MG Comet: லாங் டேர்ம் அறிக்கை (1,500 கி.மீ அப்டேட்)
Published On ஆகஸ்ட் 05, 2024 By ujjawall for எம்ஜி comet ev
- 1 View
- Write a comment
MG காமெட் ஒரு சிட்டி டிரைவிங்கிற்கான சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால் ஒரு சில குறைபாடுகளும் இருக்கின்றன.
எம்ஜி காமெட், உண்மையில் இது உலகத்திற்கு வெளியே இருக்கும் ஒரு பொருளின் பெயர் மட்டுமல்ல காரின் முழு அனுபவமும் கூட அது போலவே இருக்கிறது. இது இந்தியாவில் உள்ள வேறு எந்த கார்களை போன்றதும் கிடையாது. மூன்று மாதங்களுக்கும் மேலாக எனது தினசரி பயணங்கள் மற்றும் சில குறுகிய சாலைப் பயணங்களிலும் இந்த காரை நான் பெரும்பாலும் அனுபவித்து ஓட்டி வருகிறேன். ஆனால் காமெட் உடன் எனக்கு சில குறைகளும் உள்ளன.
அளவு சிறியது, கதவுகள் பெரியது
2974 மி.மீ நீளம் என்ற அளவில் MG காமெட் நகரத்துக்கு ஏற்றதாக உள்ளது. நகரத்தில் காமெட் பற்றிய எனது அனுபவத்தை முதல் நீண்ட கால அறிக்கை கொடுத்திருந்தேன். அந்த கணிப்பு இன்னும் உண்மையாகவே உள்ளது. ஆனால் இப்போது அதனுடன் ஒரு எச்சரிக்கை இப்போது இணைக்கப்பட்டுள்ளது.
நீங்கள் வடிவமைப்பு தொடர்பான விஷயத்தில் சாமர்த்தியம் பெற்றிருந்தால் காமெட் பெரிய கதவுகளைக் கொண்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அது ஒரு காருக்கு மட்டும் அதன் அளவு இல்லை. அதன் கச்சிதமான பரிமாணங்களைக் கருத்தில் கொண்டு வழக்கத்தை விட இறுக்கமான இடங்களில் அதைத் திருப்புவது கொஞ்சம் சிக்கலானது. பார்க்கிங் செய்யும் போது அது ஒரு பிரச்சனையாக இருக்காது ஆனால் அதன் பின்னர் காருக்கு உள்ளே, வெளியே செல்வது கொஞ்சம் சிக்கலானது.
வழக்கமான கார்களில் நீங்கள் வெளியில் வருவதற்கு நிச்சயமாக போராடுவீர்கள், ஆனால் இறுதியில் உங்கள் வழியைக் கண்டடைந்து விடுவீர்கள் (பெரும்பாலான சந்தர்ப்பங்களில்). ஆனால் காமெட் காரில் அதற்கான சாத்தியமில்லை. பிரமாண்டமான கதவுகள் என்பதால் அழுத்தக்கூடிய வகையில் இடைவெளியை குறைக்க காரணமாகின்றன. மேலும் இருக்கைகள் கூட வழக்கத்தை விட சற்று முன்னால் வைக்கப்பட்டுள்ளன. இது போன்ற காரணங்களால் மிகவும் இறுக்கமான இடத்தில் காமெட் உள்ளேயும் வெளியேயும் வருவதற்கான வழிகளை உங்களால் கண்டறிய முடியாது.
இதற்கு தீர்வு என்ன ? நீங்கள் எந்த இடைவெளியையும் விடாமல் ஒரு பக்கத்திற்கு மிக நெருக்காமாக நிறுத்துங்கள். இப்போது அதன் எதிர் பக்கத்திலிருந்து கீழே இறங்குங்கள். எனவே நீங்கள் பயணிகள் பக்கத்திலிருந்து கீழே இறங்க வேண்டியிருந்தாலும் கூட அது உண்மையில் மிகவும் எளிதானது. ஓட்டுநருக்கும் பயணிக்கும் இடையே இருக்கும் மைய இடைவெளி அதற்கு உதவும். அல்லது சற்று பெரிய இடத்தை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதைத் தவிர வேறு வழியில்லை.
நடைமுறைக்கு ஏற்றதுதான்… ஆனால் இது போதாது
நகரத்துக்கு ஏற்றதாக இருக்கும் ஒரு காரை பொறுத்தவரை MG காமெட் நடைமுறையில் கொஞ்சம் குறைவாகவே உள்ளது. 1-லிட்டர் பாட்டில்கள் மற்றும் துடைக்கும் துணி அல்லது சன்கிளாஸ் கவர் போன்ற பிற பொருட்களைச் வைப்பதற்காக பயன்படுத்தக்கூடிய டோர் பாக்கெட்டுகள் கிடைக்கும். இது மடிக்கணினி ஸ்லீவை சேமிக்கும் அளவுக்கு பெரியது. இது நன்றாகவும் இருக்கிறது.
உங்கள் பானங்களை வைக்க இரண்டு கப் ஹோல்டர்கள் உள்ளன. ஆனால் அவை இருக்கும் இடம் ஏசி வென்ட்களுக்கு முன்னால் உள்ளது. ஆகவே நீங்கள் குளிர்பானம் அருந்தினால் எல்லாம் நன்றாக இருக்கும், ஆனால் சூடான சாக்லேட் அல்லது தேநீர் அருந்தினால் அது சீக்கிரம் வெப்பத்தை இழக்கும்...
அதுமட்டுமின்றி டாஷ்போர்டின் கீழே ஒரு நீண்ட ஸ்லாப் உள்ளது. இது உங்கள் சாதனங்கள், பர்ஸ் மற்றும் பொருட்களை வைக்கப் பயன்படும். ஆனால் அடித்தளத்தில் உராய்வு பொருள் எதுவும் இல்லாததால் அவை இடம்மாறிக் கொண்டே இருக்கின்றன. உங்கள் மொபைல் அல்லது பர்ஸை டோர் ஆர்ம்ரெஸ்டில் வைத்திருப்பதுதான் இங்கே இருக்கும் ஒரு சிறந்த வழி.
பைகளை வைக்க இரண்டு ஹீக்ஸ் (0.5 கிலோ பேலோட்) கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை எப்போதும் பயன்படுத்த முடியாது. மேலும் வாகனம் ஓட்டும் போது பைகள் அசைகின்றன மற்றும் தொடர்ந்து உங்கள் காலில் அடிபடுகின்றன இது ஒரு கட்டத்திற்குப் பிறகு எரிச்சலூட்டும். ஒரு க்ளோவ் பாக்ஸ் அல்லது மூடிய சேமிப்பு இடம் நிச்சயமாக காமெட் காரின் அறைக்கு ஒரு பெரிய ஆகும். மேலும் பின்பக்க பயணிகளுக்கு கூட எந்த ஸ்டோரேஜ் இடமும் இல்லை.
சார்ஜிங்கைப் பொறுத்தவரை காமெட் காரில் 3 USB டைப் போர்ட்கள் உள்ளன. அவற்றில் ஒன்று IRVM (டாஷ்கேம்களுக்கு) மற்றும் 12 V சாக்கெட்டின் அடிப்பகுதியில் உள்ளது. இருப்பினும் 2024 ஆண்டில் ஒரு காரில் டைப்-சி போர்ட்கள் இல்லாதது ஒரு குறையே!
காரிலுள்ள சிறிய குறைகள்
நான் காமெட்டின் 10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை விரும்புகிறேன். ஆனால் அதை மிகச்சரியாக பயன்படுத்துவது ஒரு எளிய விஷயம்: ஒரு வால்யூம் நாம். டீல் பிரேக்கராக இல்லாவிட்டாலும் கூட பயணிகள் நிச்சயம் பாராட்டும் ஒன்று. ஆண்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார்ப்ளே செயலில் இருக்கும் போது பயணிகளால் ஒலியின் அளவை கட்டுப்படுத்த முடியாது.
காமெட் இரண்டு இருக்கைகள் கொண்டதாகப் பயன்படுத்தப்படலாம் என்பதால் முன்பக்க பயணிகளுக்கு வாழ்க்கையை வசதியாக மாற்ற சில விஷயங்களைச் செய்திருக்கலாம். உதாரணமாக இருக்கை தளம் சற்று குறுகியதாக உணர்வை கொடுக்கிறது. இதன் விளைவாக தொடையின் கீழ் சப்போர்ட் நன்றாக இல்லை. மேலும் சற்று நீண்ட பயணங்களில் சோர்வு ஏற்படுகிறது.
MG பயணிகளுக்கு சீட் பெல்ட் ஸ்டாப்பரையும் வழங்கியிருக்கலாம். தற்போது அவர்கள் சீட் பெல்ட்டை அணுகுவதற்கு அதிகமாக நீட்ட வேண்டியிருக்கும். இது எளிதாக அணுகுவதற்கு சற்று தொலைவில் அமைந்துள்ளது.
இவை காமெட் உடன் பயணம் செய்த போது எனக்கு தோன்றிய சில குறைகள். ஆனால் இவை நிச்சயமாக இந்த காரை வாங்கும் முடிவை தடுப்பவை அல்ல. அதே சமயம் நீங்கள் ஒன்றை வீட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டால் மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை. இது இன்னும் ஒரு சிறந்த நகர்ப்புறத்துக்கான காராகவே காமெட் இருக்கிறது கூடுதல் தகவல்களை இங்கே நீங்கள் 1000கிமீ அப்டேட்டை தெரிந்து கொள்ளலாம். இந்த அறிக்கை காமெட் உடன் பயணம் செய்வதை பற்றிய நுண்ணறிவை உங்களுக்கு வழங்கும். அடுத்த அறிக்கையில் எம்ஜி வந்து இந்த காரை திரும்பப் பெறுவதற்கு முன், அதன் அனுபவத்தைச் சுருக்கமாக தெரிவிக்கிறோம்!
நேர்மறை விஷயங்கள்: அளவு, வடிவமைப்பு, அம்சங்கள், நகரத்தில் பயன்படுத்த எளிதானது
எதிர்மறை விஷயங்கள்: குறைவான நடைமுறை விஷயங்கள், இருக்கை வசதி சிறப்பாக இருந்திருக்க வேண்டும்.
காரை பெற்ற தேதி: ஜனவரி 2, 2024
கார் பெறப்பட்ட போது ஓடியிருந்த கிலோ மீட்டர்கள்: 30 கி.மீ
இதுவரை ஓடிய கிலோமீட்டர்கள்: 1500 கிமீ