Tata Nexon EV LR: நீண்ட கால விமர்சனம் — கார் அறிமுகம்
Published On ஆகஸ்ட் 07, 2024 By arun for டாடா நெக்ஸன் இவி
- 1 View
- Write a comment
டாடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காரான நெக்ஸான் EV கார்தேக்கோ -வின் லாங் டேர்ம் ஃபிளீட்டில் இணைகிறது!
டாடா நிறுவனம் நீண்ட கால சோதனைக்காக நெக்சன் இவி -யை எங்களுக்கு அனுப்பி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. ஒரு குறுகிய காலத்திற்குள் ஏற்கனவே 2500 கி.மீ தூரம் ஓடிவிட்டது. காம்பாக்ட் SU-eV காரின் சில ஆரம்ப பதிவுகள் இங்கே உள்ளன.
ஸ்பிளிட் பெர்சனாலிட்டி
நாங்கள் முன்பு சோதனை செய்த டியாகோ EV போலவே நெக்ஸான் EV -யும் நகரத்திலும் அதைச் சுற்றியும் உள்ள பெரும்பாலான டிரைவ்களுக்கும் - மும்பையிலிருந்து புனேவிற்கு பல பயணங்களில் 'ECO' மோடில் மிகவும் திறமையான முறையில் ஓட்டுவதற்கு உங்களை ஊக்குவிக்கிறது. செயல்திறன் என்பது வெளிப்படையானது ஆனால் த்ராட்டில் இங்கே அளவீடு செய்யப்பட்ட விதத்தை நாங்கள் மிகவும் விரும்புகிறோம். வாகனம் நின்ற நிலையிலிருந்து நகர்த்துவதற்கோ அல்லது விரைவாக முந்திச் செல்லும் போது சிரமப்படுவதையோ நீங்கள் உணர முடியாது. இந்த முறை சூப்பர் ஷார்ப் மலைப்பகுதி சாலைகளில் கூட பயன்படுத்தக்கூடியது.
இருப்பினும் நீங்கள் ஃபன் டிரைவிங்கை விரும்பினால் ஸ்போர்ட் மோடு உள்ளது. 8.9 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை டாடா கோருகிறது. எங்கள் சோதனைகள் நெக்ஸான் EV 8.75 வினாடிகளில் வேகத்தை எட்டியது. ஆக்ஸிலிரேட்டரை நீங்கள் முடிவு செய்தால் அது உங்கள் வயிற்றில் ஒரு வலுவான உணர்வோடு உங்கள் முகத்தில் ஒரு புன்னகையை இந்த கார் ஏற்படுத்துகிறது.
காரின் ஏற்படும் மாற்றங்கள்
இந்த அப்டேட் உடன் டாடா மோட்டார்ஸ் பேடில் ஷிஃப்டர்கள் மூலம் ரீஜென் லெவல் ஆப்ஷனை கொடுத்துள்ளது. இது மிகவும் வசதியானது வேகத்தைக் குறைக்க ரீஜனை மட்டுமே நம்பியிருப்பதைக் பார்க்க முடிகிறது. உதாரணமாக நெரிசல் இல்லாத நகர போக்குவரத்து பொதுவாக L1 ரீஜென் மூலம் வாகனம் ஓட்டுகிறது. நாம் ஒரு ஸ்பீட் பிரேக்கர் அல்லது தடையை அணுகும்போது வலது பேடில் ஷிஃப்டரில் இரண்டு விரைவு அழுத்தங்கள் L3 ரீஜெனரேஷனை செயல்படுத்துகிறது. இது நமக்குத் தேவையான வேகத்தைக் குறைப்பது மட்டுமின்றி பிரேக் பேட்களுக்கும் ஏற்றது. பேட்டரிக்கு மீண்டும் அளிக்கப்படும் ஆற்றலில் ஒரு சிறிய முன்னேற்றம் உள்ளது.
குறைகள் (மற்றும் அவற்றை எவ்வாறு தீர்ப்பது)
இன்ஜின் ரீதியில் சொல்லப்போனால் நெக்ஸான் EV -யில் குறை சொல்வது கடினம். இது சம அளவில் திறமையானது வசதியானது மற்றும் வேடிக்கையானது. இருப்பினும் 12.3" டச் ஸ்கிரீன் மற்றும் 10.25" டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்ட புதிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் டாடா நெக்ஸானில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உங்களை சிறிது ஏமாற்றலாம் ஆனால் காலப் போக்கில் அதைச் சமாளிப்பது அல்லது நல்லபடியாகத் பயன்படுத்துவது என்பதை நாங்கள் கற்றுக்கொண்டோம்.
‘குரல் அறிவிப்புகள் எரிச்சலூட்டுவதாக எனக்கு தோன்றுகிறது’
செட்டிங்க்ஸ் மெனுவிற்குச் சென்று இதை ஆஃப் செய்து வைக்கலாம். இது ‘எகானமி/ஸ்போர்ட்/சிட்டி டிரைவ் மோட் ஆக்டிவேட் ஆக்டிவேட்’ ‘டேக் அவுட் தி கீ ஃபோப்’ போன்ற ப்ராம்ட்களை ஆஃப் செய்யும். துரதிர்ஷ்டவசமாக ஒவ்வொரு முறையும் காற்றின் தரம் மாறும்போது வாகனம் உங்களுக்குக் எச்சரிக்கையைத் கொடுக்கிறது. இது முற்றிலும் தேவையற்றது மற்றும் கவனத்தை சிதறடிக்கிறது.
‘டச் ஸ்கிரீன்/கருவி கிளஸ்டரில் உள்ள குறை’
முதலில் ம்யூட் பட்டனை பத்து வினாடிகள் அழுத்தி அதைத் தொடர்ந்து சோர்ஸ் பட்டனை பத்து வினாடிகள் அழுத்தி இரண்டு டிஸ்ப்ளேக்களையும் ரீசெட் செய்யலாம். இரண்டு டிஸ்பிளேக்களும் மீண்டும் ஸ்டார்ட் ஆகின்றன. பயணத்தின்போதும் இதை செய்யலாம் என்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்.
‘கார் லாக் செய்யப்ட்டிருந்தாலும் கூட டச் ஸ்கிரீன் செயல்பாட்டில் இருக்கும்’
டிரைவர் பக்கம் உள்ள டோர் சென்சாரில் இது ஒரு சிறிய பிரச்சனை. ரப்பர் ஸ்டாப்பரை சில முறை இழுக்கவும் (படத்தைப் பார்க்கவும்) பின்னர் வாகனத்தைப் லாக்/அன்லாக் செய்யவும். இந்தப் பிரச்சனையை இப்படிதான் நீங்கள் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
இன்ஃபோடெயின்மென்ட் முற்றிலும் தற்செயலாக நின்றுவிடுவது ஆப்பிள் கார்ப்ளே துண்டிக்கப்படுவது மற்றும் இண்டிகேட்டர்கள் ஹைப்பர்ஃப்ளாஷிங் போன்ற சிறிய குறைபாடுகளை நாங்கள் எதிர்கொண்டோம்.
நாங்கள் டாடாவை தொடர்பு கொண்டபோது ஒரு சாஃப்ட்வேர் அப்டேட் மூலமாக இதைச் சரிசெய்யவுள்ளதாக என்று எங்களிடம் தெரிவித்தனர். எங்கள் சோதனை காரில் பழைய மென்பொருள் (நவம்பர் 2023 முதல்) இருந்தது. டாடா சொன்னது போலவே நெக்ஸான் EV -க்கு விரைவான சேவை மற்றும் அப்டேட் புதுப்பிப்புக்கு கொடுக்கப்பட்டது. புதிய சாஃப்ட்வேர் இந்தச் சிக்கல்களைச் சரி செய்ததா என்பதை அறிய அடுத்த அறிக்கைக்காக காத்திருங்கள்.
மற்றபடி நாங்கள் நெக்ஸான் EV-யை ஓட்டுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மும்பையின் உச்சகட்ட வெப்பத்தில் முழு சார்ஜில் 280-300 கி.மீ வரை இது தொடர்ந்து ரேஞ்சை கொடுக்கிறது. தற்போது மழை பெய்வதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
நேர்மறை விஷயங்கள்: பயன்படுத்தக்கூடிய 300 கி.மீ ரேஞ்ச், விரைவான ஆக்ஸிலரேஷன்
எதிர்மறை விஷயங்கள்: இன்ஃபோடெயின்மென்ட் கருவியில் உள்ள நிறைய குறைபாடுகள்
பெற்ற தேதி: 23 ஏப்ரல் 2024
பெறப்பட்ட போது கிலோ மீட்டர்கள்: 3300 கி.மீ
கார் இதுவரை ஓடிய கிலோ மீட்டர்கள்: 5800 கி.மீ