• English
  • Login / Register

Citroen eC3 ரிவ்யூ: இந்தியாவில் சிட்ரோனின் மின்மயமாக்கப்பட்ட நகர்வு

Published On மார்ச் 22, 2024 By shreyash for சிட்ரோய்ன் ec3

  • 1 View
  • Write a comment

C3 -யின் எலக்ட்ரிக் பதிப்பிற்கு சுமார் ரூ. 4.5 லட்சம் கூடுதலாக செலுத்துவது நியாயமானதுதானா ? அதை நாம் கண்டுபிடிக்கலாம்.

இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் (ICE) காரை இயக்குவதற்கான செலவு ஒவ்வொரு கி.மீ.க்கும் எத்தனை லிட்டர் பயன்படுத்துகிறது என்பதை மட்டும் கணக்கிடப்படுவதில்லை. மேலும் ஒரு கிலோமீட்டருக்கு எவ்வளவு மாசு வெளியாகின்றது என்பதும் கணக்கில் கொள்ளப்படுகின்றது. சமீபகாலமாக மாசு வெளியீட்டு தரநிலைகள் கடுமையாகி வருகின்றன. பெட்ரோல் விலையும் உயர்ந்து வருகின்றது. மேலும் EV -கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் வாடிக்கையாளர்களை புதிதாக EV -யை வாங்க ஊக்குவிக்கிறது. நீங்கள் ஒரு ஹேட்ச்பேக்கை வாங்க விரும்பினால் சில என்ட்ரி லெவல் EV சந்தையில் இருக்கின்றன. அந்த கார்களில் ஒன்று சிட்ரோன் eC3. மூன்று அல்லது நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு அதன் போட்டியாளர்களை விட விட இது ஏற்றதாக இருக்குமா ? நாம் இங்கே கண்டுபிடிக்கலாம்.

தோற்றம்

எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் ஒரு வகையில் இது C3 -யா அல்லது eC3 என்பதை சொல்வதற்கு சற்று கடினமான ஒன்றாக இருக்கும். பின்பக்கத்திலும் பக்கவாட்டிலும் சில பேட்ஜ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. டிரைவரின் பக்கத்தில் உள்ள முன் ஃபெண்டரில் சார்ஜிங் ஃபிளாப் வழங்கப்பட்டுள்ளது. இது மின்சாரத்தின் எலக்ட்ரான்களில் இயங்குகிறது மாறாக பெட்ரோலின் ஆக்டேன்களில் இயங்கவில்லை என்பதைக் குறிக்கிறது. சிட்ரோன் இந்த விஷயத்தில் இன்னும் கொஞ்சம் அதிகமாகச் செய்திருக்க முடியும். குறைந்தபட்சம் ஒரு புதிய கிரில் பேனல்கள் அல்லது குறைந்தபட்சம் ஒரு புதிய பேட்ஜை -யாவது ஸ்டாண்டர்டான C3 -யிலிருந்து வேறுபடுத்துவதற்கு கொடுத்திருக்க வேண்டும், குறிப்பாக கூடுதலாக பணம் கொடுக்கும் போது.

eC3 ஒரு முரட்டுத்தனமான தோற்றத்தைப் பெறுகிறது. ஆல் பாடி கிளாடிங் மற்றும் ரூஃப் ரெயில்கள் கொடுக்கப்பட்டிருப்பதுதான் அதற்கு காரணம். 170மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட 15-இன்ச் அலாய் வீல்களில் நிற்கும் அதன் நிமிர்ந்த தோற்றம் அதன் எஸ்யூவி போன்ற தோற்றத்துக்கு நெருக்கமாக இருக்கின்றது. இருப்பினும் ஃப்ளாப்-ஸ்டைல் டோர் ஹேண்டில்கள் மற்றும் ஃபெண்டரில் பொருத்தப்பட்ட இண்டிகேட்டர்கள் போன்ற சில எலமென்ட்கள் தற்போது நவீன ஹேட்ச்பேக்குகளில் இல்லை. மேலும் இந்த நாட்களில் EV -கள் வழக்கமாக கொண்டிருக்கும் விஷயங்கள் இதில் இல்லை. அது உங்களுக்கு தொல்லையாக இருக்குமா இல்லையா என்பதை ? கீழே உள்ள கமெண்ட் பகுதியில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

இன்ட்டீரியர் தரம் பிட் & ஃபினிஷ்

உள்ளே இருந்து eC3 -ன் கேபினும் C3 ஹேட்ச்பேக்கை போலவே உள்ளது. டாஷ்போர்டில் புள்ளியிடப்பட்ட பேட்டர்ன் வென்ட்களின் வடிவமைப்பு கான்ட்ராஸ்ட் கலர் டோர் பாக்கெட்டுகள் மற்றும் eC3 -யில் உள்ள ஃப்ளோர் மேட்ஸ் போன்ற எலமென்ட்கள் நவீனமாக தோற்றமளிக்கின்றன. சிட்ரோன் ஒரு கிரே அல்லது ஆரஞ்சு கலரை மையமாக வைத்து டாஷ்போர்டின் ஆப்ஷனை வழங்குகிறது.

இவை அனைத்தும் ஃபன் மற்றும் ஸ்டைலான எலமென்ட்களை விரும்புவோருக்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் தரத்தை முதலில் விரும்புவோருக்கு eC3 -யின் கேபின் விரும்பத்தக்கதாக ஒன்றாக இருக்கும். ஆனால் கேபினுக்குள் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். மேலும் சில பகுதிகளில் மடிப்புகள் ஒரே மாதிரியாக இருந்திருக்கலாம். நேர்மறையான பக்கத்தில் eC3 -யின் இருக்கை நிலை அதிகமாக உள்ளது. இது உங்களுக்கு நல்ல ஒட்டுமொத்த சாலை தோற்றத்தையும்  எனவே வாகனம் ஓட்டும்போது நம்பிக்கையையும் தருகிறது. இது புதிய ஓட்டுனர்களுக்கு கூட இறுக்கமான போக்குவரத்து சூழ்நிலைகளில் காரை கையாளுவதை எளிதாக்குகிறது.

நடைமுறை

Citroen eC3 door pockets

நடைமுறைக்கு வரும்போது ​​அனைத்து டோர் பாக்கெட்டுகளிலும் 1-லிட்டர் தண்ணீர் பாட்டில்களை வைக்க முடியும். சென்டர் கன்சோலில் கப் ஹோல்டர்கள், வாலட், ஸ்மார்ட்போன் மற்றும் பிற பொருட்களை வைக்க ஒரு பெரிய ஸ்டோரேஜ் மற்றும் ஏசி கன்ட்ரோல்களுக்கு கீழே ஒரு ஷெல்ஃப் ஆகியவை உள்ளன. ஹேண்ட்பிரேக்கின் கீழ் சிறிது இடமும் உள்ளது அதன் பின்னால் மற்றொரு பாட்டில் ஹோல்டரை பெறுவீர்கள். இருப்பினும் பின்புற பவர் விண்டோ கன்ட்ரோல் பாட்டில் ஹோல்டருக்கு முன்னால் அமைந்துள்ளன ஒரு பெரிய 1-லிட்டர் பாட்டில் வைக்கப்படும் போது பயணிகளுக்கு ஸ்விட்ச்களை அணுகுவது கடினமாக இருக்கும்.

eC3 -யின் கேபினில் மூன்று USB சார்ஜிங் போர்ட்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒன்று முன்பக்கமும் இரண்டு பின்புறமும். முன்பக்க பயணிகளுக்கு 12V பவர் சாக்கெட் உள்ளது. இருப்பினும் இந்த விலையில் இருந்திருக்கக்கூடிய வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் டைப்-சி போர்ட் ஆகியவற்றுக்காக ஆப்ஷன் இல்லை.

வசதிகள்

eC3 -ன் வசதிகளின் பட்டியல் EV விலை நிர்ணயம் செய்யப்பட்ட விதத்தில் எந்த நியாயத்தையும் செய்யவில்லை. இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டை தவிர ஃபேப்ரிக் சீட் அப்ஹோல்ஸ்டரி மேனுவல் ஏசி மற்றும் ORVM -களுக்கான மேனுவல் அட்ஜஸ்ட்மெண்ட்கள் ஆகியவற்றுக்கு சுமார் ரூ. 13 லட்சம் செலவு செய்ய வேண்டியிருக்கும். இவை எலக்ட்ரிக் காரின் டாப்-எண்ட் பதிப்பிற்கு மிகவும் அடிப்படையானவை.

10.2-இன்ச் டச் ஸ்கிரீன் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்கின்றது. இருப்பினும் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே சில நேரங்களில் திடீரென துண்டிக்கப்படும் மேலும் காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் புளூடூத் சாதனங்களைச் சேர்க்கும்போதும் அகற்றும்போதும் சிக்கல் ஏற்பட்டது. எதிர்காலத்தில் சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் இந்த குறைகள் எளிதான சரி செய்யப்படக்கூடிய ஒன்று. ஸ்கிரீனின் டச் ரெஸ்பான்ஸ் மென்மையானது, ரெஸ்பான்ஸ் நேரம் சிறப்பாகவே உள்ளது. மேலும் நீங்கள் முதன்முறையாக இதைப் பயன்படுத்தினாலும் யூஸர் இன்டஃபேஸ் புரிந்துகொள்வது எளிதாகவே இருக்கும்.

இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக இல்லை. இது பேட்டரி சதவீதம் வரம்பு பயணம் A மற்றும் B மற்றும் சார்ஜிங் விவரங்கள் போன்ற அடிப்படைத் தகவலைக் காட்டுகிறது. ஆனால் இந்தத் தகவல்கள் அனைத்தும் தனித் ஸ்கிரீன்களில் காட்டப்படும். மேலும் இந்த அளவீடுகள் ஒவ்வொன்றையும் பார்க்க டிரைவர் வெவ்வேறு மோடுக்கு மாற வேண்டும். சிட்ரோன் ஒரு சிறந்த MID -யை கொடுத்திருந்தால் இங்கே ஒரு சிறப்பாக செய்திருக்க முடியும். இதனால் ஒரு ஸ்கிரீனில் கூடுதல் தகவல்களை காண்பித்திருக்க முடியும்.

eC3 4-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டத்துடன் வருகிறது. இது சாதாரண ஒலியளவில் எந்த பிரச்சனையும் ஏற்படுத்தாது; ஆனால் ஒலி அளவு அதிகரிக்கும் போது ​​ஆடியோ கொஞ்சம் சிதைந்ததை போல ஒலிக்கின்றது. டிரைவர் சீட் -க்கான உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி மற்றும் ரிக்ளைன் அட்ஜஸ்ட்டபிள் ஸ்டீயரிங் ஆகிய வசதிகளும் உள்ளன.

ஆனால் இந்த காரில் விடுபட்டுள்ள வசதிகளின் பட்டியல் நீளமானது. கீலெஸ் என்ட்ரி, ரியர் கேமரா. க்ரூஸ் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஏசி, லெதரால் மூடப்பட்ட ஸ்டீயரிங் மற்றும் ஆட்டோமெட்டிக் ஹெட்லேம்ப்கள் ஆகியவை கொடுக்கும் பணத்துக்கான மதிப்பை உணர உதவியிருக்கும்.

இடம் மற்றும் பின் இருக்கை வசதி

சிட்ரோன் குறைந்தபட்சமாக இந்தத் துறையில் எந்த சமரசமும் செய்யவில்லை. ஏனெனில் eC3 பின்புறத்தில் இரண்டு நபர்களுக்கு நல்ல இடத்தை வழங்குகிறது. ஒரு சராசரி இந்திய உயரத்திற்கு ஹெட்ரூம் மற்றும் லெக்ரூம் போதுமானது. மேலும் அந்த நபர் கேபினுக்குள் அடைபட்டிருப்பதை போல உணர மாட்டார். ஏனெனில் பெரிய கண்ணாடி கேபினை காற்றோட்டமாக உணர வைக்கிறது. மேலும் குறிப்பிட்டுள்ளபடி ஸ்மார்ட்போன்களை ஜூஸாக வைத்திருக்க இரண்டு USB சார்ஜர்களை பெறுவீர்கள்.

பின்புற கோணம் தளர்வானது மற்றும் குஷனிங் மிருதுவானது சாதாரண நகரப் பயணங்களை இனிமையாக்குகிறது. இருப்பினும் அட்ஜஸ்ட்டபிள் ஹெட்ரெஸ்ட் மற்றும் ஆர்ம்ரெஸ்ட் இல்லாதது பெரிய குறையாக தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக கம்ஃபோர்ட் லெவல் திருப்திகரமாக உள்ளன; இருப்பினும் சிட்ரோன் இந்த சிறிய விவரங்களைத் தியாகம் செய்யாமல் அவற்றை மேம்படுத்தியிருக்கலாம்.

பூட் ஸ்பேஸ்

eC3 boot space with all rows up
eC3 boot space with seats folded

eC3 ஆனது 315 லிட்டர் பூட் ஸ்பேஸை வழங்குகிறது. இது மீண்டும் C3 -யை போலவே உள்ளது. இதன் போட்டியாளர்களை போல இல்லாமல் சிட்ரோன் எண்களில் சமரசம் செய்யாமல் eC3 உடன் முழு அளவிலான ஸ்பேர் சக்கரத்தையும் வழங்குகிறது. கூடுதல் கேபின் இடம் தேவைப்பட்டால் பின் இருக்கைகளையும் மடிக்கலாம். பெரிய சூட்கேஸ்களை உள்ளே எளிதாக தங்க வைக்க உதவும் பிளாட் பூட் ஃப்ளோர் வசதி உதவியாக இருக்கின்றது.

ரேஞ்ச் மற்றும் சார்ஜிங் நேரம்

eC3 நகரத்தில் 232 கி.மீ தூரம் ஓடி இறுதியாக நின்றது. இது கிளைம்டு ரேஞ்சை விட 82 கிமீ குறைவாக நாங்கள் எதிர்பார்த்த இடத்தில் உள்ளது. இருப்பினும் இறுதியில் நாங்கள் சந்தித்த ஒரு சிக்கல் என்னவென்றால் கார் நகர மறுத்தபோது ​​காரின் MID ஆனது 1 சதவிகிதம் சார்ஜில் 5 கிலோமீட்டர் தூரத்தை இன்னும் காட்டிக் கொண்டிருந்தது. மற்ற EV -களுடன் எங்களின் அனுபவத்தில் பேட்டரி ஆற்றல் என்பது பூஜ்ஜிய சதவீதத்தை அடைந்த பிறகும் அவசரகாலச் சூழ்நிலைகளுக்கு இன்னும் கொஞ்சம் தூரம் செல்லும் வகையில் இருக்கின்றது.

eC3 உள்நாட்டு மற்றும் DC ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன்களை சப்போர்ட் செய்கின்றது. 15A ஹோம் சார்ஜரில் இன்செர்ட் செய்யப்படும் போது பேட்டரி 10 முதல் 80 சதவிகிதம் வரை எட்டுவதற்கு 8 மணிநேரம் தேவைப்படும். DC ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டை பற்றி பேசுகையில் eC3 ஐ 120kW DC ஃபாஸ்ட் சார்ஜரில் சோதித்துள்ளோம். விரிவான முடிவை நீங்கள் இங்கே பார்க்கலாம்.

நகர டிரைவ்

எலக்ட்ரிக் C3 -யை ஸ்டார்ட் செய்வது என்பது ICE இன்ஜினை ஸ்டார்ட் செய்வதை போலவே உள்ளது. நீங்கள் இந்த காரை உயிர்ப்பிக்க கீயை இன்செர்ட் செய்யவும். குறைந்தபட்சம் eC3 -யின் டாப்-எண்ட் வேரியன்ட் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் அம்சத்துடன் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இது டிரைவ் ரிவர்ஸ் மற்றும் நியூட்ரல் இடையே மாற்ற ஒரு டிரைவ் செலக்டரை கொண்டுள்ளது. மேலும் செயல்முறை மிகவும் மெதுவாக இருக்கும். டிரைவிலிருந்து தலைகீழாக மாறுவதற்கு நேரம் எடுக்கும் எனவே நகர போக்குவரத்தில் விரைவான U-டேர்ன்களை எடுப்பது மிகவும் கடினம். மேலும் சாய்வுகளில் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் இல்லை என்பதால் அதற்கு பதிலாக ஹேண்ட்பிரேக்கை பயன்படுத்துவது அவசியமாகின்றது.

சிட்ரோன் -காரின் எலக்ட்ரிக் ஹேட்ச்பேக்கில் 29.2kWh பேட்டரி பேக் உள்ளது. இது காகிதத்தில் 320km என்று ARAI கிளைம் செய்துள்ளது. இந்த யூனிட் 57PS மற்றும் 143Nm அவுட்புட் கொண்ட எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளது. குறைவானதை போல தெரிகின்றது இல்லையா? இருப்பினும் கிளைம் செய்யப்பட்டுள்ள 143Nm டார்க் ஆரம்பத்திலிருந்தே கிடைக்கிறது. மேலும் இது ஓட்டுவதற்கு வியக்கத்தக்க வகையில் உயிருடன் இருப்பதாக உணர்கிறது. பெடல் ரெஸ்பான்ஸ் விரைவானது குறிப்பாக 20-50 கிமீ/மணி அல்லது 30-60கிமீ/மணி இடையே வேகமானது. இது போக்குவரத்தில் முந்திச் செல்வதை எளிதாக்குகிறது. எனவே இது நிச்சயமாக நகரப் பயணங்களைச் செய்வதற்கான விரைவான கார் ஆகும்.

நகரத்தில் விரைவாக உணர்ந்தாலும் eC3 ஆனது C3 ஐ விட 100 கிமீ/மணி வேகம் குறைவாக உள்ளது. ஏனெனில் இது மணிக்கு 60 கி.மீ வேகத்தில் வேகத்தைக் குறைத்து 100 கிமீ வேகத்தை எட்ட இன்னும் 10 வினாடிகள் ஆகும். இதனால்தான் நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டுவது குறைந்த சுறுசுறுப்பாக இருக்கிறது. குறிப்பிட தேவையில்லை என்றாலும் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 102 கிமீ வேகமாக உள்ளது..

eC3 இரண்டு டிரைவிங் மோட்களில் இயக்கப்படலாம் - நார்மல் மற்றும் இகோ - இதை ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் மாற்றப்படலாம். மீண்டும் டிரைவ் மோடுகளை மாற்றினால் ஆக்ஸிலரேட்டர் பெடலில் இருந்து உங்கள் பாதத்தை எடுக்க வேண்டும் இது தேவையில்லாததாக ஒன்றாக இருக்கின்றது. இகோ மோடு நல்ல டிரைவிபிலிட்டியை தொடர்ந்து கொடுத்தது. ஆனால் பேட்டரியின் விரைவாக காலியானதை தடுக்க த்ரோட்டில் பதிலை குறைக்கின்றது. நீங்கள் அவசரமாக இருக்கும்போது அல்லது நெடுஞ்சாலையில் இருக்கும்போது மட்டுமே நார்மல் மோடு தேவைப்படும்.

சிட்ரோனுக்கு இது போதுமா?

eC3 -யின் சஸ்பென்ஷன் சிஸ்டம் நகரத்தில் உள்ள சாலை குறைபாடுகளை எளிதில் சமாளிக்கின்றது. ஸ்பீட் பிரேக்கர்கள் மற்றும் பள்ளங்கள் வசதியாக கையாளப்படுகின்றன. அதிக வேகத்தில் கூட நிலைத்தன்மை உங்களை நம்பிக்கையுடன் வைத்திருக்கும். இருப்பினும் ஒரு பிடிப்பு உள்ளது. சிட்ரோன் கார்கள் உலகம் முழுவதும் சிறந்த சவாரி தரம் கொண்டதாக அறியப்படுகின்றன. இந்தியாவிலும் C5 ஏர்கிராஸ் காரிலும் இதைப் பார்க்க முடிந்தது. நாங்கள் எந்த ஒப்பீடும் செய்யவில்லை ஆனால் eC3 கார் சிட்ரோன் போன்ற ஒரு பிராண்டில் இருந்து வருவதால் அது சிரப்பான சவாரி வசதியைக் கொண்டிருக்கும் அல்லது போட்டியாளர்களை விட மிகச் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்.

விலை & வேரியன்ட்கள்

eC3 தற்போது லைவ் மற்றும் ஃபீல் என இரண்டு வேரியன்ட்களில் மட்டுமே வழங்கப்படுகிறது - விலை ரூ. 11.50 லட்சம் முதல் ரூ.12.76 லட்சம் வரை உள்ளது. eC3 போட்டியாளராக டாடா டியாகோ EV இருக்கின்றது. எம்ஜி காமெட் இவி  -க்கு பெரிய மற்றும் சற்று விலை அதிகமான மாற்றாக இது இருக்கும்.

தீர்ப்பு

eC3 நல்ல அளவிலான இடவசதி மற்றும் நடைமுறைத் திறன் கொண்ட ஒரு நல்ல தோற்றமுடைய எலக்ட்ரிக் ஹேட்ச்பேக் ஆகும். சிறப்பம்சமாக நிச்சயமாக நகர எல்லைக்குள் சிரமமின்றி டிரைவிங் செய்யலாம். டிரைவிங் ரேஞ்ச் நகர பயன்பாட்டிற்கு நல்லது; மற்றும் அதன் போட்டியாளர்களை போல இல்லாமல் இது சமரசம் செய்யப்படாத பூட் ஸ்பேஸை வழங்குகிறது.

இருப்பினும் கேபினுக்குள் இருக்கும் பொருட்களின் தரம் ,டிரைவிங்கில் உள்ள சில சிக்கல்கள் போன்ற பல விஷயங்களை சிட்ரோன் தவறவிட்டு விட்டது. மிக முக்கியமாக -- இல்லாத வசதிகளின் பட்டியலை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். டியாகோ EV போன்ற போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் இவ்வளவு அதிக விலையில் அதிகமான வசதிகள் விடுபட்டிருப்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

எனவே ஒரு கேள்வி எழலாம், யார் சிட்ரோன்  eC3 காரை வாங்க வேண்டும்? பெட்ரோல் கார்களுடன் ஒப்பிடும்போது ​​தினசரி நகரப் பயணத்தை மிகக் குறைந்த விலையில் மேற்கெள்ள விரும்பும் நபரா நீங்கள். மேலும் வசதிகள் மற்றும் தோற்றத்தை விட இடம் மற்றும் நடைமுறைக்கு முன்னுரிமை அளித்தால் உங்களுக்கு ஒரு eC3 சிறந்த தேர்வாக இருக்கும்.

Published by
shreyash

சமீபத்திய ஹேட்ச்பேக் கார்கள்

வரவிருக்கும் கார்கள்

  • ரெனால்ட் க்விட் இவி
    ரெனால்ட் க்விட் இவி
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • எம்ஜி 3
    எம்ஜி 3
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
  • க்யா syros
    க்யா syros
    Rs.9 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025

சமீபத்திய ஹேட்ச்பேக் கார்கள்

×
We need your சிட்டி to customize your experience