2-வது நாள்: ஆட்டோ எக்ஸ்போவின் சிறந்தவை

published on பிப்ரவரி 05, 2016 03:21 pm by cardekho

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

2-வது நாள்: ஒரு நீண்ட (சோர்வை ஏற்படுத்திய) முதல் நாளை தொடர்ந்து, ஒப்பீட்டில் 2வது நாள் அமைதியாக அமைந்தது. தொழிற்நுட்ப காட்சியகங்கள், அறிமுகங்கள் மற்றும் காட்சியகங்கள் ஆகியவையோடு மற்றொரு முழு நாள் முடிவுக்கு வந்தது. இதோ இங்கே 2வது நாளில் காட்சிக்கு வைக்கப்பட்ட சிறந்த கார்களை குறித்த ஒரு கண்ணோட்டத்தை காண்போம்.

1.போலோ GTI


வளர்ந்து வரும் ஹாட் ஹேட்ச் சந்தையில் மற்றொரு சேர்ப்பாக அமையும் வகையில், போலோ GTI-யின் மூடுதிரைகளை வோல்க்ஸ்வேகன் நிறுவனம் அகற்றியுள்ளது. 3-டோர் அமைப்பில் மட்டுமே கிடைக்கும் இந்த GTI, சாந்தமான போலோவின் அதிக சக்திவாய்ந்த மறுசெய்கை ஆகும். இதில் ஒரு 1.8 லிட்டர், டர்போசார்ஜ்டு மோட்டாரை கொண்டு, 192PS என்ற அதிகபட்ச ஆற்றலை அளிக்கிறது. இதுவரை வோல்க்ஸ்வேகன் தரப்பில் இதன் விலை அறிவிக்கப்படாத நிலையில், ஏறக்குறைய ரூ.15 லட்சத்தை ஒட்டி அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. XUV ஏரோ


மஹிந்திராவின் ‘ஒரே பார்வையில் விரும்புவோம் அல்லது வெறுப்போம்’ என்ற நிலைப்பாடு உடன் கூடிய ஸ்டைலிங் அணுகுமுறை, மீண்டும் XUV ஏரோ தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. XUV-களின் பிளாட்பாமை அடிப்படையாக கொண்டுள்ள இந்த ஏரோ, ஒரு கிராஸ்ஓவர் கூபே ஆகும். ஏறக்குறைய BMW X6-யை ஒத்துள்ளது. இந்த ஏரோவில் எங்களுக்கு பிடித்த ஒரு காரியம், இதன் சூசைடு டோர்கள் ஆகும். இந்த ஏரோவை, மஹிந்திரா நிறுவனம் தயாரிப்பிற்கு அனுப்புமா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

3. மாருதி சுசுகி இக்னிஸ்


இந்த 13வது ஆட்டோ எக்ஸ்போவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காட்சியகங்களில் ஒன்றான இக்னிஸ், ஒருவழியாக இந்தியாவிற்குள் தடம்பதித்துள்ளது. இதன் அறிமுகத்திற்கு இன்னும் சற்று காலம் எடுத்து கொள்ளும் என்றாலும், அதன் ரெட்ரோ ஸ்டைலிங் மற்றும் புத்தம் புதிய உட்புற அமைப்பியல் ஆகியவற்றை எங்களால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நெக்ஸா ஷோரூமை எட்டி சேர உள்ள இந்த இக்னிஸ், அங்கிருக்கும் கார்களிலேயே மிகவும் மலிவான காராக இருக்கக் கூடும்.

4. புதுப்பிக்கப்பட்ட ரெனால்ட் டஸ்டர்


நம் நாட்டின் கச்சிதமான SUV பிரிவையே தூக்கி பந்தாடிய இந்த கார், தற்போது சிறப்பான தோற்றம் மற்றும் சிறந்த சாதனங்களை தன்னகத்தே பெற்றுள்ளது. இந்த டஸ்டரில், மறுசீரமைப்பு பெற்ற முகப்பு பகுதி, ஒரு கூட்டம் புதிய நிறங்கள் மற்றும் மிக முக்கியமாக, டீசல் என்ஜினுக்கு ஒரு AMT சேர்ப்பு உள்ளிட்ட ஒருசில மேம்பாடுகளை அடைந்துள்ளது. இதன் விலையில், பெரிய அளவிலான மாற்றம் எதுவும் இருக்காது என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

5. சாங்யாங் டிவோலி


XUV ஏரோ அவ்வளவாக பார்வையாளர்களை ஈர்க்காத பட்சத்தில், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மூலம் சாங்யாங் டிவோலி வெளியிடப்பட்டுள்ளது. XIV ஏர் அட்வென்ச்சர் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட இந்த டிவோலியை, சர்வதேச அளவில் 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார்கள் இயக்குகின்றன. க்ரேடா மற்றும் ரெனால்ட் டஸ்டர் ஆகியவை உடன் இந்த டிவோலி போட்டியிட உள்ளது.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience