• English
  • Login / Register

2024 Maruti Swift ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: புதிதாக தெரிய கடுமையாக உழைத்துள்ளது

Published On மே 31, 2024 By nabeel for மாருதி ஸ்விப்ட்

2024 ஸ்விஃப்ட் காரை பார்க்கும் போது பழைய வசீகரமான ஆளுமையைத் தக்க வைத்துக் கொண்டவாறே, புதிதாக மாற எவ்வளவு கடினமாக உழைத்துள்ளது என்பது தெரிகிறது.

2024 Maruti Swift

2024 மாருதி ஸ்விஃப்ட் தற்போது 6.5 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுளது. இதன் டாப் வேரியண்ட் இப்போது ரூ.9.65 லட்சம் ஆன நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் மற்றும் டாடா டியாகோ போன்றவற்றுக்கு போட்டியாக உள்ளது. ஸ்விஃப்டை எப்போதும் சிறப்பாக மாற்றுவது அதன் ஸ்போர்ட்டி இன்ஜின் மற்றும் கையாளுதல் ஆகும். அதே சமயம் கேபின் தரம் மற்றும் வசதிக்கான அப்டேட்டும் இதில் இருந்தது. இவை புதிய நான்காம் தலைமுறை ஸ்விஃப்ட்டில் அப்டேட் செய்யப்பட்டுள்ளதா?

2024 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் அதன் ஸ்டைலான மற்றும் சிறிய நடைமுறை ஹேட்ச்பேக் என்ற நற்பெயரை தொடர்ந்து பின்ப்ற்றி  வருகிறது. இதன் விலை ரூ.6.5-9.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது. 4 -வது தலைமுறை மாடலாக இருந்தாலும் இது ஒரு ஃபேஸ்லிஃப்ட் என்பதை விட அதிகமானது. மேலும் கார் முழுவதும் நிறைய அப்டேட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வெளிப்புறம்

2024 Maruti Swift LED lights
2024 Maruti Swift rear

புதிய ஸ்விஃப்ட்டின் வடிவமைப்பு பழைய ஸ்விஃப்ட் காரை உங்களுக்கு நினைவூட்டும். ஆனால் இந்த நேரத்தில் இப்போது இது மேலும் மெருகூட்டப்பட்டதாகவும் வட்டமாகவும் இருக்கிறது. ஹெட்லைட்கள் மற்றும் டெயில் லேம்ப்கள் போன்ற பெரிய லைட்டிங் எலமென்ட்களுடன் ஹேட்ச்பேக் அகலமாகவும் தரையில் தாழ்வாகவும் இருக்கும். இது ஐரோப்பிய கார்களுக்கான வடிவத்தை போல உள்ளது. கலர் ஆப்ஷன்கள் என்று வரும் போது வைப்ரன்ட் ரெட் மற்றும் புளூ ஆகியவை ஒரு ஸ்போர்ட்டி டச்சை  சேர்க்கின்றன. ஸ்மோக்டு புரொஜெக்டர், LED ஹெட்லைட்கள், LED டெயில் லைட்ஸ் பெரிய கிரில் மற்றும் முக்கிய ஷோல்டர் லைன் போன்ற வெளிப்புற விஷயங்களும் தோற்றத்தை குறிப்பிடத்தக்கதாக ஆக்குகின்றன. 

உட்புறம்

2024 Maruti Swift cabin

உட்புற வடிவமைப்பு அதன் பெரிய உடன்பிறப்பான பலினோ -வில் உள்ளதை போலவே உள்ளது. மேலும் ஒரு லேயர்டு அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. பொருளின் தரம் அதன் முன்னால் இருந்த காருக்கு இணையாகவே உள்ளது, நிச்சயமாக இது ஒரு குறை. ஆல்-பிளாக் கேபின் தீம் ஒரு ஸ்போர்ட்டி பிளேயரை சேர்க்கிறது. ஆனால் ஸ்கிராட்சி பிளாஸ்டிக்குகள் அதை மலிவானதாக உணரவைக்கும். முந்தைய ஸ்விஃப்ட் எதை உணர வைத்ததோ அது நிச்சயமாக இனி இருக்காது. முந்தைய ஜென் மாடலுடன் ஒப்பிடும்போது வசதிகளில் கூட பெரிய மாற்றம் இல்லை. 

2024 Maruti Swift 9-inch touchscreen

நீங்கள் இன்னும் கீலெஸ் என்ட்ரி புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் மற்றும் ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்  ஆகியவற்றைப் பெறுவீர்கள். 9-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் புதியது மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது. இருப்பினும் சவுண்ட் சிஸ்டம் அப்டேட் செய்யப்படாதது மீண்டும் ஒரு குறையாக உள்ளது . 6 ஏர்பேக்குகள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் பாராட்டுக்குரியவை என்றாலும் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே லெதரெட் அப்ஹோல்ஸ்டரி மற்றும் சீட் வென்டிலேஷன் போன்ற சில வசதிகள் இல்லாதது ஒரு மிகப்பெரிய குறை. ஸ்விஃப்ட்டை ஒரு செக்மென்ட் லீடர் ஆக்க மாருதி இவற்றை கொடுத்திருக்க கொஞ்சம் முயற்சித்திருக்க வேண்டும். 2024 Maruti Swift rear seats

இது இருந்தபோதிலும் ஸ்விஃப்ட் 4 பேருக்கு வசதியான இருக்கைகள் முன் மற்றும் பின்பக்க பயணிகளுக்கு நல்ல இடம் மற்றும் நடைமுறை ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை வழங்குகிறது. பின்பக்கத்தில் இருப்பவர்களுக்கு இப்போது AC வென்ட்கள் மற்றும் 1 USB மற்றும் ஒரு டைப்-C சார்ஜர் கிடைக்கிறது. பின் இருக்கைகள் 6 -அடி உடையவர்களுக்கு கூட வசதியாக இருக்கும். ஆனால் ஒட்டுமொத்த தெரிவுநிலை முன்பை விட சிறப்பாக இருந்தாலும் பெரிய முன் ஹெட்ரெஸ்ட்களால் அது இப்போது தடுக்கப்படுகிறது. 

இன்ஜின் மற்றும் செயல்திறன்

2024 Maruti Swift engine

5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்ட புதிய 1.2-லிட்டர் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் 3-சிலிண்டர் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. ஸ்விஃப்ட் உண்மையில் நகரத்தில் ஸ்விஃப்ட் ஆக உள்ளது. குறைந்த ரெட் டார்க் டெலிவரி பாயிண்டில் கிடைக்கிறது. அதாவது நீங்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் நகரத்தில் இரண்டாவது கியரில் ஓட்டலாம். செயல்திறனும் சராசரியாக உள்ளது. மேனுவலில் 0-100 கி.மீ எட்ட 14 வினாடிகள் பிடிக்கலாம். இந்த குறைபாட்டை சரி செய்யும் வகையில் 3 கிமீ/லி மைலேஜ் கூடுதலாக உங்களுக்கு கிடைக்கும்.நீங்கள் பெறுவீர்கள். 

இருப்பினும் இன்ஜினின் ரீஃபைன்மென்ட் அதன் முன்னோடியைப் போல சிறப்பாக இல்லை. குறிப்பாக நிறுத்தி பின்னர் இயக்கும் போதும் மெதுவாக நகரும் போக்குவரத்திலும். நெடுஞ்சாலையில் முந்திச் செல்லவும் போராடுகிறது. ஆனால் அதுவும் மணிக்கு 100 கி.மீக்கு தாண்டிய பின்னர் மட்டுமே. இரண்டு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் நான் AMT -யையே பரிந்துரைக்கிறேன். இது நிதானமாக வாகனம் ஓட்டுவதற்கும் சுமூகமான ஷிப்ட்களை வழங்குவதன் மூலம் அனைத்து பயணங்களுக்கும் ஏற்றது. மேலும் நீங்கள் ஸ்போர்ட்டி மோடில் வாகனம் ஓட்ட விரும்பினால் மேனுவல் மோடு குறைபாடற்ற முறையில் செயல்படுகிறது. 

சவாரி மற்றும் கையாளுதல்

2024 Maruti Swift

ஸ்விஃப்ட் முன்பை விட ஒரு வசதியான ஹேட்ச்பேக்காக மாறியுள்ளது. இது வழக்கமான வேகத்தில் சிறிய மேடுகள் மற்றும் ஸ்பீடு பிரேக்கர்களை சமாளிப்பதில் சிறந்தது. உங்கள் பயணங்களில் இந்த நிலைமைகளை நீங்கள் எதிர் கொண்டாலும் கூட அது வசதியாக இருக்கும். இருப்பினும் அதிக வேகத்தில் மோசமான சாலை நிலைமைகள் உள்ளே அப்படியே தெளிவாகத் தெரியும். ஆகவே உங்கள் சக பயணிகளை நடுங்க வைக்காதபடி பள்ளங்களின் மீது மெதுவாகச் செல்ல வேண்டும். 

அதன் கையாளுதல் இன்னும் சுறுசுறுப்பாகவும் இலகுவாகவும் இருக்கிறது. ரெஸ்பான்ஸிவ் ஸ்டீயரிங் டயல் ஆகியவற்றால் ஸ்விஃப்ட்டை ஓட்டுவது ஃபன் டிரைவிங் ஆக இருக்கும். இதிலிருந்து உற்சாகமான அளவிலான செயல்திறனை எதிர்பார்க்க வேண்டாம். ஆனால் ஒரு குடும்ப ஹேட்ச்பேக்கை பொறுத்தவரை திருப்பங்களிலும், மலைப்பாங்கான சாலைகளிலும் செல்வதை விட இது மகிழ்ச்சி அளிக்கிறது.

தீர்ப்பு

2024 மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் ஒரு ஃபன் நிறைந்த தினசரி ஹேட்ச்பேக்கை விரும்புவோருக்கு ஒரு கட்டாய தேர்வாக உள்ளது. இது ஸ்டைல், நடைமுறை மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல்திறன் ஆகியவற்றின் நல்ல கலவையை கொண்டுள்ளது. வசதிகள் மற்றும் தரத்துடன் இது இந்த பிரிவில் முன்னோடியாக இருந்திருக்க வேண்டும் என்றாலும் கூட ஸ்விஃப்ட் இருப்பதை வைத்து மகிழ்ச்சியாகத் இருப்பதாக தெரிகிறது.

2024 Maruti Swift

இருப்பினும் இதன் விலை நிச்சயமாக அனைவருக்கு பிடிக்கும் ஒரு விஷயம். சிறந்த வேரியன்ட்கள் இப்போது பலேனோ போன்ற மிகப் பெரிய மாற்று கார்களுடன் நெருங்கிய போட்டியில் உள்ளன. மேலும் மஹிந்திரா XUV 3XO எஸ்யூவி போன்றவையும் கூட பணத்துக்கு மதிப்பு கொண்டதாக அதை பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன. இறுதியில் ஸ்விஃப்ட்டின் ஈர்ப்பு, அதன் நல்ல தோற்றம், நாஸ்டால்ஜிக் மற்றும் ஸ்போர்ட்டியான தன்மை ஆகியவை இதன் ரசிகர் பட்டாளத்துக்கு போதுமானவையாக உள்ளன.

சமீபத்திய ஹேட்ச்பேக் கார்கள்

வரவிருக்கும் கார்கள்

சமீபத்திய ஹேட்ச்பேக் கார்கள்

×
We need your சிட்டி to customize your experience