சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

ஜாகுவார் F டைப் SVR விரைவில் அறிமுகம்

published on ஜனவரி 28, 2016 01:51 pm by nabeel for ஜாகுவார் எப் டைப் 2013-2020

உலகெங்கிலும் எந்தவித விவாதமும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்பட்ட, உலகின் மிக அழகான பந்தய கார்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஜாகுவார் F டைப் காரின் ஸ்பெஷல் எடிஷன் மாடலை, விரைவில் ஜாகுவார் நிறுவனம் அறிமுகப்படுத்தும். புதிய ஜாகுவார் F டைப் காருக்கு, F டைப் SVR என்று பெயர் சூட்டப்படும். SV என்னும் எழுத்துக்கள் ‘ஸ்பெஷல் வெஹிகில்ஸ் ஆபரேஷன்ஸ்' என்பதைக் குறிக்கின்றன. பெயரில் குறிப்பிட்டுள்ளது போலவே, ஜாகுவார் லாண்ட் ரோவர் நிறுவனத்தின் சிறப்பு வாகன செயலாக்கத் (ஸ்பெஷல் வெஹிகில்ஸ் ஆபரேஷன்ஸ்) துறையின் உதவியுடன் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக ஜாகுவார் நிறுவனம் SV என்னும் சின்னத்தைப் பெற்றுள்ளது என்பதை, நாம் இங்கு கவனிக்க வேண்டும். அது மட்டுமல்ல, கடந்த வருடம், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் காருடன் SVR என்னும் பெயர் இணைக்கப்பட்டு வெளிவந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ப்ராஜக்ட் 7 எடிஷனில் இடம்பெற்றுள்ள இஞ்ஜின் மாடலை, இந்த புதிய ஜாகுவார் F டைப் SVR ஸ்பெஷல் எடிஷனிலும் பொறுத்தியுள்ளனர். 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் கியர்பாக்சுடன் இணைக்கப்பட்டுள்ள 5.0 லிட்டர் V8 இஞ்ஜின் மூலம் இந்தப் புதிய கார் இயக்கப்படும் என்று, தற்போது ரகசியமாக வெளியாகியுள்ள இந்த கார் பற்றிய ப்ரோச்சர் மூலம் நமக்குத் தெரிய வந்துள்ளது. இத்தகைய சக்திவாய்ந்த இஞ்ஜின் மூலம், இதன் செயல்திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஜாகுவார் F டைப் மாடலின் இஞ்ஜின் உற்பத்தி செய்த 542 bhp மற்றும் 680 Nm டார்க் என்ற அளவை விட, இந்த முறை அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது, F டைப் SVR இஞ்ஜின், 567 bhp சக்தி மற்றும் 700 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யவல்லதாக இருக்கிறது. மேலும், குறைந்த எடையில் இந்த காரை உருவாக்க இவர்கள் பல விதத்திலும் மெனக்கெட்டுள்ளனர். முந்தைய மாடலில் பொருத்தப்பட்டிருந்த பிரேக்கை விட 21 கிலோக்கள் எடை குறைவான கார்பன் சேராமிக் ப்ரேக்குகள் மற்றும் மொத்த எடையில் இருந்து, 12 கிலோக்களை குறைக்கும் இலகுரக டைட்டானியம் எக்ஸாஸ்ட் அமைப்பு போன்ற புதிய தொழில்நுட்பங்களை இணைத்து, குறைந்த எடை காரைத் தயாரித்துள்ளனர். எதற்காக காரின் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பலர் உண்டு. எடை குறைக்கப்பட்டதனால் என்ன ஆனது என்பதை இப்போது பார்ப்போம். புதிய மாடல், தற்போது சந்தையில் உள்ள AWD F டைப் R மாடலை விட 0.4 வினாடிகளுக்கு முன்பே 100 கிலோ மீட்டரைத் தொட்டுவிடுகிறது. அதாவது, புதிய ஜாகுவார் F டைப் SVR ஸ்பெஷல் எடிஷன் காரை கிளம்பிய 3.7 வினாடிகளுக்குள், இதை 100 kmph வேகத்தில் செலுத்த முடியும். ஆம், குறைந்த எடையினால், இதன் செயல்திறனும் வேகமும் அதிகரிக்கிறது.

வெளிப்புறத் தோற்றத்தில் உள்ள முக்கியமான மாறுதல் என்னவென்று கேட்டால், இதன் பெரிய டயர்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பெரிய டயர்கள் இடம்பெற்றுள்ளதால், வண்டியைத் திருப்பும் போதும், அதிக வேகத்தில் செல்லும் போதும், சீராகவும் தடுமாற்றம் இல்லாமலும் செல்ல முடியும். அது மட்டுமல்ல, பின்புறத்தில் பெரிய டிஃப்யூசர், ரியர் விங், முன்புறத்தில் பெரிய ஸ்பாய்லர், பெரிய ஏர் இன்டேக் அமைப்பு மற்றும் அலுமினிய அலாய் சக்கரங்கள் ஆகியவை பொருத்தப்பட்ட இந்த கார், மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்படும் என்று தெரிகிறது. “ஸ்பெஷல் வெஹிக்கில் ஆபரேஷன்ஸ் உதவியுடன் தயாரான முதல் வாகனம் என்ற பெருமையை புதிய F டைப் SVR பெறுகிறது. எனவே, துல்லியமான பொறியியல் (ப்ரிஸிஷன் இன்ஜினியரிங்), செயல்திறன் மற்றும் வடிவமைப்பு போன்ற துறைகளில் எங்களுக்கு உள்ள அனைத்து அனுபவங்களின் மொத்த உருவமாக இந்த கார் உருவாக்கப்பட்டிருக்கிறது. மணிக்கு 200 மீட்டர் வேகத்தில், அனைத்து சீதோஷன நிலைகளிலும் சீராக செல்லக் கூடியதாக இந்த புதிய ஸ்பெஷல் எடிஷன் F டைப் SVR தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காருக்கான ஒரு கன்வர்டபிள் வெர்ஷனையும் நாங்கள் தயாரித்துள்ளோம். இதில் இடம்பெற்றுள்ள புதிய டைட்டானியம் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தின் உதவியால் நீங்கள் இதமான சத்ததுடன் பயணிக்கலாம்,” என்று ஜாகுவார் லாண்ட் ரோவர் ஸ்பெஷல் ஆபரேஷன்ஸ் துறையின் மேனேஜிங்க் டைரக்டரான திரு. ஜான் எட்வர்ட்ஸ் குறிப்பிடுகிறார்.

புதிய ஜாகுவார் F டைப் SVR ஸ்பெஷல் எடிஷன் காரின் விலை சுமார் £100,000 –ஆக , அதாவது சுமார் ரூ. 97 லட்சங்களாக இருக்கும் என்று தெரிகிறது. எனினும், இந்தியாவில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டால், இதன் விலை, ஏறத்தாழ ரூ. 2.5 கோடிகளில் இருந்து ரூ. 3 கோடிகள் வரை நிர்ணயிக்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் வாசிக்க: ஆட்டோ எக்ஸ்போவில் ஜகுவார் XE அறிமுகம்: சோதனை ஓட்டத்தின் போது உளவாளிகளின் கண்களில் தென்பட்டது

n
வெளியிட்டவர்

nabeel

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது ஜாகுவார் எப் டைப் 2013-2020

Read Full News

trendingகூபே சார்ஸ்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
எலக்ட்ரிக்
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்
Rs.5.91 சிஆர்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை