இந்தியாவில், கியா பிக்கான்டோ ஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு!
published on பிப்ரவரி 16, 2016 09:47 am by manish for ஹூண்டாய் ஐ10
- 24 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஹூண்டாய் மோட்டார்ஸின் துணை நிறுவனமான கியா, ஆந்திர பிரதேசத்தில் ஒரு உற்பத்தி தொழிற்சாலையை துவங்க திட்டமிட்டு வருகிறது. இதன்மூலம் தனது ஹேட்ச்பேக்கான கியா பிக்கான்டோ மற்றும் கச்சிதமான SUV-யான கியா ஸ்போர்ட்டேஜ் ஆகியவற்றை இந்தியாவிற்கு கொண்டு வர பேராவலோடு உள்ளது. இந்த தொழிற்சாலையை ஆண்டிற்கு 2,00,000 யூனிட்கள் தயாரிக்கும் திறன் கொண்டதாக அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வாகனத் தயாரிப்பாளரின் துணை நிறுவனத்திற்கு, ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீ சிட்டியில் தயாரிப்பு தொழிற்சாலை அமைக்கப்படும் என்ற சில யூகங்களும் உலா வருகின்றன.
ஆட்டோகார் உடனான ஒரு பேட்டியில் பேசிய கியா மோட்டார்ஸ் கார்ப்ரேஷனின் வெளிநாட்டு PR அணியின் பொது மேலாளர் திரு.மைக்கேல் சூ கூறுகையில் “வெளிநாட்டு தயாரிப்புத் தொழிற்சாலைக்கான சாத்தியமான இடங்களை குறித்து நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். இதில் இந்தியாவும் உட்பட்டிருக்க, இதை எதிர்கால வளர்ச்சிக்கான கூடுதல் என்ஜின்களாக வைத்து கொள்ள முடியும். ஆனால் இப்போதைக்கு இந்த காரியத்தில் இன்னும் ஒரு நிலையான திட்டம் எதுவும் உருவாகவில்லை” என்றார்.
இந்த கியா நிறுவனத்தின் தயாரிப்புகளை குறித்து அதிகம் கேள்விபடாதவர்களுக்கு நாங்கள் கூறுவது என்னவென்றால், பிக்கான்டோ என்பது ஒரு 5-டோர் கொண்ட ஹேட்ச்பேக் ஆகும். இதன் உறவுக்கார காரும், பெரும் வெற்றியை கண்ட மாடலுமான ஹூண்டாய் i10-யை ஒத்தாக கருதலாம். அடுத்த தலைமுறையை சேர்ந்த கியா பிக்கான்டோ-வை, சமீபத்தில் நடைபெற்ற 2015 பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இது, இந்த ஹேட்ச்பேக்கின் 4வது தலைமுறையைச் சேர்ந்த மாடலாகும். ஹூண்டாய் இயானில் காணப்படும் 1.0-லிட்டர் பெட்ரோல் மில் மற்றும் கிராண்ட் i10-ல் காணப்படும் 1.2-லிட்டர் பெட்ரோல் யூனிட் ஆகியவை இந்த காரில் அமையப் பெறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்திய சந்தையில் அடுத்துவரவுள்ள ஹாட் ஹேட்ச் பிரிவு காருக்கான வரவேற்பு எந்த மாதிரியாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, கியா நிறுவனத்தின் மூலம் ஹாட்-ஹேட்ச்சான கியா பிக்கான்டோ ஸ்போர்ட் வகையை இந்திய சந்தைக்கு கொண்டுவரவும் வாய்ப்பு உள்ளது.
ஹூண்டாய் i10-னின் டிரான்ஸ்மிஷன் தேர்வும், இந்த தரமான பிக்கான்டோ பகிர்ந்து கொள்ள உள்ள நிலையில், ஒரு 5-ஸ்பீடு MT மற்றும் ஒரு 4-ஸ்பீடு AT ஆகியவை இதில் உட்படும். கியா ஸ்போர்ட்டேஜ்ஜை பொறுத்த வரை, இந்த கிராஸ்ஓவர் கியா நிறுவனத்தை சார்ந்ததாக இருந்து, கச்சிதமான SUV சந்தையில் ஹூண்டாயின் முன்னணி போட்டியாளர்களான ரெனால்ட் டஸ்டர் மற்றும் ஃபோர்டு ஈகோஸ்போர்ட் ஆகியவற்றுடன் போட்டியிட உள்ளது.