16,444 ஈக்கோஸ்போர்ட் கார்களை ஃபோர்டு திரும்ப பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளது
published on நவ 16, 2015 05:27 pm by nabeel for போர்டு இக்கோஸ்போர்ட் 2015-2021
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
2015 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டு, வாகன தயாரிப்பாளர்களுக்கு ராசியுள்ளதாக அமையவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஏனெனில் கடந்த ஜூலை மாதம் ஜீப்பில் இருந்து துவங்கி, செப்டம்பரில் ஹோண்டாவிற்கு நகர்ந்து, அதன்பிறகு அக்டோபரில் டொயோட்டாவில் என அடுத்தடுத்து ஒன்று அல்லது மற்றொரு பிரச்சனையை ஏற்படுத்தியதால், தங்களின் தயாரிப்புகளை திரும்ப அழைக்க வேண்டிய நிலைக்கு வாகன தயாரிப்பாளர்கள் நிர்பந்திக்கப்பட்டனர். அதன்பிறகு ஏற்பட்ட வோல்க்ஸ்வேகனின் டீசல்கேட் பிரச்சனையால், முழு வாகன உலகின் தரத்தின் மீதே கேள்விக்குறியை உண்டாக்கியது. மேற்கூறிய பிராண்டுகளுடன் தற்போது இணைந்துள்ள ஃபோர்டு இந்தியா நிறுவனம், தனது 16,444 ஈக்கோஸ்போர்ட் கார்களுக்கான மறுஅழைப்பை வெளியிட்டுள்ளது. பின்புற ட்விஸ்ட் பீம் போல்ட் விவரக்குறிப்புகளுக்கு ஏற்ப சரியான முறையில் இறுக்கப்படாமல் இருக்கலாம் என்பதே இந்த கார் சந்திக்கும் பிரச்சனை ஆகும். இதனால் பிவோட் போல்ட் முறிந்து போக வாய்ப்புள்ளதோடு, வாகனத்தின் ஓட்டும் திறனுக்கும் இடையூறாக அமைந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மட்டுப்படுத்த வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக இதுவரை எந்த விபத்தும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றாலும், கூடுமான வரை விரைவில் இதை சரிசெய்ய வேண்டியுள்ளது என அமெரிக்காவை சேர்ந்த இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2014 ஏப்ரல் வரையுள்ள கால அளவில், சென்னை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஈக்கோஸ்போர்ட் கார்கள், இந்த மறுஅழைப்பில் இடம் பெற்றுள்ளன. இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில், “கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2014 ஏப்ரல் வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் அந்நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட கார்களில், பின்புற ட்விஸ்ட் பீம் (RTB) போல்ட் பிரச்சனைக்கான சாத்தியக் கூறுகள் குறித்து அறிய, குறிப்பிட்ட வாடிக்கையாளர்களை தொடர்புக் கொள்ளும் ஃபோர்டு இந்தியா நிறுவனம், ஈக்கோஸ்போர்ட் வாகனங்களை தாங்களாகவே முன்வந்து சோதித்து பார்த்து வருகின்றனர். இதில் சில பாதிக்கப்பட்ட வாகனங்களில் RTB போல்ட் விவரக்குறிப்புகளுக்கு ஏற்ப சரியான முறையில் இறுக்கப்படாமல் விட்டிருக்க வாய்ப்புள்ளதால், இது பிவோட் போல்ட் முறிவை ஏற்படுத்தலாம். இந்த சூழ்நிலையின் மூலம் வாகனத்தின் கையாளும் திறன் பாதிக்கப்பட சாத்தியக்கூறுகள் உருவாகி, ஒரு விபத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது” என்று தெரிவித்துள்ளது. எனவே, இந்த பிரச்சனையை சீர்படுத்தும் பணியை ஃபோர்டு நிறுவனம் கட்டண வசூல் எதுவுமின்றி செய்ய உள்ளது. ஈக்கோஸ்போர்ட் கார்கள் மறுஅழைப்பை பெறுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பரில், எரிபொருள் மற்றும் வெப்பர் லைன் தொடர்பான பிரச்சனையை சீரமைப்பதற்காக, 20,752 கார்களுக்கு, ஃபோர்டு நிறுவனம் மறுஅழைப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்