ரெனால்ட் அல்பைன் விஷன் தொழிற்நுட்பம் வெளியீடு: அல்பைன் உயிர்த்தெழுகிறது!

published on பிப்ரவரி 19, 2016 02:35 pm by அபிஜித்

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

வரும் 2017-ல் உலகிற்கு கொண்டு வரப்பட உள்ள அல்பைன் விஷன் தொழிற்நுட்ப ஸ்போர்ட்ஸ் காரை, ரெனால்ட் நிறுவனம் வெளிப்படுத்தி உள்ளது. இந்த வெளியீடின் மூலம், தனது புகழ்பெற்ற அல்பைன் செயல்திறன் கொண்ட கார்களை திரும்ப கொண்டு வருவதற்கு, இந்த பிரெஞ்சு தயாரிப்பாளர் இலக்கு வைத்துள்ளார். இந்த செயல்திறன் கொண்ட பிராண்டு பிரபலமாக இருந்த காலத்தில், அல்பைன் A110 (பெர்லினெட்டா 1300G) போன்ற கார்கள், கார் பந்தய உலகை ஆண்டு வந்தன. கிளாசிக் ஈரா-வை போல இல்லாமல், இந்த அல்பைனின் அறிமுகத்திற்கு பிறகு போர்ஸ் கெமேன் 718-க்கு போட்டியாக நிறுத்தும் திட்டத்துடன் ரெனால்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இதன் தோற்றத்தை பார்த்தால், உண்மையான அல்பைனையே வரவழைப்பது போன்ற படங்களாகவே காட்சி அளிக்கின்றன. முன்பக்கத்தில் 4 தனிப்பட்ட லெம்ப்கள், போனட்டிற்கு நடுவே செல்லும் நுட்பமான புடைப்பு, C-வடிவிலான பின்புற விண்டுஸ்கிரீன் ஆகியவற்றை கொண்டுள்ளது. இவை அனைத்தும் அல்பைன் A110 (பெர்லினெட்டா 1300G)-னை நினைவுப்படுத்துவதாக உள்ளன. இதன்மூலம் இந்த பழைய காரின் தரமான அணுகுமுறையை, இந்த தயாரிப்பாளர் வீணாக்க விரும்பவில்லை என்று தெரிகிறது.

செயல்திறனை பொறுத்த வரை, மிக அதிகமான ஆற்றல் அளவுகளுக்கு பதிலாக, எளிய வழிமுறையையே ரெனால்ட் நிறுவனம் கையாண்டுள்ளது. இந்த மிட்-என்ஜின் கொண்ட காரில் 1.8-லிட்டர் இன்லைன் 4 டர்போ பெட்ரோல் மோட்டார் மூலம் 250 bhp ஆற்றல் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாகவே, இது ஒரு ரேர் வீல் டிரைவிங் கார் என்பதால், ஒரு இரட்டை-கிளெச் கியர்பாக்ஸ் மூலம் ஆற்றல் பகிர்ந்து அளிக்கப்பட வாய்ப்புள்ளது. ஒரு நவீன மோட்டாராக தென்படும் இதன்மூலம் ஏறக்குறைய 1100 கிலோ எடைக் கொண்டதாக இருக்கும் இந்த கார், 4.5 வினாடிகளில் மணிக்கு 0-வில் இருந்து 100 கி.மீ வேகத்தை அடையும்.

இந்த காரின் உட்புறத்தை வெள்ளோட்டம் பார்த்த போது, அவை அனைத்தும் எதிர்காலத்திற்குரியவையாக இருப்பதோடு, இது ஒரு தொழிற்நுட்ப பதிப்பு என்பதால் வித்தியாசமாகவும் காட்சி அளிக்கின்றன. இதில், லேதர் அப்ஹோல்டரி, ஒரு ஃபுளோட்டிங் இன்ஃபோடெயின்மெண்ட் ஸ்கிரீன் உடன் ஒரு தொடர்முறை கடிகாரம் மற்றும் ஒரு A/C திறப்பி போல காட்சி அளித்து சென்ட்ரல் கன்சோலில் ஏறி செல்லும் ஸ்போர்ட்டி கன்ட்ரோல்கள் ஆகியவற்றை கொண்டு ஒரு சமகாலத்திற்குரிய லேஅவுட்டாக காட்சி அளிக்கிறது. இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டரின் ஒரு பாதியின் கண்ணோட்டத்தை காண கிடைக்கும் நிலையில், இதில் சில கிராஃபிக்ஸ் மற்றும் புள்ளிவிபரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது செயல்திறனின் புள்ளிவிபரங்களாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.

வரும் 2017 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்த கார், இங்கிலாந்தில் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், எப்படியும் £40,000 (ரூ.40 லட்சம்)-க்கும் அதிகமாகவே விலை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

மேலும் வாசிக்க ரெனால்ட் நிறுவனம் ஈயோலாப் கான்செப்ட் காரை 2016 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிட்டது

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience