மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா GLE என்ற பெயர் கொண்ட SUV கார்களை ரூ. 58. 9 லட்சங்களுக்கு இன்று அறிமுகப்படுத்தியது
published on அக்டோபர் 14, 2015 02:39 pm by akshit for மெர்சிடீஸ் ஜிஎல்இ 2015-2020
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்:
மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியா மேம்படுத்தப்பட்ட ML – கிளாஸ் கார்களை new nomenclature ( புதிய பெயரிடும் முறை) கொண்டு GLE – கிளாஸ் என்ற புதிய பெயருடன் அறிமுகப்படுத்துகிறது. இரண்டு டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியிடப்பட இருக்கும் இந்த SUV வகை கார்கள் சமீபத்தில் மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்ட Volvo XC90, BMW X5 மற்றும் ஆடி Q7 ஆகியவற்றுடன் போட்டியிடும்.
சமீபத்தில் தயாரிக்கப்பட்டு வெளியாகி இருக்கும் பென்ஸ் கார்களுக்கே உரித்தான தோற்ற ஒற்றுமையை இந்த புதிய SUV வாகனத்திலும் காண முடிகிறது. அதிலும் குறிப்பாக புதிய GLC மற்றும் GLA – கிளாஸ் கார்களின் சாயல் இந்த புதிய SUV வாகனத்தில் அதிகம் தெரிகிறது. மேலும் பென்ஸ் நிறுவனத்தின் சின்னமான மும்முனை நட்சத்திர சின்னம் பொறிக்கப்பட்ட புதிய ட்வின் ச்லேடட் ரேடியேடர் க்ரில் மற்றும் LED யுடன் கூடிய முற்றிலும் புதிய முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. உட்புறத்திலும் இந்த புதிய தலைமுறை பென்ஸ் கார்களில் இருப்பது போன்ற அனைத்து நவீன சிறப்பம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது. C-கிளாஸ் கார்களில் உள்ளது போன்ற இன்டர்நெட் வசதியுடன் கூடிய இன்போடைன்மென்ட் அமைப்பு மற்றும் டச்பேட் உடன் கூடிய கமேன்ட் கண்ட்ரோலர் போன்ற அம்சங்களை இதற்கு சான்றாக சொல்லலாம்.
உலக சந்தையில் பல வகையான என்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியாகிக் கொண்டிருக்கும் இந்த GLE வரிசை கார்கள் இந்தியாவில் இரண்டு டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் மட்டுமே வெளியிடப்படுள்ளது. GLE 250d மாடலில் அதிகபட்சமாக 201bhp அளவு சக்தி மற்றும் 500Nm என்ற அளவில் அதிகபட்ச டார்க்கையும் வெளியிடக்கூடிய 2.1 லிட்டர் 4 - சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இன்னொரு GLE 350d என்று பெயரிடப்பட்டுள்ள மாடலில் 254bhp அளவு சக்தியுடன் 620Nm என்ற அளவுக்கு அதிக பட்ச டார்க்கையும் வெளியிடும் 3.0லிட்டர் V6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் முக்கிய மாற்றமாக ஏழு - வேக ட்ரேன்ஸ்மிஷன் அமைப்பு மாற்றப்பட்டு புதிய 9G - ட்ரானிக் ஆடோபாக்ஸ் கியர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்:
0 out of 0 found this helpful