சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

அறிமுகமானது மெர்சிடிஸ்-Maybach EQS 680 எலக்ட்ரிக் எஸ்யூவி

modified on செப் 05, 2024 05:13 pm by shreyash for மெர்சிடீஸ் மேபேச் eqs

இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி EQ மற்றும் மேபேக் ஃபேமிலியை போல ஸ்டைலிங் எலமென்ட்களை கொண்டுள்ளது. இது இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்துள்ள புதிய ஃபிளாக்ஷிப் EV ஆகும்.

  • மேபேக் சிக்னேச்சர் கிரில் மற்றும் ஈக்யூ-என்பதை குறிப்பிட்டு காட்டும் ஹெட்லைட்கள் ஆகியவற்றை வெளியில் பார்க்க முடிகிறது.

  • உள்ளே இது மேபேக் போன்ற குறிப்பிட்ட டிஸைன் எலமென்ட்களுடன் MBUX ஹைப்பர்ஸ்கிரீன் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.

  • டிரிபிள் ஸ்கிரீன் செட்டப், ஜெஸ்டர் கன்ட்ரோல்கள் மற்றும் நான்கு இருக்கைகளுக்கும் ஹீட்டட் மற்றும் வென்டிலேஷன் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

  • பாதுகாப்புக்காக 11 ஏர்பேக்குகள், 360 டிகிரி மற்றும் லெவல் 2 ADAS ஆகியவை உள்ளன.

  • 122 kWh பேட்டரி பேக் இந்த காரில் உள்ளது மேலும் WLTP கிளைம்டு 611 கிமீ ரேஞ்ச் உடன் வருகிறது.

சர்வதேச அளவில் வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து தற்போது மெர்சிடிஸ்-Maybach EQS 680 எலெக்ட்ரிக் எஸ்யூவி இப்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 2.25 கோடி (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேபேக் EQS 680 என்பது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலும் மெர்சிடிஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது முதல் முழு எலக்ட்ரிக் மேபேக் ஆகும். இந்த ஆடம்பரமான எலெக்ட்ரிக் எஸ்யூவி என்ன வழங்குகிறது என்பதை இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

அதிநவீன மற்றும் நேர்த்தியான தோற்றம்

மேபேக் EQS 680 போன்ற வடிவமைப்பு, EQ (எலெக்ட்ரிக் கார்களுக்கான பெயரிடல்) மற்றும் மேபேக் (கார் தயாரிப்பாளரின் ஆடம்பர மையப்படுத்தப்பட்ட பிரிவு) குடும்பங்களின் ஸ்டைலிங் எலமென்ட்கள் போன்றவற்றை கொண்டுள்ளது. முன்புறத்தில் இது ஒரு சிக்னேச்சர் மேபேக் கிரில்லை கொண்டுள்ளது. இது வெர்டிகல் குரோம் ஸ்லேட்டுகளுடன் கூடிய பெரிய கிளாஸி பிளாக் குளோஸ்டு பேனலாகும். மறுபுறம் ஹெட்லைட்கள் EQ ஃபேமிலியில் இருந்து வந்தவை.

பக்கவாட்டில் இந்த மேபேக் எலக்ட்ரிக் எஸ்யூவி ஸ்டாண்டர்டான EQS எஸ்யூவி போன்றே தோற்றமளிக்கிறது. இருப்பினும் இது ஃப்ளஷ்-டைப் டோர் ஹேண்டில்கள், 21-இன்ச் அலாய் வீல்கள் போன்றவற்றை கொண்டுள்ளது. எளிதாக அடையாளம் காண உதவும் சி-பில்லர்களில் மேலும் 'மேபேக்' பேட்ஜும் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறம் வழக்கமான EQS எஸ்யூவி வடிவமைப்பை எதிரொலிக்கிறது, இருப்பினும் இங்குள்ள பம்பர் அதன் பிரீமியம் கவர்ச்சியை மேம்படுத்தும் வகையில் ஒரு குரோம் ட்ரீட்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மேபெக் EQS 680 ஆனது ஒரு பொதுவான மேபேக் போன்ற டூயல்-டோன் ஷேடு பெறுகிறது. ஹைடெக் சில்வர்/நாட்டிக் ப்ளூ, சாடின் பிரவுன்/ஓனிக்ஸ் பிளாக், அப்சிடியன் பிளாக்/செலனைட் கிரே, ஹைடெக் சில்வர்/ஓனிக்ஸ் பிளாக், மற்றும் அப்சிடியன் பிளாக்/மனுஃபாக்டர் கலஹாரி கோல்ட் மெட்டாலிக் என 5 டூயல்-டோன் பெயிண்ட் ஆப்ஷன்களில் இது கிடைக்கும்.

மேலும் பார்க்க: இந்த வாடிக்கையாளர் அனுபவக் கணக்கெடுப்பின்படி கியா மற்றும் ஆடி ஆகியவை ஏன் இந்தியாவின் சிறந்த கார் பிராண்டுகள் என தெரிய வந்துள்ளது

ஆடம்பரமான வசதிகள் நிறைந்த கேபின்

இந்த சொகுசு எலக்ட்ரிக் எஸ்யூவி -க்குள் நீங்கள் உள்ளே நுழையும் போது ​​மெர்சிடீஸின் மற்ற எலெக்ட்ரிக் கார்களில் காணப்படுவது போல் டேஷ்போர்டு முழுவதும் கொடுக்கப்பட்டுள்ள MBUX ஹைப்பர்ஸ்கிரீன் செட்டப் உங்களை வரவேற்கும். இருப்பினும் இது ஸ்டீயரிங் வீல் மற்றும் பெடல்களுக்கான மேபேக்-பிராண்டட் மெட்டல் ஃபினிஷ் போன்ற சில தனித்துவமான மேபேக் எலமென்ட்களை கொண்டுள்ளது. பின்புறத்தில் மேபெக் EQS 680 ஆனது இரு 11.6-இன்ச் டிஸ்பிளேக்கள் உடன் தனித்தனி லவுஞ்ச் சீட்களை கொண்டுள்ளது.

டிரிபிள் ஸ்கிரீன் செட்டப் (டச் ஸ்கிரீன், பயணிகள் திரை மற்றும் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே அடங்கும்), இரண்டு தனிப்பட்ட பனோரமிக் சன்ரூஃப்கள், முன் மற்றும் பின் பயணிகளுக்கான வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்கள் மற்றும் மெமரி ஃபங்ஷன் உடன் கூடிய எலக்ட்ரிக்கலி அட்ஜெஸ்ட்டபிள் முன் மற்றும் பின்புற இருக்கைகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. வசதிகளின் பட்டியலில் நான்கு இருக்கைகளுக்கும் ஹீட்டட் மற்றும் வென்டிலேட்டட் ஃபங்ஷன் மற்றும் ஜெஸ்டர் கன்ட்ரோல்கள் ஆகியவை அடங்கும், இதைப் பயன்படுத்தி நீங்கள் டச் ஸ்கிரீனை கட்டுப்படுத்தலாம், சப் ரூஃபை திறக்கலாம் மற்றும் டோர்களை மூடலாம்.

மேபெக் EQS 680 -ல் உள்ள பாதுகாப்புக்காக 11 ஏர்பேக்ஸ், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), 360-டிகிரி கேமரா மற்றும் லேன் கீப் அசிஸ்ட் போன்ற நிலை 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) வசதிகள் உள்ளன. அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங், பிளைண்ட் ஸ்பாட் டிடெக்‌ஷன் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற வசதிகளும் உள்ளன.

பேட்டரி பேக், எலக்ட்ரிக் மோட்டார்ஸ் ரேஞ்ச்

பேட்டரி பேக்

122 kWh

எலக்ட்ரிக் மோட்டார்கள் எண்ணிக்கை

2

பவர்

658 PS

டார்க்

950 Nm

டிரைவ் டைப்

AWD (ஆல்-வீல் டிரைவ்)

கிளைம்டு ரேஞ்ச் (WLTP)

611 கி.மீ

ஆக்ஸிலரேஷன் 0-100 கிமீ/மணி

4.4 வினாடிகள்

WLTP: வேர்ல்டுவைடு ஹார்மனைஸ்டு லைட் வெஹிகிள் டெஸ்ட் சைக்கிள்

இந்த மேபேக் எலக்ட்ரிக் எஸ்யூவி 200 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. இது வெறும் 20 நிமிடங்களில் 300 கி.மீ ரேஞ்சை கொண்டுள்ளது.

போட்டியாளர்கள்

மெர்சிடிஸ்-மேபெக் EQS 680 ஆகிய்வை ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் மற்றும் பென்ட்லி பெண்டேகா கார்களுக்கு ஒரு EV ஆப்ஷன் மாற்றாக இருக்கும்.

கார்கள் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

மேலும் படிக்க: மேபேக் EQS ஆட்டோமெட்டிக்

s
வெளியிட்டவர்

shreyash

  • 45 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment on Mercedes-Benz Maybach EQS

Read Full News

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
Rs.9.99 லட்சம்*
Rs.17.49 - 21.99 லட்சம்*
Rs.12.49 - 16.49 லட்சம்*
Rs.9.99 - 14.29 லட்சம்*
Rs.7.99 - 11.49 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை