• English
  • Login / Register

இந்தியாவில் 2024 Mercedes-AMG G 63 வெளியிடப்பட்டது

published on அக்டோபர் 22, 2024 07:43 pm by dipan for மெர்சிடீஸ் ஜி கிளாஸ்

  • 29 Views
  • ஒரு கருத்தை எழுதுக

வடிவமைப்பில் மாற்றங்கள் குறைவாகவே இருந்தாலும் G 63 -யின் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் பவர்டிரெய்ன் டெக்னாலஜியில் பெறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

  • மெர்சிடிஸ்-AMG G 63 ஆனது LED புரொஜெக்டர் ஹெட்லைட்கள், 22-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் டெயில்கேட் பொருத்தப்பட்ட ஸ்பேர் வீல் ஆகியவற்றைப் கொண்டுள்ளது.

  • கேபினில் 12.3 இன்ச் டூயல் டிஸ்ப்ளேக்கள் அப்டேட்டட் சாஃப்ட்வேர் மற்றும் 3 ஜோன் ஆட்டோ ஏசி ஆகியவை உள்ளன.

  • பாதுகாப்புக்காக இது மல்டி ஏர்பேக்குகள் 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

  • இது 4WD செட்டப் உடன் 4 லிட்டர் ட்வின்-டர்போ மைல்ட்-ஹைப்ரிட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

2024 இ-கிளாஸ் அறிமுகத்தின் போது மெர்சிடிஸ்-பென்ஸ் மேலும் இரண்டு கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. அந்த வகையில் இது மெர்சிடிஸ்-AMG G 63 ஃபேஸ்லிஃப்ட் இப்போது அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 3.60 கோடியிலிருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). ஃபேஸ்லிஃப்ட்க்காக இது புதிய வடிவமைப்பு எலமென்ட்கள், கேபினுக்கான அப்டேட்கள், செயலில் உள்ள சஸ்பென்ஷன் செட்டப் மற்றும் இன்ஜின் டெக்னாலஜியில் சில மாற்றங்களை பெறுகிறது.

புதிய G 63 இன் அனைத்து 120 யூனிட்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் டெலிவரிகள் தொடங்கும். 

 2024 மெர்சிடிஸ்-AMG G 63 வழங்கும் அனைத்தையும் பார்ப்போம்:

வெளிப்புறம்

முதல் பார்வையில் 2024 மெர்சிடிஸ்-AMG G 63 வெளிச்செல்லும் மாடலை போலவே தெரிகிறது. ஜி-கிளாஸ் மாடல்களுடன் தொடர்புடைய பாக்ஸி சில்ஹவுட், வட்ட ப்ரொஜெக்டர் அடிப்படையிலான எல்இடி ஹெட்லைட்கள் முன்பு போலவே வட்ட வடிவ LED DRL -கள் மற்றும் ஃபெண்டரில் பொருத்தப்பட்ட டர்ன் இண்டிகேட்டர்கள் ஆகியவை அப்படியே உள்ளன. ஆனால் கூர்ந்து கவனித்தால் பிளாக் கலர் கிரில் மற்றும் மெர்சிடிஸ் லோகோ மற்றும் புதிய வடிவிலான பம்பர் போன்ற மாற்றங்களை நீங்கள் பார்க்க முடியும். வீல் வடிவமைப்பும் புதியது. மேலும் ஒருவர் அதை 22-இன்ச் அளவு வரை தேர்வு செய்யலாம். அது மட்டுமல்லாமல் கார் ஃபேஸ்லிஃப்ட் முன் பதிப்பைப் போலவே பெரிய மாற்றமில்லாமல் உள்ளது. 

இன்ட்டீரியர், வசதிகள் மற்றும் பாதுகாப்பு

உட்புறத்தில் கூட முதல் பார்வையில், 2024 AMG G 63 ஆனது முன்-பேஸ்லிஃப்ட் மாடலை போன்ற கேபின் செட்டப்பை கொண்டுள்ளது. இருப்பினும் ஸ்டீயரிங் புதியது மற்றும் பல்வேறு செயல்பாடுகளைத் தேர்ந்தெடுக்க ரோட்டரி டயல்களுடன் தற்போதைய-ஜென் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கார்களை போலவே உள்ளது.

நாப்பா லெதர் அப்ஹோல்ஸ்டரியில் இருக்கைகள் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. மற்றும் எஸ்யூவி கார்பன் ஃபைபர் ஆக்ஸென்ட்கள் மற்றும் கஸ்டமைஸபிள் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆனால் இங்கே புதியது என்னவென்றால் டூயல் 12.3-இன்ச் ஸ்கிரீன்கள் இப்போது புதுப்பிக்கப்பட்ட சாஃப்ட்வேரை கொண்டுள்ளன. மற்றும் அப்டேட்டட் ஆஃப்-ரோட் காக்பிட் (முக்கிய புள்ளிவிவரங்களைக் காட்டும்) மற்றும் ஆக்மென்ட் ரியாலிட்டி ஆகியவை நேவிகேஷன் அமைப்பில் இப்போது ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. 

வசதிகளைப் பொறுத்தவரையில் இது டாஷ்போர்டில் டூயல் 12.3-இன்ச் ஸ்கிரீன்களை கொண்டுள்ளது (ஒன்று டச் ஸகிரீனுக்கானது மற்றும் மற்றொன்று டிரைவர்ஸ் டிஸ்பிளேவுக்கு), 18-ஸ்பீக்கர் பர்மெஸ்டர் 3D சரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், 3-ஜோன் ஆட்டோ ஏசி மற்றும் சன்ரூஃப் ஆகியவை உள்ளன.

பாதுகாப்புக்காக பல ஏர்பேக்குகள், பிளைண்ட் ஸ்பாட் உதவியுடன் கூடிய 360 டிகிரி கேமரா மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் ஆகியவை அடங்கும். பிரேக் அசிஸ்ட் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

மேலும் படிக்க: 2024 ஆண்டி மீதியில் வெளியிடப்படவுள்ள கார்கள் என்ன தெரியுமா ?

பவர்டிரெய்ன் ஆப்ஷன்

மெர்சிடிஸ்-பென்ஸ் AMG G 63 ஆனது 4-லிட்டர் ட்வின்-டர்போ V8 பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது இப்போது மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. விரிவான விவரங்கள் பின்வருமாறு:

இன்ஜின்

48V மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 4-லிட்டர் ட்வின்-டர்போ V8 இன்ஜின்

பவர்

585 PS

டார்க்

850 என்எம்

டிரான்ஸ்மிஷன்

9-ஸ்பீடு DCT*

டிரைவ்டிரெய்ன்

4WD^

*DCT = டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

^4WD = 4 வீல் டிரைவ் 

AMG G 63 -ல் உள்ள மைல்ட்-ஹைப்ரிட் செட்டப் 20 PS கூடுதல் ஆக்ஸிலரேஷனை கொடுக்கிறது. இது ஒரு புதிய லான்ச் கன்ட்ரோல் ஃபங்ஷனை பெறுகிறது மற்றும் 0-100 கி.மீ வேகத்தில் 4.3 வினாடிகளில் வேகமாகச் செல்லும். ஆக்டிவ் உள்ள சஸ்பென்ஷன் அமைப்பையும் கொண்டுள்ளது.

போட்டியாளர்கள்

மெர்சிடிஸ்-AMG G 63 -க்கு அதன் விலை வரம்பில் போட்டியிட எந்த கார்களும் இல்லை. ஆனால் ஆஃப்-ரோடிங் என்று வரும்போது ஜீப் ரேங்லர் மற்றும் லேண்ட் ரோவர் டிஃபென்டர் ஆகியவற்றை கவனத்தில் வைக்கலாம். 

கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on Mercedes-Benz ஜி கிளாஸ்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • M ஜி Majestor
    M ஜி Majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience