டொயோட்டா ஃபார்ச்யூனரை, இவ்வளவு பிரபலமாக மாற்றிய காரணங்கள் எவை?
டொயோட்டா ஃபார்ச்சூனர் 2016-2021 க்காக டிசம்பர் 14, 2015 04:09 pm அ ன்று konark ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதுடெல்லி: நமது சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து, பிரிமியம் SUV பிரிவை ஆண்டு வரும் டொயோட்டா ஃபார்ச்யூனர், டொயோட்டாவின் கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ள முத்துப் போல ஜொலிக்கிறது. ‘பெரிய கார்’ என்ற நமது மனப்போக்கு உடன் கச்சிதமாக பொருந்தியுள்ள இந்த SUV-யின் விற்பனை விளக்கப் படங்கள், டொயோட்டாவின் உண்மையான பாணியையும் கடந்து நிற்கின்றன. டொயோட்டாவின் விலை உயர்வு கெடு நெருங்கியுள்ள நிலையில், இந்தாண்டு முடிவதற்குள் ஒரு வாகனத்தை வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது, உண்மையிலேயே ஒரு அறிவுப்பூர்வமான தீர்மானமாக அமையும்.
இதை இவ்வளவு அதிகம் பிரபலப்படுத்தியது எது?
சாலையில் SUV-களுக்கென ஒரு சிறப்பான ஆளுமைத் தன்மை உண்டு. அதிலும் பாடியை சுற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த தடித்த உருவத்தைக் கொண்டு முரட்டுத்தனமாக காட்சியளிக்கும் டொயோட்டா ஃபார்ச்யூனரின் தோற்றமே இதற்கான முக்கிய காரணமாக அமைகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆட்டோமொபைலை குறித்த எந்த காரியங்களும் தெரியாத ஒரு பாமர மனிதனிடம், அவருக்கு பிடித்த கார் எது என்று கேட்டால், ஒரு அதிக இடவசதியைக் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார் அல்லது ஒரு மிகப்பெரிய உருவத்தை கொண்ட ஒரு SUV-யை தான் குறிப்பிடுவார். மேலும் பெரும்பாலான மக்களிடம் காணப்படும் தற்பெருமையின் விளைவாக, ஒரு பெரிய காரை வைத்திருப்பதன் மூலம் மற்றவர்களுக்கு தன் மீதான பயம் ஏற்படும் என்று நம்புகிறார்கள்.
சிறிய கார்களை விட SUV-க்கள் பாதுகாப்பு மிகுந்ததா?
இயற்பியலின் அடிப்படை விதிகளின்படி, சிறிய கட்டமைப்பைக் கொண்ட காரில் பயணிகளுக்கு இடையிலான இடைவெளி குறைவாக இருக்கும் பட்சத்தில், ஒரு சிறிய வாகனத்தை ஓட்டி செல்லும் போது மிகவும் மோசமான காயங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே பெரிய பாடியை கொண்ட கார்கள் எப்படியோ ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்கி தருகின்றன என்றாலும், மற்ற பல காரியங்களையும் கவனிக்க வேண்டியுள்ளது. சிறிய கார்களில் நவீன கால பாதுகாப்பு அம்சங்களான டிராக்ஷன் கன்ட்ரோல், கர்ட்டன் ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி பிரோகிராம், ஆன்டி-லாக் பிரேக்குகள் ஆகியவற்றை பெற்றிருப்பதால், குறைந்த மேம்பட்ட பாதுகாப்பு சாதனங்களுடன் கூடிய ஒரு பழைய SUV-யை விட, இது பாதுகாப்பானதாக உள்ளது.
இந்திய சூழ்நிலைகளுக்கு டொயோட்டா தயாரிப்புகள் மிகவும் ஏற்றவை என்ற பெயரை பெற்றுள்ள நிலையில், மிரட்டும் தோற்றத்தை கொண்ட ஃபார்ச்யூனர் கார், நமது சாலைகளின் ஒரு அஜானபாகுவான நிலையின் வெளிப்பாடாக தெரிகிறது. இந்த 2016 ஃபார்ச்யூனரில் ஒரு 6-ஸ்பீடு இரட்டை கிளெச் டிரான்ஸ்மிஷன் மற்றும் கூடுதல் ஆடம்பர அம்சமான ஒரு பனோராமிக் சன்ரூஃப் ஆகியவற்றை உட்கொண்டிருக்கலாம் என்று நாங்கள் மிகவும் எதிர்பார்க்கிறோம்.
மேலும் வாசிக்க