ரெனால்ட் நிறுவனம் ஈயோலாப் கான்செப்ட் காரை 2016 ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிட்டது
published on பிப்ரவரி 04, 2016 02:49 pm by saad
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
2016 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி, டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புது விதமான கார்களை பார்வையிட மக்கள் இந்த வளாகத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். ரெனால்ட் போன்ற முன்னணி வாகன தயாரிப்பாளர்கள், இத்தகைய சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பிரெஞ்சு நிறுவனமான ரெனால்ட், 100 kmph என்ற அளவில் அதிக மைலேஜ் தரும் புதிய ஈயோலாப் என்ற கான்செப்ட் காரை, இந்த மாபெரும் கண்காட்சியில் காட்சிக்கு வைத்துள்ளது. இந்த கான்செப்ட் உண்மையாக மாறினால், இந்நிறுவனம் அதீத பாராட்டுக்களை அள்ளப்போவது உறுதி.
இந்திய வாகன கண்காட்சியில் பங்கேற்க வந்துள்ள ரெனால்ட் நிறுவனத்தின் வடிவமைப்பு குழுவின் தலைவரான திரு. பாட்ரிக் லீச்சார்பி, ‘2022 -ஆம் ஆண்டு, இந்த ஹைபிரிட் கார் ஒரு கான்செப்ட் கார் என்ற நிலையில் இருந்து மேம்பாடடைந்து, சாலைகளில் ஓட ஆரம்பித்து விடும்’ என்று கூறினார். உண்மையில், 2 லிட்டர் இஞ்ஜின்களைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கு, பிரெஞ்சு அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட ப்ராஜக்டின் பலன்தான் இந்த புதிய கான்செப்ட் கார்’, என்றும் கூறினார். ஈயோலாப் கார் நூறு விதமான புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அவற்றில் 20 விதமான தொழில்நுட்பங்கள் ஏற்கனவே சந்தையில் உள்ள ரெனால்ட் நிறுவனத்தின் கார்களில் இடம்பெற்றுள்ளன. மேலும், இதில் உள்ள 60 தொழில்நுட்ப அம்சங்கள் அடுத்து வரும் எட்டிலிருந்து பத்து ஆண்டுகளுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டுவிடும். எனினும், மீதமுள்ள 20 புதிய தொழில்நுட்பங்கள் எப்போது அறிமுகப்படுத்தப்படும் என்ற விவரங்கள் இப்போது வரை தெளிவாகவில்லை,’ என்று திரு. பாட்ரிக் லீச்சார்பி தனது கருத்தைத் தெரிவித்தார்.
கான்செப்ட் காரான ஈயோலாப்பில் இணைக்கப்பட்டுள்ள கார்பன் ஃபுளோர், மெக்னீசியம் ரூஃப் மற்றும் இலகுவான சிலிண்டர் இஞ்ஜின், போன்றவை மேற்சொன்ன 100 புதிய தொழில்நுட்பங்களின் திறனுக்குச் சான்றாக விளங்குகின்றன. ஈயோலாப் தயாரிப்பதற்கு உபயோகப்படுத்தப்பட்ட எடை குறைந்த கட்டுமான பொருட்கள் மற்றும் சிறிய இஞ்ஜின் போன்றவை, இந்த காரின் ஒட்டுமொத்த எடையில் இருந்து 30 சதவிகிதம் வரை குறைக்கின்றன என்பது மிகவும் ஆச்சார்யம் தரும் விஷயமாகும். இந்த கார் சிறந்த ஏரோடைனமிக் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால், சிறந்த முறையில் காற்றை வெளியேற்றும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த கிரில், இதன் முன்பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. காரின் உள்ளே வரும் காற்று, சக்கரங்கள் வழியாகச் சென்று ஏரோடைனமிக் ஆர்ச்கள் மற்றும் பக்கவாட்டுப் பகுதி வழியாக வெளியேறுகிறது. எப்போதெல்லாம் இந்த கார் மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தைத் தொடுகிறதோ, அப்போதெல்லாம் காரின் பின்பகுதியில் இரண்டு பிளாப்கள் விரிந்து கொள்கின்றன. ஈயோலாப் காரில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு வந்தாலும், முதல் இரண்டு கியர்கள் மின்சார சக்தி மூலம் இயங்குகின்றன. மூன்றாவது அல்லது நான்காவது அல்லது அதற்கு அதிகமான கியர்களை ஓட்டுனர் மாற்றும் போது, இதில் பொருத்தப்பட்டுள்ள இஞ்ஜின் எரிவாயு மூலம் சக்தியைப் பெற்றுக் கொள்கின்றது.
0 out of 0 found this helpful