ஒப்பீடு: ரேஞ்ச் ரோவர் இவோக் vs வோல்வோ XC60 vs BMW X3
published on நவ 20, 2015 02:15 pm by manish
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
ஆடம்பர SUV-களில் அவ்வப்போது தனித்தன்மை கொண்ட வாகனமாக அளவுகளின் துணைக்குழுவின் அடிப்படையில், வாகன ஆர்வலர்களால் கண்டறியப்படுகிறது. இந்த கார்களில் காணப்படும், உணரும் வகையிலான சுகமான பயண அனுபவம், அதோடு ஒருவரின் விருப்பப்படி அமைந்த ஏராளமான ஆற்றல் தன்மைகள் ஆகியவை இந்த கார்களுக்கான பெரும் ஆதரவாக அமைகிறது. இதில் புதிய ரேஞ்ச் ரோவர் இவோக் காரில், நிலப்பகுதிகளில் சிறப்பாக செயல்படும் அசிஸ்டென்ஸ் உடன் மறுவடிவமைப்பு கொண்ட பம்பர், பெரிய அளவிலான ஏர்-இன்டேக்ஸ், புதிய வடிவிலான கிரில் மற்றும் LED அடாப்டீவ் ஹெட்-லெம்ப்கள் ஆகியவற்றை உட்படுத்தும் அதன் மிரட்டும் தோற்றத்தை பெற்று, 188bhp ஆற்றல் மற்றும் 4X4 டிரைவ் கான்ஃபிகரேஷன் போன்றவற்றை கொண்டுள்ளது. மேலும் இந்த காரில் ஒரு ஆல்-அலுமினியம் இன்ஜினியம் TD4 டர்போடீசல் என்ஜினை கொண்டு, இதன் முன்னோடியை விட 20-30 கிலோ எடைக்குறைவாக பெற்று, போட்டியாளர்களுக்கு எதிரான தகுந்த வாகனமாக நிலைநிற்கிறது. எனவே பிரிட்டிஷ் தயாரிப்புகளுக்கு எதிரான அதன் ஆடம்பர SUV போட்டியாளர்களின் செயல்பாடுகளை குறித்து காண்போம்.
சிறப்புக்கூறுகள்
புதிய ரேஞ்ச் ரோவர் இவோக் காரின் உட்புறத்தில், புதிய டோர் கேஸிங்கள், சீட்கள் மற்றும் ஒரு 8-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. ஆனால் எரிபொருள் சேமிப்பு அடிப்படையில், வோல்வோ XC60 காரில் லிட்டருக்கு 11.7 கி.மீ மைலேஜையும், BMW X3 காரில் லிட்டருக்கு 14.5 கி.மீ மைலேஜையும் பெறும் போது, அதனோடு ஒப்பிட்டால், இவோக்கில் ஈர்க்கும் தன்மையற்ற முறையில் லிட்டருக்கு 8.7 கி.மீ மட்டுமே கிடைக்கிறது என்பது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பின்னடைவாக உள்ளது. மேலும் இவோக்கில் 57 லிட்டர்கள் கொள்ளளவு மட்டுமே கொண்ட ஃபியூல் டேங்க்கை பெற்று, இதன் போட்டியாளர்களுக்கு எதிரான ஒரு பலமான நிலையை அளிக்க தவறுகிறது. அதே நேரத்தில் இதன் போட்டியாளர்களாக XC60-ல் 70 லிட்டர்கள் என்ற அதிகபட்ச கொள்ளளவு ஃபியூல் டேங்கையும், அதை தொடர்ந்து BMW X3 ஒரு மிதமான அளவாக 67 லிட்டர்கள் கொள்ளளவு டேங்க்கையும் கொண்டுள்ளது. ஆனால் சரக்கு இடவசதியில் கவர்ச்சிகரமான 575-லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ள ரேஞ்ச் ரோவர், அதை சமாளிக்கிறது. ஆனால் பீமர் என்ற மறுபெயர் கொண்ட BMW-வில் நெருங்கியதாக 550-லிட்டர்கள் கொள்ளளவை பெற்றுள்ளது. அதை தொடர்ந்து Volvo XC60-வில் 495-லிட்டர்கள் கொள்ளளவை கொண்டுள்ளது. இம்மூன்றிலும் 17 இன்ச் அலாய்களை காண முடிகிறது.
விலை நிர்ணயத்தில் ரேஞ்ச் ரோவர் போட்டித்தன்மை கொண்டதாக ரூ.47.1 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் புதுடெல்லி) இருக்க, இம்மூன்றில் அதிக விலை கொண்டதாக உள்ளது. அதே நேரத்தில் BMW ரூ.46.9 லட்சம் விலையிலும், வோல்வோ XC60 ரூ.45.5 லட்சம் விலையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத் தன்மைகளில் ரேஞ்ச் ரோவர், அதன் 4X4 கான்ஃபிகரேஷன் மூலம் மீண்டும் எழுச்சி அடையும் வகையில், XC60-யில் இந்த வசதியை காண முடிவதில்லை. ஆனால் விலை குறைவான BMW X3-ல், ஒரு 4X4 டிரைவ் டைப் உள்ளதை கட்டாயம் நாம் கவனிக்க வேண்டும். மேலும் அதில் கவர்ச்சிகரமான முடிவில்லாத (அன்லிமிடேட்) கிலோமீட்டர் தொலைவு வாரண்டியை அளித்து, இவோக் அளிக்கும் 1,00,000 கி.மீ மற்றும் வோல்வோ அளிக்கும் 60,000 கி.மீ. வாரண்டிகளை வெற்றிக் கொள்கிறது. எனவே இந்த பிரிவில் உள்ள கார்களை வைத்து பார்க்கும் போது, உறுதியாக இது ஒரு கவர்ச்சிகரமான கார் எனலாம். இதனால் கடந்த மாதம் சாதாரணமாக துவங்கிய முன்பதிவின் மூலம் ரேஞ்ச் ரோவர் இவோக் காருக்கு, நல்ல வருமானத்திற்கான வாய்ப்பாக அமைந்துள்ளது.
இதையும் படியுங்கள்