MG Comet EV நீ ண்ட கால விமர்சனம்: 2500 கி.மீ இயக்கப்பட்ட பின்னர்
Published On ஆகஸ்ட் 22, 2024 By ansh for எம்ஜி comet ev
- 1 View
- Write a comment
காமெட் EV இப்போது எங்களிடம் இருந்து வேறு இடத்துக்கு கைமாறிவிட்டது. எங்கள் கையில் இருந்த போது மேலும் 1000 கி.மீ ஓடியிருந்தது. இப்போது அதன் நோக்கம் எங்களுக்கு மிகவும் தெளிவாக தெரிகிறது.
எம்ஜி காமெட் இவி இப்போது சிறிது காலமாக எங்களிடத்தில் இருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அது வேறொரு கைகளுக்கு மாறியது. இந்த சிறிய, வினோதமான கார் மேலும் 1000 கி.மீ தூரத்திற்கு ஓடியிருந்தது. பெரும்பாலும் நகரத்தில் அதிக போக்குவரத்து நெரிசலில் பல முறை மற்றும் அதை ஒரு சரியான நகரப் பயணியாக மாற்றும் என நிறைய விஷயங்கள் இருந்தாலும் அதில் சில சிறிதளவு மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றின.
அளவுதான் முக்கியமானது
JCB -யுடன் ஒப்பிடும் போது காரின் அளவு
காமெட் EV மிகவும் சிறிய கார் ரிக்ஷாவை விட சற்றே பெரியது. உங்கள் தினசரி டிரைவ்களில் இந்த அளவு பெரும் பங்கு வகிக்கிறது. முக்கியமாக நகரத்தில் பயணிக்கும் ஒரு காருக்கு நீங்கள் வேலைக்குச் செல்வதற்கும், வருவதற்கும் உங்கள் நேரத்தைச் செலவிடும் போதோ அல்லது உங்கள் அன்றாட வேலைகளுக்காக வெளியே செல்லும் போதோ இந்த சிறிய அளவானது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
இந்த காரால் நகர சாலைகள் வழியாக எளிதாக செல்ல முடியும். போக்குவரத்தைத் தவிர்க்க குறுக்கு வழியை பயன்படுத்த விரும்பினால் குறுகிய தெருக்களுக்குள்ளும் இது புகுந்து செல்லும். மேலும் இந்த காரை நிறுத்துவதற்கு அதிக இடம் தேவையில்லை. எங்களுக்கு கடந்த 2 மாதங்களாக பார்க்கிங் என்பது ஒரு பிரச்னையும் இல்லாத ஒன்றாக இருந்தது. இரண்டு பைக்குகளை நிறுத்துவதற்கு தேவைப்படும் இடம் காமெட் -க்கு போதுமானது.
ஆனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள் என்று ஒரு நொடி கூட நினைக்காதீர்கள். அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்லும் குறுகிய பயணங்களில் கூட நான் பலமுறை நெரிசலில் சிக்கிக் கொண்டேன். இது சிறியதுதான் என்றாலும் கூட இன்னும் இது ஒரு கார்தான் என்பதை அப்போது உணர முடியும். மேலும் பம்பர் முதல் பம்பர் டிராஃபிக்கை கொண்டு செல்ல கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக மக்கள் அடர்த்தியான பகுதிகளில் அல்லது அதிகபட்ச டிராஃபிக் இருக்கும் சமயங்களில்.
மொத்தத்தில் சந்தையில் உள்ள மற்ற சிறிய காரை விட இது நகரத்தில் சிறந்தது மேலும் வாகனம் ஓட்டும்போது நீங்கள் நிறைய நேரத்தை மிச்சப்படுத்துவீர்கள். மேலும் நீங்கள் அதில் இருக்கும்போது அதன் செயல்திறனையும் அனுபவிப்பீர்கள்.
நகரத்தில் விரைவானது
எலக்ட்ரிக் காராக இருப்பதால் காமெட் விரைவான ஆக்ஸிலரேஷனை கொண்டுள்ளது. இதற்கு முன்னர் நீங்கள் EV -களை பயன்படுத்தவில்லை என்றால் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். நீங்கள் காமெட்டை இயக்கும் போது நகர்த்துவதற்கு நீங்கள் ஆக்ஸிலரேட்டரை அழுத்த வேண்டும். வலம் வருவதால் ஆக்ஸிலரேட்டரை அழுத்தியவுடன் திடீர் ஆக்ஸிலரேஷன் கிடைக்கும். இது சிலருக்கு கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தலாம்.
ஆனால் நீங்கள் பழகிவிட்டால் இதை ஓட்டிவது ஃபன் ஆக இருக்கும். இதன் எலக்ட்ரிக் மோட்டார் வெறும் 42 PS மற்றும் 110 Nm ஐ அவுட்புட்டை கொடுக்கிறது. எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் ரியர் வீல் டிரைவ் செட்டப் ஆனது காமெட்டை ஓட்டுவதற்கு உற்சாகமூட்டுகிறது. நகரத்திற்குள் வாகனம் ஓட்டுவது சிரமமற்றதாக இருக்கும். மணிக்கு 60 கி.மீ வேகத்தில் தொடர்ந்து செல்ல முடியாது என்றாலும் அந்த வேகத்தில் கூட முந்திச் செல்ல போதுமான சக்தி உள்ளது. மேலும் ரியர்-வீல்-டிரைவ் EV என்பதால் வளைவுகளிலும், திருப்பங்களிலும் நீங்கள் ஃபன் டிரைவிங் செய்யலாம்.
போதுமான ரேஞ்ச்
மேலும் இந்த செயல்திறன் 230 கி.மீ ரேஞ்ச் உடன் வருகிறது. இது நிஜத்தில் சராசரியாக சுமார் 180 கி.மீ செல்லக்கூடும். இந்த ரேஞ்ச் உங்களின் நகர டிரைவிங்குகளுக்கு போதுமானது. மேலும் உங்கள் பயணங்கள் முக்கியமாக அலுவலகம் மற்றும் வீடு திரும்பினால் வாரம் முழுவதும் உங்களால் இதை ஓட்ட முடியும்.
வாரத்திற்கு ஒரு முறைக்கு மேல் சார்ஜ் செய்ய வேண்டியிருந்தாலும் அது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்காது. இது ஏசி சார்ஜிங்கை மட்டுமே ஆதரிப்பதால் நீங்கள் அதை வீட்டிலோ அல்லது உங்கள் அலுவலகத்திலோ மட்டுமே சார்ஜ் செய்வீர்கள். ஆகவே அந்த பகுதியில் உள்ள மின்சார கட்டணத்தை பொறுத்து நீங்கள் ஒரு கி.மீ -க்கு ரூ. 1 - 2 மட்டுமே செலவழிக்க வேண்டியிருக்கும்.
ஆனால் ஏசி சார்ஜிங் மலிவான விலையில் கிடைத்தாலும். அது சற்று அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும் மேலும் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷன் இருந்திருந்தால் அது உதவியாக இருந்திருக்கும். இது ஒரு பெரிய குறையாக தெரியவில்லை. ஆனால் இது கொடுக்கப்பட்டிருந்தால் ஒரு நல்ல வசதியாக இருந்திருக்கும். மேலும் இது காமெட்டை கூடுதல் வசதியாக மாற்றியிருக்கும்.
சிக்கல்கள்: சிறியவை மற்றும் பெரியவை
இது 2 மாத அனுபவத்திலிருந்து நாங்கள் தெரிந்து கொண்டவை இவை. காமெட்டை சில விஷயங்கள் கொஞ்சம் எரிச்சலை உண்டாக்கக் கூடும் மேலும் சில விஷயங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தியிருக்கலாம். சிறிய சிக்கல்களில் இருந்து தொடங்கலாம்.
பிளைண்ட் ஸ்பாட்: உயரமான நபருக்கு இது ஒரு பிரச்சனையாக இருக்கலாம். வாகனம் ஓட்டும்போது IRVM கண்களுக்கு சமமாக உள்ளது. மேலும் இடதுபுறம் திரும்பும்போது பிளைண்ட் ஸ்பாட்டை உருவாக்குகிறது.
பெரிய கதவுகள்: காமெட்டின் பாதி நீளத்துக்கு கதவுகள் இருக்கின்றன. நீங்கள் இந்த காரை இறுக்கமான இடங்களில் பார்க் செய்யலாம். ஆனால் அந்த குறுகலான இடங்களில் காமெட் உள்ளே செல்வதும் வெளியே வருவதும் கடினம். ஏனெனில் கதவுகள் அதிக இடத்தை எடுத்துக்கொள்கின்றன மேலும் சில சூழ்நிலைகளில் அதன் சிறிய வடிவ காரணியின் நோக்கத்தை அது தோற்கடிக்கிறது.
முன் இருக்கை பெல்ட்கள்: இது உங்கள் நெகிழ்வுத்தன்மைக்கான சோதனை. கதவுகளின் அளவு காரணமாக சீட்பேக் மற்றும் சீட்பெல்ட் இடையே உள்ள இடைவெளி இருக்க வேண்டியதை விட அதிகமாக உள்ளது. முன்பக்க பயணிகள் சீட் பெல்ட்டை பிடிக்க தங்கள் கைகளை வெகு தொலைவில் நீட்ட வேண்டும் இது எரிச்சலை உண்டாக்கலாம்.
இப்போது சில பெரிய சிக்கல்களுக்கு வருவோம் அவை சரியாக செயல்படுத்தப்பட்டிருந்தால் காமெட் EV -யின் ஓட்டுநர் அனுபவத்தை மிகவும் சிறப்பாக மாற்றியிருக்கும்.
இருக்கைகள்: காமெட்டின் இருக்கைகள் குறிப்பாக முன்பக்க இருக்கைகள் சிறப்பாக இருந்திருக்கலாம். தொடையின் கீழ் ஆதரவு குறைவாக உள்ளது. பெரும்பாலும் இதனால் தொந்தரவாக இருக்காது. ஆனால் மோசமான சாலைகளில் இருக்கும் போது இந்த இருக்கைகளில் நீங்கள் சரியாக அமர முடியாது. ஆகவே நீங்கள் நிறைய நகர வேண்டியிருக்கும்.
சவாரியின் தரம்: இது உங்கள் வாங்கும் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றொரு முக்கிய குறை. முக்கியமாக நகரத்தில் ஓட்டப்பட வேண்டிய கார் பெரும்பாலான நேரங்களில் உடைந்த மேடுகளை உள்ளடக்கிய சாலைகளில் பயணிக்கக்கூடியதாக இருக்கும். இது ஒரு மென்மையான மற்றும் மிகவும் இனிமையான சவாரி தரத்தைக் கொண்டிருக்கலாம். ஆனால் காமெட்டை ஓட்டும் போது சாலையின் ஒவ்வொரு பெரிய மேடுகள் மற்றும் பள்ளங்களை நீங்கள் உணர்வீர்கள். டிரைவ் கொஞ்சம் ஜெர்க்கியாக இருக்கும். மேலும் இது அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
காமெட் EV உடனான அனுபவம் இப்போது வரை நேர்மறையானதாக உள்ளது. மேலும் இந்த காருக்கு நிறைய சாத்தியங்கள் உள்ளன. இதை விடவும் சில நிறை மற்றும் குறைகள் உள்ளன. சீக்கிரமாக நாம் அதைப் பற்றி மிகவும் விரிவான அறிக்கையில் விவாதிப்போம்.
நேர்மறை விஷயங்கள்: சிறிய வடிவம், செயல்திறன், ரேஞ்ச், வசதிகள்.
எதிர்மறை விஷயங்கள்: முன் இருக்கைகள், சவாரி வசதி, நீண்ட சார்ஜிங் நேரம்
பெறப்பட்ட தேதி: ஜனவரி 2 2024
பெறப்படும் போது கிலோ மீட்டர்கள்: 30 கி.மீ
இதுவரை ஓடிய கிலோ மீட்டர்கள்: 2575 கி.மீ