MG Hector விமர்சனம்: குறைந்த மைலேஜ் உடன் உண்மையில் சமரசம் செய்து கொள்ள வேண்டுமா ?
Published On ஆகஸ்ட் 23, 2024 By ansh for எம்ஜி ஹெக்டர்
- 1 View
- Write a comment
ஹெக்டரின் பெட்ரோல் பதிப்பில் மைலேஜை தவிர சொல்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
எம்ஜி ஹெக்டர் அதன் விலை வரம்பில் கிடைக்கும் மிகப்பெரிய எஸ்யூவி களில் ஒன்றாகும்,.மேலும் இது பிரீமியம் வடிவமைப்பு, விசாலமான கேபின், நிறைய நல்ல வசதிகள் மற்றும் பெட்ரோல் மற்றும் டீசல் பவர் ட்ரெயின்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை ரூ.13.99 லட்சம் முதல் ரூ.21.95 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) உள்ளது. இது டாடா ஹாரியர், மஹிந்திரா XUV700 இன் 5-சீட்டர் வேரியன்ட்கள் மற்றும் ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸின் ஹையர்-ஸ்பெக் வேரியன்ட்களுடன் போட்டியிடுகிறது.
வெளிப்புறம்
ஹெக்டர், அதன் அளவு மற்றும் பிரீமியம் வடிவமைப்பால் ஒரு மிரட்டலான சாலை தோற்றத்தை கொண்டுள்ளது. ஹெக்டருக்கு அதன் தனிப்பட்ட தோற்றத்தைக் கொடுக்கும் பெரிய கிரில் காரணமாக எவரும் இந்த காரை தூரத்திலிருந்து அடையாளம் காண முடியும். நேர்த்தியான LED DRL -கள், ஸ்டைலான 18-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் கனெக்டட் டெயில் லைட்டுகள், இவை அனைத்தும் காருக்கு நவீன தோற்றத்தைக் கொடுக்கின்றன.
இருப்பினும் அதன் வடிவமைப்பில் சில விஷயங்கள் மாற்றப்பட்டிருக்கலாம். முதலில் அலாய் வீல்கள், எஸ்யூவியின் அளவைப் பொறுத்தவரை, 19-இன்ச் ஆக இருந்திருக்க வேண்டும். இரண்டாவது அதன் வெளிப்புறத்தில் உள்ள குரோம் பயன்பாடு. இப்போதெல்லாம் பெரும்பாலான கார்கள் அவற்றின் வடிவமைப்பில் குரோமை பயன்படுத்துகின்றன. ஆனால் ஹெக்டரில் குறிப்பாக அதன் கிரில்லில் குரோம் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.
MG ஹெக்டரின் ஒட்டுமொத்த வடிவமைப்பு 2019 ஆண்டு முதன்முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து பெரிதாக மாறவில்லை. ஆனால் நடந்த நுட்பமான மாற்றங்கள் இந்த எஸ்யூவிக்கு நவீன மற்றும் மிரட்டலான சாலை தோற்றத்தை வழங்கியுள்ளன. அதை புறக்கணிக்க முடியாது.
பூட் ஸ்பேஸ்
ஹெக்டரின் அதிகாரப்பூர்வ பூட் ஸ்பேஸ் விவரங்களை MG வெளியிடவில்லை. ஆனால் அது உங்கள் லக்கேஜ்களுக்கும் அனைத்தையும் வைக்க நல்ல அளவு பூட் லோடிங் கொள்ளளவை கொண்டுள்ளது. நீங்கள் சூட்கேஸ்களை எளிதாக வைக்கலாம்: பெரிய, நடுத்தர மற்றும் சிறிய, 2 சாஃப்ட் பைகளுக்கு இடம் உள்ளது.
நீங்கள் அதிக சாமான்களை வைத்திருக்க வேண்டியிருந்தால் அல்லது நீங்கள் மாற்றியமைத்து, உங்களுடன் நிறைய பைகளை வைத்திருந்தால் அதன் பின் இருக்கைகளை 60:40 விகிதத்தில் ஃபோல்டு செய்து பிளாட்பெட் ஆக மாற்றலாம், அங்கு உங்கள் எல்லா பொருட்களையும் சேமித்து வைக்கலாம். மேலும் ஒரு பவர்டு டெயில்கேட் உள்ளது. எனவே உங்கள் சாமான்களை சேமித்து வைத்த பிறகு ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் பூட் லிட்டை மூடலாம்.
இன்ட்டீரியர்
ஹெக்டர் வெளியில் இருப்பதைப் போலவே உட்புறத்திலும் ஹை கிளாஸ் ஆக் உள்ளது. ஹெக்டரின் உள்ளே லெதரெட் பூச்சு கொண்ட பிளாக் மற்றும் வொயிட் கலர் கேபின் தீம் கிடைக்கும். அது கம்பீரமாகவும் வென்டிலேஷனாகவும் இருக்கும். அதற்கு மேல் டாஷ்போர்டில் சாஃப்ட்-டச் பேடிங் கொடுக்கப்பட்டுள்ளது இது கேபினை அதிக பிரீமியமாக உணர வைக்கிறது.
டோர்களிலும் சாஃப்ட் டச் பேடிங் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் வெளியில் இருப்பதைப் போலவே, ஏசி வென்ட்கள், டோர் பேட்கள் மற்றும் சென்டர் கன்சோலில் உள்ள கேபினில் குரோம் இன்செர்ட்கள் உள்ளன.
பொருட்களின் தரம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம் குறிப்பாக சென்டர் கன்சோலில், சிறிய அழுத்தத்துடன் அவற்றை எளிதாக நகர்த்த முடியும்.அதை தவிர கேபினின் ஒட்டுமொத்த தரம் நன்றாக உள்ளது மற்றும் கொடுக்கும் பணத்துக்கு ஏற்றதாக உள்ளது.
முன் இருக்கைகளுக்குச் செல்லும்போது அவை விசாலமானவையாக உள்ளன மேலும் நீங்கள் மணிக்கணக்கில் இங்கு வசதியாக உட்காரலாம். மேலும் இந்த வசதியை அதிகமாக்க முன் இருக்கைகள் நகர்கின்றன மற்றும் ஒரு வென்டிலேஷன் செயல்பாடும் உள்ளது. இருப்பினும் இந்த இருக்கைகளின் வெள்ளை நிறம் காரணமாக அவை எளிதில் அழுக்காகிவிடும், மேலும் அவற்றை சுத்தமாக வைத்திருக்க நீங்கள் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டியிருக்கும்.
வசதிகள்
முதலாவதாக இந்த கேபினின் சிறப்பம்சமாக 14 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறது. இது குறைவான இன்ஃபோடெயின்மென்ட் டச் ஸ்கிரீன் மற்றும் ஆண்ட்ராய்டு டேப்லெட்டை போன்றது. மேலும் இது ஆண்ட்ராய்டு டேப்லெட்டை போன்றது என்பதால் அதை காரில் வைத்திருப்பது சில நிறைகளையும் குறைகளையும் கொண்டுள்ளது.
நல்ல விஷயம் என்னவென்றால் இந்த பிரிவில் அல்லது இந்த விலை வரம்பில் இதை விட பெரிய டச் ஸ்கிரீன் உங்களுக்கு கிடைக்காது. இது கேபினுக்கு பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது மற்றும் நீங்கள் ஒரு அழகான விலையுயர்ந்த காரில் அமர்ந்திருப்பதைப் போன்ற உணர்வை கொடுக்கிறது. மேலும் இது வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை சப்போர்ட் செய்கிறது.
ஆனால் இந்த ஸ்கிரீனில் சில குறைகளும் உள்ளன. முதலில் இது மிகவும் ரெஸ்பான்ஸிவ் ஆக இல்லை. தாமதமாக செயல்படுகிறது. மேலும் நீங்கள் ஒரு இன்புட்டை கொடுத்தவுடன் ஒரு பணியை முடிக்க சிறிது நேரம் எடுக்கும். எடுத்துக்காட்டாக நீங்கள் காரை ஸ்டார்ட் செய்து ரிவர்ஸில் வைத்தால் பின்புறக் காட்சி கேமராவின் ஃபீடை காட்ட சில வினாடிகள் ஆகும்.
இரண்டாவதாக இந்த பெரிய டச் ஸ்கிரீன் -க்கு இடமளிக்கும் வகையில் MG ஆனது ஏசிக்கு எந்தவிதமான பாடி கன்ட்ரோலையும் கொடுக்கவில்லை. இது அதன் சொந்த பிரச்சனையாகும். ஏசியின் கன்ட்ரோல்கள் டச் ஸ்கிரீனில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. மேலும் நீங்கள் ஆண்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார்ப்ளேவை பயன்படுத்துகிறீர்கள் என்றால் முகப்புத் திரைக்குத் திரும்பி ஏசி கன்ட்ரோல்களை திறக்க பல விஷயங்களை செய்ய வேண்டும். நீங்கள் அதைச் செய்தவுடன் வெப்பநிலை அல்லது ஃபேன் வேகத்தை சரி செய்ய விரும்பினால் இந்த டச் ஸ்கிரீன் -ல் சிறிய பட்டன்களை கவனமாகத் தொட வேண்டும். மேலும் அதைச் செய்வதற்கான வாய்ஸ் கன்ட்ரோல்களை கொடுக்கும் போது அவை வழக்கமாக நோக்கத்தில் வேலை செய்யாது.
நீங்கள் காரை ஓட்டும்போது இந்த பணி இன்னும் கடினமாகிறது. ஏனென்றால் இந்தத் ஸ்கிரீனை பயன்படுத்த நீங்கள் சாலையிலிருந்து விலகிப் பார்க்க வேண்டியிருக்கும். அது மிகவும் ஆபத்தானது. எங்கள் கருத்துப்படி ஏசி -க்கான பிஸிக்கல் கன்ட்ரோல்கள் அவசியம். மேலும் எம்ஜி அவற்றை இங்கே கொடுத்திருக்க வேண்டும்.
7 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே உள்ளது. இது நன்றாக செயல்படுகிறது. இது எளிதில் புரிந்துகொள்ளக்கூடியது. உங்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களையும் காண்பிக்கும், மேலும் ADAS க்காக ஒரு பிரத்யேகப் பிரிவையும் கொண்டுள்ளது. விந்தை போதும் இது மைலேஜ் செயல்திறனைக் காட்டாது.
ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் கட்டுப்பாடு, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், மல்டி கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை இந்த காரில் உள்ள ஹெக்டரில் உள்ள மற்ற ஹைலைட்ஸ் ஆகும்.
நடைமுறை மற்றும் சார்ஜிங் ஆப்ஷன்கள்
ஹெக்டர் அனைத்து கதவுகளிலும் 1-லிட்டர் பாட்டில் ஹோல்டர்கள், சென்டர் கன்சோலில் 2 கப் ஹோல்டர்கள், சென்டர் ஆர்ம்ரெஸ்டில் ஸ்டோரேஜ், சராசரி அளவிலான க்ளோவ் பாக்ஸ், சீட்பேக் பாக்கெட்டுகள், பின்புற ஆர்ம்ரெஸ்டில் 2 கப்ஹோல்டர்கள் மற்றும் பின்புற ஏசி வென்ட்களின் கீழ் பர்ஸ் அல்லது ஃபோனை வைக்க ஒரு பிளேட் இருக்கிறது.
இருப்பினும் ஹெக்டரில் சார்ஜிங் ஆப்ஷன்கள் இருக்க வேண்டிய அளவு இல்லை. வயர்லெஸ் ஃபோன் சார்ஜரைத் தவிர இது 2 USB சார்ஜிங் போர்ட்கள் மற்றும் முன்புறத்தில் 12V சாக்கெட் மற்றும் பின்புறத்தில் ஒரே ஒரு USB சார்ஜிங் போர்ட் ஆகியவற்றை மட்டுமே பெறுகிறது. ஹெக்டரில் குறைந்தபட்சம் டைப்-C சார்ஜிங் போர்ட்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
பின் இருக்கை அனுபவம்
இங்கே ஹெக்டர் பிரகாசிக்கிறது. இதன் பின் இருக்கைகள் ஏராளமான ஹெட்ரூம், லெக்ரூம், முழங்கால் அறை மற்றும் நல்ல அளவு தொடை ஆதரவையும் வழங்குகிறது. மூன்று பெரியவர்கள் தோள்களைத் இடித்துக் கொள்ளாமல் இங்கு வசதியாக உட்காரலாம். மேலும் கூடுதல் வசதிக்காக பின் இருக்கைகளை சாய்த்துக் கொள்ள முடியும். ஹெக்டரின் பின்புற இருக்கைகள் ஓட்டுநருக்கு ஏற்றதாக இருக்கும். ஏனெனில் நீங்கள் இங்கு எளிதாக உங்கள் கால்களை நீட்டி வசதியாக உட்காரலாம்.
மேலும் இடவசதி, வொயிட் கேபின் தீம் மற்றும் பெரிய ஜன்னல்கள் ஆகியவற்றின் காரணமாக பின்புற இருக்கைகளில் இருந்து நீங்கள் நல்ல தெரிவுநிலை கிடைக்கும். மேலும் காரின் உள்ளே நீங்கள் ஒருபோதும் நெரிசலாக இருப்பதை போல உணர மாட்டீர்கள்.
பாதுகாப்பு வசதிகள்
ஹெக்டரில் 6 ஏர்பேக்குகள், ABS உடன் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), டிராக்ஷன் கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் போன்ற அடிப்படை பாதுகாப்பு வசதிகள் உள்ளன.
இந்த வசதிகளைத் தவிர இது 360 டிகிரி கேமராவுடன் வருகிறது. இது நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது மற்றும் நல்ல கேமரா தரத்தையும் கொண்டுள்ளது. ஆனால் ஹெக்டரில் உள்ள மிகப்பெரிய பாதுகாப்பு உபகரணம் லெவல் 2 ADAS ஆகும். இந்த வசதிகளின் தொகுப்பில் லேன் டிபார்ச்சர் வார்னிங், லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஹை பீம் அசிஸ்ட் மற்றும் அட்டானமஸ் எமர்ஜென்சி பிரேக்கிங் ஆகியவை உள்ளன.
இந்த வசதிகள் அனைத்தும் ஹெக்டரை மிகவும் பாதுகாப்பான காராக மாற்றினாலும் கூட அதன் பாதுகாப்பின் உண்மையான மதிப்பீடு, கிராஷ்-டெஸ்ட் செய்யப்பட்டால் மட்டுமே தெரியும்.
செயல்திறன்
இன்ஜின் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் |
2 லிட்டர் டீசல் |
பவர் |
143 PS |
170 PS |
டார்க் |
250 Nm |
350 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT/ CVT |
6-ஸ்பீடு MT |
ஹெக்டர் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது: 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் மேனுவல் மற்றும் CVT ஆகிய இரண்டையும் பெறுகிறது. மற்றும் 2-லிட்டர் டீசல் இன்ஜின் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டுமே வருகிறது. எங்கள் ரிவ்யூவுக்காக பெட்ரோல் CVT வேரியன்ட்டை ஓட்டினோம்.
இந்த இன்ஜின் ரெஸ்பான்ஸிவ் ஆக உள்ளது, மென்மையானது மற்றும் நல்ல பவர் டெலிவரியை வழங்குகிறது. பவர்-டு-பம்பர் டிராஃபிக்கில் வாகனம் ஓட்டும் போது நீங்கள் எந்தவிதமான குழப்பங்களையும் உணராதபடி, பவர் டெலிவரி மிகவும் சீராக வழங்கப்படுகிறது. இந்த இன்ஜினை நீங்கள் தள்ளத் தொடங்கும் போது அழுத்தத்தை உணராது, மேலும் நகரத்திற்குள்ளேயோ அல்லது நெடுஞ்சாலையிலோ நீங்கள் எளிதாக முந்திச் செல்லலாம்.
மேலும் இந்த சீரான பவர் டெலிவரி CVT காரணமாக உள்ளது. இது மெதுவாகவோ அல்லது மோசமானதாகவோ இல்லை. இது ஒரு மென்மையான டிரைவிங்கை பெறுவதற்கும் உங்களுக்குத் தேவைப்படும்போது இன்ஸ்டன்ட் ஆக்ஸ்லிலரேஷனை பெறுவதற்கும் இடையே உள்ள சமநிலை ஆகும். எனவே மேனுவல் டிரான்ஸ்மிஷனில் இதை கண்டிப்பாக பரிந்துரைக்கிறோம்.
இருப்பினும் குறைந்த மைலேஜ் ஹெக்டர் பெட்ரோலின் பெரிய குறைபாடாகும். எங்களின் சோதனைகளில், சாதாரண நிலையில் வாகனம் ஓட்டும்போது இந்த இன்ஜின் நகருக்குள் 10 கிமீ/லி -க்கும் குறைவாகவும், நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டும் போது 13-14 கிமீ/லி -க்கும் குறைவான மைலேஜையே வழங்குகிறது இது மிகவும் குறைவன எண்ணிக்கையாகும்.
சவாரி கஃம்போர்ட்
மைலேஜில் நீங்கள் சமரசம் செய்ய வேண்டியிருந்தாலும் உங்கள் சவாரி வசதியிலும் நீங்கள் அதையே செய்ய வேண்டியதில்லை. சஸ்பென்ஷன் மேடுகளை எளிதில் சமாளிப்பதால் மென்மையாகவும் மெத்தை போலவும் உணர வைக்கிறது. நகருக்குள் பெரிய மேடுகள் மீது வாகனம் ஓட்டுவது கேபினுக்குள் உங்களுக்கு ஜெர்க்கை கொடுக்காது. ஆனால் சில சமயங்களில் நீங்கள் ஒரு சிறிய பக்கவாட்டு அசைவை உணர்வீர்கள்.
நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் ஹெக்டர் நிலையாக இருக்கும். ஆனால் பின்புற இருக்கை பயணிகள் மேடுகள் மீது செல்லும் போது சில அசைவுகளை உணர்வார்கள். மேலும் இந்த அளவிலான எஸ்யூவிக்கு ஹெக்டரில் சில எதிர்பார்க்கப்படும் இடங்களில் பாடி ரோல் உள்ளது. அதை ஷார்ப்பான திருப்பங்களில் செல்லும் போதோ அல்லது மலைப்பகுதிகளில் வாகனம் ஓட்டும்போதோ நீங்கள் உணர்வீர்கள்.
நிதானமாக வாகனம் ஓட்டினால் ஹெக்டரில் நீங்கள் அசௌகரியமாக உணர வாய்ப்பில்லை.
தீர்ப்பு
இப்போது எம்ஜி ஹெக்டரை வாங்குவது பற்றி யோசிக்க வேண்டுமா? நிச்சயமாக நீங்கள் கவனத்தில் வைக்கலாம். ஆனால் ஒரு கேட்ச் உள்ளது. இந்த காரில் பல விஷயங்கள் உள்ளன: சிறந்த சாலை தோற்றம், விசாலமான மற்றும் வசதியான கேபின், நல்ல வசதிகள், ஏராளமான பூட் ஸ்பேஸ் மற்றும் நல்ல செயல்திறன்.
இது சரியான குடும்ப எஸ்யூவி ஆக இருந்திருக்கலாம் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படி இல்லை. அதன் பெட்ரோல் இன்ஜின் மைலேஜ் திறன் கணிசமாகக் குறைவாக உள்ளது. அதன் கேபின் ஃபிட் மற்றும் ஃபினிஷ் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். மேலும் அதன் டச் ஸ்கிரீனில் நடைமுறைச் சாத்தியமற்ற தன்மையுடன் தாமதமும் உங்களை எரிச்சலடையச் செய்யும்.
இந்தக் குறைபாடுகளை நீங்கள் கவனிக்காமல் விட்டு உங்கள் குடும்பத்திற்கு இடவசதி மற்றும் வசதியை முன்னுரிமை அளித்தால் அல்லது நல்ல டிரைவிங் ஆர்வத்துக்கான அனுபவத்தைத் தரும் காரை நீங்கள் தேடுகிறீர்களானால் நீங்கள் MG ஹெக்டரை பரிசீலிக்க வேண்டும். குறைந்த மைலேஜ் உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தால், நீங்கள் எப்பொழுதும் சிறந்த மைலேஜை கொடுக்கும் டீசல் இன்ஜினை கருத்தில் கொள்ளலாம்.