<cityName> -யில் பரிந்துரைக்கப்படும் யூஸ்டு மாருதி வேகன் ஆர் 2013-2022 கார்கள்
மாருதி வேகன் ஆர் 2013-2022 இன் முக்கிய அம்சங்கள்
இன்ஜின் | 970 சிசி - 1197 சிசி |
பவர் | 58.16 - 81.8 பிஹச்பி |
டார்சன் பீம் | 8.6@3,500 (kgm@rpm) - 113 Nm |
ட்ரான்ஸ்மிஷன் | மேனுவல் / ஆட்டோமெட்டிக் |
மைலேஜ் | 21.79 கேஎம்பிஎல் |
எரிபொருள் | எல்பிஜி / டீசல் / பெட்ரோல் / சிஎன்ஜி |
- digital odometer
- ஏர் கன்டிஷனர்
- central locking
- கீலெஸ் என்ட்ரி
- ப்ளூடூத் இணைப்பு
- ஸ்டீயரிங் mounted controls
- touchscreen
- android auto/apple carplay
60:40 பிரித்து மடக்க கூடிய பின்பக்க சீட்கள்: இந்தப் பிரிவில் செலேரியோ காரை தவிர, வேறு எந்த காரிலும் பின்பக்க சீட்டை பிரிக்கும் வசதி அளிக்கப்படவில்லை என்பதால், பூட் இடவசதியை மேலும் தாராளமானதாக மாற்றுகிறது.
341 லிட்டர் பூட் ஸ்பேஸ்: வாகன்ஆர் காரில் உள்ள பூட் இடவசதி, அதன் போட்டியாளர்கள் மட்டுமின்றி, இதை விட உயர்ந்த பிரிவைச் சேர்ந்த சில கார்களின் அளவை விட அதிக இடவசதியை பெற்றதாக உள்ளது.
7 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்: மாருதி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ மூலம் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகியவை ஆதரிக்கப்படுவதோடு, இந்த கார் தயாரிப்பாளரின் ஸ்மார்ட்போன் ஒருங்கிணைப்பு அப்ளிகேஷனான ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோவும் ஆதரிக்கப்படுகிறது. இதில் இன்டர்நெட் ரேடியோக்கள் மற்றும் வாகனத்தின் புள்ளி விவரங்கள் ஆகியவை காட்டப்படுகின்றன.
- முக்கிய விவரக்குறிப்புகள்
- டாப்-மவுன்டட் ரியர் வைப்பர் அண்ட் வாஷர்
- சிறப்பான வசதிகள்
மாருதி வேகன் ஆர் 2013-2022 விலை பட்டியல் (மாறுபாடுகள்)
following details are the last recorded, மற்றும் the prices மே vary depending on the car's condition.
- அனைத்தும்
- பெட்ரோல்
- சிஎன்ஜி
- எல்பிஜி
- டீசல்
- ஆட்டோமெட்டிக்
வேகன் ஆர் 2013-2022 எல்எக்ஸ் டுவோ BSIII(Base Model)1061 சிசி, மேனுவல், எல்பிஜி, 17.3 கிமீ / கிலோ | ₹3.29 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 எல்எஸ்ஐ டுவோ BSIII1061 சிசி, மேனுவல், எல்பிஜி, 17.3 கிமீ / கிலோ | ₹3.55 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 டீசல்970 சிசி, மேனுவல், டீசல் | ₹3.70 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 எல்எக்ஸ் BS IV(Base Model)998 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.51 கேஎம்பிஎல் | ₹3.74 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 கேரெஸ்ட்998 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.51 கேஎம்பிஎல் | ₹3.83 லட்சம்* | காண்க ஏப்ரல் offer |
வேகன் ஆர் 2013-2022 வக்ஸி பிசிசிஐ வ் / ஆபிஸ்1061 சிசி, மேனுவல், பெட்ரோல், 17.3 கேஎம்பிஎல் | ₹3.85 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 எல்எஸ்ஐ BS IV998 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.51 கேஎம்பிஎல் | ₹4.15 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 எல்எஸ்ஐ டுவோ BS IV998 சிசி, மேனுவல், எல்பிஜி, 14.4 கிமீ / கிலோ | ₹4.16 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 டுவோ எல்பிஜி998 சிசி, மேனுவல், எல்பிஜி, 14.6 கிமீ / கிலோ | ₹4.16 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 ப்ரோ998 சிசி, மேனுவல், பெட்ரோல், 18.9 கேஎம்பிஎல் | ₹4.26 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 எல்எஸ்ஐ எல்பிஜி(Top Model)998 சிசி, மேனுவல், எல்பிஜி, 26.6 கிமீ / கிலோ | ₹4.28 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 எல்எஸ்ஐ அவென்ஸ் பதிப்பு998 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.51 கேஎம்பிஎல் | ₹4.30 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 விஎக்ஸ்ஐ BS IV998 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.51 கேஎம்பிஎல் | ₹4.41 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 எல்எக்ஸ்ஐ விருப்பத்தேர்வு998 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.51 கேஎம்பிஎல் | ₹4.48 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி(Base Model)998 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 26.6 கிமீ / கிலோ | ₹4.48 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 ஏஎம்பி விஎக்ஸ்ஐ998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20.51 கேஎம்பிஎல் | ₹4.48 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 விஎக்ஸ்ஐ BS IV உடன் ஏபிஎஸ்998 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.51 கேஎம்பிஎல் | ₹4.63 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 விஎக்ஸ்ஐ பிளஸ்998 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.51 கேஎம்பிஎல் | ₹4.70 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 விஎக்ஸ்ஐ விருப்பத்தேர்வு998 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.51 கேஎம்பிஎல் | ₹4.74 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
எல்எஸ்ஐ சிஎன்ஜி அவென்ஸ் பதிப்பு998 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 26.6 கிமீ / கிலோ | ₹4.84 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 வக்ஸி 1.2 பிஸிவ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 21.5 கேஎம்பிஎல் | ₹4.89 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 விஎக்ஸ்ஐ பிளஸ் தேர்விற்குரியது998 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.51 கேஎம்பிஎல் | ₹4.89 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 வக்ஸி ஒப்பிட 1.2 பிஸிவ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 21.5 கேஎம்பிஎல் | ₹4.96 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 சிஎன்ஜி லெக்ஸி பிஸிவ்998 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 33.54 கிமீ / கிலோ | ₹5 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 சிஎன்ஜி லெக்ஸி ஒப்பிட பிஸிவ்998 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 33.54 கிமீ / கிலோ | ₹5.08 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 ஏஎம்பி விஎக்ஸ்ஐ பிளஸ்998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20.51 கேஎம்பிஎல் | ₹5.17 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 எல்எஸ்ஐ998 சிசி, மேனுவல், பெட்ரோல், 21.79 கேஎம்பிஎல் | ₹5.18 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 ஏஎம்பி விஎக்ஸ்ஐ தேர்வு998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20.51 கேஎம்பிஎல் | ₹5.21 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 ஸ்க்சி 1.2 பிஸிவ்1197 சிசி, மேனுவல், பெட்ரோல், 21.5 கேஎம்பிஎல் | ₹5.23 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 எல்எக்ஸ்ஐ தேர்வு998 சிசி, மேனுவல், பெட்ரோல், 21.79 கேஎம்பிஎல் | ₹5.24 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 எல்எஸ்ஐ சிஎன்ஜி தேர்விற்குரியது998 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 26.6 கிமீ / கிலோ | ₹5.32 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 ஏஎம்பி விஎக்ஸ்ஐ பிளஸ் தேர்வு998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20.51 கேஎம்பிஎல் | ₹5.36 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 வக்ஸி அன்ட் 1.2 பிஸிவ்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 21.5 கேஎம்பிஎல் | ₹5.37 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 வக்ஸி அன்ட் ஒப்பிட 1.2 பிஸிவ்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 21.5 கேஎம்பிஎல் | ₹5.43 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 விஎக்ஸ்ஐ998 சிசி, மேனுவல், பெட்ரோல், 21.79 கேஎம்பிஎல் | ₹5.50 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 வக்ஸி ஒப்பிட998 சிசி, மேனுவல், பெட்ரோல், 21.79 கேஎம்பிஎல் | ₹5.57 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 ஸ்க்சி அன்ட் 1 .2பிஸிவ்1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 21.5 கேஎம்பிஎல் | ₹5.70 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 வக்ஸி 1.21197 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.52 கேஎம்பிஎல் | ₹5.74 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 விஎக்ஸ்ஐ ஆப்ட் 1.21197 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.52 கேஎம்பிஎல் | ₹5.80 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 விஎக்ஸ்ஐ ஏஎம்பி998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 21.79 கேஎம்பிஎல் | ₹6 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 விஎக்ஸ்ஐ ஏஎம்பி ஆப்ட்998 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 21.79 கேஎம்பிஎல் | ₹6.07 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 ஸ்க்சி 1.21197 சிசி, மேனுவல், பெட்ரோல், 20.52 கேஎம்பிஎல் | ₹6.08 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 சிஎன்ஜி எல்எஸ்ஐ998 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 32.52 கிமீ / கிலோ | ₹6.13 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 சிஎன்ஜி எல்எக்ஸ்ஐ தேர்வு(Top Model)998 சிசி, மேனுவல், சிஎன்ஜி, 32.52 கிமீ / கிலோ | ₹6.19 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 வக்ஸி அன்ட் 1.21197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20.52 கேஎம்பிஎல் | ₹6.24 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 விஎக்ஸ்ஐ ஏஎம்பி ஆப்ட் 1.21197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20.52 கேஎம்பிஎல் | ₹6.30 லட்சம்* | காண்க ஏப்ரல் offer | |
வேகன் ஆர் 2013-2022 இசட்எக்ஸ்ஐ ஏஎம்பி 1.2(Top Model)1197 சிசி, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 20.52 கேஎம்பிஎல் | ₹6.58 லட்சம்* | காண்க ஏப்ரல் offer |
மாருதி வேகன் ஆர் 2013-2022 விமர்சனம்
Overview
இந்த புதிய மாருதி சுஸுகி வாகன்ஆர், ஏறக்குறைய எல்லா காரியங்கள், அதன் பாதுகாப்பு, செயல்திறன், அம்சங்கள் அல்லது வடிவமைப்பில் கூட மாற்றத்தை சந்தித்துள்ளது.
வெளி அமைப்பு
மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த வாகன்ஆர் கார், சுஸுகி நிறுவனத்தின் சமீபகால பதிப்பான ஷியர்டெக்ட் மோடுலார் பிளாட்பார்மை அடிப்படையாக கொண்டது. இந்த புதிய பிளாட்பார்மை மூலம் இது நீளமாக மட்டுமின்றி, அகலமாகவும் மாறியுள்ளது. மேலும் இந்த அதிகரித்துள்ள அளவுகள் மூலம் முதல் பார்வையிலேயே சிறந்த எண்ணத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
இதற்கு தயாரிப்பு நிறுவனம் சொல்வது என்னவென்றால், இது உங்களை கவரவில்லை என்றால், அதை எண்ணத்தில் வைத்து கொள்ள வேண்டாம் என்கிறார்கள். அதே நேரத்தில், வாகன்ஆர் காரின் வடிவமைப்பை அதிக அளவில் மாருதி சுஸுகி நிறுவனம் மாற்றி அமைக்கவில்லை. இந்த புதிய ஹேட்ச்பேக் கார், தொடர்ந்து உயரம் கூடியதாகவே உள்ளது. இதனால் மட்டும் உள்ளே போகவும், வெளியே வருவதும் எளிதாக மாறிவில்லை. மாறாக, ஒருவரின் தேவைக்கு அதிகமாகவே ஹெட்ரூம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய சாண்ட்ரோ போல இல்லாமல், இந்த உயரம் கூடிய தன்மையை அதிக சாதகமாக வாகன்ஆர் காரில் அளிக்கப்பட்டுள்ளது. சாண்ட்ரோ காரை பொறுத்த வரை, புதிய தலைமுறையைச் சேர்ந்த தயாரிப்பு என்பதை விட, ஐ10 காரின் பரிணாம வளர்ச்சியை போல தான் காணப்படுகிறது. 2019 வாகன்ஆர் காரின் பெரிய அளவிலான விண்டோக்கள், கேபின் உட்புறம் அதிக காற்றோட்டம் நிறைந்ததாக வைத்துள்ளது. அதே நேரத்தில் இந்த புதிய வாகன்ஆர் காரில், அடிப்படையான வடிவமைப்பு தொடர்ந்து, அதே பாக்ஸ் போன்ற உருவத்தை தொடர்கிறது. முந்தைய மாடலை காட்டிலும், இந்த புதிய மாடல் மிகவும் புதுமையான தோற்றத்தை பெற்றுள்ளது.
வாகன்ஆர் காரின் முன்பக்க முகப்பு பகுதியை ஏறக்குறைய தட்டையாக மாற்றியதை அகலத்தை அதிகரிக்க மாருதி பயன்படுத்தி கொண்டுள்ளது. தட்டையான நீள்சதுர கிரில் அமைப்பு காரின் தோற்றத்தை பெரிதுப்படுத்தி உள்ள சாதுர்யமான நடவடிக்கை, எல்லா வகைகளுக்கும் பொதுவாக அளிக்கப்பட்டுள்ளதால், துவக்க வகை கூட பார்ப்பது மோசமாக தெரிவதில்லை. ஹெட்லெம்ப்களை முன்பைக் காட்டிலும் கடினமாக அமைத்து, வழக்கமான பன்முக எதிரொலிப்பு அமைப்பு அளிக்கப்பட்டுள்ளது. டாடா டியாகோ காரின் உயர்தர வகையில் பிராஜெக்டர் அமைப்பு அளிக்கப்பட்டுள்ளதை தவிர, மற்ற இதன் எல்லா போட்டியாளர்களும் இதே பாணியில் அமைந்துள்ளன. பழைய மாடலின் விஎக்ஸ்ஐ/ ஸ்டிங்க்ரே வகையில் உள்ள போல, இரட்டை பேரியர் பிராஜெக்டர் ஹெட்லெம்ப்கள், இந்த புதிய மாடலின் உயர்ந்த வகையான இசட்எக்ஐ இல் கூட இல்லாத வருந்தத்தக்கது. அதேபோல வாகன்ஆர் காரில் இருந்த மாருதி சுஸுகியின் ப்ளூ ஐடு பாய் இருக்காது என்று தெரிகிறது. ஏனெனில் இதில் இருந்த நீல நிறத்திலான பார்க்கிங் லெம்ப்கள் நீக்கப்பட்டுள்ளன.
இந்த வாகன்ஆர் பற்றி கூறுவதை விட, அதிக அளவிலான செயல்திறனை வெளிப்படுத்துவதாக தெரிகிறது. ஆனால் டாடா டியாகோ காரில், சர்வதேச அளவிலான தோற்ற வடிவமைப்பு காணப்படுகிறது. அதே நேரத்தில், இந்த காரின் வடிவமைப்பை சுமாரானது அல்லது கவர்ச்சியற்றது என்று கூறமாட்டோம்.
முந்தைய தலைமுறையைச் சேர்ந்த வாகன்ஆர், தோற்றத்திற்கு மிகவும் சாதாரணமான உருவை எப்போதும் கொண்டிருந்தது. ஆனால் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த மாடல், வித்தியாசமான முறையில் வீல் ஆர்ச்சுகளில் எடுத்துக்காட்டும் கோடுகளைப் பெற்றுள்ளது. இந்த புதிய ஹேட்ச்பேக் காரில், கவனத்தை ஈர்க்கும் நடுவில் செல்லும் கோடும் அமைந்துள்ளது. இது போன்ற கூடுதல் பணிகளால், பழைய மாடலை போல அடிமட்ட தோற்றத்தை பெறாமல், ஜாஸ் காரை விட சிறப்பான வெளிப்புற அமைப்பை பெற்றதாக இந்த ஹேட்ச்பேக் திகழ்கிறது. தற்போதைய வழக்கத்தின் படி, சி- பில்லர் மீது ஒரு கருப்பு நிறத்திலான பிளாஸ்டிக் அமைப்பை ஏற்படுத்தி, மிதப்பது போன்ற ரூஃப் உருவாக்கப்பட்டுள்ளது. ஆவ்டம் ஆரஞ்சு போன்ற தற்கால புதிய நிறங்களில் கூட தேர்வு உள்ளது. இது தவிர, கிளாஸிக் மாக்மா க்ரே, பிரபல சில்கி சில்வர் மற்றும் சூப்பிரியர் வைட் ஆகியவை உடன் அவ்வளவு கவனம் பெறாத நட்மிக் பிரவுன் மற்றும் பிரைட் பூல்சைடு ப்ளூ உள்ளிட்ட பிற தேர்வுகளும் உள்ளன.
இந்த புதிய டயர்கள், விரிந்ததாகவும் கடினமான பக்கவாட்டு சுவர்களை பெற்று, காரின் பாடிக்கு மிகவும் பொருத்தமான தேற்றத்தை பெற்றுள்ளது. ஆனால் உயர் தர வகையில் கூட சாண்ட்ரோவை போல, அலாய் வீல்கள் எதுவும் அளிக்கப்படவில்லை. அதே நேரத்தில், தேர்விற்குரிய ஒரு ஜோடி மல்டி- ஸ்போக் ஆலாய் வீல்களை ஒன்றிற்கு ரூ.4,900 என்ற விலை நிர்ணயத்தில் கிடைக்கிறது. அதேபோல ஒரு தேர்விற்குரிய முற்றும் முடிய பாடி கிளட்டிங் சலுகை விலையில் அளிக்கப்படுவது கவனிக்கத்தக்கது. இது உண்மையாகவே, புதிய வாகன்ஆர் காருக்கு ஒரு தனித்தன்மையான தோற்றத்தை அளிக்கிறது.
இந்த காரின் பின்பக்கம் ஏறக்குறைய முன்னால் இருந்தது போல, தட்டையாகவே உள்ளது. முந்தைய மாடலுடன் ஒப்பிட்டால், பின்பக்க விண்ட் ஸ்கிரீன் கொஞ்சம் சேர்த்தது போல உள்ளது. பெயர் பலகை தொடர்ந்து பூட் லிட் பகுதியில் இடத்தை பெற்றுள்ள நிலையில், வோல்வோ கார்களை தழுவிய நிலையில் டெயில் லெம்ப்கள் அமைக்கப்பட்டுள்ளது போன்று தோன்றுகிறது.
பழைய மாடலை போல இல்லாமல், இந்த புதிய வாகன்ஆர் காரின் பின்பக்க பம்பரில் ஒரு ஃபேக் லெம்ப் அளிக்கப்படவில்லை. மாருதி அளிக்கும் தற்போதைய பெரும்பாலான புதிய கார்களில், பின்பக்கத்தில் எந்த பேட்ஜ்களும் இருப்பதில்லை. வெறும் சுஸுகி லோகோ மட்டும் காணப்படுகிறது.
Exterior Comparison
Hyundai Santro | Maruti Wagon R | Datsun GO | |
Length (mm) | 3610 mm | 3655 mm | 3788mm |
Width (mm) | 1645 mm | 1620 mm | 1636mm |
Height (mm) | 1560 mm | 1675 mm | 1507mm |
Ground Clearance (mm) | |||
Wheel Base (mm) | 2400 mm | 2435 mm | 2450mm |
Kerb Weight (kg) | 765 | 810 | 859kg |
Boot Space Comparison
Hyundai Santro | |||
Maruti Wagon R | |||
Datsun GO | |||
Volume | - | 341 Litres | - |
உள்ளமைப்பு
டால்பாய் வடிவமைப்பை பெற்றுள்ளதால், இந்த புதிய வாகன்ஆர் காருக்குள், ஒரு நடந்து தான் செல்ல முடியும். குறிப்பாக, மூத்த குடிமக்களான பயணிகளுக்கு இது ஒரு சாதகமான காரியம் ஆகும். இதில் உள்ள மற்றொரு காரியம் என்னவென்றால், இதன் கதவு சுமார் 90 டிகிரி வரை திறக்க கூடியது. எனவே வாகன்ஆர் காருக்குள் நுழைவதும் வெளியே வருவதும் ஒரு தென்றலை போன்ற அனுபவத்தை அளிக்கிறது.
இந்த வாகன்ஆர் காரில் உள்ள டேஷ்போர்டு முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, அதில் ஒரு இரட்டை கலவையாக கருப்பு மற்றும் பழுப்பு நிற லேஅவுட் உடன் மங்கிய சில்வர் வரிகள் அளிக்கப்பட்டுள்ளது. இக்னீஸ் காரில் இருந்த ஸ்டீயரிங் வீல் அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதிக பிரிமியம் ஹேட்ச்பேக் தோற்றத்தை அளிக்கும் ஒரு லெதர் சுற்று இல்லை. சென்டர் கன்சோலில் ஒரு 7 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பைப் பெற்றிருப்பது, இந்தியாவில் வாகன்ஆர் காருக்கு முதல் முறை ஆகும். இது கன்சோலில் இருந்து சற்று வெளியே வந்து காணப்படுவதோடு, செங்குத்தாக அமைந்த ஏசி திறப்பிகள் மூலம் சூழப்பட்டுள்ளது. அதற்கு கீழே, மேனுவல் ஏசி இயக்கத்திற்கான கன்ட்ரோல்களை காணலாம்.
இதன் சீட்கள், ஒரு பச்சை கலந்த பழுப்பு நிற நிழலுடன் அமைந்து காப்பி நிறத்தில் எடுத்துக்காட்டும் வகையிலான துணியில் அமைக்கப்பட்டுள்ளது. மெல்லிய அப்ஹோல்டரி, இரட்டை நிற தீம் மற்றும் விலாசமான ஹெட்ரூம் ஆகியவை கேபினில் தாராளமான தன்மையை அளிக்கிறது. முன்பக்க சீட்களில் பொதுமான அளவிற்கு சைடு பேல்ஸ்டர்கள் அளிக்கப்பட்டு இதமாக உள்ளது. முந்தைய மாடல் உடன் ஒப்பிடும் போது, டிரைவருக்கு அருகிலுள்ள பயணியின் சீட்டிற்கு கீழே பொருட்கள் வைப்பதற்கான சிறிய அறை ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
மற்றொருபுறம் இந்த பின்பக்க சீட்டில், சராசரி அளவு கொண்ட பயணிகளுக்கு கூட தேவையான தொடை ஆதரவு கிடைப்பது இல்லை. ஆனால் பின்பக்க லெக்ரூம் தேவைக்கும் அதிகமாகவே அளிக்கப்பட்டு, இந்த பிரிவின் சிறந்த தன்மையாக விளங்குகிறது. அதிகரிக்கப்பட்ட அகலம் மூலம் இந்த மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த வாகன்ஆர் காரில், பின்பக்க நடு சீட் பயணிக்கு, முந்தைய மாடலை விட கூடுதல் வசதியாக உணர முடிகிறது. பின்பக்க தரை தளம் ஏறக்குறைய சமமாக உள்ளது. நடுவில் மட்டும் ஒரு சிறிய வேகத்தடையை பார்க்க முடிகிறது.
இந்த புதிய வாகன்ஆர் காரில் 341 லிட்டர் பூட் ஸ்பேஸ் பெற்று, இதன் போட்டியாளர்கள் மட்டுமின்றி, இதை விட உயர் தரத்தில் உள்ள பிரிவை விட அதிக விசாலமான காராக திகழ்கிறது. குறிப்பாக, விட்டாரா ப்ரீஸ்ஸா (328 லிட்டர்) மற்றும் பேலினோ (339 லிட்டர்) ஆகியவற்றை விட, இதன் பூட் இடவசதி அதிகமாக உள்ளது. இதன்மூலம் 340 லிட்டர் பூட் இடவசதியை கொண்ட 4 மீட்டருக்கு குறைவான கார்களின் பட்டியலில் இந்த புதிய வாகன்ஆர் காரும் சேர்கிறது. இந்தப் பட்டியலில் நெக்ஸான் (350 லிட்டர்), ஹோண்டா ஜாஸ் (354 லிட்டர்) மற்றும் டபிள்யூஆர்-வி (363 லிட்டர்) ஆகியவை உட்படுகின்றன. இந்த விரிவான பரந்த பூட் வசதியை தவிர, 60:40 என்ற அளவில் பிரிக்க கூடிய பின்பக்க சீட்கள் இருப்பதால், இந்த புதிய வாகன்ஆர் மூலம் உங்கள் குடும்பத்தையும் நண்பர்களையும் விமான நிலையத்தில் கொண்டு போய் விடுவதற்கு தகுந்ததாக உள்ளது.
இந்த வாகன்ஆர் காரின் உட்புற அமைப்பில் குறையை கண்டுபிடிப்பது கஷ்டம் தான் என்றாலும், சில வசதி குறைவு பிரச்சனைகளை நாம் கட்டாயம் குறிப்பிட வேண்டியுள்ளது. முதலாவதாக வாகன்ஆர் காரில் உள்ள எந்தொரு ஹெட்ரெஸ்ட்டும் மாற்றி அமைக்க கூடியவை அல்ல. பின்பக்கத்தில் உள்ள சீட்களில் உள்ள ஹெட்ரெஸ்ட்டில் மாற்றி அமைக்கும் வசதியை மாருதி நிறுவனம் அளித்திருந்தால், நீண்டதூர பயணத்திற்கு மிகவும் இதமானதாக மாறி இருக்கும். ஆறு அடிக்கு குறைவான உயரம் கொண்ட பெரியவர்களுக்கு, இந்த ஹெட்ரெஸ்ட்கள் பொருந்தமான முறையில் அமைவது இல்லை என்பது கவனித்தக்கது.
ஸ்டீயரிங் வீல்லின் உயரத்தை மாற்றி அமைக்கும் வசதியை அளித்த மாருதி நிறுவனம், டிரைவர் சீட்டின் உயரத்தை மாற்றி அமைக்கும் வசதியை அளிக்காமல் விட்டது ஏமாற்றம். உயர் தர வகையான இசட்எக்ஸ்ஐ காரிலாவது இந்த வசதியை அளித்திருக்கலாம். ஹூண்டாய் சாண்ட்ரோ கூட, டிரைவர் சீட் உயரத்தை மாற்றி அமைக்கும வசதியை அளிக்காத நிலையில், டாடா டியாகோ அளித்துள்ளது. பின்பக்கத்தில் உள்ள கேபினின் பாதி பகுதியில், பின்பக்க டோர்களில் உள்ள ஹெண்டு ரெஸ்ட்கள் மிகவும் குறுகலாக இருப்பதால், பின்பக்க பவர் விண்டோக்களுக்கான கன்ட்ரோல்களை இயக்குவது கஷ்டமாக உள்ளது. குறிப்பாக வளர்ந்தவர்களுக்கு கஷ்டம்.
மேற்கூறிய இந்த பிரச்சனைகளை தவிர, ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த மாடலை விட, இதன் கேபின் ஒரு படி மேலே சிறப்பாகவும் கச்சிதமாக பணித்தீர்ப்புடனும் தான் உள்ளது. அதே நேரத்தில், இந்த புதிய வாகன்ஆர் கூட, நடைமுறையை தன்மையில் கவனம் செலுத்த தவறவில்லை என்பதை காணலாம்.
இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம்
இந்த மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த வாகன்ஆர் காரில், ஒரு 7 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அளிக்கப்பட்டு, அதை மாருதி நிறுவனம் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ என்று அழைக்கிறது. இதில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே தவிர, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பல்வேறு செயல்பாடுகளை ஆதரிக்கும் அம்சங்களைப் பெற்றுள்ளது. இதில் ஹார்மன் வழங்கும் ஏஹெச்ஏ ரேடியோ (தனிப்பட்ட முறையிலான இணையதள உள்ளடக்கங்கள், கேட்க விரும்பும் ரேடியோ நிலையங்கள் போன்ற உங்கள் விருப்பங்களை ஏஹெச்ஏ ரேடியோ செயல்படுத்துகிறது), மேப்மைஇந்தியா நேவிகேஷன் மற்றும் பல உள்ளன.
இதில் ஒரு திறனுள்ள டச் ஸ்கிரீன் (ஸ்மார்ட்போன் போன்ற) மற்றும் டைல் வகையிலான லேஅவுட் ஆகியவற்றை பெற்றுள்ளது. இது சூரிய ஒளியில் தெரிந்தாலும் கூட, சற்று ஒளி எதிரொலிப்பு இருக்கத் தான் செய்கிறது. ஸ்விஃப்ட் காரில் இருப்பது போல, இந்த திரையை டிரைவர் பக்கத்திற்கு திரும்பினால் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும். மாருதியின் புதிய கார்களில் முந்தைய போஸ் அளித்த அமைப்பிற்கு பதிலாக, இந்த புதிய ஹார்மனின் அமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது.
பாதுகாப்பு
இந்த மூன்றாவது வாகன்ஆர் காரில் ஒரு டிரைவர் ஏர்பேக், ஏபிஎஸ் உடன் இபிடி மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்ஸர் ஆகியவை பொதுவாக அளிக்கப்பட்டுள்ளன. உயர் தர வகையான இசட் காரில் டிரைவர் உடன் உள்ள பயணிக்கு ஏர்பேக் மற்றும் ப்ரீடென்ஸர்கள் உடன் லோடு லிமிட்டர்கள் கொண்ட முன்பக்க சீட்பெல்ட்கள் ஆகியவை அளிக்கப்பட்டு உள்ளன. இந்த இரண்டு பாதுகாப்பு அம்சங்களும், எல் மற்றும் வகையில், தேர்விற்குரிய அம்சங்களாக அளிக்கப்பட்டுள்ளன.
செயல்பாடு
இந்த மூன்றாம் தலைமுறையச் சேர்ந்த வாகன்ஆர் காரை, மேனுல் மற்றும் ஏஎம்டி தேர்வுகள் கொண்ட ஒரு ஜோடி பெட்ரோல் என்ஜின்கள் தான் இயக்குகின்றன. பழைய 1.0 லிட்டர், 3 சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்படுவதோடு, புதிய, அதிக சக்திவாய்ந்த 1.2 லிட்டர், 4 சிலிண்டர் மோட்டாரும் பயன்பாட்டில் உள்ளது. நாங்கள் இதில் மேனுவல் டிரான்ஸ்மிஷனை பரிசோதித்து பார்த்தோம். இந்த 1.2 லிட்டர் என்ஜின், ஸ்விஃப்ட் மற்றும் பேலினோ போன்ற பெரிய ஹெட்பேக் கார்களை இயக்கும் அதே என்ஜின் தான்.
பழைய 1.0 லிட்டர் என்ஜின் உடன் ஒப்பிடும் போது, இந்த 1.2 லிட்டர் என்ஜின் ஒரு ஆரோக்கியமான 23 என்எம் ஆற்றலை ஒட்டுமொத்த முடுக்குவிசையில் அளிக்கிறது. ஆற்றல் வெளியீட்டை பொறுத்த வரை, 15 பிஎஸ் வெளியிடுகிறது. கிரிப் எடையை முடிந்த வரை 50 கிலோ வரை குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய மாடல் உடன் ஒப்பிடும் போது, இந்த 1.2 லிட்டர் என்ஜின் சிறப்பாக செயல்படுவதை காண முடிகிறது. அவ்வப்போது கியரை குறைப்பதும் கூட்டுவதும் தேவைப்படுவது இல்லை. ஓட்டுவதற்கு எளிதாக உள்ளது. இந்த 1.2 லிட்டர் என்ஜின் மூன்றாம் கியரில் மணிக்கு 15 -20 கி.மீ. வேகம் வரை சமாளிக்கிறது. அதற்கு பிறகே கியர் இறக்கத்தை கேட்கிறது. இதன் கூட்டாளி தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட அதே என்ஜின் பயன்படுத்திய நிலையில், என்ஜினின் சத்தம் கேபின் உள்ளே கவனத்தை ஈர்க்கிறது. தகுந்த தகவமைப்பு இல்லாததால் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
பயணம் மற்றும் கையாளும் தன்மை
இரண்டாவது தலைமுறை மாடல் உடன் ஒப்பிடும் போது, மூன்றாவது தலைமுறை வாகன்ஆர் காரின் பயண தரம் சிறப்பான முறையில் வளர்ந்துள்ளது. இதற்கு புதிய உறுதியான சேசிஸ், விரிந்த டயர்கள் மற்றும் மென்மையான சஸ்பென்ஸன் அமைப்பு ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன. முன்பு போல, குழிகள் மற்றும் சாலை பாதிப்புகள் மூலம் அந்த அளவிற்கு இந்த கார் பாதிக்கப்படுவது இல்லை. நான்கு சிலிண்டர் என்ஜின் மூலம் குறைவான அதிர்வுகளை மட்டுமே உணர முடிகிறது. ஆனால் பழைய மாடலை 3 சிலிண்டர் என்ஜின் இயக்கியது.
நகர்புற வேகத்திற்கு ஏற்ப ஸ்டீயரிங் வீல் சற்று கடினமாக உள்ள நிலையில், சற்று உறுதியற்றதாகவும் தெரிகிறது. இன்னும் கூட அதிக உணர்வை அளிக்க கூடிய ஸ்டீயரிங் வீல்லை நாங்கள் விரும்பினோம். முன்பக்க வீல்கள் பாதி மூடப்பட்ட நிலையில், பின்பக்க வீல்லில் எந்தொரு கிளெட்டிங்கும் பெறவில்லை. இதனால் வீல்லில் மோதும் பொருட்களின் சத்தம், கேபின் உள்ளே தெளிவாக கேட்க முடிகிறது. இந்த வீல்லில் கூட தேவைக்கு ஏற்ப கிளெட்டிங் அளிக்கப்பட்டு இருந்தால், ஒட்டுமொத்த பயணம் இன்னும் கூட இதமான அனுபவத்தை அளிப்பதாக அமைந்திருக்கும். ஆனால், வாகன்ஆர் போட்டியிடும் பிரிவில் இதெல்லாம் ஒரு பெரிய பாதகமான விஷயமாக அமைய போவதில்லை என்பது கவனிக்கத்தக்கது.
வாகன்ஆர் கார் இன்னும் கூட கச்சிதமான திருப்பங்களை மேற்கொள்ளாமல், அப்படியே உருண்டு செல்வதையே செய்கிறது. இதற்கு காரணம் இதன் உயரம் மற்றும் மென்மையான சஸ்பென்ஷன் செட்அப் ஆகும். இந்த பிரிவில் உள்ள மற்ற கார்களைப் போல, மென்மையான கையாளுதலை தான் இந்த காரும் விரும்புகிறது.
இது போன்ற மனநிலை உடன் நகர்புறத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஓட்டும் போது, வாகன்ஆர் கார் உங்களை வெகுவாக கவர்கிறது. இதிலும் குறிப்பாக, புதிய 1.2 லிட்டர் மோட்டார், பயண தரத்தை தூள் கிளப்புகிறது. வாகன்ஆர் காரின் சிறிய அளவிலான திருப்பங்கள் கூட, நகர்புறத்தில் எளிதாக குட்டி சாலை நெரிசலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் இடுக்கமான பகுதிகளில் பார்க்கிங் செய்வதற்கு பெரிதும் உதவுகிறது.
Performance Comparison (Petrol)
Hyundai Santro | Maruti Wagon R | Datsun GO | |
Power | 68bhp@5500rpm | 65.71bhp@5500rpm | 67.05bhp@5000rpm |
Torque (Nm) | 99Nm@4500 rpm | 89Nm@3500rpm | 104Nm@4000rpm |
Engine Displacement (cc) | 1086 cc | 998 cc | 1198 cc |
Transmission | Manual | Manual | Manual |
Top Speed (kmph) | |||
0-100 Acceleration (sec) | |||
Kerb Weight (kg) | 765 | 825 | 878kg |
Fuel Efficiency (ARAI) | 20.3kmpl | 24.35kmpl | 19.02kmpl |
Power Weight Ratio | - | - | 76.36bhp/ton |
வகைகள்
இந்த மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த வாகன்ஆர் கார், எல், வி மற்றும் இசட் என்ற மூன்ற வகைகளில் அளிக்கப்படுகிறது. இதில் துவக்க வகையான எல் சிறிய 1.0 லிட்டர் என்ஜின் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது. உயர் தர வகையான இசட் காரில் புதிய 1.2 லிட்டர் மோட்டார் கிடைக்கிறது. மற்றொருபுறம் இடைப்பட்ட வி வகையில், மேற்கூறிய இரண்டு என்ஜின் தேர்வுகளும் கிடைக்கின்றன.
வெர்டிக்ட்
“இந்த புதிய மாருதி சுஸுகி வாகன்ஆர் கார், பாதுகாப்பு, செயல்திறன், அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு என்று ஏறக்குறைய எல்லா வகையிலும் கவனம் செலுத்தி உள்ளது.”
புதிய காரின் வடிவமைப்பு தனிப்பட்ட முறையில் மாருதி நிறுவனம் அமைக்கவில்லை. அதாவது முந்தைய மாடலை போல பார்ப்பதற்கு அவ்வளவு அழகில்லாமல் இல்லை. இந்த வடிவமைப்பு கொஞ்சம் கொஞ்சமாக எங்களை ஆட்கொண்டது போல, உங்களையும் ஆட்கொள்ளும்.
இந்த மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த வாகன்ஆர் மூலம் மாருதி திரும்பவும் தனது நடைமுறைத் தன்மை என்ற துருப்பு சீட்டை பயன்படுத்தி உள்ளது. இந்த புதிய வாகன் ஆர் கார் மூலம் கார் தயாரிப்பாளர் ஆட்டத்தை ஒரு படி மேலே சென்றுள்ளார். புட்பிரிண்ட் அதிகரிக்கப்பட்டுள்ளதால், இன்னும் அதிக விரிவான கேபின் மற்றும் பெரிய அளவிலான பூட் கிடைத்துள்ளது. இதற்கு மேல், ஒரு அதிக சக்திவாய்ந்த என்ஜினையும் இது பெற்றுள்ளது.
இந்த புதிய வாகன் ஆர் காரின் பின்பக்க சீட்களைப் பொறுத்த வரை அவ்வளவு சிறப்பானது என்று கூற முடியாது. ஆனால் இதன் போட்டியாளர்களுக்கு சவால்விடும் வகையில் அடுத்தடுத்த அளவுகளைக் கொண்ட கட்டமைப்பை பெற்றுள்ளது. எல்லையில் அமையும் வகையிலான விலை உயர்வு, மேலும் இதன் விற்பனையை இனிமையாக்கி உள்ளன.
மாருதி வேகன் ஆர் 2013-2022 இன் சாதகம் & பாதகங்கள்
- நாம் விரும்பும் விஷயங்கள்
- நாம் விரும்பாத விஷயங்கள்
- உள்நுழைவதும் வெளியேறுவதும் எளியது: இந்த வாகன் ஆர் காரில் உள்ளே நுழையவும், வெளியேறவும், நீங்கள் அதிகமாக வளைந்து கொடுக்க வேண்டிய தேவை இல்லை.
- தாராளமான கேபின்: வெளிப்புற அளவீடுகள் மற்றும் வீல்பேஸ் ஆகியவை அதிகரிக்கப்பட்டுள்ளதால், கேபின் உள்ளே அதிக இடவசதி கொண்டதாக அமைந்துள்ளது.
- குகைப் போன்ற பூட்: இந்த பிரிவு கார்களிலேயே அதிகபட்சமாக 341 லிட்டர் பூட் இடவசதியைப் பெற்றுள்ளது. இந்த பிரிவை காட்டிலும் உயர்ந்த பிரிவைச் சேர்ந்த கார்களுடன் ஒப்பிடத் தகுந்தது அல்லது அதை காட்டிலும் அதிகமானதாக உள்ளது எனலாம். 3 – 4 நடுத்தர அளவிலான பேக்குகளை எளிதாக வைக்க முடியும். பின்பக்க சீட் 60:40 அளவில் பிரிக்க முடியும் என்பதால், கூடுதல் பயனுள்ளதாக அமைகிறது.
- இரு என்ஜின்களிலும் ஏஎம்டி வசதி: ஏற்கனவே எளிதாக ஓட்டக் கூடிய வசதியை கொண்ட காரில், ஏஎம்டி தேர்வும் அளிக்கப்பட, கூடுதல் வசதியை பெற்றதாக மாறுகிறது. வி மற்றும் இசட் ஆகிய இரு வகைகளிலும், இரு வகை என்ஜின்களிலும் இந்த வசதி காணப்படுகிறது.
- பாதுகாப்பு வசதி: எல்லா வகைகளுக்கும் ஏபிஎஸ் பொதுவானது. இது தவிர, எல்லா வகைகளுக்கும் முன்பக்க இரட்டை ஏர்பேக்குகள் தேர்விற்குரியதாக அளிக்கப்பட்டுள்ளது. முன்பு இருந்த பிளாட்பார்மை விட, இந்த புதிய பிளாட்பார்ம் அதிக உறுதியாக உள்ளது.
- பிளாஸ்டிக் தரம்: கேபின் உள்ளே அளிக்கப்பட்டிருக்கும் பொருட்களின் தரம் இன்னும் கூட உயர்ந்ததாக இருந்திருக்கலாம். தரத்தில் நிலைப்புத் தன்மையும் ஒரு பிரச்சனையாக உள்ளது.
- இப்போதைக்கு சிஎன்ஜி அல்லது எல்பிஜி தேர்வு எதுவும் இல்லை.
- மென்மையான பிரேக்குகள்: பெடல் பதிலளிப்பு இன்னும் கூட சிறப்பானதாக அமைத்திருக்கலாம்.
- இல்லாத அம்சங்கள்: மாற்றி அமைக்க கூடிய பின்பக்க ஹெட்ரெஸ்ட்கள், டிரைவர் சீட்டின் உயரத்தை மாற்றி அமைக்கும் வசதி, பின்பக்க பார்க்கிங் கேமரா மற்றும் அலாய் வீல்கள் ஆகியவை குறைந்தபட்சம், உயர் வகையிலாவது அளித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
- தரம் குறைந்த கேபின் அமைப்பு: என்விஹெச் நிலைகள் சிறப்பானதாக இல்லை. என்ஜின் சத்தம் அதிகளவில் கேபின் உள்ளே நுழைந்து வருவதால், கேட்க முடிகிறது.
மாருதி வேகன் ஆர் 2013-2022 car news
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்
மாருதி, மஹிந்திரா, டொயோட்டா, கியா, எம்ஜி மோட்டார் மற்றும் ஸ்கோடா ஆகியவை விற்பனையில் வளர்ச்சியை பெற்றுள்ளன. அதே நேரத்தில் ஹூண்டாய், டாடா, ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஹோண்டா போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் சர
பிஎஸ் 6 மேம்படுத்தலுடன் எரிபொருள் செயல்திறன் 1.02 கிமீ/கிலோ குறைந்துள்ளது
ஐந்து அரினா மாதிரிகள் மற்றும் இரண்டு நெக்ஸா மாதிரிகளுக்கு இந்த விலை அதிகரிப்பானது பொருந்தும்
முந்தைய பார்வைகளில் வால் விளக்குகளுக்குள் சிறப்பு LED கூறுகள்
இந்த புதிய வேகன் ஆர் புதிய சாண்ட்ரோவின் மூன்று மாதங்களுக்குள் வருகிறது. ஒருவருக்கொருவர் எதிராகவும், அவற்றின் போட்டியாளர்களிடமிருந்தும் காகிதத்தில் நாங்கள் குழிபறிக்கிறோம்
புதிய டிசையர் இப்போது பெரும்பாலான விஷயங்களில் இன்ஸ்பையரேஷனை முற்றிலுமாக தவிர்த்துள்ளது. அந்த முடிவின் பலன் காரில...
புதிய இன்ஜினுடன் கொஞ்சம் பவர் குறைக்கப்பட்டிருந்தாலும் கூட புதிய வசதிகள் சேர்க்கப்பட்டது மற்றும் டிரைவிங் அனுபவம...
2024 ஸ்விஃப்ட் காரை பார்க்கும் போது பழைய வசீகரமான ஆளுமையைத் தக்க வைத்துக் கொண்டவாறே, புதிதாக மாற எவ்வளவு கடினமா...
மாருதி நிறுவனம் வேகன் R காரின் வடிவத்தை விட செயல்பாட்டிற்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. அதில் எது வே...
இந்த வித்தியாசமான தோற்றமுடைய க்ராஸ்ஓவர் எஸ்யூவி இன்னும் சில மாதங்களுக்கு எங்களிடம் இருக்கும். இந்த காரை பற்றிய ...
மாருதி வேகன் ஆர் 2013-2022 பயனர் மதிப்புரைகள்
- All (1431)
- Looks (360)
- Comfort (500)
- Mileage (449)
- Engine (227)
- Interior (175)
- Space (365)
- Price (209)
- மேலும்...
- நவீனமானது
- பயனுள்ளது
- Verified
- Critical
- The Car Looks Good In
The car looks good in white colour car have decent build quality , performance of the car is also good and the engine is almost silent and milage of the car is goodமேலும் படிக்க
- Ownership Review Of My WagonR.
Ownership Review Of My WagonR. I Would Like To Say That The Car Is Pretty Basic, Like Basic Features And Everything.Running Is Not That Much It Has Barely Crossed 7000 Kms Till Now. But There Are Issues In My Car That Needs To Be Fixed By Maruti. Like Sometimes The Infotainment System Of My Car Freezes And If Wireless Android Auto And Apple CarPlay Is Available In WagonR Then I Would Request That Maruti Should Add Wireless Android Auto In My Car.மேலும் படிக்க
- Family Space க்கு It's Good
It's good for family space an all , performance is mid ranged but good in milage an all so if your planning to have small intercity travelling petrol car wagonr is go to carமேலும் படிக்க
- Money க்கு My Car ஐஎஸ் Very Valuable
Very good car it doesn't have any problems since 9 years of my experience I love my car it's performance is very much great i love my car 🚗 thank youமேலும் படிக்க
- Everyone க்கு Good Car
I have a top model Zxi but don't have a parking camera. I tried many times to install a parking camera but was not successful. Must upgrade the parking camera in Zxi 2019 model.மேலும் படிக்க
வேகன் ஆர் 2013-2022 சமீபகால மேம்பாடு
சமீபத்திய செய்தி: மாருதி BS6 வேகன்R CNGயை அறிமுகப்படுத்தியுள்ளது.அதைப் பற்றி மேலும் இங்கே வாசிக்க.
மாருதி வேகன்R விலை மற்றும் மாறுபாடுகள்: புதிய வேகன்R விலை ரூ 4.45 லட்சம் முதல் 5.94 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் டெல்லி). இது மூன்று வகைகளில் வழங்கப்படுகிறது: L, V மற்றும் Z. அவை எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை அறிய, மாறுபாடு வாரியான அம்சங்களை இங்கே படிக்கவும்.
மாருதி வேகன்R என்ஜின்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன்கள்: மாருதி வேகன்Rரை இரண்டு BS6-இணக்கமான என்ஜின்களுடன் வழங்குகிறது: 1.0-லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.2-லிட்டர் யூனிட். 1.2 லிட்டர் எஞ்சின் 83PS சக்தியையும் 113 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது, வழக்கமான 1.0-லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் 68 PSமற்றும் 90Nm க்கு நல்லது. இரண்டு என்ஜின்களும் 5-ஸ்பீட் மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ்கள் தேர்வு செய்யப்படுகின்றன. புதிய வேகன்R 1.0 லிட்டர் பதிப்பில் CNG வேரியண்டிலும் வழங்கப்படுகிறது.
மாருதி வேகன்R பாதுகாப்பு அம்சங்கள்: இது டிரைவர் ஏர்பேக், ABS யுடன் EBD, முன் சீட் பெல்ட் நினைவூட்டல், வேக எச்சரிக்கை அமைப்பு மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் போன்ற நிலையான பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது. இணை பயணிகள் ஏர்பேக் மற்றும் முன் சீட் பெல்ட்களுடன் ப்ரெடென்ஷனர்கள் மற்றும் சுமை வரம்புகள் ஆகியவை டாப்-ஸ்பெக் Z வேரியண்ட்டுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளன மற்றும் L மற்றும் V வகைகளில் விருப்பமானது.
மாருதி வேகன்R அம்சங்கள்: புதிய வேகன்R 7-இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, மேனுவல் ஏசி, நான்கு சக்தி சாளரங்கள் மற்றும் மின்சாரம் சரிசெய்யக்கூடிய மற்றும் மடிக்கக்கூடிய ORVM களுடன் கொண்டுள்ளது. மேலும் என்னவென்றால், மாருதி ஹேட்ச்பேக்கை பின்புற வாஷர் மற்றும் வைப்பர் டிஃபோகர், 60:40 ஸ்ப்ளிட் பின்புற இருக்கைகள் மற்றும் முன் மூடுபனி விளக்குகளுடன் வழங்குகிறது.
மாருதி வேகன்R போட்டியாளர்கள்:புதிய வேகன்R ஹூண்டாய் சாண்ட்ரோ, டாடா டியாகோ, டாட்சன் GO, , மற்றும் மாருதி சுசுகி செலெரியோ போன்ற போட்டியாளர்களை எதிர்த்து நிற்கிறது.
மாருதி வேகன் ஆர் 2013-2022 படங்கள்
மாருதி வேகன் ஆர் 2013-2022 -ல் 20 படங்கள் உள்ளன, ஹேட்ச்பேக் காரின் வெளிப்புறம், உட்புறம் & 360 காட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய வேகன் ஆர் 2013-2022 -ன் படத்தொகுப்பைக் பாருங்கள்.
மாருதி வேகன் ஆர் 2013-2022 உள்ளமைப்பு
மாருதி வேகன் ஆர் 2013-2022 வெளி அமைப்பு
48 hours இல் Ask anythin g & get answer
கேள்விகளும் பதில்களும்
A ) Maruti Suzuki Wagon R has a kerb weight of 830-845kg, and a gross weight of 1340...மேலும் படிக்க
A ) For the availability and waiting period, we would suggest you to please connect ...மேலும் படிக்க
A ) Maruti offers Wagon R in CNG variant with the 1-litre engine (59PS/78Nm), paired...மேலும் படிக்க
A ) As of now, there is no official update available from the brand's on the same. W...மேலும் படிக்க
A ) Maruti Wagon R CNG LXI Opt retails at ₹ 6.19 Lakh (ex-showroom, Delhi). You may ...மேலும் படிக்க