சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் எதிர்பார்க்கப்படும் விஷயங்கள்

shreyash ஆல் நவ 08, 2024 05:30 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது

2025 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ ஆட்டோ எக்ஸ்போ -வில் ஆட்டோ எக்ஸ்போ பாகங்கள் கண்காட்சி மற்றும் பேட்டரி ஷோ உள்ளிட்ட நிறைய விஷயங்கள் கண்காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ -வின் அடுத்த நிகழ்வுக்கான தேதிகள் 2024 மார்ச் மாதம் வெளியாகின. இது ஜனவரி 17 முதல் 22, 2025 வரை நடைபெற என்பதை நவம்பரில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மேலும் தெரிவித்தார். பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவின் வரவிருக்கும் பதிப்பில் நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்தையும் பற்றிய விவரங்கள்.

நிகழ்வில் எதையெல்லாம் பார்க்கலாம்?

2025 பதிப்பில் எலக்ட்ரிக் கார்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கட்டுமான இயந்திரங்கள், வாகன பாகங்கள், ஸ்பேர்ஸ், டயர்கள், பேட்டரிகள் மற்றும் வாகன மென்பொருள் உட்பட பல்வேறு வகையான பொருள்கள் இந்த நிகழ்வில் கண்காட்சிக்கு வைக்கப்படும். கூடுதலாக எக்ஸ்போ -வில் 15 கருத்தரங்குகளுக்கு மேல் நடத்தப்படவுள்ளன.

2025 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ பின்வரும் கண்காட்சிகளைக் கொண்டிருக்கும்: ஆட்டோ எக்ஸ்போ மோட்டார் ஷோ (எலக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் வாகனங்கள் உட்பட), ஆட்டோ எக்ஸ்போ பாகங்கள் கண்காட்சி, ஒரு மொபிலிட்டி டெக் பெவிலியன் (கனெக்டட் மற்றும் அட்டானமஸ் டெக்னாலஜி, இன்ஃபோடெயின்மென்ட் போன்றவை), அர்பன் மொபிலிட்டி மற்றும் உள்கட்டமைப்பு கண்காட்சி (நிலையான அர்பன் மொபிலிட்டி அமைப்புகள் - ட்ரோன்கள், பொது போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவை), ஒரு பேட்டரி ஷோ (பேட்டரி டெக்னாலஜி மற்றும் ஸ்டோரேஜ் தீர்வுகள்), கட்டுமான உபகரண கண்காட்சி, ஒரு ஸ்டீல் பெவிலியன், ஒரு டயர் ஷோ மற்றும் ஒரு பிரத்யேக சைக்கிள் ஷோ (புதிய மாடல்கள், பாகங்கள், புதுமைகள்), மற்ற சிறப்பு நிகழ்வுகள் மற்றும் எக்ஸ்போக்கள்.

மேலும் பார்க்க: புதிய எஸ்யூவி -யின் வடிவமைப்பு விவரங்களை கியா வெளியிட்டுள்ளது

பல்வேறு ஸ்டால்கள்

அடுத்த ஆண்டு பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ டெல்லி NCR முழுவதும் பாரத் மண்டபம் (பிரகதி மைதானம்), துவாரகாவில் உள்ள யஷோபூமி (இந்தியா இன்டர்நேஷனல் கன்வென்ஷன் மற்றும் எக்ஸ்போ சென்டர்) மற்றும் கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ சென்டர் மார்ட் உட்பட மூன்று இடங்களில் நடைபெறும்.

எதிர்பார்க்கப்படும் பிராண்டுகள்

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் டாடா, மாருதி, மஹிந்திரா மட்டுமல்ல டொயோட்டா, ஸ்கோடா, கியா ஆகியவற்றோடு மெர்சிடிஸ்-பென்ஸ் போன்ற லக்ஸரி பிராண்டுகளும் பங்கேற்க தயாராக உள்ளன. மாருதி eVX, புதிய தலைமுறை ஸ்கோடா சூப்பர்ப், புதிய தலைமுறை ஸ்கோடா கோடியாக், மற்றும் கியாவின் வரவிருக்கும் எஸ்யூவி ஆகியவை இந்த எக்ஸ்போவில் உள்ள ஹைலைட்ஸ் ஆக இருக்கும்.

2025 பாரத் மொபிலிட்டி எக்ஸ்போவில் எந்த பிராண்டுகள் மற்றும் தயாரிப்புகளை பார்க்க நீங்கள் ஆர்வமாக உள்ளீர்கள்? கமென்ட் பகுதியில் உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

Share via

Write your கருத்தை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.30.40 - 37.90 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.2.84 - 3.12 சிஆர்*
புதிய வேரியன்ட்
பேஸ்லிப்ட்
Rs.1.03 சிஆர்*
புதிய வேரியன்ட்
Rs.11.11 - 20.50 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை