவங்களைக் கொண்டுள்ளது. இது கல்லினனின் பிளாக் பேட்ஜ் பதிப்பிற்கென பிரத்தியேகமானது.
தாராளமான இளைப்பாறும் இருக்கைகள்
இளைப்பாறும் இருக்கை அனுபவம், பின் இருக்கைகளில் வசதியை அதிகப்படுத்துகிறது, இரண்டு பயணிகளுக்கும் ஏற்றபடி ஹை-டெஃபனிஷன் 12-இன்ச் டிஸ்பிளே மற்றும் ஷாம்பெயின் கண்ணாடிகளை வைத்திருக்கும் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும், பயணிகள் தங்களின் தனிப்பட்ட இருக்கை அமைப்பு மற்றும் மசாஜ் மோட் -ஐ தேர்ந்தெடுக்கலாம். ரோல்ஸ் ராய்ஸ் SUV ஆனது 1,344 ஒளியிழை விளக்குகளுடன் கறுப்பு நிற லெதரில் ஸ்டார்லைட் ஹெட் லைனரைப் பெற்றுள்ளது.
மேலும் படிக்க: டாடா சஃபாரியின் 25 ஆண்டுகள்: ஐகானிக் SUV எவ்வாறு குடும்ப நட்பு படத்திற்காக அதன் முரட்டுத்தனமான, மாச்சோ டேக்கை நீக்கியது
ஸ்போர்ட்டி என்ஜினியரிங்
பிளாக் பேட்ஜ் என்பது ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கான துடிப்பான தன்மையை காட்டுகிறது. கல்லினனைப் பொறுத்தவரை, "ஸ்டாண்டர்டு" SUV யிலிருந்து அனுபவத்தை வேறுபடுத்துவதற்காக ஃப்ரேமின் வலிமை, நான்கு சக்கர ஸ்டீயரிங் மற்றும் ஆல்-வீல் டிரைவ் டிரெய்ன் சிஸ்டம்களை வடிவமைப்பை மாற்றியமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சஸ்பென்சன் கூறுகள் மற்றும் செட்டிங்குகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. உயர்த்தப்பட்ட பிரேக்கிங் பைட் பாயிண்ட் மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பிரேக் டிஸ்க் வென்டிலேஷனுடன் ரோல்ஸ் ராய்ஸ் பிரேக்குகளிலும் வேலை செய்துள்ளது.
அதிக சக்தி வாய்ந்த V12 என்ஜின்
கல்லினன் பிளாக் பேட்ஜ் ஒரு புதிய எக்ஸாஸ்ட் அமைப்புடன் மேம்படுத்தப்பட்ட 6.75 லிட்டர் ட்வின்-டர்போ V12 இன்ஜினைப் பெறுகிறது. இது இப்போது 600PS மற்றும் 900Nm ஐ வெளிப்படுத்துகிறது, இது ஸ்டாண்டர்டு கல்லினனை விட 29PS மற்றும் 50Nm அதிகமாகும். இது எட்டு வேக ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது பிளாக் பேட்ஜ் பதிப்பிற்காக குறிப்பாக விரைவாகப் ரெஸ்பான்ஸ் செய்வதற்காக டியூன் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்: ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் ஆட்டோமெட்டிக்