Tata Tiago EV: லாங் டேர்ம் ரிப்போர்ட்
Published On மே 13, 2024 By arun for டாடா டியாகோ இவி
- 1 View
- Write a comment
டியாகோ EV உடனான இரண்டாவது மாதத்தில் EV பற்றிய சில சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது.
டாடா டியாகோ EV; கடந்த ஒரு மாதமாக என்னுடைய பார்க்கிங் ஏரியாவில் நின்று கொண்டிருந்தது. அது ஒரு வாரப் பயணமாக இருந்தாலும் மற்றும் பிற ஆண்டு இறுதி விடுமுறை பயணமாக இருந்தாலும், டாடா EV அதைக் தடுக்காது. நடைமுறையில் ஒரு EV உடன் பயணம் செய்வது பற்றிய சில முக்கியமான விஷயங்களை நாங்கள் இன்னும் கற்றுக்கொண்டோம்.
#1 நான் அதை கவனிக்காமல் விட்டால் என்ன நடக்கும்?
சார்ஜிங் லெவல் குறைகின்றதா? இல்லை. கொஞ்சம் கூட குறையவில்லை. நான் அதை வைத்திருந்த நேரத்தில், நான் ஏற்கனவே ஒரு வாரம் ஒரு முறையும், இரண்டாவது வாரத்தில் இரண்டு முறையும் கவனிக்காமல் விட்டுவிட்டேன். பேட்டரியின் ஸ்டேட்-ஆஃப்-சார்ஜ் அது கடைசியாகப் பயன்படுத்தப்பட்ட போது எப்படி இருந்ததோ அதே லெவலில் இருந்தது.
மேனுவல் கூறும் விஷயம்: " காரை நீண்ட காலம் பயன்படுத்தாமல் விட்டுச் செல்வதற்கு முன்பு (> 15 நாட்கள்) கார் கட்டாயம் 50 சதவீதத்திற்கும் அதிகமாக சார்ஜ் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. நீண்ட காலத்துக்கு பிறகு வாகனம் பயன்படுத்துவதற்கு முன் ஸ்லோ சார்ஜ் ஆப்ஷனை பயன்படுத்தி 100 சதவிகிதம் சார்ஜ் செய்யப்பட வேண்டும்.
சுமார் 14 நாட்களுக்கு அதை 50 சதவீதத்திற்கு கீழ் விட்டுவிட்டோம். ஆனால் உண்மையில் எந்தச் சிக்கலையும் நாங்கள் எதிர்கொள்ளவில்லை. நீண்ட காலம் பயன்படுத்தாத பிறகு ஸ்லோவாக முழு சார்ஜ் செய்ய வேண்டும் என டாடா பரிந்துரைக்கிறது. இது எங்கள் அடுத்த சந்தேகத்திற்கு வழி வகுத்தது.
#2 நான் எல்லா நேரத்திலும் ஃபாஸ்ட் சார்ஜ் செய்யலாமா ?
மேனுவலை மீண்டும் மேற்கோள் காட்டுகிறேன்: “ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது ஒரு முழுமையான சார்ஜிங் (ஸ்லோ) செய்வது பேட்டரி ஆயுளை நீட்டிக்கும் என்பதற்காக பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு 4 ஃபாஸ்ட் சார்ஜிங் -களுக்கு பிறகு ஒரு முழுமையான ஸ்லோ சார்ஜிங் பரிந்துரைக்கப்படுகிறது”
இது காருக்கு சிறந்தது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆனால் பொறுமையற்ற ஒருவருடன் மெதுவாக சார்ஜ் செய்யும் வசதி இல்லாமல் கார் இருக்கும் போது இது முற்றிலும் சாத்தியமில்லாத ஒன்று. எங்கள் டெஸ்ட் டியாகோ EV கார் 7 முறை பேக்-டு-பேக் ஃபாஸ்ட் சார்ஜ் செய்யப்பட்டிருந்தது. இது பரிந்துரைக்கப்பட்டதை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ஆகும்.
விளைவு மிகவும் வெளிப்படையாக தெரிந்தது. காரின் ரேஞ்சில் தெளிவான வீழ்ச்சி. டியாகோ கிட்டத்தட்ட 100-120 கி.மீ இல் ஏறக்குறைய 65-70 சதவிகிதம் சார்ஜில் குறைவு ஏற்படும். ஆனால் வழக்கமான 50-60 சதவிகிதத்திற்கு மாறாக 10-15 சதவிகிதம் வரை இழப்பு ஏற்பட்டது. இது சற்று 200 கி.மீ. வரம்பைக் கொண்டு தொடங்குவதற்கு சமமானது.
தொடர்ந்து ஃபாஸ்ட் சார்ஜ் செய்வது ஒட்டுமொத்த பேட்டரி ஆரோக்கியத்தில் மிக பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆகவே தொடர்ந்து ஃபாஸ்ட் சார்ஜ் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. 3.3kW அல்லது 7.4kW (AC) நிலையில் தொடர்ந்து சார்ஜ் செய்வது பேட்டரியின் ஆரோக்கியத்தை பராமரிக்க ஏற்றதாகும்.
#3 காரை பிரஸ்ஸர் வாஷ் செய்யலாமா ?
நாங்கள் டியாகோ -வை அருகிலுள்ள பிரஷர் வாஷிங் சென்டருக்கு அடிக்கடி எடுத்துச் சென்றோம். காரணம் உங்கள் EV -யை வாளி மற்றும் துணியால் எப்போதும் கவனமாக சுத்தம் செய்ய உங்களுக்கு நேரம் கிடைப்பது சாத்தியமில்லை.
ஆகவே பிரஷர் வாஷிங் வாகனத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. பானெட்டின் கீழ் பிரஷர் வாஷ், மற்றும் சார்ஜிங் ஃபிளாப் ஆகியவற்றிற்கு அடியில் பிரஷர் வாஷ் செய்யாமல் இருக்க பணியாளர்களிடம் முன்னரே எச்சரிக்கை செய்ய வேண்டும். காரின் அடிப்பகுதியில் நேரடியாக அழுத்தம் கொடுப்பது கண்டிப்பாக செய்யவே கூடாத ஒன்று.
உட்புறத்தைப் பொறுத்த வரையில் எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. இன்ட்டீரியர் வழக்கமான பெட்ரோல்-பவர்டு டியாகோ போலவே உள்ளது. ஆகவே அதே முறையில் சுத்தம் செய்யலாம்.
டியாகோ EV உடன் கடந்த மாதத்திற்குள் நுழைகிறோம். பயன்பாடு பெரும்பாலும் ஆங்காங்கே இருந்தாலும், டியாகோ EV நகரத்துக்கான காராக அதன் மதிப்பை நிரூபிக்க நிறைய செய்துள்ளது. அடுத்த அறிக்கையில் - எதை சிறப்பாக செய்திருக்கலாம் என்பதை பார்க்கலாம் .
நேர்மறை விஷயங்கள்: காம்பேக்ட் அளவு, மிகவும் கூலிங் தரக்கூடிய ஏசி, யூகிக்கக்கூடிய 200 கி.மீ ரேஞ்ச்
எதிர்மறை விஷயங்கள்: வெள்ளை உட்புறம் எளிதில் அழுக்காகி விடும்
பெறப்பட்ட தேதி: அக்டோபர் 26, 2023
பெறப்படும் போது கார் ஓடியிருந்த தூரம்: 2800 கி.மீ
இதுவரை கார் ஓடிய தூரம்: 3600 கி.மீ