சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

உலகளாவிய டெவலப்பர்கள் மாநாடு (WWDC) 2024 நிகழ்வில் நெக்ஸ்ட்-ஜென் ஆப்பிள் கார்ப்ளே அறிமுகப்படுத்தப்பட்டது

published on ஜூன் 13, 2024 07:23 pm by rohit

சமீபத்திய அப்டேட் மூலமாக ஆப்பிளின் கார்ப்ளே இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் முழுமையாக ஒருங்கிணைக்கப்படும். மேலும் உங்கள் ஐபோனிலிருந்து முக்கிய விவரங்களை மட்டுமில்லாமல் பல கஸ்டமைஸ்சேஷன்களையும் வழங்குகிறது

வருடாந்திர உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டின் (WWDC) மிகவும் உற்சாகமான அம்சங்களில் ஒன்றாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் விளக்கக்காட்சி இருக்கும், மேலும் இந்த ஆண்டின் நிகழ்வும் அதற்க்கு விதிவிலக்கல்ல. iOS 18 மற்றும் ஜெனரேட்டிவ் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) ஆகியவை முக்கிய சிறப்பம்சங்களாக இருந்தபோதிலும் ஆப்பிளின் அடுத்த தலைமுறை கார்ப்ளேக்கான முக்கிய அப்டேட்களையும் அறிவித்தது. இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் iOS 18 உடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

டிரைவர் டிஸ்ப்ளேவில் கார்ப்ளேவின் விரிவான ஒருங்கிணைப்பு

WWDC 2022-இல், வயர்லெஸ் முறையில் செயல்படும் காரின் சொந்த டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளேவில் கார்ப்ளேவை ஒருங்கிணைக்கும் திட்டங்களை ஆப்பிள் அறிவித்துள்ளது. இந்த ஒருங்கிணைப்பின் முக்கிய கவனம் வாகனம் முழுவதும் டிஜிட்டல் ஸ்கிரீன்களை கஸ்டமைசேஷன்களை வழங்குவதாகும். இந்த அம்சம் சென்ட்ரல் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டை தாண்டி டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் பயணிகளின் சைடு ஸ்கிரீனை (இருக்கும் பட்சத்தில்) உள்ளடக்கியது. இந்த அப்கிரேட் கார்ப்ளேவின் தற்போதைய வெர்ஷனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது காருக்குள் தடையற்ற மற்றும் நீட்டிக்கப்பட்ட ஐபோன் அனுபவத்தை வழங்குகிறது.

கார்ப்ளே ஒருங்கிணைக்கப்படும் போது ​​டிரைவரின் டிஸ்பிளேயில் உள்ள இன்புட்களை விரிவாக கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பதன் மூலம் ஆப்பிள் மேலும் ஒரு படியை எடுத்துள்ளது. ஃபாண்ட் ஸ்டைல் மற்றும் ஸ்கிரீனின் அகலத்தை மாற்றுவதற்கான ஆப்ஷன்கள், வண்ணங்கள் (செயல்படுத்தக்கூடிய) மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் உள்ள அளவீடுகளின் தோற்றத்தை முழுமையாக மாற்றுவதற்கான ஆப்ஷன்கள் இதில் அடங்கும்.

கார்ப்ளே-ஒருங்கிணைந்த டிஸ்ப்ளே ஆனது எரிபொருளின் அளவு அல்லது சார்ஜிங் லெவல், வேகம், இன்ஜின்-கூலன்ட் வெப்பநிலை நிலைகள் மற்றும் வேக வரம்புகள் (வரைபடங்கள் அல்லது சாலை அடையாளங்களிலிருந்து பெறப்படுவதன் அடிப்படையில்) உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் கொண்டிருக்கும். வாகன உற்பத்தியாளர்கள் குறிப்பிட்ட பவர்டிரெயின் (ICE, ஹைப்ரிட் அல்லது EV) அல்லது ஒரு குறிப்பிட்ட வேரியன்ட்டிற்கு ஏற்ப விரும்பினால், அளவைத் கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

ஆப்பிளின் சமீபத்திய வெர்ஷன் கார்ப்ளே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டருடன் ஒருங்கிணைக்கப்பட்டு கிளைமேட் கண்ட்ரோல் மற்றும் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) போன்ற பல வாகன அமைப்புகளின் மீதான கட்டுப்பாட்டை செயல்படுத்துகிறது. கூடுதலாக டிரைவர் டிஸ்ப்ளேவில் ஒருங்கிணைக்கப்பட்ட கார்ப்ளே ஐபோன் அறிவிப்புகளை நேரடியாக டிஜிட்டல் கிளஸ்டரில் ரிலே செய்யும் கவனச்சிதறல்களைக் குறைப்பதன் மூலம் பாதுகாப்பான ஓட்டுதலை ஊக்குவிக்கும். ஒருங்கிணைப்பின் அளவு கார்ப்ளேயுடன் தடையற்ற செயல்பாட்டிற்காக ஆப்பிளின் தொழில்நுட்பத்துடன் தங்கள் அமைப்புகளை சீரமைப்பதில் வாகன உற்பத்தியாளர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஒப்புதலைப் பொறுத்தது.

மேலும் படிக்க: உங்கள் பெட்ரோல் அல்லது டீசல் காரை எலெக்ட்ரிக் காரக மாற்றுவது எப்படி என்பதையும், அதற்க்கான செயல்முறை, சட்டம், நன்மைகள் மற்றும் செலவுகள் என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்

எந்தெந்த கார் நிறுவனங்கள் இதை அறிமுகப்படுத்தும்?

2022-இல் உறுதிப்படுத்தப்பட்டபடி, புதிய தலைமுறை கார்ப்ளேவை தங்களின் வரவிருக்கும் மாடல்களில் ஒருங்கிணைக்கும் முதல் சில கார் தயாரிப்பாளர்களாக போர்ஷே மற்றும் ஆஸ்டன் மார்ட்டின் இருக்கும். இருப்பினும் இந்த உற்பத்தியாளர்களிடமிருந்து இந்த கார்ப்ளே ஒருங்கிணைப்பால் பயனடையும் குறிப்பிட்ட மாடல்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. தற்போது ​​ஆப்பிள் கார்ப்ளே பல்வேறு உலகளாவிய வாகன உற்பத்தியாளர்களிடமிருந்து 800-க்கும் மேற்பட்ட கார்களில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் (ஸ்மார்ட்பிளே ஸ்டுடியோவிற்கான 7-இன்ச் டச்ஸ்கிரீன் பொருத்தப்பட்ட) என்ட்ரி-லெவல் மாருதி ஆல்டோ K10 முதல் கியா EV9 மற்றும் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் போன்ற பிரீமியம் கார்களும் இதில் அடங்கும்.

இந்த அம்சங்களுக்கான சரியான அறிமுக தேதியை ஆப்பிள் வெளியிடவில்லை என்றாலும், சில செயல்பாடுகள் ஆரம்பத்தில் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டுமே வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய அப்டேட் முறைகளை பின்பற்றி உலகளாவிய iOS 18 புதுப்பிப்பு செப்டம்பர் 2024-இல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆப்பிள் புதிய தலைமுறை ஐபோன்களின் வழக்கமான அறிமுகத்துடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

...கூடுதல், செய்திகள்

ஆப்பிளின் செல்ஃப் டிரைவிங் எலக்ட்ரிக் காரை உருவாக்குவது பற்றி பல வருடங்களாக ஊகங்கள் இருந்தபோதிலும், சமீபத்திய ஆன்லைன் கட்டுரைகள் தொழில்நுட்ப நிறுவனமான அந்த திட்டங்களை கைவிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றன. அதற்கு பதிலாக ஆப்பிள் அதன் சாதனங்களின் வரம்பிற்கு குறிப்பாக ஐபோன் உட்பட ஜெனரேட்டிவ் AI ஐ மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.

r
வெளியிட்டவர்

rohit

  • 43 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை