BMW iX1 LWB ஃபர்ஸ்ட் டிரைவ் விமர்சனம்: குடும்பத்திற்கு ஏற்ற ஒரு பிஎம்டபிள்யூ கார்
Published On மார்ச் 25, 2025 By ansh for பிஎன்டபில்யூ ஐஎக்ஸ்1
- 1 View
- Write a comment
iX1 லாங் வீல் பேஸ் ஆனது இந்த விலையில் பிஎம்டபிள்யூ -வை வைத்திருப்பதற்கான உரிமையை உங்களுக்கு வழங்குகிறது. ஆனால் இது பிஎம்டபிள்யூ அனுபவத்திலிருந்து சில முக்கியமான விஷயங்களை எடுத்துக் கொள்கிறது.
ஒரு பிஎம்டபிள்யூ பேட்ஜுக்கு எவ்வளவு பணம் செலுத்தத் தயாராக இருக்கிறீர்கள்? ரூ.1 கோடி? 2 கோடி அல்லது 3 கோடியா ? சரி, ஆனால் இப்போது நீங்கள் இவ்வளவு செலவு செய்ய தேவையில்லை. பிஎம்டபிள்யூ நிறுவனம் iX1 LWB (லாங் வீல்பேஸ்) வெர்ஷனை விலை ரூ. 49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) -க்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது பிஎம்டபிள்யூ -வின் மிகவும் விலை குறைவாக எஸ்யூவி ஆக உள்ளது. இந்த விலையில் உங்களுக்கு பிஎம்டபிள்யூ -வின் பெரும்பாலான விஷயங்கள் கிடைக்கும், ஆனால் நீங்கள் விரும்பாத ஒரு விஷயம் உள்ளது.
வடிவமைப்பு
கூடுதல் வீல்பேஸ் காரணமாக iX1 LWB பெரிதாகத் தெரிகிறது. இது கேபினில் கூடுதல் லெக்ரூமை கொடுக்கிறது. அளவு இதை மேலும் கவனிக்க வைக்கிறது. மேலும் பிஎம்டபிள்யூ பிராண்டிலிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் உணர்வை வழங்குகிறது.
தூரத்தில் இருந்து பார்த்தால் இது ஒரு எலக்ட்ரிக் வானகம் என்பதை நீங்கள் கவனிக்காமல் இருக்கலாம். நுட்பமான வடிவமைப்புதான் அதற்கு காரணம். ஆனால் காருக்கு அருகில் நெருங்கியதும், பெரிய மூடிய கிட்னி கிரில்லை பார்ப்பீர்கள் - இது ஒரு EV! இது ஆல் எலக்ட்ரிக் பிஎம்டபிள்யூ மாடல்களின் சிக்னேச்சர் கிரில் ஆகும். மேலும் இதன் அளவு எஸ்யூவி -யின் நிலைப்பாட்டுடன் நன்றாக பொருந்துகிறது.
குறிப்பாக நாங்கள் விரும்பிய ஒன்று லைட் செட்டப் ஆகும். ஹெட்லேம்ப்கள் நேர்த்தியான கர்வ்டு டிஆர்எல் -களால் சூழப்பட்டுள்ளன, இது இண்டிகேட்டர்களாகவும் செயல்படும். மேலும் டெயில் லைட்கள் சிறிய முக்கோண டீடெயிலை கொண்டிருப்பதால் அது காரை தனித்து காட்டுகிறது.
பூட் ஸ்பேஸ்
ஒரு பட்டனைத் தொட்டால் பவர்டு டெயில்கேட் திறக்கும். அதுவும் மிக விரைவாக. அது திறந்தவுடன், பேட்டரி பேக் காரணமாக பூட் ஃபுளோர் உயரத்தில் இருப்பதையும் பூட் ஸ்பேஸ் ஓரளவு குறைவாக இருப்பதையும் கவனிக்க முடியும்.
இன்னும் 2-3 கேபின் அளவுள்ள டிராலி பைகளையும், சில சிறிய பைகளையும் இங்கே வைக்கலாம். நீங்கள் ஃபுளோர் மேட்டை தூக்கினால் ஷாப்பிங் பைகளை வைத்திருக்க போதுமான இடம் கிடைக்கும். அவ்வளவுதான் ஆனால் அதற்கு மேல் எந்த இடமும் இல்லை. உங்கள் பயணங்களுக்கு ஒட்டுமொத்த பூட் ஸ்பேஸ் போதுமானது. ஒரே ஒரு விஷயம் அதன் பயன்பாட்டினை அதிகரிக்க சிறிய பைகளை பயன்படுத்தி இதை பேக் செய்கிறீர்கள்.
2 பெரிய சூட்கேஸ்களை வைக்கலாம், ஆனால் தளம் உயர்வாக இருப்பதால், சூட்கேஸ்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைக்க உங்களுக்கு போதுமான இடம் கிடைக்காது. 490-லிட்டரில், இந்த பூட் ஆழமானது. இது நிறைய பொருட்களை வைத்திருக்க போதுமானது, ஆனால் நீங்கள் அதை எப்படி வைத்திருக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருந்தால் மட்டுமே இடத்தை சரியாக பயன்படுத்த முடியும்.
ஒரு பிஎம்டபிள்யூ கேபின்
நீங்கள் காருக்குள் நுழையும்போது கேபின் ஒரு வழக்கமான பிஎம்டபிள்யூ -வை போலவே இருப்பதைப் பார்க்கிறீர்கள். அது அழகாக இருக்கிறது. அனைத்து மூலைகளிலும் சாப்ட் டச் டபிள் உள்ளது. பயன்படுத்தப்பட்ட பொருள்களின் தரம் மிகச் சிறப்பானது. மேலும் அது உங்களை காரின் மீது காதல் கொள்ள வைக்கிறது.
ஸ்கிரீன்கள் பாதி டேஷ்போர்டை எடுத்துக் கொள்கின்றன. ஆனால் மீதமுள்ள பாதியில் உள்ள நேர்த்தியாக வைக்கப்பட்டுள்ள ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் மெலிதான ஏசி வென்ட்கள் கவனத்தை ஈர்க்கின்றன. iX1 LWB ஆனது பிஎம்டபிள்யூ -வின் எம் ஸ்போர்ட் பேக்கேஜுடன் ஸ்டாண்டர்டாக வருகிறது. இது இந்த கேபினின் தோற்றத்தையும் உணர்வையும் நன்றாக உயர்த்துகிறது.
டிரைவ் செலக்டர், டிரைவ் மோட் பட்டன் மற்றும் வால்யூம் கண்ட்ரோல் உள்ளிட்ட உங்களின் பெரும்பாலான கன்ட்ரோல்களை கொண்ட ஃபுளோட்டிங் சென்டர் கன்சோல் உள்ளது. இந்த கேபின் குடும்ப எஸ்யூவிக்கானதை போலவே இருந்தாலும் ஓட்டுனருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன் இருக்கைகள் 8-வே பவர் அட்ஜெஸ்ட் செய்யக்கூடியவை மற்றும் டிரைவர் இருக்கை மெமரி செயல்பாட்டையும் பெறுகிறது. டில்ட் மற்றும் டெலஸ்கோபிக் ஸ்டீயரிங் வீலுடன் இணைந்து உங்கள் ஓட்டுநர் நிலையை கண்டறிவது மிகவும் எளிதானது.
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
இது உண்மையில் பிஎம்டபிள்யூ தானா? ஜெர்மன் பிராண்டின் மிகவும் மலிவும் விலை குறைவான எஸ்யூவியாக இருப்பதால் iX1 LWB ஆனது வசதிகள் என்று வரும் போது நிறைய சமரசங்களைச் செய்ய வேண்டியுள்ளது. மேலும் இந்த விலையில் உள்ள காரில் நீங்கள் எதிர்பார்க்காத ஒன்று.
உங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை பார்க்கும் முன்னர் எவை கிடைக்காது என்பது இங்கே.. வென்டிலேட்டட் முன் இருக்கைகள் இல்லை, 360 டிகிரி கேமரா இல்லை, வரையறுக்கப்பட்ட ADAS செயல்பாடு (அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் இல்லை) மற்றும் முக்கியமான இது EV ஆக இருந்தாலும், வெஹிகிள் டூ வெஹிகிள் (V2L) வசதி இல்லை. இந்த விஷயங்கள் மிகவும் விலை குறைவான கார்களில் கூட கிடைக்கின்றன.
10.7 இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 10.25 இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே கொண்ட கர்வ்டு ஸ்கிரீன் செட்டப் இதில் உள்ளது. டூயல் ஜோன் கிளைமேட கன்ட்ரோல், பனோரமிக் கிளாஸ் ரூஃப் மற்றும் 12-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் அமைப்பு ஆகியவை கிடைக்கும்.
வயர்லெஸ் ஃபோன் சார்ஜரும் உள்ளது, உங்கள் மொபைலை வைக்க ஒரு கிளிப்புடன் செங்குத்தாக உள்ளது. இது பார்க்கிங் அசிஸ்ட் வசதியை வழங்குகிறது. இது உங்கள் காரை நிறுத்த வேண்டியிருக்கும் போது ஸ்டீயரிங் வீலை கட்டுப்படுத்துகிறது. ஆனால் நாங்கள் காரை ஓட்டிய போது இது சரியாக வேலை செய்ய தெளிவான அடையாளங்கள் தேவை என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
பாதுகாப்பைப் பொறுத்தவரையில் iX1 LWB ஆனது 8 ஏர்பேக்குகள், டைனமிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள், வழிகாட்டுதல்களுடன் கூடிய பின்புற பார்க்கிங் கேமரா மற்றும் லேன் டிபார்ச்சர் வார்னிங், தன்னியக்க பிளைண்ட் ஸ்பாட் அலெர்ட், மற்றும் லெவல் 1 ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) வசதிகளுடன் வருகிறது.
இது போதுமான அளவுக்கு உள்ளது ஆனால் இது உங்களின் முதல் சொகுசு காராக இருந்தால் இதே போன்ற விலையில் அல்லது இன்னும் விலை குறைவான விலையில் இருக்கும் கார்கள் அதிக வசதிகளை உங்களுக்கு வழங்கலாம்.
கூடுதலான பட்டன்களை கொடுத்திருக்கலாம்
கேபினுக்கு மிகவும் "மினிமலிஸ்டிக்" தோற்றத்தை கொடுக்க பெரும்பாலான பிராண்டுகள் இப்போது சென்டர் கன்சோலில் இருந்து பட்டன்களை அகற்றி வருகின்றன. இது டாஷ்போர்டிற்கு மினிமலிஸ்டிக் தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் சில விஷயங்களுக்கு பாடி கன்ட்ரோல்களை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
முதலில் ஏசி -க்கு பிஸிக்கல் கன்ட்ரோல்கள் எதுவும் இல்லை. எனவே வெப்பநிலை அல்லது ஃபேன் வேகத்தை சரிசெய்ய நீங்கள் டச் ஸ்கிரீனையே தேட வேண்டும். நீங்கள் வாகனம் ஓட்டும் போது இதைச் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். மேலும் பிஸிக்கல் கிளைமேட் கன்ட்ரோல் பட்டன்கள் கொடுக்கப்பட்டிருந்தால் இந்த குறைபாடு ஏற்படாது. குறைந்த பட்சம் டச் ஸ்கிரீனின் கீழே ஒரு ஷார்ட்கட் உள்ளது. இது ஏசி கன்ட்ரோல்களை அணுக உங்களை அனுமதிக்கிறது.
ஆனால் மற்ற விஷயங்களை அணுக ஷார்ட்கட் இல்லை. பெரும்பாலான இவி -கள் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங்கிற்காக பேடில் ஷிஃப்டர்களை கொண்டுள்ளன. எனவே நீங்கள் பயணத்தின்போது லெவல்களை சரிசெய்யலாம். ஆனால் iX1 LWB -வில் இந்த விஷயம் இல்லை. ரீஜெனரேட்டிவ் நிலையை மாற்ற, நீங்கள் ஓட்டுநர் அமைப்புகளுக்குச் செல்ல வேண்டும். ரீஜெனரேஷன் செய்யும் பிரேக்கிங்கை கண்டறிந்து, நீங்கள் விரும்பும் அளவைத் தேர்ந்தெடுக்கலாம்.
அதாவது நீங்கள் ரீஜென் அமைப்புகளை மாற்ற விரும்பினால் நீங்கள் காரை நிறுத்திவிட்டு அதைச் செய்ய வேண்டும். ஏனெனில் வாகனம் ஓட்டும் போது இதை செய்வது கடினமானது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. பிஸிக்கல் கன்ட்ரோல் பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
நடைமுறை மற்றும் சார்ஜிங் ஆப்ஷன்கள்
கேபினில் இடப்பற்றாக்குறை இல்லை. முன்பக்கத்தில் இரண்டு கப் ஹோல்டர்கள், கூல்டு க்ளோவ் பாக்ஸ், நான்கு டோர்களிலும் பாட்டில் ஹோல்டர்கள் மற்றும் ஃபுளோட்டிங் சென்டர் கன்சோலின் கீழ் ஒரு பெரிய டிரே ஆகியவை உள்ளது. ஆனால், முன் ஆர்ம்ரெஸ்ட் ஸ்டோரேஜ் மிகக் குறைவு. நீங்கள் சாவியை இங்கே வைக்கலாம், அவ்வளவுதான்.
பின்பக்க பயணிகளுக்கு இருக்கை பின் பாக்கெட்டுகள், சென்டர் ஆர்ம்ரெஸ்டில் கப்ஹோல்டர்கள் ஆகியவை மட்டுமே கிடைக்கும்.
சார்ஜிங் ஆப்ஷன்களை பொறுத்தவரையில் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், 12V சாக்கெட் மற்றும் முன்பக்கத்தில் இரண்டு டைப்-சி போர்ட்கள் உள்ளன. பின்புற பயணிகள் இரண்டு டைப்-சி போர்ட்கள் பின்புற ஏசி வென்ட்களின் கீழ் உள்ளன.
பின் இருக்கை அனுபவம்
iX1 LWB -ன் சிறந்த பகுதி அதன் பின் இருக்கைகள் ஆகும். நீளமான வீல்பேஸ் காரணமாக, பின்புறத்தில் போதுமான இடவசதி உள்ளது. உங்களால் முடிந்தவரை உங்கள் கால்களை நீட்டிக்கொண்டு உட்காரலாம் அதன் பின்னரும் கூட இடம் உள்ளது.
பின் இருக்கைகள் சரியான அளவு தொடையின் ஆதரவை கொடுக்கின்றன, மேலும் சாய்வு கோணத்துடன் கூடிய மெத்தைகள் உங்கள் லாங் டிரைவ்களை மிகவும் வசதியாக மாற்றும். நீங்கள் கார் ஆர்வலராக இருந்தால் இந்த கார் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் உங்கள் குடும்பமாக பெரிதாக இருந்தால் பின் இருக்கைகளில் எளிதாக இடம் கிடைக்கும்.
செயல்திறன்
முன் சக்கர இயக்கி அமைப்பில் 204 PS ஆற்றலை வழங்கும் எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்ட 66.4 kWh பேட்டரி பேக் ஆகியவற்றால் உற்சாகமான மற்றும் ஸ்போர்ட்டி டிரைவ் அனுபவம் உங்களுக்குக் காத்திருக்கிறது. விரைவாக முந்திச் செல்வதற்கும், கொஞ்சம் வேடிக்கையாக இருப்பதற்கும் சக்தி போதுமானது.
iX1 LWB ஒரு குடும்பத்துக்கான கார் ஆகும். மேலும் அந்த பயன்பாட்டிற்கு, உங்களை சுற்றி வருவதற்கு போதுமான சக்தி உள்ளது. ஓவர்டேக்குகளை செய்வது எளிதானது மற்றும் மூன்று இலக்க வேகத்தை எளிதாக அடையலாம். செயல்திறனில் எந்த குறைபாட்டையும் நீங்கள் உணர மாட்டீர்கள், குறிப்பாக இந்த 50 லட்சத்திற்கும் குறைவான பிஎம்டபிள்யூ உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சுமந்து சென்று ஓட்டுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த காரில் இன்னும் கொஞ்சம் சக்தி இருந்தால் உங்களை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கும், ஆனால் இது ஒரு ஓட்டும் ஆர்வலர்களுக்கான கார் அல்ல. பெரும்பாலான நேரங்களில் நீங்கள் ஓட்டுநர் இயக்கத்திற்காக அதைப் பயன்படுத்துவீர்கள். மேலும் அந்த பயன்பாட்டிற்கு iX1 LBW -ன் செயல்திறன் போதுமானது. பவர் டெலிவரி சீராகவும், அமைதியாகவும் இருப்பதால் வாகனம் ஓட்டுவது மற்றும் ஓட்டுவது ஆகிய இரண்டையும் நிதானமாக ஆக்குகிறது.
ஆனால் இந்த விலை வரம்பில் உள்ள மற்ற கார்களில் இருந்து அதன் டிரைவ் அனுபவத்தை வேறுபடுத்தும் ஒரு விஷயம் என்னவென்றால் அது கார் கொடுக்கும் செயற்கையான ஒலி. பிஎம்டபிள்யூ ஐகானிக் சவுண்ட்ஸ் என்று அழைக்கப்படும் ஒன்றை வழங்குகிறது. இது ஆக்ஸிலரேஷன் உடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் ஆக்ஸிலரேட்டர் பெடலை மிதிக்கும் போதெல்லாம், அது கேபினுக்குள் போல் ஒலிக்கிறது, இது மிகவும் வேடிக்கையாக உள்ளது.
சவாரி தரம்
இங்கே எந்த புகார்களும் இல்லை. கேபினின் இயக்கம் நன்றாகக் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் நீங்கள் எந்த வித பக்கவாட்டு இயக்கத்தையும் அனுபவிப்பதில்லை. சிறிய குழிகளை இது எளிதில் சமாளிக்கும், பெரிய குழிகள் மற்றும் ஸ்பீட் பிரேக்கர்களையும் அப்படியே சமாளிக்கும்.
அதிக வேகத்தில் iX1 LWB நிலையானதாக உள்ளது. இது திருப்பங்களிலும் நன்றாகவே உள்ளது. எதையும் மிஸ் செய்ய மாட்டீர்கள்.
ஆனால், ஒரு விஷயம் சிறப்பாக இருந்திருக்கலாம் என நினைத்தால் அது சஸ்பென்ஷன் ஒலியாக இருக்கும். சிறிய மேடுகளில் கூட கூட அந்த ஒலியை நீங்கள் கேட்கலாம். மற்றும் மோசமான சாலையில் நீங்கள் வாகனம் ஓட்டினால் மிகவும் எரிச்சலூட்டக் கூடும்.
ஒட்டுமொத்தமாக iX1 LWB வசதியாக உள்ளது, நன்றாக கையாளும் திறனை கொண்டுள்ளது. மேலும் பெரும்பாலான சூழ்நிலைகளில் இது உங்களுக்கு சிறந்த சவாரி தரத்தை வழங்கும். காரில் உள்ள அனைத்து பயணிகளும் வசதியாக இருப்பார்கள்.
தீர்ப்பு
இது சிறப்பான கார். குறிப்பாக நீங்கள் அதிக இடவசதி மற்றும் நல்ல ஓட்டுநர் விரும்பும் காராக இது இருக்கும், பிஎம்டபிள்யூ தரத்துடன் தேடுகிறீர்கள் என்றால் இது சிறப்பானது. (ஒப்பீட்டளவில்) அணுகக்கூடிய விலை ரூ. 49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) iX1 காரை மேலும் கவர்ந்திழுக்கும் வகையில் உள்ளது.
ஆனால் யோசிக்க வைக்கும் ஒரே விஷயம் என்பது வசதிகளின் பற்றாக்குறை மற்றும் மிதமான செயல்திறன் ஆகும். இது நீங்கள் பிஎம்டபிள்யூ -வை வாங்கும் போது நீங்கள் எதிர்பார்க்காத ஒன்று. இது வழங்கும் வசதிகள் மதிப்பை விட செயல்பாட்டில் அதிக கவனம் செலுத்துகிறது. பிஎம்டபிள்யூ iX1 LWB உடன் நீங்கள் பெறும் மிகப்பெரிய 'விஷயம்', பிஎம்டபிள்யூ -வை சொந்தமாக்குவதற்கான தற்பெருமையாக இருக்கலாம்.
குறைந்த விலையில் சிறந்த செயல்திறன் மற்றும் சிறந்த வசதிகளை பெறலாம். கேள்வி என்னவென்றால் அதற்கு பேட்ஜை விட்டுக் கொடுப்பீர்களா?