Hyundai Verna டர்போ-பெட்ரோல் MT - லாங் டேர்ம் ரிப்போர்ட் (2,300 கி.மீ அப்டேட்)
Published On மே 13, 2024 By sonny for ஹூண்டாய் வெர்னா
- 1 View
- Write a comment
வெர்னா அதன் உண்மையான திறன் எது என்பதை காட்டத் தொடங்குகிறது. ஆனால் காரிலுள்ள வசதிகள் பற்றி சில கேள்விகள் எழுகின்றன !.
ஹூண்டாய் வெர்னா -வின் டாப்-ஸ்பெக் மேனுவல் ஆப்ஷன் இப்போது கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக எங்கள் அலுவலகத்தின் கேரேஜில் உள்ளது. இந்த காரில் நகரத்துக்குள்ளாக கணிசமாகவும் நெடுஞ்சாலையில் இரண்டு தொலைதூர பயணங்களையும் மேற்கொண்டுள்ளோம்.
வினோதமான தொழில்நுட்ப தொகுப்பு
செக்மென்ட் போட்டியை விட வெர்னா கொண்டுள்ள முக்கியமான நன்மைகளில் ஒன்று, அதன் விரிவான தொழில்நுட்ப வசதிகளின் பட்டியல். இது ஒரு நல்ல மற்றும் நவீன கேபின் அனுபவத்தை உருவாக்குகிறது. ஆனால் ஏறக்குறைய ஒவ்வொரு நல்ல வசதிக்கும் நிகராக கொஞ்சம் குறைகளும் உள்ளன. இது நீங்கள் செடானுடன் பயணிக்கும் போது மட்டுமே கவனிக்கப்படும்படி இருக்கும்.
வயர்லெஸ் கனெக்டிவிட்டி இல்லை
அந்த 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் நன்றாக வேலை செய்கிறது மற்றும் இன்டெகிரேட்டட் நேவிக்சேஷன் செட்டப் கூட உங்கள் வழியை எளிதாகக் கண்டறிய உதவும். ஆம்பியன்ட் லைட்ஸ் கொண்ட கேபின் குறிப்பாக இரவில் கூல் ஆக தெரிகிறது. நீங்கள் ஆண்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார்ப்ளேவை பயன்படுத்த முடியும் என்றாலும், இது கேபிளில் மட்டுமே வேலை செய்யும். இன்னும் குழப்பமான விஷயம் என்னவென்றால், ஹூண்டாய் பழைய வடிவமைப்பில் USB போர்ட்டை மட்டுமே வழங்கியுள்ளது. சென்ட்ரல் கன்சோலில் USB Type-C போர்ட் உள்ளது ஆனால் அது சார்ஜ் செய்வதற்கு மட்டுமே. உங்கள் மொபைலைச் செருகியவுடன் அதை வைக்க சரியான இடம் இல்லை என்பதை நீங்கள் உணரும்போது சற்று வெறுப்பாக இருக்கும். உங்கள் கப் ஹோல்டர்களில் வயர்டு ஃபோனை வைப்பதே உங்களுக்கு இருக்கும் ஒரே சிறந்த வழி.
ஸ்விட்ச்சபிள் கண்ட்ரோல் பேனல் - இது யாருக்காக?
புதிய வெர்னாவின் மற்றொரு சிறப்பான வசதி ஏசி மற்றும் மீடியாவிற்கு ஸ்விட்ச்சபிள் டச் கண்ட்ரோல் பேனல் ஆகும். ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் அந்த செயல்பாடுகளுக்கு இடையில் நீங்கள் மாறலாம். இதன் கூடுதல் பிரீமியம் பதிப்பை கியா EV6 போன்றவற்றில் காணலாம். ஆனால் இந்த வசதி ஏறக்குறைய முற்றிலும் முன்பக்க பயணிகளுக்கானது , ஏனெனில் ஸ்டியரிங்கில் அனைத்து தொடர்புடைய மீடியா கன்ட்ரோல் டிரைவரிடம் இருப்பதால் அவை கவனத்தை சிதறடிக்கும். அப்போதும் கூட பெரிய மற்றும் பயன்படுத்துவதற்கு ஏற்ற டச் ஸ்கிரீனுக்கு நன்றாக உள்ளது. டேஷ்போர்டில் மேலும் கீழும் ஏசி மற்றும் மீடியா கன்ட்ரோல்களுக்கு இடையில் மாறுவதற்குப் பதிலாக, உங்கள் பயணிகள் அதைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஒரே ஒரு கேமரா
வெர்னா முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்களை பெறுகிறது. ஆனால் கேமரா பின்புறத்தில் மட்டுமே உள்ளது. இது மேம்பட்ட பாதுகாப்பிற்காக அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -களுடன் வருகிறது. நான் பிளைண்ட் ஸ்பாட் டிடெக்ஷன் செட்டப் மற்றும் சென்சார்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. ஆனால் ஹூண்டாய் குறைந்த பட்சம் இன்னும் ஒரு கேமராவை கொடுத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் அதே விலையில் பல மாற்று கார்கள் (எஸ்யூவிகள்) 360 டிகிரி கேமரா அல்லது குறைந்தபட்சம் இடது ORVM கீழ் ஒரு பிளைண்ட்-வியூ கேமராவை கொண்டிருந்தன (ஹோண்டாசிட்டி)
சற்று மோசமான ADAS அனுபவம்
மோதல் எச்சரிக்கை அமைப்பிலும் (கொகிஷன் வார்னிங் சிஸ்டம்) நான் சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதே வேளையில் இது இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். ஒரு சில தடவைகளுக்கு மேல் அது மோதலின் உடனடி அச்சுறுத்தல் இல்லாவிட்டாலும் மிகவும் ஆக்ரோஷமாக பிரேக்குகளைப் பயன்படுத்தியது. பெரும்பாலும் இரு சக்கர வாகனங்களின் அருகாமையில் செல்வதால் இது தூண்டப்படுகிறது. பைக் உங்களுக்கு முன்னால் கட் அடிக்கும் போது அல்லது பார்க்கிங்கில் இருந்து வெளியே காரை எடுக்கும் போது பைக்கின் வேகம் குறைக்கப்படாவிட்டால் இது நிகழ்கின்றது. ஒருவேளை இந்த சிஸ்டத்தை முழுவதுமாக அணைத்து வைக்கலாம், ஆனால் இந்த தொழில்நுட்பத்தை வழங்கும் சிறந்த வேரியன்ட்டை தேர்ந்தெடுப்பதில் அர்த்தமில்லாமல் போகும் இல்லையா?
நெடுஞ்சாலைகளில் சிறப்பான சவாரி தரம்
டர்போ-பெட்ரோல் வெர்னாவுடன் எனது முதல் சில நாட்களில் இந்த மேனுவல் டிரான்ஸ்மிஷன் போர்வையில் மைலேஜ் (சராசரியாக 10 கிமீ/லிக்கு கீழ்) என்ற மைலேஜ் கிடைத்தது. இருப்பினும் 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் என்னை ஆச்சரியப்படுத்தியது. குறிப்பாக நீண்ட நெடுஞ்சாலை பயணங்களில். 'நார்மல்' மோடில் ஆறாவது கியரில் 100 கிமீ வேகத்தில் ஓட்டுவதால், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில் 20 கி.மீ -க்கு மேல் செயலில் உள்ள பெர்ஃபாமன்ஸ் என்னால் எளிதாகக் காண முடிந்தது. நகரத்தில் கூட குறைந்த ரெவ்களில் ஷிஃப்ட் செய்வதன் மூலம் என்னால் 12 கிமீ/லி வரை பெற முடிந்தது, இது முந்தைய சிறந்த 9.7 கிமீ/லி -லிருந்து ஒரு பெரிய முன்னேற்றம்.
ஹூண்டாய் செடான் நெடுஞ்சாலையில் உள்ள வீட்டில் உள்ளதை போன்ற உணர்வை கொடுக்கின்றது. ஏனெனில் சஸ்பென்ஷன் சாலையில் உள்ள பெரும்பாலான அலைவுகள் மற்றும் மேடுகளை மென்மையாக்குகிறது. நிச்சயமாக அந்த வேகத்தில் எந்தப் பள்ளத்தின் மீதும் ஓட்டினால் உங்கள் முதுகுத் தண்டுவடத்தில் அடிபடுவதை நீங்கள் உணர்கிறீர்கள். முந்திச் செல்வதற்கு இது மிக எளிதாக வேகத்தை கொடுக்கும். மேலும் நீங்கள் வெர்னாவை அமைதியற்றதாக உணரும் முன் நிச்சயமாக வேக வரம்புகளை மீறுவீர்கள்.
இந்த மேனுவல் வேரியன்ட்டின் ADAS கிட் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் லேன் டிபார்ச்சர் அசிஸ்டைத் தவறவிட்டாலும், வழக்கமான க்ரூஸ் கன்ட்ரோல் உடன் லேன் கீப் அசிஸ்ட் (LKA) இணைந்து மணிநேரம் ஓட்டுவதை எளிதாக்குகிறது. LKA ஆனது சாலையில் உள்ள லேன் அடையாளங்களைப் பின்பற்றுவதன் மூலம் ஒரு பிரதான நெடுஞ்சாலையின் இலகுவாக செல்ல உதவும். உங்கள் கைகளை அதிக நேரம் சக்கரத்தில் இருந்து எடுக்க வேண்டாம் என்று இது உங்களுக்கு நினைவூட்டுகிறது. ஆனால் அந்த குறுகிய இடைவெளிகளில் உங்கள் கைகளுக்கு ஓய்வு கொடுக்க போதுமானது.
அடுத்த மாதத்தில் வெர்னாவில் அதிக பயணங்களை செய்யவிருக்கிறோம். ஹூண்டாய் செடான் எந்தளவுக்கு நடைமுறைக்குரியதாக உள்ளது என்பதை அறிய காத்திருங்கள்.
நேர்மறை விஷயங்கள்: நெடுஞ்சாலையில் சிறப்பான மைலேஜ், பயனுள்ள டிரைவர் அசிஸ்ட்.
எதிர்மறை விஷயங்கள்: வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இல்லாதது, ஒரே ஒரு கேமரா வியூ மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
பெற்ற தேதி: டிசம்பர் 17, 2023
பெறும்போது கார் ஒடியிருந்த தூரம்: 9,819 கி.மீ
இன்று வரை ஓட்டிய தூரம்: 12,125 கிமீ (2,306 கி.மீ ஓட்டப்பட்டது)