• English
    • Login / Register

    ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது VinFast VF 6

    vinfast vf6 க்காக ஜனவரி 18, 2025 10:38 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 33 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    VF 6 ஒரு ஃபிரன்ட்-வீல் டிரைவ் (FWD) கொண்ட எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். இது 399 கி.மீ வரை WLTP கிளைம்டு ரேஞ்ச் உடன் வருகிறது.

    • வின்ஃபாஸ்ட் VF 6 நேர்த்தியான மற்றும் அதிநவீன வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

    • VF 6 எலக்ட்ரிக் எஸ்யூவி -யில் மற்றும் 5 பேர் வரை பயணிக்கலாம்.

    • 59.6 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. WLTP கிளைம்டு ரேஞ்ச் 410 கி.மீ வரை உள்ளது.

    • இது செப்டம்பரில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம். இதன் விலை ரூ. 35 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வின்ஃபாஸ்ட் VF 6 ஆனது பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 மூலமாக இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இந்த வியட்நாமிய காம்பாக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி ஒரு நேர்த்தியான மற்றும் அதிநவீனமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது ஃபிரன்ட்-வீல் டிரைவ் (FWD) அமைப்பில் வருகிறது. 399 கி.மீ வரையில் WLTP கிளைம்டு ரேஞ்சை வழங்குகிறது. VF 6 எலக்ட்ரிக் எஸ்யூவி எப்படி இருக்கிறது மற்றும் அதில் என்ன கிடைக்கும் என்பதை இங்கே பார்க்கலாம்.

    அதிநவீனமான வடிவமைப்பு

    VinFast VF 6 Rear

    விஎஃப் 6 காம்பாக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி அதிநவீனமான வடிவமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கம் இது ஒரு முழு அகலத்துக்கும் முழுமையான் LED DRL -களையும் DRL களுக்கு கீழே நிலைநிறுத்தப்பட்ட ஹெட்லைட் ஹவுசிங்கையும் கொண்டுள்ளது. சார்ஜிங் ஃபிளாப் டிரைவரின் பக்க ஃபெண்டரில் உள்ளது. அதே நேரத்தில் அலாய் வீல்கள் டூயல்-டோன் ஃபினிஷிங் ஸ்டைலாக இருக்கும். பின்புறம் முழு அகலத்துக்கும் எல்இடி டெயில் லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது முன்பக்கத்தில் உள்ள டிஆர்எல்களை போலவே இருக்கிறது.

    சிறப்பான வசதிகளை கொண்ட இன்ட்டீரியர்

    காரின் உட்புறம் அதன் டார்க் பிரெளவுன் மற்றும் பிளாக் உட்புற தீம் காரணமாக பிரீமியமாகத் தெரிகிறது. டாஷ்போர்டு மற்றும் டோர் பேட்களில் சாஃப்ட் டச்கள் உள்ளன. இது கேபினின் ஒட்டுமொத்த பிரீமியத்தை அதிகரித்து காட்டுகிறது. VF 6 5 இருக்கைகள் கொண்ட கட்டமைப்பில் வருகிறது.

    இது 12.9-இன்ச் டச் ஸ்கிரீன், ஆட்டோ ஏசி, ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. பாதுகாப்பு பல ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -கள் உள்ளன.

    பவர்டிரெய்ன் விவரங்கள்

    சர்வதேச அளவில் இது 59.6 kWh பேட்டரி பேக் உடன் வருகிறது. மற்றும் ஃபிரன்ட்-வீல் டிரைவ் (FWD) கட்டமைப்பில் வருகிறது:

    பேட்டரி பேக்

    59.6 kWh

    59.6 kWh

    WLTP கிளைம்டு ரேஞ்ச்

    410 கி.மீ

    379 கி.மீ

    பவர்

    177 PS

    204 PS

    டார்க்

    250 Nm

    310 Nm

    டிரைவ் டைப்

    ஃபிரன்ட்-வீல் டிரைவ் (FWD)

    ஃபிரன்ட்-வீல் டிரைவ் (FWD)

    ஃபிரன்ட்-வீல் டிரைவ் (FWD)

    எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் வெளியீடு

    வின்ஃபாஸ்ட் VF 6 எலக்ட்ரிக் எஸ்யூவி செப்டம்பர் 2025 -க்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ.35 லட்சத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

    was this article helpful ?

    Write your Comment on VinFast vf6

    explore similar கார்கள்

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

    • பிரபலமானவை
    • உபகமிங்
    ×
    We need your சிட்டி to customize your experience