Maruti Swift விமர்சனம்: குறைவான ஸ்போர்ட்டி தன்மை ஆனால் குடும்பத்துக்கானது
Published On அக்டோபர் 14, 2024 By ansh for மாருதி ஸ்விப்ட்
- 1 View
- Write a comment
புதிய இன்ஜினுடன் கொஞ்சம் பவர் குறைக்கப்பட்டிருந்தாலும் கூட புதிய வசதிகள் சேர்க்கப்பட்டது மற்றும் டிரைவிங் அனுபவம் ஆகியவை இந்த காரை சிறந்த தினசரி காராக மாற்றுகின்றன.
மாருதி ஸ்விஃப்ட் அறிமுகப்படுத்தப்பட்டு ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களை கடந்த பின்னர் கூட இது இந்தியாவில் எப்போதும் ஹாட்-ஹாட்ச்பேக் ஆக உள்ளது. மேலும் புதிய தலைமுறை காரும் தொடர்ந்து பிரபலமான மாடலாக உள்ளது. அதன் நவீன வடிவமைப்பு தினசரி பயன்பாட்டுக்கான வசதிகள் மற்றும் மிகவும் திறமையான இன்ஜின் ஆகியவற்றுடன் ஸ்விஃப்ட் இப்போது ஸ்போர்ட்டி ஹேட்ச்பேக்கில் இருந்து குடும்பத்துக்கான காராக மாறியுள்ளது. இதன் விலை ரூ.6.49 லட்சத்தில் இருந்து ரூ.9.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் உடன் போட்டியிடுகிறது. இந்த மாற்றங்கள் இதை சிறந்த காராக மாற்றியிருக்கிறதா இல்லையா என்பதை இங்கே பார்ப்போம்.
வடிவமைப்பு
ஸ்விஃப்ட்டின் டிசைன் ஸ்போர்ட்டி தோற்றத்தில் இருந்து இப்போது சற்று விலகியுள்ளது. இது மிகவும் நவீனமாகவும் நேர்த்தியாகவும் இருக்கிறது. ஹெட்லேம்ப்கள் ஸ்லீக்கராக மாறி ஸ்மோக்டு எஃபெக்ட் கொடுக்கப்பட்டுள்ளது. LED DRL -கள் மற்றும் நவீன எலமென்ட்டை காட்ட 15-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் உள்ளன.
பக்கவாட்டில் பார்க்கும்போது அதன் கச்சிதமான அளவைப் பற்றிய யோசனையைப் கிடைக்கும். மேலும் இந்த அளவு உண்மையில் நகரத்திற்கு மிகவும் ஏற்றதாக இருப்பதை கவனிக்கலால். பக்கவாட்டில் இருந்து அதன் ஸ்போர்ட்டி கவர்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கும் டூயல்-டோன் ஃபினிஷையும் நீங்கள் கவனிக்கலாம்.
ஸ்விஃப்ட் எப்பொழுதும் ஒரு ஸ்போர்ட்டி ரோடு முன்னிலையில் உள்ளது. ஆனால் இந்த புதிய தலைமுறை மற்றும் அதனுடன் வரும் புதிய வடிவமைப்பு அதை இன்னும் கவனிக்க வைத்துள்ளது. முந்தைய தலைமுறை ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில் ஸ்போர்ட்டியாக இருந்தது. மேலும் புதிய காரின் நவீன வடிவமைப்பு ஒரு குடும்பத்திற்கு மிகவும் பொருத்தமானது.
பூட் ஸ்பேஸ்
இந்த ஹேட்ச்பேக் 265-லிட்டர் பூட் ஸ்பேஸுடன் வருகிறது. அங்கே இரண்டு சூட்கேஸ்கள் (சிறிய மற்றும் நடுத்தர அளவு) மற்றும் இரண்டு அல்லது மூன்று சாஃப்ட் பேக்ஸ் ஆகியவற்றை அவற்றின் அளவைப் பொறுத்து வைக்கலாம். பூட் ஸ்பேஸ் வடிவம் காரணமாக பெரிய சூட்கேஸ்களை இங்கே வைக்க முடியாது. எனவே கேபின் அளவிலான சாமான்களை மட்டுமே இங்கு வைத்திருக்குமாறு பரிந்துரைக்கிறோம்.
உங்களிடம் அதிகமான லக்கேஜ்கள் இருந்தால் அல்லது நிறைய பொருட்களை மாற்றினால் பின் இருக்கைகளை 60:40 என்ற விகிதத்தில் ஸ்பிளிட் செய்யலாம். இது அதிக பைகளை வைத்திருக்க அனுமதிக்கும். கடைசியாக ஸ்விஃப்ட்டின் தாழ்வான பூட் லிட் காரணமாக சாமான்களை உள்ளே வைப்பது மிகவும் எளிதானது மற்றும் அதிக முயற்சி தேவைப்படாது.
இன்ட்டீரியர்
ஸ்விஃப்ட்டின் கேபின் எப்போதும் கொஞ்சம் இருட்டாகவே இருக்கும், அதை இந்த தலைமுறையிலும் பார்க்க முடிகிறது. ஆனால் இருட்டாக இருப்பதால் அது மந்தமாகத் தெரிகிறது என்று அர்த்தமல்ல. இந்த ஹேட்ச்பேக்கின் அளவு மற்றும் விலையை பொறுத்தவரை கேபின் உண்மையில் மிகவும் பட்டு போல தெரிகிறது.
டாஷ்போர்டு மற்றும் டோர்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகள் கீறல்கள் மற்றும் சென்டர் கன்சோல் மற்றும் ஸ்டீயரிங் வீலில் உள்ள பட்டன்களின் தரம் நன்றாக இருக்கிறது. கேபின் தரம் அவ்வளவு மோசமாக இல்லை. ஆனால் அது இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த கேபினுக்கு பிரீமியம் காரணியைச் சேர்க்க டாஷ்போர்டு ஸ்டீயரிங் மற்றும் டோர்கல் குரோம் இன்செர்ட்களை கொண்டுள்ளன. மேலும் டோர் பேட்களில் சாஃப்ட் டச் பேடிங் உள்ளது. இது கேபின் அனுபவத்தை உயர்த்துகிறது. நீங்கள் அங்கும் இங்கும் சில கிளாஸி பிளாக் எலமென்ட்கள் உள்ளன. மேலும் பிரீமியம் தோற்றத்துக்காக மேலும் மேம்படுத்தும் டேஷ்போர்டில் ஹார்ட் ஃபினிஷ் உள்ளது.
ஒட்டுமொத்தமாக இந்த ஹேட்ச்பேக்கின் விலையைப் பொறுத்தவரை சிறந்த கேபின் தரம் எதிர்பார்க்கப்பட்டது போலவே இருக்கிறது. மேலும் ஸ்விஃப்ட்டால் எப்போதும் இருந்த ஸ்போர்ட்டி கேபின் தோற்றத்தையும் தக்க வைத்துக் கொள்ள முடிந்துள்ளது.
நீங்கள் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து ஸ்போர்ட்டியான ஓட்டுநர் நிலையைப் பெறும்போது அதை உணர முடியும். ஸ்விஃப்ட் இன்னும் பிளாக் ஃபேப்ரிக் சீட்கள் உள்ளன. ஆனால் அவை ஒரு நல்ல குஷனிங் உடன் வருகின்றன. அவை உங்களைச் சரியாகப் பிடிக்கின்றன பெரிய உடல்வாகை கொண்ட நபர்களாக இருந்தாலும் கூட எளிதில் அது இடமளிக்கிறது.
இருப்பினும் பின் இருக்கைகளில் அவ்வளவு இடம் இல்லை. இந்த இருக்கைகள் போதுமானது ஆனால் இரண்டு பேருக்கு மட்டுமே. லெக்ரூம், முழங்கால் இடவசதி மற்றும் ஹெட்ரூம் ஆகியவற்றில் எந்த சமரசமும் இல்லை. ஆனால் தொடையின் கீழ் ஆதரவு பெரிதாக இல்லை.
இங்கே இரண்டு பேர் வசதியாக இருக்க முடியும். ஆனால் 3 பேர் இருக்க முடியாது, காரணம் ஏனென்றால் 3 பேர் இங்கே அமர்ந்தால் அவர்களின் தோள்கள் ஒன்றுடன் ஒன்று இடித்துக் கொண்டு அசௌகரியத்தை ஏற்படுத்தும். மேலும் நடுத்தர பயணிகளுக்கு ஹெட்ரெஸ்ட் இல்லை. மேலும் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் இல்லாதது பயணிகளின் வசதியை குறைக்கிறது.
வசதிகள்
அம்சங்களைப் பொறுத்தவரை நீங்கள் 9 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் செட்டப் உங்களுக்கு கிடைக்கும். இது மற்ற மாருதி கார்களான ப்ரெஸ்ஸா மற்றும் பலேனோ போன்றவற்றில் காணப்படும் அதே யூனிட் ஆகும். இது அதே மோடில் இயங்குகிறது. மேலும் அதன் யூஸர் இன்டர்ஃபேஸ் பயன்படுத்த எளிதானது. மேலும் இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவையும் உள்ளன அவை சீராக இயங்குகின்றன.
இந்தத் திரையில் உள்ள நல்ல விஷயம் என்னவென்றால் இது லேக் இல்லாமல் இயங்குகிறது. ஆனால் மோசமான விஷயம் என்னவென்றால் இந்தத் ஸ்கிரீனை சுற்றியுள்ள பெரிய பெஸல்கள் இந்த 9-இன்ச் யூனிட்டை சிறியதாக போல தோன்ற வைக்கின்றன.
இந்தத் ஸ்கிரீனை தவிர ஸ்விஃப்ட்டில் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் பின்புற ஏசி வென்ட்கள் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட் ஸ்டாப் உடன் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் போன்ற பிற அடிப்படை வசதிகளையும் பெறுகிறது.
இந்த வசதிக் பட்டியல் இன்னும் சில விஷயங்களைத் தவறவிட்டது மேலும் மாருதி டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே வென்டிலேட்டட் முன் சீட்கள் மற்றும் லெதரெட் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றை வழங்கியிருந்தால் இந்தப் பட்டியல் இன்னும் முழுமையானதாக உணரப்பட்டிருக்கும். டாப்-ஸ்பெக் ஸ்விஃப்ட்டின் விலை ஹூண்டாய் எக்ஸ்டரின் டாப்-ஸ்பெக் வேரியன்ட்டுக்கு நெருக்கமாக உள்ளது இது மிகவும் சிறப்பான வசதிகளை வழங்குகிறது.
நடைமுறை மற்றும் சார்ஜிங் ஆப்ஷன்கள்
நடைமுறைக்கு முன் டோர்களில் 1 லிட்டர் பாட்டில் ஹோல்டர்கள் உள்ளன. மேலும் சிறிய பொருட்களுக்கு பக்கத்தில் சிறிது இடம் உள்ளது. சராசரி அளவிலான க்ளோவ் பாக்ஸ் உள்ளது. மேலும் முன் பயணிகளுக்கு சென்டர் கன்சோலில் இரண்டு கப் ஹோல்டர்கள் உள்ளன.
பின்புற டோர்களில் 500 மி.லி பாட்டில் ஹோல்டர்கள் பின்புற ஏவி சென்ட்களுக்கு மேல் ஸ்லாட் செய்யப்பட்டுள்ளது. மேலும் மொபைல் ஹோல்டர் மற்றும் முன் பயணிகள் இருக்கைக்கு பின்னால் ஒரு இருக்கை பின் பாக்கெட் உள்ளது. இருப்பினும் பின்பக்க பயணிகளுக்கு எந்த கப்ஹோல்டர்களும் கிடைக்காது.
சார்ஜிங் ஆப்ஷன்களுக்கு வயர்லெஸ் ஃபோன் சார்ஜரைத் தவிர முன்பக்க பயணிகள் USB டைப்-A போர்ட் மற்றும் 12V சாக்கெட், பின்பக்க பயணிகளுக்கு USB டைப்-A மற்றும் USB டைப்-C போர்ட் உள்ளது.
பாதுகாப்பு
இப்போது ஸ்விஃப்ட்டின் பாதுகாப்பு அளவைப் பற்றி பேசலாம். 6 ஏர்பேக்குகள் ஏபிஎஸ் உடன் EBD எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) ஹில் ஹோல்ட் அசிஸ்ட் ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்ற பாதுகாப்பு வசதிகள் உங்களுக்கு கிடைக்கும். ஹையர் வேரியன்ட்கள் ரியர்வியூ கேமராவை கொண்டுள்ளன. இது பகலில் நன்றாக வேலை செய்கிறது ஆனால் இரவில் அல்லது குறைந்த ஒளி உள்ள இடங்களில் அதன் தரம் சற்று குறைவான உள்ளது.
கடந்த தலைமுறை ஸ்விஃப்ட் குளோபல் NCAP அமைப்பால் கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டது. அப்போது இது 1-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டை மட்டுமே பெற்றது. ஆனால் இந்த புதிய தலைமுறையிடம் இருந்து எங்களுக்கு கொஞ்சம் அதிகம் எதிர்பார்ப்புகள் உள்ளன.
பெர்ஃபாமன்ஸ்
ஸ்விஃப்ட் இப்போது புதிய இன்ஜினுடன் வருகிறது. இது இன்னும் 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜினாக உள்ளது. ஆனால் பழைய 4-சிலிண்டர் இன்ஜின் புதிய 3-சிலிண்டர் யூனிட்டால் மாற்றப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதன் நிறை குறைகளை கொண்டுள்ளது. முதலில் குறைகளை பார்ப்போம்.
இந்த புதிய இன்ஜின் பழையதைப் போல ரீஃபைன்மென்ட் ஆக இல்லை. மேலும் நீங்கள் குறைந்த வேகத்தில் அல்லது போக்குவரத்து நெரிசலில் இருக்கும்போது சில அதிர்வுகளை உணர்வீர்கள். இது குறைவான சக்தி வாய்ந்தது மேலும் ஒரு நகரப் பயணிகளுக்கு போதுமான சக்தி இருந்தாலும் அது செயல்திறனில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் முன்பைப் போல் குறிப்பாக நெடுஞ்சாலைகளில் ஓட்டுவது ஃபன் ஆக இல்லை.
இப்போது நன்மைகளைப் பற்றி பேசலாம். இந்த புதிய இன்ஜின் சிட்டி டிரைவ்களுக்கு சிறந்தது. மேலும் செயல்திறனில் எந்த குறைவையும் நீங்கள் உணரவில்லை. நகரத்தில் தொடர்ந்து கியர் மாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் 2 -வது கியரில் எளிதாக ஓட்டலாம். மற்ற நல்ல விஷயம் மைலேஜ் திறன் இது முன்பை விட சிறப்பாக உள்ளது. இந்த மதிப்பாய்விற்காக எங்களிடம் AMT வேரியன்ட் இருந்தது. மேலும் இந்த பவர்டிரெய்ன் மூலம் 25 கி.மீ/லி மைலேஜை கொடுப்பதாக மாருதி கூறுகிறது.
நாங்கள் சோதனை செய்து பார்த்தோம். ஸ்விஃப்ட் AMT ஆனது நகரத்தில் 16 கி.மீ/லி வேகத்திலும் நெடுஞ்சாலையில் 22 கி.மீ/லி மைலேஜும் கொடுத்தது. இவை உண்மையில் மிகச் சிறந்த புள்ளிவிவரங்கள்.
மேனுவல் மற்றும் AMT -க்கு வெளியே பிந்தையதை நாங்கள் பரிந்துரைக்கிறோம் ஏனெனில் இது ஒரு நல்ல மைலேஜை வழங்குகிறது. அதன் கியர் மாற்றங்கள் கவனிக்கத்தக்கவை. ஆனால் ஜெர்க்கி இல்லை இது நகரத்தில் மிகவும் வசதியானது. மேலும் நீங்கள் கூடுதல் கன்ட்ரோலை விரும்பினால் மேனுவல் மோடு ஏற்றது.
சவாரி & கையாளுதல்
நகரத்தில் சாதாரண வேகத்தில் வாகனம் ஓட்டும்போது பள்ளங்கள் மற்றும் ஸ்பீடு பிரேக்கர்களை இது நன்றாக சமாளிக்கிறது. அதில் பெரும்பாலானவை கேபினுக்கு மாற்றப்படுவதில்லை. ஒரு நகர காரைப் பொறுத்தவரை இது ஒரு நல்ல சவாரி தரத்தைக் கொண்டுள்ளது. இது அனைத்து பயணிகளையும் வசதியாக வைத்திருக்கும்.
ஆனால் நெடுஞ்சாலையில் குழிகள் மற்றும் சீரற்ற மேடுகள் கேபினுக்குள் நிறைய உணரப்படுகின்றன மேலும் நீங்கள் நெரிசலைத் தவிர்க்க காரை மெதுவாக செலுத்த வேண்டும். ஸ்விஃப்ட்டின் சவாரி தரமானது நெடுஞ்சாலையை விட நகரத்தில் சிறப்பாக உள்ளது. ஆனால் நீங்கள் அதை பெரும்பாலும் நகரத்திற்குள் ஓட்டுவீர்கள் என்பதால் அது ஒரு பிரச்சனையாக இருக்காது.
கடைசியாக இந்த ஹேட்ச்பேக்கின் கையாளுதல் உங்களையும் ஏமாற்றாது. திருப்பங்களில் செல்லும் போதும் அது லேசானதாக உணர்கிறது சாலையில் திடமானதாக உள்ளது. மேலும் ஸ்டீயரிங் கூட ரெஸ்பான்ஸிவ் ஆக உள்ளது. நீங்கள் ஒரு உற்சாகமான உணர்வைப் பெறுவது போல் இல்லை. ஆனால் ஒரு சிறிய ஃபேமிலி ஹேட்ச்பேக் -கிற்கான கையாளுதல் மிகவும் ஃபன் ஆக உள்ளது.
தீர்ப்பு
மாருதி ஸ்விஃப்ட் உங்கள் குடும்பத்திற்கு ஏற்றதா? இது நவீன வடிவமைப்பு பிரீமியம் தோற்றம் கொண்ட கேபின் நல்ல அம்சங்கள் நல்ல மைலேஜ் மற்றும் நகரத்தில் வசதியான மற்றும் மென்மையான ஓட்ட அனுபவத்தை வழங்குகிறது. ஆனால் அதே நேரத்தில் இது முன்பு போல் ஃபன் டிரைவிங்காக இல்லை. கேபின் தரத்தில் முன்னேற்றத்திற்கு இடம் உள்ளது. மேலும் 5 பயணிகளுக்கு போதுமான இடம் இல்லை.
உங்களிடம் ஒரு சிறிய குடும்பம் இருந்தால் அல்லது உங்களுக்காக ஒரு ஸ்போர்ட்டி ஹேட்ச்பேக்கை தேடுகிறீர்களா, ஆம் இது உங்களுக்கு ஏற்றது ஏனெனில் இது ஒரு நல்ல வசதிகளை கொண்ட தொகுப்பை வழங்குகிறது. மேலும் உங்கள் எல்லா தேவைகளையும் இந்த காரால் பூர்த்தி செய்ய முடியும். ஆனால் உங்களிடம் பெரிய குடும்பம் மற்றும் இடம் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தால் உங்கள் பட்ஜெட்டை அதிகரிக்குமாறு பரிந்துரைக்கிறோம். இதற்குப் பதிலாக பலேனோ ஃபிரான்க்ஸ் அல்லது பிரெஸ்ஸாவை நீங்கள் பரிசீலனை செய்யலாம்.