மெர்சிடீஸ் - பென்ஸ் நிறுவனம் என்றும் முதல் இடத்தைப் பிடிக்க போராடும், சொல்கிறார் புதிய சிஇஒ
மெர்சிடீஸ் ஜிஎல்இ 2015-2020 க்காக அக்டோபர் 20, 2015 11:03 am அன்று bala subramaniam ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
சென்னை :
மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் புதிய இயக்குனர் மற்றும் சிஇஒ பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு. ரோலன்ட் போல்ஜர் , சொகுசு கார் ப்ரேண்ட்களில் முதல் இடத்தில் இருப்பதற்கே பென்ஸ் நிறுவனம் எப்போதும் முயன்றுக்கொண்டிருக்கும் என்று கூறியுள்ளார். சென்னையில் மெர்சிடீஸ் பென்ஸ் GLE கார்கள் அறிமுகப்படுத்தப்பட்ட தினத்தன்று பத்திரிக்கையாளர்களிடையே பேசுகையில் தங்களது மும்முனை நட்சத்திர சின்னம் எப்போதும் தரத்தில் எந்த விதமான சமாதானத்தையும் செய்துக் கொள்ளாமல் வாடிக்கையாளர்களின் திருப்தியையே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருவதை வலியுறுத்தினார். . முன் எப்போதும் இல்லாத அளவுக்கு , போன வருடத்திய மொத்த விற்பனையை இந்த 2015 செப்டெம்பர் மாதம் முடிவதற்கு முன்னரே கடந்து, விற்பனையில் புதிய சாதனையை நோக்கி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது பென்ஸ் நிறுவனம் என்று சொன்னால் அது மிகையில்லை.
இதை கவனியுங்கள் : மெர்சிடீஸ் பென்ஸ் சொகுசு அடுக்கு மாடி குடியிருப்புக்கள்
இந்த புதிய GLE (முன்பு M – க்ளாஸ் என்று பெயரிடப்பட்டிருந்தது) பற்றி பேசுகையில், 1997 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்த ஆண்டில் இருந்த உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பையும் ,மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான மாடல் என்ற சிறப்பையும் பெற்று இந்த GLE க்ளாஸ் வெற்றிகரமாக வளம்வலம் வந்துக்கொண்டிருக்கிறது. இதுவரை 1.6 மில்லியன் கார்கள் உலகம் முழுதும் விற்பனை ஆகி உள்ளன என்பதே இந்த கார்கள் அடைந்துள்ள வெற்றிக்கு சான்றாக அமையும். M - க்ளாஸ் என்ற பெயருடன் இந்தியாவில் 2009 ஆம் ஆண்டு அறிமுகமான இந்த கார் உலக சந்தையில் பெற்ற அதே வெற்றியை இந்தியாவிலும் பெற்றது. இதுவரை 6000 கார்கள் நாடெங்கிலும் விற்பனையாகி உள்ளன. இந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகமாகும் 13ஆவது பென்ஸ் நிறுவன கார் இந்த GLE மாடலாகும். இதைத் தவிர மேலும் இரண்டு புதிய மாடல்களை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த பென்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது நாம் ஏற்கனவே பதிவு செய்திருந்த செய்தியாகும். மேலும் இதுவரை 13 பிரத்தியேக பென்ஸ் கார்களுக்கான அவுட்லெட் திறக்கப்பட்டுவிட்ட நிலையில் இந்த வருட இறுதிக்குள் மேலுமிரண்டு அவுட்லெட் இந்தியாவில் திறக்கப்படும் என்று பென்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஆண்டு திறக்கப்பட இருக்கும் 15 அவுட்லெட்டுடன் சேர்த்து நாட்டில் பென்ஸ் நிறுவன பிரத்தியேக அவுட்லெட்களின் எண்ணிக்கை 80 ஆக உயரும். இவை அனைத்தும் சிறிய மற்றும் பெரிய 39 வெவ்வேறு நகரங்களில் அமைந்துள்ளது.
உங்களுக்கு தெரியுமா : சிஎல்ஏ மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் டாப் பெர்பார்மர்
இந்த GLE கார்கள் இரண்டு வேரியன்ட்களில் அறிமுகமாகி உள்ளன. GLE 250d மற்றும் GLE 350d ஆகும். இந்த இரண்டு மாடல்களும் முறையே ரூ. 59.95 லட்சம் மற்றும் 71.14 லட்சங்களுக்கு விற்பனைக்கு வந்துள்ளன. 204 hp சக்தி மற்றும் 500nm அளவுக்கு டார்கை உற்பத்தி செய்யும் திறன் வாய்ந்த 2143சிசி இன்லைன் 4 சிலிண்டர் டீசல் இஞ்சின் GLE 250d வேரியண்ட்களில் பொருத்தப்பட்டுள்ளது. இன்னொரு வேரியன்ட் GLE 350d கார்களில் 258 hp சக்தியையும், அதிகபட்சமாக 620nm அளவு டார்க் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் மிக அதிக திறன் கொண்ட 3.0 லிட்டர் V6 சிலிண்டர் கொண்ட டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் 9 - வேக 9G - ட்ரானிக் ட்ரேன்ஸ்மிஷன் வசதி இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஐந்து வெவ்வேறு டிரைவிங் மோட் ஆப்ஷன்கள் கொண்ட டைனமிக் செலெக்ட் வசதி, ஏயர்மேடிக் சஸ்பென்ஷன், கமேன்ட் ஆன்லைன் இன்போடைன்மென்ட் சிஸ்டம் மற்றும் அதிநவீன பாதுகாப்பு மற்றும் எளிதாக கையாள்வதற்கான விசேஷ அம்சங்கள் பென்ஸ் நிறுவனத்திற்கே உரித்தான பாணியில் நேர்த்தியாக பொருத்தப்பட்டுள்ளன.
இதையும் படியுங்கள் : மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியாவில் 1000 கோடி முதலீடு செய்ய உள்ளது.