சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

தோனியின் கேரேஜில் சேர்ந்த தனித்துவமான Mercedes-AMG G 63 எஸ்யூவி

மெர்சிடீஸ் ஜி கிளாஸ் க்காக நவ 30, 2023 04:40 pm அன்று shreyash ஆல் திருத்தம் செய்யப்பட்டது

கிளாசிக் முதல் நவீன வாகனங்கள் வரை, எம்.எஸ்.தோனி அவரது கார்களின் சேகரிப்புக்காக அறியப்படும் நபராகவும் இருக்கிறார் .

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான எம்.எஸ்.தோனி சமீபத்தில் ஒரு அதிரடியான காரை அவரது கேரேஜில் சேர்த்துள்ளார். மெர்சிடிஸ்-AMG G 63 எஸ்யூவி அவரது சமீபத்திய கார் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. அதை ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார், அவர் தனது கருப்பு AMG G 63 எஸ்யூவி -க்குள் வசதியாக அமர்ந்திருப்பதைக் காட்டுகிறது. மேலும் அதன் தனித்துவமான '0007' பதிவு எண் (அவரது பிறந்த தேதி மற்றும் அவரது ஜெர்சி எண்) ஆகியவற்றையும் பார்க்க முடிகிறது.

A post shared by Sumeet Kumar Bajaj (@bajaj.sumeetkumar)

எம்.எஸ்.தோனியின் கேரேஜில் உள்ள மற்ற கார்கள்

எம் எஸ் தோனியின் கவர்ச்சியான சேகரிப்பில் சிவப்பு நிற ஜீப் கிராண்ட் செரோகி ட்ராக்ஹாக் எஸ்யூவியும் அடங்கும், இது அவருக்கு அவரது மனைவி சாக்ஷி தோனியால் பரிசாக வழங்கப்பட்டது. ‘கேப்டன் கூல்’ என்று அவர் அன்புடன் குறிப்பிடுவது போல, கஸ்டமைஸ்டு ரெட் மற்றும் பிளாக் மஹிந்திரா ஸ்கார்பியோ, முந்தைய தலைமுறை லேண்ட் ரோவர் டிஃபென்டர் மற்றும் விண்டேஜ் கார்களுடன் பச்சை நிசான் ஜோங்கா (2019 -ல் வாங்கி ரீஸ்டோர் செய்யப்பட்டது) -வும் இருக்கிறது.

இதையும் பார்க்கவும்: KBC 2023 போட்டியாளர் மயங்க் ரூ. 1 கோடி வென்ற பிறகு ஹூண்டாய் i20 விருது பெற்றார்

மெர்சிடிஸ் AMG G 63 பற்றிய கூடுதல் தகவல்கள்

மெர்சிடிஸ் எஸ்யூவி அதன் மிகப்பெரிய சாலை தோற்றம், பவர் மற்றும் ஆஃப்-ரோட் திறமை ஆகியவற்றிற்காக புகழ்பெற்றது. இது 4-லிட்டர் V8 பை-டர்போ-பெட்ரோல் இன்ஜினுடன் (585 PS/850 Nm), 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. AMG G 63 ஆனது 4.5 வினாடிகளில் 0 முதல் 100 kmph வரை வேகமெடுக்கும், இதன்அதிகபட்ச வேகம் எலக்ட்ரானிக் முறையில் 220 kmph ஆக லிமிட் செய்யப்பட்டுள்ளது. AMG G 63 ஸ்டாண்டர்டாக 4-வீல்-டிரைவ் (4WD) பெறுகிறது.

டூயல் 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் (ஒன்று இன்ஃபோடெயின்மென்ட் மற்றொன்று இன்ஸ்ட்ரூமென்டேஷன்), 590W 15-ஸ்பீக்கர் பர்மெஸ்டர் சவுண்ட் சிஸ்டம் மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் போன்ற அம்சங்களுடன் இது கொடுக்கப்படுகிறது. 9 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS) மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) மூலம் பயணிகளின் பாதுகாப்பு கவனிக்கப்படுகிறது.

இதையும் பார்க்கவும்: ஒரு காலண்டர் ஆண்டின் இறுதியில் புதிய கார் வாங்குவதன் அனைத்து நன்மைகள் மற்றும் தீமைகள்

தோனியின் புதிய கார் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கீழே உள்ள கமென்ட் பிரிவில் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க: மெர்சிடிஸ்-பென்ஸ் G-Class ஆட்டோமெட்டிக்

Share via

Write your Comment on Mercedes-Benz ஜி கிளாஸ்

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
புதிய வேரியன்ட்
Rs.6.20 - 10.51 லட்சம்*
எலக்ட்ரிக்
Rs.48.90 - 54.90 லட்சம்*
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.18.90 - 26.90 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை