Tata Tiago iCNG AMT ரிவ்யூ: வசதி மற்றும் விலைக்கு இடையேயான போட்டி
Published On மே 15, 2024 By nabeel for டாடா டியாகோ
- 1 View
- Write a comment
பட்ஜெட்டில் கவனமாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு AMT -யின் கூடுதல் செலவு ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருக்குமா?
நீங்கள் CNG கொண்ட ஒரு ஃபேமிலி காரை வாங்க விரும்பினால் டியாகோ சந்தையில் சிறந்த ஆப்ஷன்களில் ஒன்றாகும். நல்ல தோற்றம், சிறப்பான வசதிகள், தினசரி பயணத்திற்கு ஏற்ற பவரையும் வழங்குகிறது. இப்போது டாடா நிறுவனம் சிஎன்ஜி கார்களில் உள்ள இரண்டு பெரிய சவால்களை சரி செய்துள்ளது ஒன்று பூட் ஸ்பேஸ் மற்றொன்று ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் இல்லாதது.
இருப்பினும் இதன் விலை அதிகமாக உள்ளது: ஏற்கெனவே இருந்த சிஎன்ஜி பவர்டிரெயினுடன் ஒப்பிடும் போது ரூ.50,000 விட ரூ.95,000 கூடுதலாக இருக்கின்றது. இது CNG அனுபவத்தை அதிக பிரீமியம் மற்றும் முக்கிய கார் ஆக மாற்றுமா? அல்லது விலை முழு ‘சிஎன்ஜி’ பலனையும் தேவையற்றதா ஆக்குகிறதா ?
பூட் ஸ்பேஸ்
டியாகோ -வில் ஒரு பெரிய 60-லிட்டர் CNG டேங்க் இருக்கின்றது. இதில் 10 கிலோ வரை CNG -யை வைத்திருக்க முடியும். இப்போது அதே திறன் கொண்ட இரண்டு சிறிய சிலிண்டர்களால் மாற்றப்பட்டுள்ளது. இந்த சிலிண்டர்கள் பூட் ஃப்ளோர் -க்கு அருகில் வைக்கப்பட்டுள்ளன, இது முன்பை விட அதிக பூட் இடத்தை கொடுக்கின்றன. பூட் இப்போது ஒரு நைட் சூட்கேஸ், ஒரு டஃபிள் பை மற்றும் ஒரு லேப்டாப் பையை ஒன்றாக எடுத்துச் செல்ல முடியும். இவை மட்டுமல்ல; டாடா அவசரத் தேவைகளுக்காக பூட் ஃப்ளோரின் அடியில் ஸ்பேர் டயரை கூட வைப்பதற்கான இடத்தை உருவாக்கியுள்ளது. இதே பொன்ற மிகவும் புத்திசாலித்தனமான பேக்கேஜிங் பிற உற்பத்தியாளர்களால் பின்பற்றப்பட வேண்டும்.
ஓட்டுவதற்கு எப்படி இருக்கும் ?
டியாகோ iCNG நீங்கள் உண்மையில் CNG -யை ஓட்டுகிறீர்களா என்று அடிக்கடி கேள்வி கேட்க வைக்கிறது; இது சிஎன்ஜி -யில் ஸ்டார்ட் ஆகின்றது, பெட்ரோலில் அல்ல. இயற்கை எரிவாயுவில் இயங்கும் போது பொதுவாக இன்ஜினிலிருந்து இருந்து எழும கூடுதல் சத்தம், அதிர்வு எதுவும் இல்லை. வழக்கம்போல டிரைவ் செய்ய தொடங்கலாம், மேலும் இது 50-60 கி.மீ வேகத்தை பராமரிப்பதற்கும், அந்த வேகத்தைச் செய்யும் கார்களை முந்துவதற்கும் ஏராளமான சக்தியை வழங்குகிறது. இன்ஜின் மட்டும் அழுத்தமாக இருக்கின்றது மற்றும் அதிக ரெவ் -களில் எதிர்பார்க்கப்படும் ஆக்ஸிலரேஷன் கிடைக்கவில்லை. அது போன்ற சூழ்நிலைகளில் இது ஒரு வழக்கமான சிஎன்ஜி கார் போன்ற ஆற்றல் இல்லாததைப் போல ரெஸ்பான்ஸை கொடுக்கின்றது. எனவே நெடுஞ்சாலையில் முந்திச் செல்ல சில திட்டமிடல் தேவைப்படும் ஆனால் நகர எல்லைக்குள் பெட்ரோலுக்கு மாற வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது.
இப்போது AMT உடன் டியாகோ iCNG ஓட்டுவதற்கு இன்னும் சிறந்த காராக மாறியுள்ளது. இதுவரை எந்த டாடா காரிலும் இந்த AMT சிறந்த ஒன்றாகும். மாற்றங்கள் ஒப்பீட்டளவில் விரைவானவை மற்றும் ஷிப்ட் லாஜிக் மற்றும் டியூன் பாயின்ட் ஆக உள்ளது. இது உங்களை பவர் பேண்டில் வைத்திருக்கும், மேலும் டவுன்ஷிஃப்ட்கள் அவ்வளவு விரைவாக இல்லை என்றாலும் வேகத்தைத் தொடர கியர்பாக்ஸ் உங்களை அதிக கியரில் வைத்திருப்பதால் அவை இன்னும் மென்மையாக இருக்கும். அது சிஎன்ஜி அல்லது பெட்ரோலாக இருந்தாலும், டாடா AMT -யை டியூன் செய்ய முடிந்தது. அது இரண்டு எரிபொருள் ஆப்ஷன்களுடன் எந்த சிரமமும் இல்லாமல் வேலை செய்கிறது. ஒட்டுமொத்தமாக, நகரத்தில் கூடுதல் வசதிக்காக நீங்கள் தேடுகிறீர்களானால் AMT -யை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே எங்கள் பரிந்துரையாக இருக்கும்.
விலை மற்றும் இயங்கும் செலவுக்கு இடையே உள்ள தடுமாற்றம்
இப்போது முக்கியமான விஷயத்திற்கு வருவோம். நீங்கள் ஏன் முதலில் CNG கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்கள்? பதில் குறைந்த இயங்கும் செலவு. ஆனால் கொள்முதல் செலவு அதிகரித்தால், அதை மீட்க எவ்வளவு நேரம் ஆகும். கொஞ்சம் கணிதம் செய்வோம்.
எரிபொருள் |
செலவு |
எரிபொருள் செலவு |
மைலேஜ் |
இயங்கும் செலவு |
பெட்ரோல் AMT |
ரூ.7.95 லட்சம் |
ரூ.106.17/லி |
19.01 கி.மீ |
ரூ.5.58/கி.மீ |
சிஎன்ஜி AMT |
ரூ.8.90 லட்சம் |
ரூ.88/கிலோ |
28.06 கி.மீ/கிலோ |
ரூ.3.13/கி.மீ |
வேறுபாடு |
ரூ.95,000 |
- |
ரூ.2.45/கி.மீ |
சிஎன்ஜி AMT -க்கு பெட்ரோல் AMT -யை விட கூடுதலாக ரூ.95,000 அதிகமாகச் செலுத்துகிறீர்கள், மேலும் ரூ.2.45/கிமீ குறைந்த செலவு மட்டுமே உங்களுக்கு ஆகும், கூடுதல் கொள்முதல் செலவை மீட்டெடுக்க சுமார் 38,000 கி.மீ -கள் ஆகும். ஒரு நாளைக்கு 50 கி.மீ தூரம் உங்கள் காரை ஓட்டினால் இந்த கூடுதல் செலவை மீட்டெடுக்க 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம்.
தீர்ப்பு
ஃபேமிலி ஹேட்ச்பேக்கை தேடுபவர்களுக்கு டியாகோவை வலுவான போட்டியாளராக மாற்றுவதில் டாடா வெற்றி பெற்றுள்ளது. இது சிறப்பான தோற்றத்தைக் கொண்டுள்ளது, நல்ல வசதிகளுடன் வருகின்றது, வசதியானது மற்றும் எலக்ட்ரிக் உட்பட பல்வேறு பவர்டிரெய்ன்களுடன் கிடைக்கிறது. முதல் AMT உடன் சிஎன்ஜி மற்றும் அதன் அற்புதமான செயல்பாட்டின் மூலம் ஏற்கெனவே இருந்த வசதி இன்னும் சிறப்பானதாக மாறியுள்ளது.
இருப்பினும் டியாகோ CNG AMT ஒரு சிறந்த தினசரி டிரைவ் -க்கான காராக இருந்தாலும், அது ஆட்டோமேட்டிக் மூலம் இதன் விலை உயர்ந்துள்ளது. இதனால் இயங்கும் செலவு குறைவது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. அதற்கான பதில் உங்களிடம்தான் உள்ளது. நீங்கள் ஒரு நாளைக்கு 50 கி.மீ -க்கு மேல் வாகனம் ஓட்டினால் 5-6 வருட உரிமைக் காலத்திற்கு ஓடுவது இன்னும் சிக்கனமாக இருக்கும். இருப்பினும் நீங்கள் ஒரு நாளைக்கு 20 கி.மீ -க்கு நெருக்கமாக ஓட்டினால் பெட்ரோல் AMT-யை பெறுவது ஒரு புத்திசாலித்தனமான சிக்கனமான முடிவாக இருக்கும்.