ஆர் ஆர் டான் கார்களின் அசத்தும் புகைப்பட தொகுப்பு! கண்டு களியுங்கள்!
published on செப் 09, 2015 02:19 pm by manish for ரோல்ஸ் ராய்ஸ் டான்
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய டான் கார்கள் நேற்று ஆன்லைன் மூலம் உலகம் முழுமைக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த பாரம்பரியம் மிக்க கார் தயாரிப்பாளரின் இத்தகைய புதிய முயற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய ஊடகங்களே அழைக்கப்பட்டிருந்தனர். இந்த டான் கார்கள் ரோல்ஸ் ராய்ஸ் ரைத் கார்களின் தொழில்நுட்ப அடிப்படையை கொண்டும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் கார்களின் வடிவமைப்பின் பாதிப்பை கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. சற்று ஆழ்ந்து பார்க்கையில், இந்த கார் 6.6 லிட்டர் இரட்டை - டர்போ சார்ஜ் செய்யப்பட்ட V12 என்ஜின் பொருத்தப்பட்டு 563bhp என்ற அளவிலான சக்தியையும் 780Nm என்ற அளவிலான முறுக்கு விசையையும் வெளிபடுத்துகிறது. இந்த அபார சக்தி 0 - 100kmph வேகத்தை வெறும் 4.9 நொடிகளில்( சொல்லப்படுகிறது) அடைந்து அதிகபட்சமாக மின்னணு முறையில் கட்டுபடுத்தப்பட்ட மணிக்கு 250கி.மீ வேகம் வரை சீறி பாய்ந்து செல்கிறது.