• English
    • Login / Register

    Kia Syros விமர்சனம்: சிறப்பான வடிவமைப்பு மட்டுமல்ல நடைமுறைக்கு மிகவும் ஏற்றது

    Published On மார்ச் 10, 2025 By arun for க்யா சிரோஸ்

    • 1 View
    • Write a comment

    சிரோஸ் வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டின் தனித்துவமான கலவையை ஒன்றாக கொண்டுள்ளது !

    சோனெட் மற்றும் செல்டோஸ் இடையே சப்-4-மீட்டர் எஸ்யூவி -யாக கியா சிரோஸ் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது சப்-காம்பாக்ட் எஸ்யூவி -களில் ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு மாற்று தேர்வாகவும் செடான் கார்களை வாங்க விரும்புவர்களை கவர்வதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிரோஸின் போட்டியாளர்களில் இந்தியாவில் விற்பனையாகும் டாப் கார்களான டாடா நெக்ஸான், மாருதி சுஸூகி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ மற்றும் கியாவின் சோனெட் ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும். மற்றும் சிரோஸின் மிட்-வேரியன்ட்களுடன் விலை ஆனது ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ் மற்றும் மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா/டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் போன்ற பெரிய எஸ்யூவிகளுக்கு நிகராக உள்ளது.

    இதே போன்ற பட்ஜெட்டில் நீங்கள் மாருதி டிசையர் அல்லது ஹோண்டா அமேஸ் ஆகியவற்றையும், மற்றும் ஃபோக்ஸ்ஸ்பீடுன் விர்ட்டஸ்/ஸ்கோடா ஸ்லாவியா மற்றும் ஹோண்டா சிட்டி போன்ற பெரிய செடான்களின் செடான்களின் லோவர் வேரியன்ட்களையும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம்.

    சிரோஸில் நீங்கள் எவற்றையெல்லாம் பெறலாம். இதை நீங்கள் ஏன் கருத்தில் கொள்ள வேண்டும்? நிறைகள் மற்றும் குறைகளை இங்கே விரிவாக பார்க்கலாம். 

    வெளிப்புறம்

    Kia Syros front

    சிரோஸில் கியா கையாண்டுள்ள அணுகுமுறை அதிர்ச்சியையும் பிரமிப்பையும் ஒருசேர ஏற்படுத்துகிறது. வடிவமைப்பு நாம் முன்பு பார்த்தது போல் இல்லை. மக்கள் தலையைத் திருப்பி இந்த காரை கவனிக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சொகுசு எஸ்யூவிக்கு இணையாக இதன் பாக்ஸி வடிவம் மற்றும் உயரமான நிலைப்பாடு உள்ளது என்பதை சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்ட சில கருத்துக்களில் பார்க்க முடிந்தது. 

    Kia Syros front

    சிரோஸ் ஆனது சோனெட் போன்ற அதே K1 தளத்தை அடிப்படையாகக் கொண்டது. இருப்பினும் கியா வீல்பேஸை முழுவதுமாக 50 மி.மீ நீட்டித்து, உயரம் மற்றும் அகலத்தையும் மேம்படுத்தியுள்ளது. கிரவுண்ட் கிளியரன்ஸ் 189 மிமீ  ஆக உள்ளது. ஆக மொத்தத்தில் முதல் பார்வையில் சிறிய கார் என தோற்ற வைக்காத ஒரு சிறிய அளவிலான கார் உங்களிடம் இருக்கும். கியா -வின் இந்த குழந்தை நம்பிக்கையுடன் தோற்றமளிக்கிறது மற்றும் மேலே உள்ள ஒரு பிரிவில் உள்ள பெரிய எஸ்யூவிகளுடன் தோளோடு தோளாக இணையாக இருக்கிறது.

    மாடல்

    கியா சிரோஸ்

    சோனெட்

    நீளம்

    3995 மி.மீ

    3995 மி.மீ

    அகலம்

    1805 மி.மீ

    1790 மி.மீ

    உயரம்

    1680 மி.மீ

    1642 மி.மீ

    வீல்பேஸ்

    2550 மி.மீ

    2500 மி.மீ

    Kia Syros headlights
    Kia Syros grille

    இருந்து பானட்டை பிரிக்கும் மெல்லிய பியானோ பிளாக் ஸ்ட்ரிப், பக்கவாட்டில் பெரிய ஆல்-எல்இடி ‘ஸ்பில் ஓவர்’’ ஹெட்லேம்ப்கள், அல்லது ஃப்ளஷ்-பிட்டீங் டோர் ஹேண்டில்கள் என வடிவமைப்பிலும் நிறைய சுவாரஸ்யமான விவரங்களை பார்க்க முடிகிறது. இதைத் தயாரிப்பதில் கியா எடுத்திருக்கும் துணிச்சலைப் பாராட்டாமல் இருக்க முடியாது. பெரும்பாலான பார்வையாளர்கள் சிரோஸ் ஒரு எலக்ட்ரிக் வாகனம் போல் இருப்பதாகக் கருத்துத் தெரிவித்தனர். மேலும் அவர்கள் ஏன் அப்படிச் சொல்கிறார்கள் என்பதும் எங்களுக்கு புரிந்தது. 

    Kia Syros side

    ஒரு பெரிய கண்ணாடி, ஜன்னல்களுக்கான நேராக கட் செய்யப்பட்ட லைன்கள் மற்றும் 17-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவை சிரோஸின் பக்கவாட்டு தோற்றத்தை மிகச்சிறப்பானதாக ஆக்குகின்றன. சக்கர வடிவமைப்பு மிகவும் தனித்துவமானது. டூயல்-டோன் ஷேடில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. 

    Kia Syros rear
    Kia Syros rear

    பின்புறம் பெரும்பாலானவர்களுக்கு போலரைஸ்டு ஆக தோன்றும். விண்ட்ஸ்கிரீனை சுற்றியுள்ள எல்-வடிவ லைட்ஸ் பவர்டு லைட்களாக செயல்படுகின்றன. அதே நேரத்தில் டெயில் லைட்கள் பம்பரின் கீழ் கீழே உள்ளன. முன் விளக்குகளை போலவே இவையும் விளிம்பில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதி பைக்கர்/ரிக்ஷாக்களால் அதிகம் சேதமடைய வாய்ப்புள்ளது. 

    வடிவமைப்பைப் பொறுத்த வரையில் கியா நிச்சயமாக புதிய ஒன்றை காருக்கு கொடுத்துள்ளது. இது வழக்கத்திற்கு மாறானதாக இருக்கலாம். ஆனால் இது காலப்போக்கில் உங்களுக்கு பிடித்துப் போகும்.

    இன்ட்டீரியர்

    Kia Syros dashboard
    Kia Syros pedals

    சிரோஸின் டோர்கள் போதுமான அளவு திறக்கின்றன. வயதானவர்களுக்கு கூட உள்ளே செல்வது மற்றும் வெளியே செல்வது எளிதானதாக இருக்கிறது. இருக்கைகளும் நடுநிலையான உயரத்தில் உள்ளன. மேலும் இவை தொந்தரவாக இருக்க வாய்ப்பில்லை. ஓட்டுநரின் இருக்கை 4-வே பவர்டு எலக்ட்ரிக் அட்ஜெட்மென்ட்டை கொண்டுள்ளது (ஹெயிட் அட்ஜஸ்ட்டபிள் மட்டுமே மேனுவலாக உள்ளது), மற்றும் ஸ்டீயரிங் ரிக்ளைனிங்-அட்ஜெஸ்ட்மென்ட் ஒன்றும் உள்ளது, இது ஓட்டுநர் நிலையைக் கண்டுபிடிப்பதை எளிதாக்குகிறது. எங்கள் குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் பெடல் பாக்ஸ் சற்று வலதுபுறமாக ஆஃப்-செட் செய்திருப்பதைக் கண்டறிந்தனர். டெஸ்ட் டிரைவின் போது இது உங்களுக்குத் தொந்தரவாக உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். 

    Kia Syros front seats

    முன் இருக்கைகள் வசதியாக உள்ளன. மேலும் 6 அடிக்கு மேல் உயரம் கொண்டவர்களாக இருந்தாலும் கூட போதுமான இடவசதி உள்ளது. முன் இருக்கையில் இருந்து, காரின் மூக்கு முழுமையாக தெரிகிறது. மற்றும் காரை சுற்றிய பார்வையும் நன்றாக கிடைக்கிறது. காரில் புதிதாக ஏறும் ஒரு டிரைவர் நிச்சயமாக இந்த விஷயத்தை பாராட்டுவார். 

    Kia Syros

    இருப்பினும் டாஷ்போர்டின் சிந்தனைமிக்க வடிவமைப்பு மற்றும் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரத்தை மிகச்சிறப்பானதாக உள்ளது. பிளாஸ்டிக்கின் தரம் இந்த பிரிவில் சிறந்தவற்றுடன் இணையாக உள்ளது. மேலும் கியா பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு அமைப்புகளையும் வடிவங்களையும் பயன்படுத்தியுள்ளது. நீங்கள் தேர்ந்தெடுக்கும் வேரியன்ட் அடிப்படையில் கியா கஸ்டமைஸசபிள் இன்ட்டீரியர் தீம் ஒன்றும் உள்ளது. இது அனுபவத்தை தனித்துவமாக்குகிறது. 

    Kia Syros steering wheel

    ஸ்டீயரிங் வீலுக்கான முற்றிலும் புதியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்போது டிரைவ் மற்றும் டிராக்‌ஷன் மோடு பட்டன்களை கொண்டுள்ளது. ஆஃப்-செட் கியா லோகோ மற்றும் பயன்படுத்தப்படும் லெதரெட் ரேப் ஆகியவை பிரீமியமாக உள்ளன. கேபினில் உள்ள மற்ற பட்டன்கள், பவர் விண்டோ சுவிட்சுகள், ஸ்டீயரிங் வீலில் உள்ள பட்டன்கள், கிளைமேட் கன்ட்ரோலுக்கான ஸ்விட்சுகள் ஆகியவையும் மிகத் தரமானதாக மட்டுமில்லாமல் சிறப்பாகவும் உள்ளன. 

    Kia Syros rear seats

    இதுவரை பார்த்த விஷயங்கள் பின் இருக்கையிலும் தொடர்கின்றன. கியா இங்கே ஆப்ஷன்களை கொடுக்கிறது. நீங்கள் தனியான பின் இருக்கை இடம் அல்லது சராசரிக்கு மேல் பூட் ஸ்பேஸ் இடையே இரண்டில் ஒன்றை தேர்வு செய்யலாம். இரண்டிற்கும் இடையில் ஒரு நடுத்தர ஸ்பேஸையும் நீங்கள் தேர்வு செய்யலாம். இருக்கைகளை முழுவதுமாக 75 மி.மீ முன்பக்கமாக நகர்த்தலாம். இது மிகப்பெரிய நபர்களுக்கு மிகவும் விசாலமானதாக இருக்கும். இதை மேலும் சேர்க்க இருக்கைகளை சாய்த்து, வசதியை அதிகரிக்கலாம். ஒரு எடுத்துக்காட்டுக்காக 6'5" உயரமுள்ள நபர் ஒரு 6' உயரமான ஓட்டுநருக்கு பின்னால் நிறைவான இடவசதியுடன் மிகவும் வசதியாக உட்கார முடிகிறது. 

    Kia Syros
    Kia Syros

    கியா மிகவும் புத்திசாலித்தனமாக சிரோஸின் கேபினுக்குள் ஸ்டோரேஜ் இடங்களில் வேலை செய்துள்ளது. முன்பக்கத்தில் உள்ள கதவுகள் ஒவ்வொன்றும் 3 பாட்டில்கள் மற்றும் ஒரு சிறிய குடை ஆகியவற்றை வைக்கலாம், ஒரு சன்கிளாஸ் ஹோல்டர், இரண்டு ஹோல்டர்கள், ஆர்ம்ரெஸ்டின் கீழ் ஒரு குட்டி மற்றும் ஒரு சிறிய அளவிலான க்ளோவ் பாக்ஸ் -க்கு மேலே ஒரு ஸ்லாட் உள்ளது. பின் இருக்கையில் அமர்வோருக்கு டோர் ஆர்ம்ரெஸ்ட் ஸ்டோரேஜ் இடங்கள், கீழே ஒரு பாட்டில் ஹோல்டர், கப்ஹோல்டர்கள் கொண்ட சென்ட்ரல் ஆர்ம்ரெஸ்ட், இருக்கை பின் பாக்கெட்டுகள் மற்றும் கோ டிரைவருக்கு பக்கத்தில் ஒரு மொபைல் போன் பாக்கெட்டுடன் கூடுதலாக பின்புற ஏசி வென்ட்களின் கீழ் ஒரு சிறிய ஃபோன் ஹோல்டர் ஆகியவை உள்ளன. கேபினில் ஒட்டுமொத்தமாக பயன்படுத்தக்கூடிய 23 ஸ்டோரேஜ் இடங்கள் உள்ளன. ஆம் எங்களுக்கு கிடைத்த எண் இது !. 

    பூட் ஸ்பேஸ்

    Kia Syros boot space

    பின் இருக்கைகளின் நிலையைப் பொறுத்து பூட் ஸ்பேஸ் 390-465 லிட்டர் வரை இருக்கும் என்று கியா தெரிவித்துள்ளது. பூட் ஆழமாகவும் அகலமாகவும் உள்ளது. மேலும் லோடிங் லிப் குறிப்பாக உயரத்தில் இல்லை. 60:40 ஸ்பிளிட் செயல்பாட்டில் கூடுதல் வசதி உள்ளது. இது கூடுதல் சாமான்களை எடுத்துச் செல்வதை எளிதாக்குகிறது. 

    வசதிகள்

    Kia Syros digital driver's display

    வசதிகள் என்று வரும்போது சிரோஸ் இந்த பிரிவில் உள்ள அனைத்து கார்களையும் தாண்டுகிறது. நீங்கள் ஒரு சிறிய காரை விரும்பினால் ஆனால் வசதிகளின் தொகுப்பில் சமரசம் செய்ய விரும்பவில்லை என்றால் இந்த சிறிய கியா நிச்சயமாக ஈர்க்கும். இதோ சிறப்பம்சங்கள்: 

    வசதி

    குறிப்புகள்

    12.3-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே

    மிருதுவான செயல்பாடு. டிரைவ் மோடுகளின் அடிப்படையில் கஸ்டமைஸபிள் தீம்களை கொண்டுள்ளது. 

     

    நீங்கள் கேட்கும் போது பக்க கேமராவின் காட்சியை காட்டுகிறது. பாதைகளை மாற்றும் போது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

    5 இன்ச் கிளைமேட் கன்ட்ரோல் டிஸ்பிளே 

    கிளைமேட் கன்ட்ரோலுக்கான அமைப்புகளை மாற்ற பயன்படுத்தலாம். ஸ்டியரிங் வீல் இதன் பார்வையை ஓரளவு மறைக்கிறது. 

    12.3 இன்ச் டச் ஸ்கிரீன்

    தனித்துவமான செயல்பாடு, சிறந்த மென்பொருள், அற்புதமான இயக்கம். கிட்டத்தட்ட BMW போன்ற இன்ஃபோடெயின்மென்ட் போன்ற அனுபவம் இங்கே கிடைக்கும்.

     

    வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஆகியவற்றை சப்போர்ட் செய்கிறது. மேலும் 360° கேமராவின் காட்சியையும் காட்டுகிறது. 

    360° கேமரா

    ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று. பிரேம் டிராப்ஸ் எதுவும் கவனிக்கப்படவில்லை. பல பயனுள்ள காட்சிகளைப் கொடுக்கிறது.

    8-ஸ்பீக்கர் ஹர்மன்/கார்டன் ஆடியோ சிஸ்டம்

    பாஸ் சற்று அதிகமாக உள்ளது. ஏற்றுக்கொள்ளக்கூடிய தெளிவு மற்றும் பிரகாசமான டோன்கள். 

    64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் 

    இதன் மூலம் டாஷ்போர்டு, சென்டர் கன்சோல் மற்றும் டோர் பேட் ஆகியவற்றிற்கான நிறத்தைத் தேர்ந்தெடுக்கலாம். வாகனத்திற்கு கான்செப்ட் கார் போன்ற அதிர்வை கொடுக்கும். இரவில் நன்றாக இருக்கிறது.

    Kia Syros power-adjustable front seats
    Kia Syros air purifier

    கீலெஸ் என்ட்ரி, புஷ்-பட்டன் ஸ்டார்ட்-ஸ்டாப், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்கள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவையும் உள்ளன. பின் இருக்கையில் இருப்பவர்களுக்கு தனியாக ஏசி வென்ட்கள் மற்றும் சன் ப்ளைண்ட்கள் ஆகியவையும் உள்ளன. சார்ஜிங் ஆப்ஷன்களில் இரண்டு டைப்-சி சார்ஜர்கள், 12வோல்ட் சாக்கெட் மற்றும் வயர்லெஸ் சார்ஜர் முன்பக்கத்திலும், இரண்டு டைப்-சி சார்ஜர்கள் பின்புறத்திலும் அடங்கும். 

    கியா சிரோஸில் மிஸ் ஆகக்கூடிய விஷயங்கள் வேறு எதுவும் இல்லை. ஒரு சில போட்டியாளர்கள் ஹெட்-அப் டிஸ்பிளே மற்றும் பவர்டு கோ-டிரைவர் சீட்களை கொடுக்கின்றனர். ஆனால் இவற்றை சிரோஸில் கொடுத்திருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டோம். 

    இன்ஜின் செயல்திறன்

    Kia Syros engine

    கியா சிரோஸுடன் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களை கொடுக்கிறது. 

    இன்ஜின்

    1-லிட்டர் டர்போ-பெட்ரோல்

    1.5 லிட்டர் டீசல்

    பவர்

    120 PS

    116 பி.எஸ்

    டார்க்

    172 என்எம்

    250 என்எம்

    டிரான்ஸ்மிஷன் *

    6-ஸ்பீடு MT / 7-ஸ்பீடு DCT

    6-ஸ்பீடு MT / 6-ஸ்பீடு AT

    மைலேஜ் (கிளைம் செய்யப்பட்டது)

    18.20 கிமீ/லி (MT) / 17.68 கிமீ/லி (DCT)

    20.75 கிமீ/லி (MT) / 17.65 கிமீ/லி (AT)

    *DCT = டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்; AT = டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்

    1 லிட்டர் டர்போ பெட்ரோல்

    இந்த 3 சிலிண்டர் இன்ஜின் தொடக்கத்தில் அதன் இருப்பை உணர வைக்கிறது. ஆனால் விரைவாக ஒரு சுமூகமான நிலைக்குத் திரும்புகிறது. பவர்/டார்க் எண்கள் மிகையாகத் தோன்றினாலும் ஓட்டும் போது அவசரமாக உணர வைக்கவில்லை. எந்த நேரத்திலும் இன்ஜின் பவர் இல்லாததை போல உணர வைக்கவில்லை. இது முற்றிலும் உற்சாகமாக இல்லை. நகரத்தில் ஓட்டுவது எளிதானது. மேலும் முழு சுமையுடன் கூட மாநிலங்களுக்கு இடையிலான நெடுஞ்சாலை டிரைவிங்குக்கு போதுமான பவர் இன்ஜினில் உள்ளது.

    7-ஸ்பீடு DCT மென்மையானது மற்றும் விரைவானது மற்றும் எப்போதும் சரியான கியரில் இருக்கின்றது. வழங்கப்பட்ட பேடில் ஷிஃப்டர்களை நீங்கள் பயன்படுத்த வேண்டுமா என்று நாங்கள் யோசிக்கிறோம். 

    1.5 லிட்டர் டீசல்

    Kia Syros

    ஹூண்டாய்-கியாவால் கண்டெடுக்கப்பட்ட ரத்தினம் இது. இந்த இன்ஜின் தேவைக்கேற்ப செயல்திறன் மற்றும் மைலேஜ் ஆகியவற்றின் சிறந்த சமநிலையை கொண்டுள்ளது. இங்கேயும், 2000rpm க்குக் கீழ் எதிர்பார்க்கப்படும் சில டர்போ லேக் -களை தவிர இன்ஜின் மூன்று இலக்க வேகத்தில் சிறப்பாக இருக்கிறது. இந்த இன்ஜினும் இருக்கையில் புஷ்-இன்-தி-சீட்-ஃபீலிங் உணர்வைத் தராது. ஆனால் வேகத்தில் செல்லும்போதும் சாதாரணமாகவும் நிதானமாகவும் உணர்கிறது. நாங்கள் சோதனை செய்த மாடல் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் வேகமும் போதுமானதாக இருந்தது. 

    நீங்கள் அதிக நெடுஞ்சாலைப் பயணங்களை மேற்கொள்வதாகக் கருதினால் அல்லது தினசரி 50-60 கி.மீ -க்கு மேல் வாகனம் ஓட்டினால் இந்த இன்ஜினையே பரிந்துரைக்கிறோம். 

    குறிப்பு: கியா சோனெட் உடன் ஒப்பிடும் போது சிரோஸில் இரைச்சல், அதிர்வு மற்றும் கடினத்தன்மை தொகுப்பை மேம்படுத்தியதாக கியா தெரிவித்துள்ளது. கேபின் குறிப்பாக ஸ்டார் செய்யும் போது, ​​குறிப்பாக அமைதியாக உள்ளது. சாலை மற்றும் காற்றின் சத்தமும் சிறப்பாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. 

    சவாரி மற்றும் கையாளுதல்

    Kia Syros

    கம்ஃபோர்ட் மீது சிரோஸ் கவனம் செலுத்தியிருப்பதால் இது இந்த பிரிவில் உள்ள மற்ற கார்களுடன் ஒப்பிடுகையில் கையாளுதல் ஓரளவுக்கு சுமாராகவே உள்ளது. அதன் உயரத்தைக் கருத்தில் கொண்டு, மலைப்பாதைகள் அல்லது திருப்பங்களில் நீங்கள் கடுமையாகப் ஃபிளிக் செய்தால் எதிர்பார்க்கப்படும் பாடி ரோலை உணர முடிகிறது. உற்சாகமாக அல்ல நிதானமாக இதை இயக்குவதே சிறந்தது. அதிர்ஷ்டவசமாக ஸ்டீயரிங் குறைந்த வேகத்தில் இலகுவாகவும், நெடுஞ்சாலை வேகத்தில் போதுமான எடையுடனும் இருப்பதால் புதிய ஓட்டுநர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கிறது. 

    சிரோஸின் ஒட்டுமொத்த சவாரி தரத்தை கியா மேம்படுத்தியிருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். குறைந்த வேகத்தில் உள்ள அலைவரிசை அற்ற மேற்பரப்புகள் சிரோஸை பக்கவாட்டாகச் சிறிது சிறிதாக நகர்த்துகின்றன. மேலும் ஆழமான பள்ளங்கள்/லெவல் மாற்றங்கள் சிரோஸின் சஸ்பென்ஷனை சில சமயங்களில் செயல்பட விடாமல் செய்கின்றன. அதிக வேகத்தில் கேபினில் வெர்டிகல் மூவ்மென்டையும் உணர முடிகிறது. இது பின்புறத்தில் அதிகமாக உள்ளது. மென்மையான நகரம்/நெடுஞ்சாலை சாலைகளில் மேலும் நீங்கள் புகார் செய்ய வாய்ப்பில்லை. பல்வேறு நிலப்பரப்புகளில் சிரோஸை ஓட்டவும், உங்கள் இறுதி முடிவை எடுக்கும் முன்னர் முன் பின் இருக்கையில் சிறிது நேரம் செலவிடவும் பரிந்துரைக்கிறோம். 

    பாதுகாப்பு

    Kia Syros 360-degree camera

    கியா பல பாதுகாப்பு அம்சங்களை தரமாக வழங்குகிறது. இதில் அடங்கும்:

    6 ஏர்பேக்குகள்

    EBD உடன் ABS

    எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல்

    ஹைலைன் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம்

    ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் 

    ஹில் அசிஸ்ட்

    முன் பார்க்கிங் சென்சார்கள்

    பின்புற பார்க்கிங் சென்சார்கள்

    Kia Syros ADAS

    டாப்-ஸ்பெக் பதிப்பில் லெவல் 2 ADAS உள்ளது. இது ஆட்டோ எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் ஹை பீம் அசிஸ்ட் போன்ற செயல்பாடுகளைத் கொடுக்கிறது. எங்களால் ADAS அமைப்புகளை முழுமையாகச் சோதிக்க முடியவில்லை. ஆனால் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப் சிஸ்டம்களை சுருக்கமாக சோதித்த போது அவற்றின் செயல்திறன் திருப்திகரமாக இருந்தது. ஹூண்டாய்-கியாவின் ADAS அமைப்பின் அளவுத்திருத்தம் பெரும்பாலும் இந்திய நிலைமைகளுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவே உள்ளது இதற்கு சிரோஸும் விலக்கு அல்ல. 

    குறிப்பு: சிரோஸ் ஒரு சுயாதீன அமைப்பால் இதுவரை கிராஷ்-டெஸ்ட் செய்யப்படவில்லை. மேம்பட்ட உயர்-வலிமை மற்றும் உயர்-திறன் கொண்ட ஸ்டீல் உடன் K1 தளத்தை 'வலுவூட்டியதாக' கியா தெரிவித்துள்ளது. அதே பிளாட்ஃபார்ம் அடிப்படையிலான சோனெட்டுடன் ஒப்பிடும்போது ​​சிரோஸ் கூடுதலாக 150 கிலோ எடையைப் பெறுவதற்கும் இதுவே காரணமாக அமைந்தது. கியாவின் இலக்கு 4 அல்லது 5 ஸ்டார் மதிப்பீடு ஆகும். 

    தீர்ப்பு

    Kia Syros rear

    ஒரு தொகுப்பாக பார்க்கப்போனால் கியா சிரோஸ் உண்மையிலேயே புத்துணர்ச்சியூட்டுகிறது மற்றும் குறை சொல்வது மிகவும் கடினம். இது வடிவமைப்பு, தரம், வசதிகள் மற்றும் மிக முக்கியமாக இடம் ஆகியவற்றின் அடிப்படையில் இது மிகச் சிறப்பானதாக உள்ளது. சரியான விலையில் கிடைக்கும் ஒரு சிறிய எஸ்யூவி தான் சிரோஸ். ஆகவே ஒட்டுமொத்தமாக பார்க்கப்போனால் இதை தவிர்ப்பது கடினம்.

    Published by
    arun

    சமீபத்திய எஸ்யூவி கார்கள்

    வரவிருக்கும் கார்கள்

    சமீபத்திய எஸ்யூவி கார்கள்

    ×
    We need your சிட்டி to customize your experience