இதை கவனியுங்கள் ! ரோல்ஸ் ராய்ஸ் டான ் கார்கள் இன்று அறிமுகமாகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் டான் க்காக செப் 08, 2015 01:19 pm அன்று manish ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 24 Views
- ஒரு கருத்தை எழுதுக
ரோல்ஸ் ராய்ஸ் தன்னுடைய புதிய டான் கார்களை இன்று அறிமுகம் செய்கிறது. உலகளாவிய இந்த முதல் ஆன்லைன் அறிமுக நிகழ்ச்சிக்கு நாங்களும் அழைக்கப்பட்டுள்ளோம். இந்த காரின் புகைப்படங்களும் வேவு பார்க்கப்பட்ட சில படங்களும் இணையதளங்களில் ஏற்கனவே உலா வர தொடங்கிவிட்ட நிலையில் இந்த கன்வர்டிபல் கார் மெம்மையான கூரையுடன் வெளிவர உள்ளது என்பது அந்த படங்களை பார்க்கையில் உறுதியாகிறது. மென்மையான கூரை பகுதிக்கும் அதில் விழும் மழை துளிக்கும் ஒரு அழகான காதல் தொடர்பு இருப்பதாகவே ரோல்ஸ் ராய்ஸ் நம்புகிறது. அதனால் தானோ என்னவோ இந்த காருக்கு மென்மையான கூரை அமைப்பை தேர்ந்தெடுத்து உள்ளது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் பிரபலமான ரேய்த் கூபே கார்களின் இன்னொரு மேல்கூரை இல்லா வடிவம் தான் இந்த டான் கார்கள் எனலாம்.
இந்த கார்கள் இந்த வருட இறுதியில் அறிமுகமாகி எதிர்வரும் 2016 ஆம் ஆண்டின் துவக்கத்தில் விற்பனைக்கு வரும் என்று எதிர் பார்க்கலாம். இந்த ஆன்லைன் அறிமுக நிகழ்வு இந்திய நேரப்படிஇன்று மாலை 6.30 மணிக்கு 140hrs ( இங்கிலாந்து நேரம் ) நடக்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சி இங்கிலாந்தில் உள்ள குட்வுட் என்னும் இடத்தில இருந்து நேரிடையாக ஒளிபரப்பாகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் டான் (DAWN) என்ற பெயரை 1949 ஆம் ஆண்டில் முதன் முதலில் பயன்படுத்தியது. ரேய்த் கார்களைப் போன்ற அதே வீல் பேஸ் மற்றும் இரண்டு கதவு வடிவமைப்புடன் தான் இந்த டான் கார்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. முன்புற வடிவமைப்பும், நேர்த்தியாக கீழ்நோக்கி சரியும் பின்பக்க வடிவமைப்பும் கோஸ்ட் மாடல் கார்களை நினைவூட்டுகிறது. இஞ்சின் கூட ரேய்த் கார்களில் பயன்படுத்தப்படும் இரட்டை - டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 624bhp என்ற அளவில் சக்தியை வெளியிடக்கூடிய 6.6 லிட்டர் V12 என்ஜின் தான் இந்த புதிய டான் கார்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ப்ஹேன்தம் வரிசை கார்களின் வழியில் இந்த காரை பெயரிடாமல் 'கார்னிஷ்' என்ற இன்னொரு மாற்று பெயரையும் வைக்கலாமாஎன்று ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் யோசித்து வருகிறது. விலையை பொறுத்தவரை ஆரம்ப விலையே சுமார் £ 250,000 வரை இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.