சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login
  • ஆல்
  • வெளி அமைப்பு
செவ்ரோலேட் ட்ராக்ஸ்
செவ்ரோலேட் அட்ரா
செவ்ரோலேட் அட்ரா
செவ்ரோலேட் அட்ரா
செவ்ரோலேட் அட்ரா
செவ்ரோலேட் அட்ரா
செவ்ரோலேட் பாயோகன்
செவ்ரோலேட் வோல்ட்
செவ்ரோலேட் ஸ்பின்

உங்களுக்கு உதவும் டூல்கள்

செவ்ரோலேட் cars videos

  • 1:06
    Chevrolet India spreads smiles with One World Play Project Chevrolet Trailblazer
    8 years ago | 56 Views
  • 0:46
    Chevrolet Cruze 2016 For Those Who Do Their Own Thinking
    8 years ago | 354 Views
  • 5:41
    2016 Chevrolet Cruze AT | Expert Review | CarDekho.com
    8 years ago | 3.2K Views
  • 2:12
    Chevrolet Trailblazer :: WalkAround video :: ZigWheels
    8 years ago | 75 Views
  • 1:10
    Kaher Kazem Unveiling Brand New Car Essentia
    8 years ago | 106 Views

செவ்ரோலேட் செய்தி & விமர்சனங்கள்

  • சமீபத்தில் செய்திகள்
செவர்லே பீட் எஸன்ஷியா : விரிவான புகைப்பட கேலரி ஆட்டோ எக்ஸ்போ 2016 ல் இருந்து

செவர்லே நிறுவனம் தங்களது அடுத்த தலைமுறை பீட் கார்களின் செடான் வெர்ஷனை 2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைத்துள்ளது. இந்த காரின் முன்புற முக அமைப்பு முற்றிலும் புதிகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புற வடிவமைப்பை பொறுத்தவரை ஒரு செடான் காரின் பின்புற வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டுமோ அந்த இலக்கணத்துக்கு உட்பட்டு மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸன்ஷியா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செடான் கார்களின் பின்புறத்தை மிக நேர்த்தியாக வடிவமைத்துள்ள வல்லுனர் குழுவை நிச்சயம் நாம் பாராட்டலாம். இந்த காரின் பல கோணங்களில் எடுக்கப்பட்ட பிரத்தியேக படங்களின் தொகுப்பைப் பார்த்து உங்கள் மேலான கருத்துக்களை எங்களது கமென்ட் செக்க்ஷனில் பதிவு செய்யுங்கள்  

ஆட்டோ எக்ஸ்போவில், செவ்ரோலேட் கோர்வேட் ஸ்டிங்க்ரே காட்சிக்கு வைக்கப்பட்டது

ஆட்டோ எக்ஸ்போவின் இந்த பதிப்பில் ஜெனரல் மோட்டார்ஸின் தயாரிப்புகளின் வரிசையில், அமெரிக்காவில் முன்னணி வகிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த செயல்திறன் மிகுந்த காரான செவ்ரோலேட் கோர்வேட் உட்பட பல சுவாரஸ்யமான மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நம் மனதில் விருப்பத்தை ஏற்படுத்தி அதை அடையவிடாமல் ஏங்க வைப்பது (டென்டேலிஸிங்) மற்றும் ரேஸில் நிரூபிக்கப்பட்ட தொழிற்நுட்பம் (ரேஸ்-ப்ரூவன் டெக்னாலஜி) ஆகியவற்றின் கலவையாக அமையும் வகையில் திட்டமிட்ட வடிவமைப்பை இந்த கார் கொண்டுள்ளதால், நிச்சயமாகவே இது கண்காட்சியில் கவர்ந்திழுக்கும் ஒரு தயாரிப்பு என்று நாம் சொல்லியே ஆக வேண்டும். இந்த மாடலை இந்திய நேயர்களுக்கு காட்டுவதற்கு GM நிறுவனத்திற்கு விருப்பம் இருந்தாலும், தயாரிப்பாளர் தரப்பில் கோர்வேட் காரில், அதாவது குறைந்தபட்சம் தற்போதைய தலைமுறையைச் சேர்ந்த காரில் ஒரு வலது கை டிரைவிங் பதிப்பை அறிமுகம் செய்ய விருப்பம் இல்லாமல் போனது துரதிஷ்டவசமானது.

2016 ஆட்டோ எக்ஸ்போ: ட்ரையல்ப்ளேஸரை, செவ்ரோலேட் காட்சிக்கு வைக்கிறது

தற்போது நடைபெற்று வரும் 2016 ஆட்டோ எக்ஸ்போவில், தனது இந்திய முன்னணி தயாரிப்பான ட்ரையல்ப்ளேஸரை, செவ்ரோலேட் நிறுவனம் காட்சிக்கு வைத்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் ரூ.26.4 லட்சம் என்ற விலை நிர்ணயத்தில் இந்த SUV அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ட்ரையல்ப்ளேஸர் வாகனம், பிரிமியம் SUV சந்தையில் கேப்டிவா-விற்கு அடுத்தப்படியாக, செவ்ரோலேட் நிறுவனத்தின் இரண்டாவது முயற்சி ஆகும். நம் நாட்டிற்கு ஆரம்பக் கட்டத்தில் CBU வழியாக இந்த கார் கொண்டு வரப்படுகிறது. இந்த காரின் ஒரே ஒரு வகை மட்டுமே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுவும் ஒரு 2WD என்பது கவலை அளிக்கிறது. இதில் இரட்டை-முன்பக்க ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ABS+EBD ஆகியவற்றை கொண்டுள்ளது.

செவர்லே கமேரோ : இந்த அமெரிக்க கட்டுமஸ்தான வாகனத்தின் தெளிவான படங்களை தொகுப்பில் கண்டு களியுங்கள்

அமெரிக்க கார் தயாரிப்பாளர்களான செவர்லே நிறுவனத்தினர் தங்களது மிகவும் பிரபலமான கமேரோ ஸ்போர்ட்ஸ் காரை இன்று காட்சிக்கு வைத்துள்ளனர்.  இந்த கார் அமெரிக்காவில் புழக்கத்தில் உள்ளது போன்ற இடது பக்கம் அமர்ந்து  ஓட்டும் வசதி (  லெப்ட் ஹேன்ட் ட்ரைவ் ) கொண்டுள்ளது. ஆறாவது தலைமுறை கமேரோ கார்களான இவை போர்ட் முஸ்டாங் GT கார்களுடன் போட்டியிடும் என்று தெரிகிறது.  முஸ்டாங் கார்களை விட குறைந்த எடையையும் அதிக சக்தியையும் இந்த கமேரோ கார்கள் கொண்டுள்ளது.  மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.  

2016 ஆட்டோ எக்ஸ்போவில் செவர்லே ஸ்பின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது

 தற்போது நடந்து வரும் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் செவர்லே  நிறுவனம் தனது ஸ்பின் MPV வாகனங்களை காட்சிக்கு வைத்துள்ளது. இந்த வாகனம் மாருதி சுசுகி எர்டிகா , ஹோண்டா மொபிலியோ  ஆகிய மற்ற MPV பிரிவு வாகனங்களுடன் போட்டியிடும். செவர்லே நிறுவனத்தின் தற்போது புழக்கத்தில் உள்ள MPV வாகனமான  செவர்லே என்ஜாய் வாகனங்கள் டேக்ஸி வாகனமாக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.  ஸ்பின் MPV வாகனத்தை ஒரு ப்ரீமியம் MPV வாகனமாக செவர்லே பிரகடனப்படுத்துகிறது.  இந்திய சந்தையில் 2017ல் இந்த MPV வாகனங்கள் அறிமுகப்படுத்த படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை