• English
    • Login / Register

    Maruti Dzire விமர்சனம்: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

    Published On நவ 12, 2024 By nabeel for மாருதி டிசையர்

    • 1 View
    • Write a comment

    புதிய டிசையர் இப்போது பெரும்பாலான விஷயங்களில் இன்ஸ்பையரேஷனை முற்றிலுமாக தவிர்த்துள்ளது. அந்த முடிவின் பலன் காரில் நன்றாகவே தெரிகிறது.

    New Maruti Dzire review

    கிட்டத்தட்ட ஒரு சரியான செடானாக பழைய மாருதி டிசையர் இருந்தது. நல்ல வசதிகள், சிறப்பான இடவசதி மற்றும் நடைமுறை தன்மையை அது கொண்டிருந்தது. அது மட்டுமல்ல வியப்பளிக்கும் வகையில் மைலேஜையும் கொடுத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக ஓட்டுவதும் ஃபன் நிறைந்தததாக இருந்தது. இது போன்று நிறைய காரணங்களால் இது டாக்ஸி சந்தையில் பலராலும் விரும்பப்படும் செடானாக வலம் வந்தது. ஆனால் பழைய டிசையரில் ஒரு பெரிய குறை இருந்தது. தோற்றத்திலும் சரி, வ்சதிகளிலும் சரி வாவ் என்று சொல்லக்கூடிய ஒன்றும் அதில் இல்லை.

    இப்போது இந்த புதிய டிசையர் காரில் அந்த இரண்டும் மாற்றப்பட்டுள்ளன. இது இப்போது சிறப்பான தோற்றம் மற்றும் வசதிகளை கொண்டதாக உள்ளது. இது ஒரு புதிய கார் ஆக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கும் ஸ்விஃப்ட் -க்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே இந்த புதிய டிசையரின் இந்த மாற்றம் அனைவராலும் விரும்பத்தக்கதாக இருக்குமா என்பதைப் பார்ப்போம். இந்த மாற்றங்களுக்காக புதிய டிசையர் எதையாவது இழக்க வேண்டியிருக்குமா ? 

    வெளிப்புற தோற்றம்

    New Maruti Dzire front

    பழைய டிசையரில் நிறைய விஷயங்கள் இருந்தன. ஆனால் ஸ்டைலிங் தனித்து தெரிவதை விட அனைவராலும் விரும்பத்தக்க ஒன்றாக இருந்தது. இந்த புதிய காரின் மூலமாக அதில் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது இப்போது ஸ்விஃப்ட்டைச் சார்ந்து இல்லை என்பதால் இந்த காருக்கு தனிப்பட்ட தோற்றம் கிடைக்கிறது. இந்த டிசையர் ஒரு நல்ல செடானாக இருக்கும் என்றே தோன்றுகிறது. கார் நேர்த்தியாகவும், அகலமாகவும் தோற்றமளிக்கின்றது. LED ஹெட்லேம்ப்கள், LED DRL -கள் மற்றும் ஃபாக் லேம்ப்கள் போன்ற பல பிரீமியம் விஷயங்கள் உள்ளன. இருப்பினும் இண்டிகேட்டர் இன்னும் ஹாலோஜன் ஆகவே உள்ளது. நடுவில் உள்ள ஸ்லீக்கரான குரோம் ஸ்ட்ரிப்பில் இரண்டு டிஆர்எல்களும் மிகச்சரியான முறையில் கனெக்ட் செய்யப்பட்டுள்ளன.

    New Maruti Dzire side
    New Maruti Dzire has 15-inch alloy wheels

    பக்கவாட்டில் இருந்து பார்க்கும் போது டிசையரின் பிரபலமான ஷேடு கிட்டத்தட்ட இன்னும் அப்படியே உள்ளதை போல தெரிகிறது. அதே சமயம் ஸ்ட்ராங் மற்றும் ஷார்ப்பான ஷோல்டர் லைன்கள் உள்ளன. 15 இன்ச் அலாய்கள் முன்பை விட நன்றாக இருக்கும். ஒட்டுமொத்தமாக பக்கவாட்டில் இருந்து பார்த்தால் பழைய டிசைருடன் குழப்பிக் கொள்ளாத அளவுக்கு வித்தியாசமாகத் தெரிகிறது. 

    New Maruti Dzire rear
    New Maruti Dzire tail lights

    பின்புறத்தில் இருந்து பார்க்கும் போது அதன் பம்பர் வடிவமைப்பு டிசையரின் அகலத்தை அதிகரித்து காட்ட உதவுகிறது. அதை தொடர்ந்து காரின் மிக முக்கியமான விஷயமாக ஸ்மோக்டு எல்இடி டெயில் லேம்ப்கள் மற்றும் பூட் லிப் ஸ்பாய்லர் ஆகியவை உள்ளன. இறுதியாக இந்த தலைமுறை டிசையரில் பிரீமியம் தோற்றமளிக்கும் செடானை வாங்குவதற்கான அனைத்து விஷயங்களும் இதில் உள்ளன.

    பூட் ஸ்பேஸ்

    New Maruti Dzire boot space

    பழைய டிசையரின் முக்கிய ஹைலைட்ஸில் ஒன்று பூட் ஸ்பேஸ். இந்த புதிய டிசையரிலும் அது போதுமானதாக உள்ளது. எண்ணிக்கையை பொறுத்தவரையில் அளவு 4 லிட்டர்கள் வரை அதிகரித்துள்ளது., பெரிய சூட்கேஸ்கள், இரண்டு ஓவர்நைட் சூட்கேஸ்கள் மற்றும் லேப்டாப் பேக் மற்றும் டஃபிள் பைகளை வைக்கலாம். 

    டிசையர் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட CNG ஆப்ஷன் உடன் வருகிறது. இன்னும் பெரிய டேங்க் உள்ளது. இதனால் சாமான்களை வைக்க மிகக் குறைந்த இடமே கிடைக்கும். டாடா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் அவற்றிம் சிஎன்ஜி காரிகளில் சிறந்த பூட் ஸ்பேஸை வழங்குவதற்காக பயன்படுத்தும் டூயல் சிலிண்டர் தொழில்நுட்பத்தையும் மாருதி பின்பற்ற வேண்டிய நேரம் இது. 

    New Maruti Dzire boot opening button

    இந்த டிசையரில் வெறுப்பாக இருக்கும் விஷயம் பூட் லிட்டை திறக்கும் விதம். ஆனால் இப்போது டிரைவரின் இருக்கைக்கு அருகில் உள்ள லீவரை தவிர சாவி மற்றும் பூட் லிட் -ல் உள்ள பட்டன் மூலமாகவும் திறக்கலாம். சாவி பூட் -க்கு அருகில் இருக்கும்போது மட்டுமே இது செயல்படும். நீங்கள் காருக்குள் சாவியை பாக்கெட்டில் வைத்துக் கொண்டிருந்தால், மால் அல்லது ஹோட்டல்களில் பாதுகாப்புச் சோதனைகளுக்காக குனிந்து பூட் -டை திறக்க வேண்டும். ஏனெனில் காரைத் திறந்தாலும் பூட்டில் உள்ள பட்டனில் இருந்து பூட் -டை அணுக முடியாது சாவியை பயன்படுத்த காரை விட்டு இறங்கி பின்னால் செல்ல வேண்டியிருக்கும்.

    இன்ட்டீரியர்

    New Maruti Dzire dashboard

    ஒரு கேபினின் நிறத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் அதன் தரத்தை எப்படி மேம்படுத்துவதாக உணர வைக்கும் என்பதற்கு இந்த கார் ஓர் உதாரணம். ஸ்விஃப்ட்டில் ஆல் பிளாக் கலர் இன்ட்டீரியர் மலிவாக இருப்பதாக நினைக்க வைத்தாலும் கூட டிசையரில் பயன்படுத்தப்பட்டுள்ள பெய்ஜ் கலர் பிரீமியம் உணர்வை கொடுக்கிறது. மேலும் டாஷ்போர்டின் மேல் மற்றும் கீழ் பகுதிகள் ஸ்விஃப்ட் போலவே இருக்கின்றன. ​​நடுவில் உள்ள ஃபேக் வுடன் டிரிம் முற்றிலும் புதியதாகும். இது டிசையரை வித்தியாசமாக உணர வைக்கிறது. 

    New Maruti Dzire dashboard

    இந்த ஒரு டிரிம் பீஸ் தவிர, ஸ்டீயரிங் வீல், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஏசி வென்ட்கள் மற்றும் டிரைவரின் கேபின் மற்ற விஷயங்கள் அனைத்தும் ஒரே மாதிரி உள்ளன. மேலும் இங்கு சீரற்ற பேனல் இடைவெளியோ அல்லது தளர்வான ஃபிட்டிங்கோ எதுவும் இல்லை.  

    New Maruti Dzire does not get a centre armrest for front passengers
    New Maruti Dzire power window switches look cheap

    சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட் இல்லாதது மட்டுமே எனக்கு ஒரு குறையாக தோன்றியது. இது ஓட்டுநரின் வசதியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் ஸ்டோரேஜ் ஆப்ஷனாகவும் பயன்படுத்த உதவியாக இருந்திருக்கும். மேலும் ஒட்டுமொத்த தரமும் சிறப்பாக இருந்திருக்கலாம். கேபினில் காணப்படும் லெதரெட் ஸ்டீயரிங் வீலில் மட்டுமே உள்ளது. மற்ற எல்லா இடங்களிலும் - சீட்கள், முன் டோர் பேடுகள் மற்றும் ஆர்ம் ரெஸ்ட் அனைத்திலும் ஃபேப்ரிக் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின் கதவுகளுக்கு ஃபேப்ரிக் கூட இல்லை. பின்புறத்தில் உள்ள பவர் விண்டோ ஸ்விட்சுகள் கூட மிகவும் மலிவான உணர்வை கொடுக்கின்றன.

    கேபின் நடைமுறை

    New Maruti Dzire glovebox
    New Maruti Dzire wireless phone charger

    ஆர்ம்ரெஸ்ட் ஸ்டோரேஜ் தவிர டிசையர் நடைமுறையில் நன்றாகவே உள்ளது. இரண்டு கப் ஹோல்டர்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜருடன் அதன் முன்பக்க ஓபன் ஸ்டோரேஜ் மற்றும் உங்கள் பர்ஸை வைத்திருக்க ஹேண்ட்பிரேக்கின் கீழ் ஒரு சிறிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது. க்ளோவ் பாக்ஸ் -ம் ஓரளவுக்கு சரியான அளவில் உள்ளது. ஆனால் கூல்டு வசதி இல்லை. 

    New Maruti Dzire has a USB port and 12V charging socket for front passengers
    New Maruti Dzire has two USB ports for rear passengers

    சார்ஜிங் ஆப்ஷன்களை பொறுத்தவரையில் இது சற்று ஏமாற்றமளிக்கிறது. முன்புறத்தில் USB சார்ஜர் மற்றும் 12V சாக்கெட் உள்ளது. ஒரு டைப்-சி சார்ஜர் கொடுக்கப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இருப்பினும் நடுவில் ஒரு USB மற்றும் ஒரு Type-C போர்ட் உள்ளது. 

    வசதிகள்

    New Maruti Dzire9-inch touchscreen
    New Maruti Dzire single-pane sunroof

    எலக்ட்ரானிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் மற்றும் ஃபோல்டபிள்  ORVM -கள், ஆட்டோமெட்டிக் ஹெட்லேம்ப்கள், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் கலர்டு MID, பெரிய மற்றும் சிறந்த டச் ஸ்கிரீன் மற்றும் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஆகியவை உள்ளன. பழைய காருடன் ஒப்பிடுகைய்ல் புதிதாக 3 முக்கிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. முதலாவதாக மாருதியின் பிரீமியம் கார்களில் இருந்து புதிய 9 இன்ச் டச் ஸ்கிரீன் இதன் இன்டஃபேஸ் பயன்படுத்த மிகவும் எளிதானது மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியும் உள்ளன. வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 360 டிகிரி கேமரா மற்றும் இறுதியாக சன்ரூஃப் ஆகியவை பட்ஜெட் கார்களில் மிகவும் பிரபலமான உள்ள வசதிகளாக உள்ளன. 

    New Maruti Dzire auto AC
    New Maruti Dzire analogue instrument cluster with coloured MID

    பின் இருக்கை அனுபவம்

    New Maruti Dzire rear seats

    டிசைரின் பின்புற இருக்கை எப்போதும் அதன் சிறப்பம்சமாக இருந்து வருகிறது. புதிய டிசையரிலும் அப்படியே உள்ளது. நல்ல ஃபுட்ரூமுடன் பின் இருக்கையில் 6 அடி உடையவர்களுக்கு கூட போதுமான முழங்கால் அறை உள்ளது. இருப்பினும் இந்த புதிய டிசையரில் ஹெட்ரூம் சமரசம் செய்யப்பட்டுள்ளது. 6 அடிக்கு கீழ் உள்ளவர்களால் இதை சமாளித்துக் கொள்ள முடியும். ஆனால் கொஞ்சம் உயரமாக உள்ளவர்களுக்கு இது தொந்தரவாக இருக்கும். பேக்ரெஸ்ட்ஆங்கிள் நிதானமாகவும் நிமிர்ந்தும் இருப்பதற்கு இடையே சரியான சமநிலையைத் கொண்டுள்ளது. அதாவது நீண்ட தூரம் பயணிக்க வசதியாக இருக்கும். 

    ஜன்னல்களுக்கு வெளியே நன்றாக பார்க்க முடிகிறது. இருப்பினும் பெரிய முன் ஹெட்ரெஸ்ட்கள் இங்கு முன்பக்கக் காட்சியை கொஞ்சம் தடுக்கின்றன. சன்ரூஃப் வழியாக கேபினுக்குள் இன்னும் நல்ல வெளிச்சம் உள்ளது மற்றும் பிரெளவுன் கலர் இன்ட்டீரியர்ஸ் இருப்பதால் வென்டிலேஷனாக இருப்பதை போன்ற உணர்வை கொடுக்கின்றன. ​​ப்ளோவர் கன்ட்ரோலுடன் கூடிய சிறிய ஏசி வென்ட்கள், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இரண்டு ஹெட்ரெஸ்ட்கள், போனை வைக்க ஒரு பிரத்யேக இடம், யூஎஸ்பி மற்றும் டைப்-சி சார்ஜர் மற்றும் கப்ஹோல்டர்களுடன் கூடிய சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட் ஆகியவை உள்ளன. இருப்பினும் இருக்கையின் பின் பாக்கெட் இன்னும் பயணிகளுக்குப் பின்னால் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது ஓட்டுநருக்கு இல்லை. 

    புதிய டிசையருடன் சன் ஷேட் மற்றும் சிறந்த ஸ்டோரேஜ் ஆகியவற்றை கொடுப்பதன் மூலமாக அனுபவத்தை மேம்படுத்த மாருதி கொஞ்சம் முயற்சிகளை எடுத்திருக்க வேண்டும்.

    பாதுகாப்பு

    New Maruti Dzire has 6 airbags (as standard)

    இது குளோபல் NCAP அமைப்பால் நடத்தப்பட்ட சோதனையில் 5 ஸ்டார் மதிப்பீடு கிடைத்துள்ளது! இந்த மதிப்பீடு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கும், ஏனெனில் டிசையர் 5 ஸ்டார் மதிப்பீட்டைப் பெற்ற முதல் மாருதி ஆக மாறியுள்ளது. ஏபிஎஸ், ஈபிடி, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோக்ராம், ஹில் ஹோல்ட் போன்ற வசதிகளும் உள்ளன. இது தவிர இந்த காரில் 6 ஏர்பேக்குகளும் ஸ்டாண்டர்டாக கிடைக்கும்.

    இன்ஜின் மற்றும் செயல்திறன்

    New Maruti Dzire new 1.2-litre 3-cylinder naturally aspirated petrol engine

    காரை ஓட்டுவது எளிது. எப்போதும் டிசையர் இந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருந்தது. புதிய காரும் அதன் அடிப்படையிலேயே உள்ளது. புதிய 3-சிலிண்டர் இன்ஜின் இருந்தபோதிலும் டிரைவிங்கில் எந்த சிரமமும் இல்லை. புதிய இன்ஜினில் ஆரம்பத்திலேயே செயல்திறனை உணர முடிகிறது. இதன் மூலமாக டிசையர் குறைந்த முயற்சியுடன் முன்னேறவும், டிராஃபிக்கில் விரைவாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவுகிறது. இருப்பினும் புதிய இன்ஜினில் சில குறைகளும் உள்ளன. 

    New Maruti Dzire

    பழைய 4-சிலிண்டர் இன்ஜின் அதிக லைனர் செயல்திறனை கொடுத்தது. அதாவது நெடுஞ்சாலையில் ஓட்டுவது மற்றும் விரைவாக முந்திச் செல்வதில் எந்த சிக்கலும் எழுந்ததில்லை. புதிய டிசையர் அதிக ஆர்பிஎம்களில் முந்திச் செல்லும்போது மெதுவாகவும் சிரமமாகவும் உள்ளது. 4-சிலிண்டருடன் ஒப்பிடும்போது 3-சிலிண்டர் இன்ஜினின் ரீஃபைன்மென்ட் ஆக இல்லை என்பதிலேயே அதன் செயல்திறன் தெளிவாகிறது. முதன்முறையாக டிசைரை ஓட்டினால் வித்தியாசம் தெரியாது. இருப்பினும் K12B இன்ஜின் எவ்வளவு நன்றாக இருந்தது என்பதை அறிந்தால் அது மீண்டும் வர வேண்டும் என்று மட்டுமே அனைவரது விருப்பமாக இருக்கும். 

    New Maruti Dzire 5-speed manual gearbox

    இரண்டு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் உள்ளன. ஒன்று 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் மற்றொன்று 5-ஸ்பீடு AMT. மேனுவல் ஓட்டுவதற்கு சிறந்த டிரான்ஸ்மிஷன் ஆகும். லைட் மற்றும் யூகிக்கக்கூடிய கிளட்ச் மற்றும் உறுதியாக மாற்றும் கியர்பாக்ஸ் ஓட்டுவதை எளிதாக்குகிறது. AMT உங்களிடமிருந்து விலகிச் செல்லும் முயற்சியை எடுக்கும் போது - பிரச்சனை தெரிகிறது. தேவைக்கு அதிகமான கியரில் வைத்திருக்க முயற்சிக்கிறது. இது 30 கி.மீ வேகத்தில் 3 -வது கியருக்கும், 40 கி.மீ வேகத்தில் 4 -வது கியருக்கும், மணிக்கு 60 கி.மீ வேகத்தில் 5 -வது கியருக்கும் மாறுகிறது. அதுவே நீங்கள் மேனுவலாக காரை ஓட்டும் போது 45 கி.மீ வேகத்தில் 3 -வது கியரிலும் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் 4 -வது கியருக்கும் மாறுவீர்கள். இந்த விரைவான மேம்படுத்தும் தாக்கத்தின் காரணமாக இன்ஜினிலிருந்து பயன்படுத்தக்கூடிய சக்தியின் பற்றாக்குறை நன்றாக தெரிகிறது மற்றும் கியர்பாக்ஸை குறைக்க வேண்டும் அல்லது வேகத்தை எட்ட கார் கொஞ்சம் நேரத்தை எடுக்கிறது. 

    இதன் கூடுதல் வசதி மைலேஜ் ஆகும். AMT மற்றும் மேனுவல் இரண்டிற்கும் கிளைம்டு மைலேஜ் லிட்டருக்கு 25 கி.மீ கிடைக்கும். மேலும் நகரத்தில் 15 - 16 கி.மீ வரை கொடுக்கும்.

    கம்ஃபோர்ட் மற்றும் கையாளுதல்

    New Maruti Dzire

    டிசையர் பேரெடுத்த மற்றோர் விஷயம் சவாரி. சாலைகள் மோசமாக இருந்தாலும் சரி அல்லது நல்லதாக இருந்தாலும் சரி, அது எப்போதும் சவாரி நன்றாகவே உள்ளது. இந்த புதிய டிசையர் விஷயத்திலும் அப்படியே உள்ளது. சஸ்பென்ஷன் இப்போது இன்னும் கொஞ்சம் கடினமாகிவிட்டது, ஆனாலும் கூட நீங்கள் சாலையின் மேற்பரப்பை அதிகமாக உணர மாட்டீர்கள்.

    எப்பொழுதும் டிசையரின் நல்ல கையாளுதல் திறன் பேசப்படும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. டிசையர் உண்மையில் ஒரு வேடிக்கையாக ஓட்டக்கூடிய கார். அதுவும் இந்த புதிய காரில் நன்றாக உள்ளது. நீங்கள் அதை வேகமாக ஒரு திருப்பத்தில் கொண்டு செல்ல முயற்சிக்கும்போதோ அல்லது நண்பர்கள் கூட்டத்துடன் மலைப்பகுதிக்கு செல்லும்போதோ அதை உணர்வீர்கள்.  மீண்டும் ஒருமுறை நீங்கள் பழைய இன்ஜினை மிஸ் செய்வீர்கள். 

    தீர்ப்பு

    New Maruti Dzire

    2024 டிசையர் மிகவும் அருமையான கார். குடும்பத்திற்காக வாங்கும் முன் இருமுறை யோசிக்க வேண்டிய அவசியத்தை இது ஏற்படுத்தி கொடுக்கவில்லை. நல்ல கேபின், வசதிகள், இட வசதி, நடைமுறை மற்றும் ஆகியவை இந்த காரை ஆல்-ரவுண்டராக மாற்றியுள்ளன. புதிய மற்றும் சிறந்த தோற்றம் மட்டுமல்ல சிறப்பான வசதிகள் ஆகியவை டிசையரை மிகவும் விரும்பத்தக்க காராக மாற்றியுள்ளன. 

    New Maruti Dzire dashboard

    இருப்பினும் சில விஷயங்களால் கார் ஆனது எதிர்காலத்துக்கும் ஏற்ற காராக மாறுவதை தடுக்கின்றன. சிறந்த தரம் மற்றும் சிறப்பான விஷயங்களுடன் இது அதிக பிரீமியமான உணர்வை கொடுத்திருக்க வேண்டும். புதிய 3-சிலிண்டர் இன்ஜின், குறிப்பாக AMT ஆனது பழைய காரை ஓட்டுவதை போல அவ்வளவு ஃபன் நிறைந்ததாக இல்லை. மேலும் உயரம் 6 அடி-யை விட அதிக உயரம் கொண்டவராக இருந்தால் ஹெட்ரூம் பற்றாக்குறையாக இருக்கும் குறிப்பாக பின்புறத்தில் அதை உணர முடியும்.

    New Maruti Dzire ஆனால் இங்கே விலை என்ற விஷயம் மிக முக்கியமானது. மாருதி இதன் தொடக்க விலையை ரூ. 10.14 லட்சமாக நிர்ணயித்துள்ளது. இது முன்பு இருந்ததை விட தோராயமாக ரூ.1 லட்சம் அதிகம். பழைய டிசையரோடு ஒப்பிடுகையில் கொடுக்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகள் மற்றும் பாதுகாப்பு விஷயங்களின் அடிப்படையில் இது ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவே இருக்கும். நீங்கள் சிறிய மற்றும் நடைமுறையான குடும்ப செடானை தேடுகிறீர்கள் என்றால் புதிய டிசையர் நீங்கள் கொடுக்கும் பணத்திற்கான மதிப்பு நிறைந்த காராக இருக்கும்.

    Published by
    nabeel

    சமீபத்திய செடான் கார்கள்

    வரவிருக்கும் கார்கள்

    சமீபத்திய செடான் கார்கள்

    ×
    We need your சிட்டி to customize your experience