Maruti Grand Vitara AWD 3000 கி.மீ விமர்சனம்

Published On மார்ச் 26, 2024 By nabeel for மாருதி கிராண்டு விட்டாரா

கிராண்ட் விட்டாரா கார்தேக்கோ -வின் குடும்பத்தில் நன்றாகப் பொருந்திப்போனது. ஆனால் ஒரு சில குறைகளும் இருந்தன.

கிராண்ட் விட்டாராவை சுமார் 1100 கி.மீ ஓட்டிய பிறகு அதை பற்றிய எனது எண்ணங்களை எனது கடைசி அறிக்கையான கிராண்ட் விட்டாராவின் லாங் டேர்ம் விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தேன். இப்போது ஓடோ மீட்டரில் மேலும் 2000 கிலோமீட்டர்களை சேர்ந்து விட்டதால் என் எண்ணங்கள் இப்போது மேலும் மேம்பட்டுள்ளன. நான் இப்போது கிராண்ட் விட்டாராவை புரிந்துகொண்டு பாராட்டினாலும் அந்த காரில் சில சிக்கல்களும் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. அதைப் பற்றிய விவரங்கள் இங்கே.

இது மிகவும் வசதியானது

கிராண்ட் விட்டாரா காருக்கு நிச்சயமாக அரசு வரிவிலக்கு தர வேண்டும், காரணம் இது சாலையின் குறைபாடுகளை மறைத்து விடுகிறது. ஸ்பீட் பிரேக்கர்கள், மோசமான சாலைகள், சராசரியான நகரத்தில் காணப்படும் பள்ளங்கள் எதுவாக இருந்தாலும் கிராண்ட் விட்டாரா அவற்றின் மீது பட்டுப்போன உணர்வுடன் பயணிக்கின்றது. சஸ்பென்ஷன் கிட்டத்தட்ட எல்லா வகையான மோசமான சாலைகளையும் சமாளித்து கேபினில் உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தாது. உண்மையில் நான் மற்றொரு சோதனை காரை ஓட்டும் வரை எனது அலுவலகத்தைச் சுற்றியுள்ள சாலைகள் எவ்வளவு மோசமாக இருந்தன என்பதை நான் மறந்துவிட்டேன். இது எனது நண்பர்களும் குடும்பத்தினரும் கூட பாராட்டக்கூடிய விஷயம்.

இன்னும் பன்ச் தேவை, ஆனால் நகரத்துக்கு தேவைப்படாது

போக்குவரத்து நெரிசலில் நகரத்தில் உங்களுக்கு அதிக பவர் தேவையா என்ற விவாதம் இங்கே எழுகின்றது. பதில்: ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவையை பொறுத்தது. என்னைப் பொறுத்தவரை எனது 90 சதவீத பயணங்களின் போது ​​நான் செய்வதில்லை. கிராண்ட் விட்டாரா என்பது ஓட்டுவதற்கு ஒரு லேட்பேக் கார். மேலும் பயணங்களுக்கு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் நகரப் பணிகளுக்கு போதுமான பன்சை கொடுக்கின்றது. ஓவர்டேக்குகள் உங்களுக்கு வியர்க்க வைக்காது மற்றும் இயக்கம் சீராக இருக்கும். இருப்பினும் அந்த 10 சதவீதத்தில் போக்குவரத்தை விட்டுவிட்டு கொஞ்சம் வேடிக்கையாக இருக்கும் பவர் எனக்கு கிடைக்கவில்லை. குறிப்பாக நெடுஞ்சாலைகளில் விரைவாக முந்திச் செல்வதற்கான சக்தி உங்களுக்கு கிடைக்காது. கிராண்ட் விட்டாராவுடன் போட்டியிடும் ஒவ்வொரு போட்டியாளரையும் நான் டிரைவ் செய்திருப்பதால் இந்த கார் எப்படி உள்ளது என்பதை எனக்கு தெரியும்.

கிடைக்கும் வசதிகள்

ஸ்ட்ராங்-ஹைபிரிட் செட்டப் இல்லாமல் கிராண்ட் விட்டாராவின் சிறந்த வேரியன்ட் இதுவாகும். ஆனால் வசதி என்று ஒரு 'டாப் வேரியன்ட்டுக்கு' சில வசதிகள் கொடுக்கப்படவில்லை. இந்த கிராண்ட் விட்டாராவில் வென்டிலேட்டட் இருக்கைகள் தவிர்க்கப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக ஒரு பனோரமிக் சன்ரூஃப் உள்ளது. இந்த வசதி மிகவும் குறைவான பயனுடையது. ஆனால் ஒரு மேனுவலில் நிச்சயமாக நன்றாக இருக்கும். கார்களில் பெரிய சன்ரூஃப்களை பயன்படுத்தும் போது ​​அரசியல்வாதியின் மனசாட்சியை விட மெல்லிய துணியால் செய்யப்பட்ட கர்ட்டெயினை இது பெறுகிறது.

இதில் வயர்லெஸ் சார்ஜரும் இல்லை. மற்றும் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ/ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றை பெற்றாலும் Type-C சார்ஜிங் போர்ட்களும் கொடுக்கப்படவில்லை. இந்த முக்கியமான வசதிகளுக்காக நான் பெரிய டச் ஸ்கிரீன் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றை மகிழ்ச்சியுடன் தியாகம் செய்திருப்பேன். மேலும் சென்டர் ஸ்டோரேஜில் ஃபோனையோ சாவியையோ வைக்க ரப்பர் மேட் இல்லை இதனால் பொருட்கள் நகர்வதால் சத்தம் எழுகிறது. ஒரு ரூ.99 மேட் இந்த சிக்கலை சரி செய்தது ஆனால் மாருதி இதை தங்கள் ஃபிளாக்ஷிப் காரில் இதை ஸ்டாக்காக வழங்கியிருக்கலாம்.

சிறிய குறைகள்

குறைந்த ஆர்பிஎம்மில் இருந்து காரை எடுக்கும்போது ​​காரின் பின்பகுதியில் இருந்து சத்தம் கேட்கிறது. என்னால் அதைக் குறைக்க முடியவில்லை என்றாலும் இரண்டு பகுதிகள் இதற்கான பிரதான காரணமாக உள்ளன. பின்புற விண்ட்ஸ்கிரீன் அல்லது நம்பர் பிளேட். எதுவாக இருந்தாலும் மிகவும் எரிச்சலூட்டுகிறது.

எங்கள் கிராண்ட் விட்டாராவை பாதித்த மற்றொரு பிரச்சினை கண்டென்சர் நீர் குழாய் கசிவு. காரின் வெளிப்புறத்திற்கு ஏசி -யில் இருந்து கண்டென்ஸ் செய்யப்பட்ட தண்ணீரை எடுத்துச் செல்லும் குழாய் பயணிகள் கால் பகுதியில் வழியாக செல்கிறது. மேலும் அங்கு ஒரு திடமான பிளாஸ்டிக் குழாய் உடன் இணைக்கும் ரப்பர் குழாய் உள்ளது. யாரோ அதை அகற்றியிருக்க வேண்டும். ஆகவே பயணிகள் கால் பகுதியில் தண்ணீர் கசிந்து முழு குட்டையாக மாறியது. மேலும் கிராண்ட் விட்டாரா ஒரு கார்பெட் வகை தரை விரிப்பு என்பதால் இந்த தண்ணீரை காய வைப்பது சிக்கலான ஒரு பணியாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக அதை மீண்டும் இடத்தில் வைப்பதற்கு மன உறுதி மட்டுமே தேவை. இப்போது அது நன்றாக வேலை செய்கிறது.

இறுதியாக, இது ஒரு நல்ல தோற்றம் கொண்ட எஸ்யூவி

கிராண்ட் விட்டாரா குறிப்பாக இந்த கிரே ஷேடில் என் கண்களுக்கு செக்மென்ட்டில் சிறந்த தோற்றம் கொண்ட எஸ்யூவியாக தோன்றியது. ஒரு நண்பனை பார்க்கச் செல்லும் இடம், ஒரு மால் உணவகம் அல்லது உறவினரின் இடத்திற்கு ஓட்டிச் செல்வது உங்களுக்கு நன்றாக இருக்கிறது. இது நிச்சயமாக ஒரு நல்ல எஸ்யூவி ஆகும். இது உண்மையிலேயே உங்களை உள்ளே நன்றாக உணர வைக்கிறது. இந்த காரணத்தினாலேயே சாவிகள் இப்போது என்னிடமிருந்து பறிக்கப்படுவதால் நான் சற்று மனம் உடைந்துள்ளேன். மீண்டும் எனது நீண்ட கால சோதனை கார் படப்பிடிப்பு மற்றும் பேக்கப் பணிகளுக்காக தயாரிப்புத் துறையால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அங்கும் சிறப்பாக செயல்படும் என உறுதியாக நம்புகிறேன். என் அறிக்கைகளை தவிர இந்த காரில் மிச்சம் இருக்கும் ஒரு விஷயம் ஆஃப்-ரோடில் இது எப்படி இருக்கும் என்பதை பார்க்க விரும்புகிறேன். இது நிச்சயம் மிகவும் வேடிக்கையாக இருக்கும்! அதற்காக காத்திருங்கள்.

மாருதி கிராண்டு விட்டாரா

வகைகள்*Ex-Showroom Price New Delhi
ஆல்பா (பெட்ரோல்)Rs.15.51 லட்சம்*
ஆல்பா ஏடி (பெட்ரோல்)Rs.16.91 லட்சம்*
alpha at dt (பெட்ரோல்)Rs.17.07 லட்சம்*
ஆல்பா ஏடபிள்யூடி (பெட்ரோல்)Rs.17.01 லட்சம்*
alpha awd dt (பெட்ரோல்)Rs.17.17 லட்சம்*
alpha dt (பெட்ரோல்)Rs.15.67 லட்சம்*
ஆல்பா பிளஸ் ஹைபிரிடு சிவிடி (பெட்ரோல்)Rs.19.93 லட்சம்*
alpha plus hybrid cvt dt (பெட்ரோல்)Rs.20.09 லட்சம்*
டெல்டா (பெட்ரோல்)Rs.12.20 லட்சம்*
டெல்டா ஏடி (பெட்ரோல்)Rs.13.60 லட்சம்*
சிக்மா (பெட்ரோல்)Rs.10.80 லட்சம்*
ஸடா (பெட்ரோல்)Rs.14.01 லட்சம்*
ஜீட்டா ஏடி (பெட்ரோல்)Rs.15.41 லட்சம்*
ஸடா பிளஸ் ஹைபிரிடு சிவிடி (பெட்ரோல்)Rs.18.43 லட்சம்*
zeta plus hybrid cvt dt (பெட்ரோல்)Rs.18.59 லட்சம்*
டெல்டா சிஎன்ஜி (சிஎன்ஜி)Rs.13.15 லட்சம்*
ஸடா சிஎன்ஜி (சிஎன்ஜி)Rs.14.96 லட்சம்*

சமீபத்திய எஸ்யூவி கார்கள்

வரவிருக்கும் கார்கள்

சமீபத்திய எஸ்யூவி கார்கள்

×
We need your சிட்டி to customize your experience