க்யா ev6 2022-2025 இன் முக்கிய அம்சங்கள்
ரேஞ்ச் | 708 km |
பவர் | 225.86 - 320.55 பிஹச்பி |
பேட்டரி திறன் | 77.4 - 84 kwh |
சார்ஜிங் time டிஸி | 73min 50 kw-(10%-80%) |
top வேகம் | 192 கிமீ/மணி |
- 360 degree camera
- memory functions for இருக்கைகள்
- சரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட்
- voice commands
- android auto/apple carplay
- advanced internet பிட்டுறேஸ்
- வேலட் மோடு
- adas
- panoramic சன்ரூப்
- heads அப் display
- key சிறப்பம்சங்கள்
- top அம்சங்கள்
க்யா ev6 2022-2025 விலை பட்டியல் (மாறுபாடுகள்)
following details are the last recorded, மற்றும் the prices மே vary depending on the car's condition.
ev6 2022-2025 ஜிடி line(Base Model)77.4 kwh, 708 km, 225.86 பிஹச்பி | ₹60.97 லட்சம்* | ||
ev6 2022-2025 ஜிடி line ஏடபிள்யூடி(Top Model)84 kwh, 663 km, 320.55 பிஹச்பி | ₹65.97 லட்சம்* |
க்யா ev6 2022-2025 விமர்சனம்
Overview
ஃபிளாக்ஷிப் EV + முழுமையான இறக்குமதியாகும் ஒரு விலையுயர்ந்த காராக இருக்கலாம், ஆனால் EV6 நிறைய உற்சாகத்தையும் தனித்துவத்தையும் கொண்டுள்ளது நீங்கள் அதை கவனத்தில் வைக்க வேண்டுமா?.
பில்ட்-அப் EV -களின் உலகில் கியாவின் என்ட்ரி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இது EV6 தோற்றத்தின் காரணமாக மட்டுமல்ல, ஸ்டைலான பம்பர்களுக்கு இடையில் இணைக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் காரணமாகவும் இருந்தது. இது ஸ்போர்ட்ஸ் கார் போன்ற செயல்திறன் மற்றும் சொகுசு கார் போன்ற அம்சங்களை கொடுப்பதாக உறுதியளித்தது, இப்போது அதை அனுபவிக்கும் நேரம் இது. இருப்பினும், இது முழு இறக்குமதி செய்யப்பட்டதாக இருக்கும், அதாவது இது ஆடம்பரப் பிரிவில் நிலைநிறுத்தப்படும். EV6 இறக்குமதி செய்யப்பட்டதாக இருந்தாலும் அதை நீங்கள் கவனத்தில் கொள்ளும் அளவுக்கு உற்சாகமாக இருக்குமா?.
வெளி அமைப்பு
அதன் அனைத்து EV இயங்குதளத்துடன், கியா வடிவமைப்பில் ஒரு தீவிரமான படி முன்னேறியுள்ளது. EV6 ஒரு வழக்கமான ஹேட்ச்பேக் அல்ல, அல்லது செடான் அல்லது எஸ்யூவி அல்ல. இது மூன்றின் கலவையாகும், மேலும் EV6 -யின் அளவு மற்றும் வடிவமைப்பு விவரங்களை நீங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டால், எங்கள் சாலைகளில் இதற்கு முன்பு நாம் எதுவும் பார்க்காதது போல் தெரிகிறது.
சாய்வான பானட், நேர்த்தியான கிரில் மற்றும் பெரிய ஹெட்லேம்ப்களுடன் தலை கூர்மையாகத் தெரிகிறது. பக்கத்திற்கு நகர்த்தவும், இந்த வாகனத்தின் பெரிய அளவுகள் நமக்கு தெரிகின்றன செயல்படத் தொடங்குகின்றன. ஆனால், விவரங்களில் கவனம் செலுத்துவதில்தான் இந்த கார் தனித்து நிற்கிறது. ஹெட்லேம்ப்கள் சிக்கலான DRLS மற்றும் முழு மேட்ரிக்ஸ் LED அமைப்பையும் பெறுகின்றன. மேல் DRL ஒரு இன்டிகேட்டராகவும் செயல்படுகிறது.
EV6 -யானது 4695 mm நீளம், 1890mm அகலம், 1550mm உயரம் மற்றும் 2900mm வீல்பேஸ் கொண்டது. எனவே, EV6 ஆனது டாடா சஃபாரியை போலவே நீளமாகவும் அகலமாகவும் இருக்கிறது, அதே சமயம் இது டொயோட்டா ஃபார்ச்சூனரை விட நீளமான வீல்பேஸை கொண்டுள்ளது!
EV -யின் சக்கரங்கள் முனைகளில் இருப்பதே இதற்குக் காரணம் - EV இயங்குதளத்தின் கட்டமைப்புக்கான அடையாளம். அத்தகைய அளவுடன், ஃபாஸ்ட்பேக் வடிவமைப்பின் காரணமாக EV இன்னும் ஸ்போர்ட்டியாகத் தெரிகிறது. பின்னர் 19 இன்ச் சக்கரங்கள், ஏரோ-குறிப்பிட்ட ORVM -கள் மற்றும் இந்த காரை கிளீனாக தோற்றமளிக்க உதவும் ஃப்ளஷ்-பொருத்தப்பட்ட கதவு கைப்பிடிகள் ஆகியவை கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
பின்புறத்தில், அழகாக விரிவாக இணைக்கப்பட்ட டெயில் விளக்கு மற்றும் டர்ன் இண்டிகேட்டர்களில் 3D பேட்டர்ன் மூலம் வடிவமைப்பில் கூர்மை தெரிகிறது. ஸ்பாய்லரும் ஒழுங்காக ஸ்போர்ட்டியாக உள்ளது மற்றும் அவற்றைப் பார்த்தவுடன் நீங்கள் தவறவிட முடியாதது ஒரு குறிப்பிட்ட ஹைப்பர் காரில் இருந்து உத்வேகம் பெறும் ரிவர்ஸ் லைட்டுகள்.
மொத்தத்தில், Kia EV6 அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். இது சாலையில் அதன் தோற்றத்தை அதன் அளவுடன் உணர வைக்கிறது மற்றும் வடிவமைப்பில் உள்ள விவரங்களுடன் உங்கள் கவனத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. இது இடங்களில் மிகையாகத் தோன்றலாம், ஆனால் நிச்சயமாக இதைப் போன்று வேறு எதுவும் சாலையில் இல்லை.
உள்ளமைப்பு
EV6 இன் டாஷ்போர்டு தளவமைப்பு எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் உள்ளது. நாம் பார்த்த மற்ற கார்களை போல இல்லாமல் இது ஒரு சுவாரஸ்யமான வடிவமைப்பை கொண்டுள்ளது. மினிமல் லேஅவுட், இரண்டு கர்வ்டு ஸ்கிரீன்கள், அது மிகவும் தெளிவாக இருக்க உதவுகிறது. 2-ஸ்போக் ஸ்டீயரிங் இந்த சிறிய வடிவமைப்பை திடப்படுத்த உதவுகிறது.
பியூர் EV இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு, EV6 ஒரு தட்டையான தளத்தை பெறுகிறது. இது வடிவமைப்பாளர்களுக்கு நிறைய இடத்தைத் திறந்து சென்டர் கன்சோலுக்கு மிதப்பதை போன்ற உணர்வை தருகிறது. இது காரை வித்தியாசமாக உணர உதவுவது மட்டுமல்லாமல், கேபினில் சேமிப்பக இடங்களுக்கு நிறைய இடங்களைத் திறக்கிறது, அதை நாம் சிறிது நேரம் கழித்துப் பேசுவோம்.
இருக்கைகள் மிகவும் வசதியாகவும் ஆதரவாகவும் உள்ளன மற்றும் 10-வே அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொள்ளக்கூடியவை. அளவு எதுவாக இருந்தாலும் இயற்கையான ஓட்டுநர் நிலையை பெற இது உதவுகிறது. மேலும், சார்ஜ் செய்யும் போது - இந்த இருக்கைகள் கிட்டத்தட்ட கிடைமட்ட நிலைக்கு (பூஜ்ஜிய-ஈர்ப்பு) சாய்ந்திருக்கும், இது உங்களுக்கு ஓய்வெடுக்கவும் தூங்கவும் உதவுகிறது. சர்வதேச அளவில், சீட் கவர்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கிலிருந்து உருவாக்கப்பட்டுள்ளன, ஆனால் இந்தியாவில், ஆப்ஷனலாக தைக்கப்பட்ட மற்றும் வீகன் லெதர் ஆகியவை கிடைக்கும். இருப்பினும், நீங்கள் இன்னும் மறுசுழற்சி செய்யப்பட்ட PET பாட்டில்களில் இருந்து கட்டப்பட்ட டோர் பேடில்களை பெறுவீர்கள்.
அம்சங்கள்
EV6 அம்சங்களுடன் நிரம்பியுள்ளது. டேஷ்போர்டில் நிற்கும் இரண்டு கர்வ்டு 12.3-இன்ச் டிஸ்ப்ளேக்கள் டிரைவருக்கும் இன்ஃபோடெயின்மென்ட்டுக்கும் இருக்கும். டிஸ்பிளேவின் தெளிவு மற்றும் மென்பொருள் மிகவும் சிறப்பாக உள்ளது மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் பயன்படுத்தும் சிஸ்டம்களுடன் எளிதாக போட்டியிடும் வகையில் இருக்கின்றன. டிரைவர் பல்வேறு லேஅவுட்களை இதில் பெற முடியும், அவை பாயும் அனிமேஷன்களுடன் மாறுகின்றன மற்றும் இன்ஃபோடெயின்மென்ட் எளிமையான மற்றும் பயனுள்ள கிராபிக்ஸ்களை பெறுகிறது. நான் குறிப்பாக பேட்டரி மற்றும் ரேஞ்ச் டிஸ்பிளே கொண்டதை விரும்புகிறேன் ஆனால் திரையில் காட்டப்படும் கார் EV6 -யாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
இன்ஃபோடெயின்மென்ட் 14-ஸ்பீக்கர் மெரிடியன் சவுண்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இது சொகுசு கார்களைப் போலவே 3D சவுண்ட்டை பெறுகிறது. இது தவிர, வென்டிலேட்டட் மற்றும் ஹீட்டட் இருக்கைகள், ஹீட் ஸ்டீயரிங், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் , ஆம்பியன்ட் லைட்ஸ், சன்ரூஃப் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றை பெறுவீர்கள், மேலும் இதில் இருந்து உங்கள் காரை சார்ஜ் செய்யும் போது தொலைவிலிருந்து கண்காணிக்க முடியும்.
இந்தியாவிற்கான கியாவின் முதல் EV -யானது அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், எமர்ஜென்சி பிரேக்ஸ் மற்றும் பல வசதிகளைக் கொண்ட முழு ADAS தொகுப்பையும் பெறுகிறது. நேவிகேஷன் மற்றும் எச்சரிக்கைகளுக்காக ஆக்மென்டட் ரியாலிட்டி டிஸ்ப்ளேவைப் பெறும் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே இதில் உள்ளது. இது உங்களுக்கு சிறப்பாக வழிகாட்ட, முன்னோக்கி செல்லும் பாதையின் படத்தை உருவகப்படுத்தி காண்பிக்கும்.
நடைமுறைத் தன்மை
நாங்கள் கூறியது போல், கியா EV6 ஒரு EV-க்கான தளத்தை அடிப்படையாகக் கொண்டது, இது நிறைய இடவசதி மற்றும் நடைமுறைத்தன்மையை வழங்க உதவுகிறது. சென்டர் கன்சோலுக்கு கீழே உள்ள சேமிப்பகம் ஒரு சிறிய பையை எளிதாக வைக்கலாம் மற்றும் ஆர்ம்ரெஸ்டின் கீழ் உள்ள சேமிப்பகமும் பெரியது மற்றும் ஒரு சிறிய பையையும் வைக்கலாம். கேட்ஜெட் சார்ஜிங் ஆப்ஷனில் இரண்டு டைப்-சி, ஒரு யூஎஸ்பி, ஒரு 12-வோல்ட் மற்றும் முன்புறத்தில் வயர்லெஸ் சார்ஜருடன் ஏராளமாக வருகிறது. பின்பக்க பயணிகளுக்கு இருக்கையில் பொருத்தப்பட்ட இரண்டு டைப்-சி போர்ட்கள் மற்றும் ஒரு லேப்டாப் சார்ஜர் கிடைக்கும்.
பின் சீட்
பின் இருக்கைகள் 6 அடிக்கு கீழ் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தை வழங்குகிறது. முழங்கால் அறை தாராளமாக உள்ளது மற்றும் ஹெட்ரூம் போதுமானதாக உள்ளது, ஆனால், போதுமான இடம் இல்லாததால் முன் இருக்கையின் கீழ் உங்கள் கால்களை நீட்ட முடியாது. உயரமான தளம் சிறப்பான தொடையின் கீழ் ஆதரவு வழிவகுக்கிறது. நிமிர்ந்த பின்புறத்தில் உட்காருவது சற்று அசெளகரியத்தை கொடுக்கிறது மற்றும் நீண்ட சாலைப் பயணத்தில் பின் இருக்கையில் இருப்பவர்களுக்கு EV6 சிறந்த கார் அல்ல. இருப்பினும், ஐந்து பேர் பயணம் செய்தாலும் நகர பயணம் நன்றாக இருக்கும்.
பூட் ஸ்பேஸ்
EV6 ஆனது 520 லிட்டர் பூட் இடத்தை வழங்குகிறது, பின் இருக்கைகளை மடிப்பதன் மூலம் மேலும் நீட்டிக்க முடியும். இருப்பினும், ஒரு EV இல் உள்ள இந்த பெரிய பூட் ஒரு ஸ்பேர் வீல் கொடுக்கப்படாததால் கிடைக்கிறது. மேலும், சார்ஜர் மற்றும் மொபிலிட்டி கிட் (பஞ்சர் ஏற்பட்டால் பயன்படுத்தப்படும்) பூட் தளத்திலேயே இடம் பிடிக்கின்றன.
EV6 ஆனது 520 லிட்டர் பூட் இடத்தை வழங்குகிறது, பின் இருக்கைகளை மடிப்பதன் மூலம் மேலும் நீட்டிக்க முடியும். இருப்பினும், ஒரு EV இல் உள்ள இந்த பெரிய பூட் ஒரு ஸ்பேர் வீல் கொடுக்கப்படாததால் கிடைக்கிறது. மேலும், சார்ஜர் மற்றும் மொபிலிட்டி கிட் (பஞ்சர் ஏற்பட்டால் பயன்படுத்தப்படும்) பூட் தளத்திலேயே இடம் பிடிக்கின்றன.
இருப்பினும், முன்பக்கத்தில், பானட்டின் கீழ், நீங்கள் சிறிய சேமிப்பகத்தை பெறுவீர்கள் - AWD வேரியன்ட்டுக்கு 20 லிட்டர் மற்றும் RWD மாடலுக்கு 52 லிட்டர். சிறிய பைகளை சேமிக்க இதைப் பயன்படுத்தலாம், ஆனால் ஒவ்வொரு முறையும் உள்ளே இருந்து பானட்டைத் திறக்க வேண்டியிருப்பதால், ‘ஃப்ரூட்’ பயன்படுத்துவதற்கு நடைமுறையில் குறைவாகவே இருக்கும்.
செயல்பாடு
EV6 -யை ஓட்டத் தொடங்கினால், மற்ற EV -களை ஓட்டுவது போலவே உணர முடிகிறது. இது அமைதியானது, மென்மையானது மற்றும் சிரமமில்லாத இயக்கத்தை வழங்குகிறது. கேபின் இன்சுலேஷன் சமீப காலங்களில் நாம் அனுபவித்த சிறந்த ஒன்றாகும், இது EV டிரைவ் அனுபவத்தின் அமைதியான காரணிக்கு மேலும் உதவுகிறது.
இருப்பினும், EV6 மற்றும் பிற வழக்கமான EV -களுக்கு இடையே உள்ள வித்தியாசம், நீங்கள் த்ரோட்டில் விளையாடத் தொடங்கும் போது செயல்படும். 'ஸ்போர்ட்' மோடில், நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு கூர்மையான உள்ளீடும், எவ்வளவு சிறியதாக இருந்தாலும், EV6 சிறப்பாக முன்னேறுகிறது. மணிக்கு 40 கிமீ அல்லது 140 கிமீ வேகத்தில் இருந்தாலும், கூடுதல் த்ராட்டில் எப்போதும் வலுவான ஆக்சலரேஷனை கொடுக்கிறது.
EV6 -யானது எலக்ட்ரானிக் முறையில் 192 கிமீ வேகத்தில் மட்டுமே செல்லும். குறிப்பிடப்பட்ட டாப் ஸ்பீட் ரன் 20 வினாடிகள் எடுத்தது, இது மிக விரைவானது மற்றும் நீங்கள் சோர்வாக இருந்தால் ஒவ்வொரு முறையும் உங்களை உற்சாகப்படுத்தும் அளவுக்கு ஆக்சலரேஷன் வலுவாக உள்ளது.
வித்தியாசமான ‘ஸ்போர்ட் பிரேக்’ மோட் இதில் உள்ளது, இது பிரேக்குகளை மிகக் கூர்மையாக்குகிறது ஆகவே இதை பந்தய பாதையில் ஓட்டுவதுதான் சிறந்தது. மற்ற டிரைவ் மோட்களை பார்க்கலாம். (ஈகோ மற்றும் டிரைவ்) மற்றும் த்ராட்டில் குறைவான ஆக்ரோஷமாக இருக்கும். இது ஆக்சலரேஷனை மேலும் முன்னோக்கியும் கட்டுப்படுத்தவும் செய்கிறது. மேலும், BIC ஷார்ட் லூப்பில் 8 முதல் 10 லேப்கள் செய்த போதிலும், அதிகபட்ச வேகத்தை தொடர்ந்து கடைபிடித்தாலும், பேட்டரிக்கு சிறப்பாகவே செயல்பட்டது, இன்டிகேட்டர் வெறும் 90 சதவீதத்திலிருந்து 60 சதவீதத்திற்கு மட்டுமே சென்றது.
பயண தூரத்தை பற்றி பேசுகையில், EV6 -யானது 500 கிமீக்கு மேல் ரேஞ்சை கொண்டுள்ளது மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் (ஒருங்கிணைந்த சுழற்சியில்) குறைந்தபட்சம் 400 கிமீ வரை இது செல்லலாம். இது நிச்சயமாக உங்கள் பயணம் பற்றிய கவலையை கவனித்துக் கொள்ளும். மேலும், 350kW சார்ஜர் மூலம், 10-80 சதவீத சார்ஜை வெறும் 18 நிமிடங்களில் பெறலாம்.
ஒரே பிரச்சனை என்னவென்றால், இந்தியாவில் இந்த சூப்பர்ஃபாஸ்ட் சார்ஜர்கள் இல்லை. 50kW சார்ஜரைக் கண்டுபிடிக்கும் அதிர்ஷ்டம் உங்களுக்கு இருந்தால், அதே 10-80 சதவிகிதம் சார்ஜ் 1 மணிநேரம் 13 நிமிடங்கள் எடுக்கும். பொதுவான 25kW மற்றும் 15kW சார்ஜர்கள் இன்னும் சிறிது நேரம் எடுக்கும் மற்றும் 0 முதல் 100 சதவீதம் வரை ஹோம் சாக்கெட் வழியாக சார்ஜ் செய்ய 36 மணிநேரம் ஆகும்.
ரிடே அண்ட் ஹண்ட்லிங்
கார் அதிக டிராக்ஷன் அல்லது ஆக்சலரேஷன் தேவை என்பதை தீர்மானிக்கும் வரை AWD செட்டப் உங்களை ஆல்-வீல் டிரைவில் வைத்திருக்கும். மென்மையான டிராக்ஷன் கட்டுப்பாட்டில் இதைச் சேர்க்கவும், திருப்பங்களிலும் நீங்கள் ஃபன் -னாக இதை ஓட்டலாம். கூர்மையாகத் திரும்பவும், டிராக்ஷன் குறுக்கிடாமல், பின்புறத்தை சிறிது சறுக்கியபடி EV6 உங்களை வரவேற்கும்.
ஸ்டீயரிங் நன்றாக எடையுள்ளதாக உணர்கிறது மேலும் இது உங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. இருப்பினும், காரின் கனமான தன்மை விரும்பத்தகாத எடை பரிமாற்றத்தை உருவாக்குகிறது, இது உங்களை சற்று மெதுவாக ஓரங்களுக்கு செல்ல வைக்கிறது. மலை வாசஸ்தலத்தில் ஓட்டுவதற்கு இது நிச்சயமாக ஒரு ஃபன் டிரைவிங் காராக இருக்கும்.
எஃப்1 ரேஸ் டிராக்கில் சவாரியை மதிப்பிட முடியாது, எனவே வழக்கமான சாலைகளில் EV6 -யை ஓட்டும் முன்பே எனது கருத்துகளை முன்னரே சொல்லிவிடுகிறே. நான் உங்களுக்குச் சொல்லக்கூடியது என்னவென்றால், கார் அதிக வேகத்தில் சரியாக நிலைத்தன்மையை கொடுக்கிறது மற்றும் பாதையில் உள்ள தடைகளை தாண்டிச் செல்லும் போது, சவாரி ஒருபோதும் அமைதியற்றதாகவோ அல்லது எரிச்சலூட்டும் வகையிலோ உணர வைக்கவில்லை.
வகைகள்
இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் GT லைன் டிரிமில் மட்டுமே EV6 கிடைக்கும். சிங்கிள் ரியர் மோட்டார், ரியர் வீல் டிரைவ் வேரியன்ட் 229PS மற்றும் 350Nm டார்க் மற்றும் 100kmph பெற 7.3s நேரத்தை எடுத்துக் கொள்கிறது. நாங்கள் ஓட்டியது 325PS இரட்டை மோட்டார், 605Nm டார்க் கொண்ட ஆல்-வீல் டிரைவ் கார் மற்றும் அது வெறும் 5.2 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டியது.
வெர்டிக்ட்
விலை சுமார் ரூ.70 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கியா EV6 விலையுயர்ந்த கார் ஆகும். இது நிச்சயமாக பல இந்தியர்களுக்கு எட்டாதது மற்றும் வால்வோ XC40 ரீசார்ஜ் போன்றவற்றுடன் ஆடம்பரப் பிரிவில் போட்டியிடும்.
EV6 க்கு சாதகமாக இருப்பது உற்சாகமான விஷயம். அதன் தோற்றம், விளக்குகள், தொழில்நுட்பம், அம்சங்கள் அல்லது ஓட்டுநர் அனுபவம் என எதுவாக இருந்தாலும், EV நிச்சயமாக ஒரு அற்புதமான கார். கூடுதலாக, வெறும் 100 யூனிட்கள் இறக்குமதி செய்யப்படுவதால், தனித்தன்மையான தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளது. அது போட்டியாளர்களால் வழங்க முடியாத ஒன்றாகும்.
க்யா ev6 2022-2025 இன் சாதகம் & பாதகங்கள்
- நாம் விரும்பும் விஷயங்கள்
- நாம் விரும்பாத விஷயங்கள்
- ஃபன் டூ டிரைவ்
- சிறந்த சவுண்ட் இன்சுலேஷன்
- தொழில்நுட்பத்தால் நிரப்பப்பட்டுள்ளது
- AWD அற்புதமான ஆக்ஸலரேஷனை கொடுக்கிறது
- 500+கிமீ ரேஞ்ச்
- முழுமையாக இறக்குமதி செய்யப்படுவது என்பதால் விலை அதிகம்
- பின் இருக்கை வசதி சிறப்பானதாக இல்லை
க்யா ev6 2022-2025 car news
- நவீன செய்திகள்
- ரோடு டெஸ்ட்
கியா -வின் லேட்டஸ்ட் அறிமுகமான கியா சிரோஸ் உடன் கேபினில் உள்ள நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளதை ஸ்பை ஷாட்கள் காட்டுகின்றன.
முன்பை போலவே மென்பொருள் அப்டேட்டுக்காக கியா EV6 இரண்டாவது முறையாக ரீகால் செய்யப்பட்டுள்ளது.
இன்டிகிரேட்டட் சார்ஜிங் கன்ட்ரோல் யூனிட்டில் (ICCU) ஏற்பட்ட சிக்கல் காரணமாக கியா EV6 கார்கள் ரீகால் செய்யப்படுகின்றன.
கியா EV6 பேட்டரி பேக் DC ஃபாஸ்ட் சார்ஜரை பயன்படுத்தி வெறும் 20 நிமிடங்களில் 0 முதல் 50 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடிகிறது.
சிரோஸ் வடிவமைப்பு மற்றும் செயல்பாட்டின் தனித்துவமான கலவையை ஒன்றாக கொண்டுள்ளது !
கியா கார்னிவல் காரின் விலை இப்போது முந்தைய தலைமுறையில் இருந்ததை விட இரண்டு மடங்காக உள்ளது. இது இன்னும் மதிப்புள்...
அதிக பிரீமியம் சப்-காம்பாக்ட் எஸ்யூவி -களில் ஒன்றான கியா சோனெட், கார்தேக்கோ படையில் இணைந்து கொள்கிறது!
எங்களிடம் உள்ள லாங்-டேர்ம் கியா செல்டோஸ் அதன் முதல் ரோடு டிரிப்பில் அலிபாக்கிற்கு செல்கிறது.
நீண்ட காலமாக, எங்கள் பிரீமியம் MPV க்களுக்கான அளவுகோல் டொயோட்டா இன்னோவா ஆகும். அது மாற உள்ளது
க்யா ev6 2022-2025 பயனர் மதிப்புரைகள்
- All (123)
- Looks (42)
- Comfort (45)
- Mileage (14)
- Engine (6)
- Interior (36)
- Space (6)
- Price (19)
- மேலும்...
- நவீனமானது
- பயனுள்ளது
- எலக்ட்ரிக் கார்
Wonderful car in a electric car I love it 😀 wow. Excellent interior design exterior design is also wow great to drive 🚗. Very nice 👍 kia EV6 is niceமேலும் படிக்க
- ev6 Is Best
One of the best car in performance good interior and exterior and well built quality average maintenance charges good for average family size service centre available easily in cities. goodமேலும் படிக்க
- The Kia ev6 Is An Awsome Car
The Kia ev6 is an impressive electric vehicle, offering sleek design, excellent performance, and a smooth ride. Its spacious interior, fast charging and cutting edge tech make it a smart choice.மேலும் படிக்க
- The Car Look ஐஎஸ் Very Impressive
The car look is very impressive and the fast charging in this very impressive it can full charge battery in 73 minutes and it has too much power which is very goodமேலும் படிக்க
- Kiya TV6 ஐஎஸ் A Advance Car
Kiya TV6 is a excellent choice of 2024 for looking a premium electric car with impressive rate features and more things however it is essential for Tu consider high price point and limited charge infrastructure before making a decision.மேலும் படிக்க
ev6 2022-2025 சமீபகால மேம்பாடு
Kia EV6 -ன் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?
இன்டெகிரேட்டட் சார்ஜிங் கன்ட்ரோல் யூனிட் சாஃப்ட்வேரை அப்டேட் செய்வதற்காக கியா EV6-ஐ தானாக ரீகால் செய்துள்ளது.
Kia EV6 -யின் விலை என்ன?
கியா EV6 விலை ரூ. 60.97 லட்சம் முதல் ரூ. 65.97 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) உள்ளது.
புதிய Kia EV6 உடன் என்ன வசதிகள் கிடைக்கும் ?
கியா EV6 வெஹிகிள் டூ லோட் (V2L), இரட்டை 12.3-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே (டிரைவருக்கு ஒன்று மற்றும் இன்ஃபோடெயின்மென்ட்டுக்கு ஒன்று) மற்றும் 14-ஸ்பீக்கர் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் போன்ற வசதிகளுடன் வருகிறது. எலக்ட்ரிக் சன்ரூஃப், ஆக்மென்டட் ரியாலிட்டி ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் 64-கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் ஆகிய வசதிகளும் உள்ளன.
Kia EV6 உடன் என்ன இருக்கை ஆப்ஷன்கள் கிடைக்கும் ?
கியா EV6 இந்தியாவில் 5 இருக்கைகள் கொண்டதாக கிடைக்கும்.
Kia EV6 என்ன பவர்டிரெய்ன் ஆப்ஷன்களை கொண்டிருக்கும்?
கியா EV6 ஆனது 77.4 kWh பேட்டரி பேக் மற்றும் இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது. ஒரே ஒரு மோட்டார் 229 PS மற்றும் 350 Nm பவரை பின் சக்கரங்களுக்கு அனுப்புகிறது. டூயல்-மோட்டார் செட்டப் 325 Nm மற்றும் 605 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. பேட்டரி 350 kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது, இதன் மூலம் 18 நிமிடங்களில் 10-80 சதவிகிதம் பேட்டரியை சார்ஜ் செய்ய உதவும்.
Kia EV6 -யில் உள்ள பாதுகாப்பு வசதிகள் என்ன ?
பாதுகாப்புக்காக இது 8 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது. இது லேன் கீப் அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்றவற்றுடன் இது முழுமையான லெவல் 2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களுடன் (ADAS) இது வருகிறது.
கருத்தில் கொள்ள வேண்டிய பிற ஆப்ஷன்கள்
கியா EV6 ஆனது மெர்சிடிஸ்-பென்ஸ் EQA, ஹூண்டாய் அயோனிக் 5, BMW iX1 மற்றும் வோல்வோ C40 ரீசார்ஜ் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது. நீங்கள் காத்திருக்கத் தயாராக இருந்தால் EV6 ஃபேஸ்லிஃப்ட் இந்த ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு, உட்புறத்தில் அதிக தொழில்நுட்பம் மற்றும் சிறந்த கிளைம்டு ரேஞ்ச் உடன் பெரிய பேட்டரி பேக்குகளை கொண்டுள்ளது.
க்யா ev6 2022-2025 படங்கள்
க்யா ev6 2022-2025 -ல் 22 படங்கள் உள்ளன, எஸ்யூவி காரின் வெளிப்புறம், உட்புறம் & 360 காட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய ev6 2022-2025 -ன் படத்தொகுப்பைக் பாருங்கள்.
க்யா ev6 2022-2025 வெளி அமைப்பு
motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன் | அராய் ரேஞ்ச் |
---|---|
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக் | 708 km |
48 hours இல் Ask anythin g & get answer
கேள்விகளும் பதில்களும்
A ) Offers and discounts are provided by the brand or the dealership and may vary de...மேலும் படிக்க
A ) The wheel base of Kia EV6 is 2900 mm.
A ) On the safety front, it gets eight airbags, electronic stability control (ESC) a...மேலும் படிக்க
A ) Kia’s electric crossover locks horns with the Hyundai Ioniq 5, Skoda Enyaq iV, B...மேலும் படிக்க
A ) Offers and discounts are provided by the brand or the dealership and may vary de...மேலும் படிக்க