• English
  • Login / Register

Mercedes-Benz EQE 500: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவ்யூ

Published On மே 07, 2024 By arun for மெர்சிடீஸ் eqe எஸ்யூவி

மெர்சிடிஸ் EQE காரில் ஆடம்பரம், தொழில்நுட்பம் மற்றும் உடனடி செயல்திறன் ஆகியவை ஒரே தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு மெர்சிடிஸ்-பென்ஸ் மீது அதிக நம்பிக்கை உள்ளது. அதன் சிறப்பான அணுகுமுறைக்காக பெரும்பாலான மக்களிடையே பிரபலமான சிறந்த சொகுசு பிராண்டாகக் உள்ளது. ஆனால் அவர்களின் எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் மெர்சிடிஸ் கவனமாக இருக்கின்றது. அதற்கான காரணம் என்ன ?

EQE கார் 1.4 கோடி (எக்ஸ்-ஷோரூம்) விலை கொண்ட ஒரு சொகுசு எலக்ட்ரிக் எஸ்யூவியாகும். அந்த விலையில் கருத்தில் கொள்ள வேண்டிய பிற எலக்ட்ரிக் எஸ்யூவி -களாக  ஆடி Q8 இ-ட்ரான் மற்றும் BMW iX ஆகியவை இருக்கின்றன.

நுட்பமானது, இரைச்சல் இல்லாதது

பெரும்பாலான கார் உற்பத்தியாளர்கள் எலக்ட்ரிக் பவருக்கு மாறுவதைப் பற்றி யோசிக்கத் தொடங்கியுள்ளனர். மெர்சிடிஸ்-பென்ஸ் மற்றும் அதன் EQE உள்ளிட்ட EV -கள் ஒரே ஒரு தனி  தொகுதியிலிருந்து வடிவமைக்கப்பட்டதை போல தெரிகின்றன. மேற்பரப்புகள் மென்மையாகவும், கண்களுக்கு எளிதாகவும், பொதுவாக நடத்தையில் குறைவாகவும் இருக்கும்.

பெரும்பாலான கோணங்களில் EQE500 காரை ஒரு எஸ்யூவி என்று நினைப்பது கடினம். படங்களில் இது மேலும் ஏமாற்றும் வகையில் சிறியதாகத் தெரிகிறது. தனிப்பட்ட முறையில் அளவு விலைக்கு ஏற்றதாகத் தெரிகிறது. இருப்பினும் GLE அல்லது GLS போன்ற மெர்சிடிஸ் -ன் கார்கள் கொண்டிருக்கும் தோற்றம் இதில் இல்லை.

இருந்தாலும் உட்கார்ந்து உற்றுப் பார்க்க நிறைய இருக்கிறது. உங்கள் லூயிஸ் உய்ட்டன் மற்றும் கூச்சி ஹேண்ட் பேக்குகளில் அச்சிடப்பட்டிருப்பதைப் போலவே 270 சிறிய மூன்று புள்ளிகள் கொண்ட நட்சத்திரங்கள் கிரில்லில் உள்ளன. இதை சொல்வது தேவையற்றதுதான், ஆனால் கண்டிப்பாக இது நல்ல உணர்வை கொடுக்கின்றது. ஹெட்லேம்ப்கள் ஒவ்வொன்றும் 1.3 மில்லியன் பிக்சல்கள் LED லைட்ஸ் மற்றும் ஒரு மெல்லிய லைட் பார் இரண்டையும் கனெக்ட் செய்கின்றது.

பிரம்மாண்டமான 20-இன்ச் அலாய் வீல்கள், ஃப்ளஷ் ஃபிட்டட் மோட்டார் கொண்ட டோர் ஹேண்டில்கள் மற்றும் ஏ-பில்லருக்கு அருகில் உள்ள நுட்பமான 'EQE' பிராண்டிங் ஆகியவை பக்கவாட்டில் ஹைலைட்கள் ஆக கொடுக்கப்பட்டுள்ளன. கோ டிரைவரின் பக்கத்தில், வாஷர்-வைப்பர் லிக்விட்டை நிரப்புவதற்கான கொடுக்கப்பட்டுள்ள இடத்தையும் நீங்கள் கவனிப்பீர்கள். பின்புறம் ஸ்டாண்டர்டான மெர்சிடிஸ் ஈக்யூ ஃபேர், பெரிய கனெக்டட் டெயில் லேம்ப்ஸ் மற்றும் சுவாரஸ்யமான கிராபிக்ஸ் மற்றும் பம்பர்களில் போலியான வென்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

EQE மிகவும் விலையுயர்ந்ததாகத் இருந்தாலு கூட சாலைகளில் அதன் அதிகாரத்தை குறிப்பிட்டு கூறும் வகையில் அல்ல. இந்த வடிவமைப்பு தங்கள் பணத்துடன் சத்தம் எழுப்பாமல் இருப்பதை நம்பாதவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

ஏற்கனெவே பழக்கமானதை போல உள்ளது !

EQE காரை உங்கள் கைகளில் பெறுவதற்கு முன்பு நீங்கள் ஏற்கனவே மெர்சிடிஸ்-பென்ஸை பார்த்திருக்கவோ/ஓட்டியிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன. ஆகவே நீங்கள் நிறைய வழக்கமான விஷயங்களை இந்த காரில் பார்ப்பீர்கள் மற்றும் நடைமுறையில் உடனடியாக வீட்டில் இருப்பதை போல உணருவீர்கள்.

வடிவமைப்பு முதன்மையான EQS காரை பிரதி எடுத்தது போல உள்ளது. இது EQE -ன் அளவீடுகளுக்கு ஏற்ப சரி செய்யப்பட்டுள்ளது. மெர்சிடிஸின் சிக்னேச்சர் ரேப்பரவுண்ட் டாஷ்போர்டு, சிக்கலான வட்டமான ஏர் கண்டிஷனிங் வென்ட்கள் மற்றும் லெதர், வுட், ஸ்கிரீன் மற்றும் லைட் ஆகியவை வழக்கமானவை.

பெரும்பாலும் தரம் எதிர்பார்க்கப்படுவதை விட நன்ராக உள்ளது. நீங்கள் தொடும் அனைத்தும் வளமானதாகவும், நீடித்து நிலைக்கக் கட்டமைக்கப்பட்ட உணர்வையும் தருகின்றன. ஏசி வென்ட்களில் இருந்து வரும் கிளிக்குகள் மிகவும் திருப்திகரமாக உள்ளன. மேலும் சென்ட்ரல் டனலில் உள்ள ஓபன்-போர் வுட் (நல்ல அளவீட்டிற்காக மெர்சிடிஸ் லோகோக்களுடன் உள்ளது) மிகவும் செழுமையாக உணர்கிறது. சீட் கன்ட்ரோல்களுக்கு  பின்னால் இருக்கும் பிளாஸ்டிக் பேனல் மற்றும் முன் மற்றும் பின்புறம் USB சார்ஜிங் இணைப்புகள் போன்ற சில விதிவிலக்குகள் உள்ளன.

நடைமுறையில் EQE காருக்கு இணையாக உள்ளது. இது நான்கு பேர் ஆறு அடி உடையவர்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கான இடம் தாராளமாக உள்ளது. பின் இருக்கையில் அமர்பவர்கள் இருக்கை அணிவகுப்பு தாங்கள் விரும்பியதை விடக் குறைவாக இருப்பதைக் கண்டறிவார்கள். மெர்சிடிஸ் ஹிப் பாயின்டை இன்னும் கொஞ்சம் குறைப்பதன் மூலம் இதை எதிர்கொள்ள முயற்சித்துள்ளது, ஆனால் அது சிக்கலை முழுவதுமாக அகற்றவில்லை. இந்த விலை வரம்பில் உள்ள மற்ற மெர்சிடிஸ் கார்களை போல இது பின் இருக்கை சார்ந்தது அல்ல என்பதும் தெளிவாக உள்ளது. கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் சார்ஜர்கள் ஆகிய இரண்டு இடங்களை தவிர பயணிகளுக்கு வேறு எதுவும் இல்லை - சன் ப்ளைண்ட்கள் இல்லை, பின்புறத்தில் இன்ஃபோடெயின்மென்ட் ஆப்ஷன்கள் இல்லை, ஆர்ம்ரெஸ்டில் கன்ட்ரோல்களும் இல்லை.

ஒரு குடும்பத்துக்கான காராக EQE சரியான பெட்டிகளைத் டிக் செய்கின்றது. பூட் 520 லிட்டர் என்பதால் விசாலமானது. இருப்பினும் அதில் ஒரு பகுதி ஸ்பேர் வீலால் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. எனவே EQE உடன் நீண்ட வார இறுதிப் பயணங்கள் செல்ல பூட் ஸ்பேஸ் போதுமானதாக இருந்தாலும் கூட  பூட் ஸ்பேஸ் சில சமயங்களில் சிக்கலை ஏற்படுத்தலாம்.

வசதிகள்

இந்த விலையில் EQE எஸ்யூவி நீங்கள் கேட்கக்கூடிய அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. அவற்றின் விவரங்கள்

மெமரி ஃபங்ஷன் கொண்ட பவர்டு முன் இருக்கைகள்

வென்டிலேட்டட்  மற்றும் ஹீட்டட் முன் இருக்கைகள்

மசாஜ் வசதி கொண்ட முன் இருக்கைகள்

64 மல்டி கலர் மோடுகள் கொண்ட ஆம்பியன்ட் லைட்ஸ் 

4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல்

மோட்டாரைஸ்டு ஸ்டீயரிங் அட்ஜஸ்ட்மென்ட்

பவர்டு டெயில்கேட்

PM 2.5 ஃபில்டர்

ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே

பனோரமிக் சன்ரூஃப்

வயர்லெஸ் ஃபோன் சார்ஜர்

USB Type-C சார்ஜர்கள் மட்டும் (Type-A அல்லது 12V இல்லை)

இந்த வசதிகள் அனைத்தும் உங்களுக்கு சரியான ஆடம்பர அனுபவத்தை வழங்க நன்றாக வேலை செய்கின்றன.

இருப்பினும், சிறப்பம்சமாக மெர்சிடிஸ்-பென்ஸ் காரின் சிக்னேச்சர் 'ஹைப்பர்ஸ்கிரீன்' இருக்க வேண்டும். இது மூன்று ஸ்கிரீன்களின் கலவையாகும் - முன்பக்க பயணிகளுக்கு ஒன்று, சென்ட்ரல் ஸ்கிரீன் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருக்கான ஒன்று.

நீங்கள் எதிர்பார்ப்பது போல் பிக்சர் குவாலிட்டி தமூன்றிலும் அருமையாக உள்ளது மற்றும் இன்டர்ஃபேஸ் -க்கு பழகுவது எளிது.

முன்பக்க பயணிகளின் திரையானது ஒரு வேடிக்கையான கூடுதல் அம்சமாகும், இது குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, பயணிகள் கன்ட்ரோல்களை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்றால் டிரைவருக்கு இடையூறு இல்லாமல் மியூஸிக்கை பிளே செய்ய விரும்பினால் அதைச் செய்யலாம். மாற்றாக நீங்கள் புளூடூத் இயர் போன்களை திரையில் கனெக்ட் ஆனால் அதற்கு பதிலாக உங்கள் ஃபோன் அல்லது ஐபாட் பயன்படுத்துவது எளிது.

செயல்திறன்

மெர்சிடிஸ்-பென்ஸ் EQE ஆனது ஒரு பெரிய 90.5kWh பேட்டரியை கொண்டுள்ளது, இது குறைவான விலையில் கிடைக்கும் EV -களில் இருப்பதை விட விட இரு மடங்கு பெரியது. இதன் கிளைம் செய்யப்பட்ட ரேஞ்ச் 550 கி.மீ ஆகும். ஆனால் நீங்கள் டிரைவிங்கில் நீங்கள் சுமார் 400 கி.மீ வரை இந்த காரில் எதிர்பார்க்கலாம்.

170kW DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தும் போது ​​EQE500 ஆனது சுமார் 30 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். 22kW திறன் கொண்ட AC ஹோம் வால்பாக்ஸ் சார்ஜரை பயன்படுத்தினால் 10 முதல் 100 சதவிகிதம் வரை சார்ஜ் ஆக 5 முதல் 6 மணிநேரம் ஆகும்.

இதில் 408PS மற்றும் 858Nm டார்க் உடன் கூடிய மிகவும் பவர்ஃபுல்லான மோட்டார் உள்ளது. இருந்தபோதிலும் எல்லா நேரத்திலும் வேகமாக அல்லது உற்சாகமாக ஓட்ட வேண்டும் என்ற உந்துதலை நீங்கள் உணர மாட்டீர்கள். பவர் டெலிவரி சீராகவும் வலுவாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நகருக்குள் வாகனம் ஓட்டுவது சிரமமற்றதாக உள்ளது. ஆக்சல்ரேஷனின் ரெஸ்பான்ஸ் -க்கு பழகுவது மிகவும் எளிதானது. பேடில் ஷிஃப்டர்களை பயன்படுத்தி ரீஜெனரேஷன் செய்யும் பிரேக்கிங்கின் நிலைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இருப்பினும் இங்கு ஒரு பெடல் டிரைவிங் முறை இல்லை. நெடுஞ்சாலையில், நம் நாட்டில் சட்டவிரோதமாகக் கருதப்படும் வேகத்தில் கூட பயணம் செய்வது மிகவும் வசதியானது.

பெட்ரோலில் இயங்கும் வாகனத்தை ஓட்டும் உணர்வை EVகள் இழக்கின்றன என்பதை மெர்சிடிஸ்-பென்ஸ் அறிந்திருக்கிறது. எனவே அவர்கள் டச் ஸ்கிரீனில் இருந்து தேர்ந்தெடுக்கக்கூடிய வெவ்வேறு சவுண்ட் மோடுகள் மூலம் டிரைவிங் அனுபவத்திற்கு சிறிது உயிர் சேர்க்க முயற்சித்துள்ளனர். 'சில்வர் வேவ்ஸ்' (வி6 பெட்ரோல் இன்ஜின் போன்றது), 'விவிட் ஃப்ளக்ஸ்' (நவீனமான டெக்னோ ஒலியை கொண்டுள்ளது) மற்றும் 'ரோரிங் பல்ஸ்' (ஸ்போர்ட்ஸ் கார் போன்றது).

சவாரி மற்றும் கையாளுதல்

மெர்சிடிஸ்-பென்ஸ் காரில் இருந்து நீங்கள் எதிர்பார்ப்பது போல் அனுபவம் மிகவும் வசதியானது. EQE500 பெரிய 20-இன்ச் அலாய் வீல்களைப் பயன்படுத்தினாலும், டயர்களில் ஏராளமான குஷனிங் உள்ளது, இது தாக்கத்தை குறைக்க உதவுகிறது. மிகவும் மோசமான பரப்புகளில், கார் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் பக்கவாட்டாக நகர்வதை நீங்கள் கவனிப்பீர்கள்.

கிரவுண்ட் கிளியரன்ஸ் பற்றிய சரியான விவரங்கள் இல்லை. இருப்பினும் பெரும்பாலான இந்திய நிலைமைகளுக்கு EQE சிறப்பாக செயல்படக்கூடும் . ஏர் சஸ்பென்ஷன் இருப்பதால் காரின் உயரத்தை 20 மி.மீ  வரை உயர்த்தலாம். இது உங்களுக்கு கூடுதல் மன அமைதியைத் தரும். இருப்பினும், மெர்சிடிஸ் காரின் EQC எலக்ட்ரிக் எஸ்யூவியில் கிரவுண்ட் கிளியரன்ஸ் சிக்கல்கள் இருப்பதால் வழக்கமான சாலைகளில் இதைச் சோதிக்க விரும்புகிறோம்.

தீர்ப்பு

மெர்சிடிஸ்-பென்ஸ் EQE500 4MATIC எஸ்யூவி முற்றிலும் இறக்குமதி செய்யப்பட்ட மாடலாகும், இதன் விலை 1.39 கோடி ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) ஆக உள்ளது. EQE காரை கருத்தில் கொள்வதற்கான முக்கிய காரணங்கள் அதன் ஆடம்பரமான இன்ட்டீரியர், டெக்னாலஜி மற்றும் EV டேக் ஆகும். நீங்கள் அதிக இடவசதி மற்றும் குடும்பப் பயன்பாட்டிற்கான பெரிய வாகனத்தை விரும்பினால் GLE அல்லது GLS போன்ற எஸ்யூவி -கள் அதிக அர்த்தமுள்ளதாக இருக்கும்.

சமீபத்திய எஸ்யூவி கார்கள்

வரவிருக்கும் கார்கள்

சமீபத்திய எஸ்யூவி கார்கள்

×
We need your சிட்டி to customize your experience